திருமதி.சாந்தி சரவணன்
சிறுகதை வரிசை எண்
# 318
“குத்தகை”
குத்தகைக்கு பணம் ஏற்பாடு செய்தே ஆக வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது. என்ன செய்வது என அறியாமல் தவித்துக் கொண்டு இருந்தார் வீட்டு தரகர் ரத்தினம்.
ரத்தினம் மிகவும் திறமைசாலி. அண்ணா நகர் சுற்றி எங்கு வீடு காலி ஆனாலும் முதலில் அவருக்கு தகவல் கிடைத்துவிடும். நேர்மையான மனிதர். தொழில் சுத்தம். அண்ணாநகர் சுற்றி பல முக்கிய பள்ளிகள் இருப்பதால் வீடு வாடகைக்கு, குத்தகைக்கு என தேவைகள் இருந்துக் கொண்டே இருக்கும்.
6 மாத வாடகை முன்பணமாக பெற்றுக் கொண்டு வாடகைக்கு வீடு கொடுப்பார்கள். இருபது ரூபாய் ஸ்டாம்ப் தாளில் பத்திரம் பதிய வேண்டும்.
சிலர் குத்தகை ஒரு வருடம் இரண்டு வருடம் என பேசிக் கொண்டு வட்டியில்லா லட்சங்களை முன்பணமாக பெற்றுக் கொண்டு வீடு வாடகை விடுவார்கள்.
வாடகையோ குத்தகையோ பேசி முடித்தால் கமிஷன் பார்க்கலாம்.
இன்னும் இரண்டு நாட்களில் குத்தகை பணம் செலுத்தியாக வேண்டும். இந்த முறை தேவை. ரத்தினம் குடும்பத்திற்கு. மகளின் கனவு.
சொல்லி வைத்த இடத்தில் இருந்து பணம் வரவில்லை. மகளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் கடையின் விட்டத்தை பார்த்தவாறு அமர்ந்து இருந்தார் ரத்தினம். முழுநேர தொழில் மளிகை கடை. கடையின் அலைபேசி தான் அடித்தது
மகள் தான் அலைபேசியில்.
*****
தன் நினைவலைகளில் சற்றே பின் நோக்கி சென்றார் ரத்தினம்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன என செய்திக் கேட்டு ரத்தினம் பட படவென ஆனார்.
எழுத படிக்க தெரியாததால் தனக்கு வாழ்க்கையில் பல சோதனைகள். அனைத்தையும் கடந்து வந்துள்ளார். ஆதலால் தனக்கு மனைவியாக வருபவள் நன்றாக படித்திருக்க வேண்டும் என்பதே அவரின் நிபந்தனை. அவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யும் விதமாக பூர்ணிமா மனைவியாக கிடைத்தாள். ஒரே ஒரு மகள். பெயர் சரஸ்வதி. பெயருக்குஏற்றவாறு சரஸ்வதி கடாட்சம். நன்கு படிப்பாள். மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவளின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே அவரின் ஒரே குறிக்கோள்.
தனது மகளுக்கு தன்னுடைய நிலையை வரக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். மிகவும் போராடி தன் மகளின் விருப்பங்களைநிறைவேற்றி வந்தார்.
இப்போது மகள் விரும்புவது நடக்க வேண்டும் என்றால் குத்தகைக்குஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் மனைவி பூர்ணிமாவிற்கு இதில் துளிகூட விருப்பமில்லை.. வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் விவாதங்கள் தான்.
இப்படி கஷ்டப்பட்டு அந்த குத்தகை ஏற்பாடுகள் செய்ய வேண்டுமா. நம்ம பெண்ணுக்கு சொல்லி புரிய வைக்கலாம் என்று மனைவி பூர்ணிமா கத்தியது கீழ் வீட்டு வரை கேட்டது.
ரத்தினம்,. “பூர்ணிமா இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செய்தால் நான் அடமானம் வைக்கும் நிலத்தின் பத்திரத்தை மீட்டு விடுவேன்”.
பத்திரத்தை அடமானம் வைத்தால் 5 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும்.
எவ்வளவு சொல்லியும் மனைவி ஒத்துக் கொள்ளவில்லை.
***
ஆன்லைனில் தேர்வு முடிவுகள் வெளியானாது. அவர் எதிர்பார்த்த படி பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றாள் மகள் சரஸ்வதி. மகளை கட்டி அனைத்து முத்தம் இட்டார் ரத்தினம்.
***
VML பள்ளியில் விண்ணப்படிவம் வாங்கி அனைத்து வகையான formalities செய்து ஆகிவிட்டது.
ஆனால் cbse முடிவுகள் வந்த பின் அந்த விண்ணபங்களை பரிசீலனை செய்ய முடியும். பின்னரே மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்தனர்.
இதற்கிடையில் சரஸ்வதிக்கு சற்றும் பிடிக்காத அரசு பள்ளியில் அவள் விருப்பபட்ட பிரிவு கிடைத்தது.
***
அரசு பள்ளி +1 வகுப்பு அடன்டர்.
“சரஸ்வதி யாருமா”
“இருவர் எழுந்தார்கள்”
“எந்த சரஸ்வதி சார்?”
“ரத்தினம் மகள் சரஸ்வதி.”
சரஸ்வதி மெதுவாக எழுந்தாள்..
உங்க அப்பா வந்து இருக்கிறார். உங்க பை எடுத்துக் கொண்டு வர சொன்னாங்க..
என்னவென்று புரியாமல் பள்ளி முதல்வர் அறைக்கு சென்றாள் சரஸ்வதி.
அங்கு அப்பா அமர்ந்து இருப்பதை பார்த்தாள்.
“அப்பா...”
“வணக்கம் அம்மா..” என்றாள் முதல்வரை பார்த்து.
“நல்லா படிக்கிற பொண்ணு. எதுக்கு T.C கேட்கிறாங்க....”
“இல்லைங்க மேடம், நாங்கள் சொந்த ஊருக்கு போறோம் அங்க இருக்கிற அரசு பள்ளியில் என் பொண்ணை சேர்க்க போறேன்.” என TC வாங்கி கொண்டு மகளை அழைத்து கொண்டு வெளியே வந்தார்.
வெளியே வந்தவுடன் மகள் கையில் ஒரு நுழைவு சீட்டை காண்பித்தார்.
ஆம். தன் மகளின் விருப்பமான VML பள்ளியில் அவளுக்கு பிடித்த பிரிவு..
அப்பா என கட்டிபிடித்து, அப்பா “ஐ லவ் யூ” என மகள் சொன்ன அந்த விநாடி ரத்தினத்தின் அனைத்து கஷ்டங்களும் மறந்து கண்களில்
கண்ணீரோடு வீட்டை நோக்கி இரு சக்கர வாகனம் சென்றது.
மகள் மகிழ்ச்சியோடு ஏதோ ஏதோ பேசிக் கொண்டு வந்தாள்.
*****
பூர்ணிமா அடுப்படியில் சமைத்து கொண்டு இருந்தாள்.
தொடர்ந்து காலிங்பெல் சத்தம்.. “வரேன், வரேன்” என கதவை திறந்தாள்.
அம்மா என கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மகளை ஆச்சரியமாக பார்த்தாள்”
அப்பா எனக்கு பிடித்த ஸ்கூலில் பிடித்த குருப் வாங்கி கொடுத்து விட்டார்”, என துள்ளி குதித்து ஒடினாள்.
ரத்தினம் மனைவியின் கண்னை பார்க்காமல் உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்
****
VML பள்ளியின் நேர்காணலில் ஆச்சரியமான செய்திகள் தெரிய வந்தது.
வருடத்திற்கு ஒரு லட்சம் கட்டணம்.
மற்றொரு அறிய வாய்ப்பு ஐந்த லட்சம் முன்பணம் கட்டிவிட வேண்டும்.
வட்டியில்லா முன்பணம் இரண்டு வருடம் கழித்து திருப்பி தந்து
விடுவார்கள். புத்தக கட்டணம் மட்டுமே கட்டினால் போதுமானது.
பள்ளி நிறுவனமா அல்லது நிதி நிறுவனமா என ஒன்றும் புரியவில்லை.
ஆனால் இரண்டு லட்சம் இரண்டு வருடம் கட்டுவதை விட இந்த குத்தகை
பணம் போல கட்டணம் கட்டுவது ஒரு விதத்தில் நஷ்டத்தில் லாபம் தான்.
பணக்கார பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவர்கள் பெற்றோர்களுக்கு இது
ஒரு பெரிய விஷயம் இல்லை.
****
பூர்ணிமா உள்ளே சென்று பீரோ லாக்கரை திறந்தாள்.
லாக்கரில் நிலத்தின் பத்திரம் இல்லை...
ரத்தினம் , தனது மகள் மகிழ்ச்சி பொங்க தன் தோழிகளிடம் கைபேசியில் பேசிக் கொண்டு இருந்ததை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பூர்ணிமா ரத்தினத்தை கண்ணீர் மல்க பார்த்தாள்.
***
வீட்டை குத்தகை விடலாம்.. கல்வியை குத்தகை விடலாமா?
ஒரு குழந்தையிடம் ஐந்து லட்சம் என்று (+1,+2) இரண்டு வருடங்களுக்கு குத்தகை போல் மாத கட்டணம் வசூலிக்காமல் பள்ளியில் கட்டணம் வசூலிக்கும் முறை தவறு என்று அறிவு சொல்கிறது ஆனால் . பாசம் கண்ணை மறைக்கிறது.
பெற்றோர்களின் கண்மூடித்தனமான பாசத்தில் பள்ளிகள் குளிர் காய்கிறது.
அங்கு VML பள்ளியில் இன்னொரு புதிய கட்டிட பணி துவங்கியது.
நன்றி
திருமதி சாந்தி சரவணன்
கோல்டன் ஜூபுளி பிளாட்
பிளாக் எண் 157/16
பாடி குப்பம் ரோடு
அண்ணா நகர் மேற்கு
சென்னை 40
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்