logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Vinthiya Gowri .P

சிறுகதை வரிசை எண் # 301


மனிதநேயம் “சிவனே நா செய்யப் போற செயல் பாவமானதுதான். ஆனா எனக்கு வேறு வழிதெரியல. அழித்தல் தொழில் செய்ற நீதான் என்னை அழிக்கணும். உனக்கு என்னை அழிக்க மனம் இல்லையோ என்னவோ. அதனால நானே என்னை அழிச்சுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு.” தவக்கோலத்திலிருக்கிற சிவனைப் பார்த்து வணங்கி வாயில் தூக்க மாத்திரையைப் போடப்போறப்போ சங்கரனுக்குத் தன்னோட கடைசிச் சொத்தாக இருந்த இருபது ரூபாயை என்ன செய்ய? என்ற யோசனை தோன்றியது. செத்த பிறகு எனக்கு மாலை போட்டுப் புதைக்க இந்த இருபது ரூபாயாவது இருக்க வேண்டாமா? என்று நினைத்தபோது சுயநலவாதியா இது என்ன சிந்தனை. செத்த பிறகு மாலையில்லாம எரிச்சா பிணம் எரியாத என்ன? சாகுறதுக்கு முன்னாடி இந்தப் பணத்தைப் பிச்சக்காரங்களுக்குக் கொடுத்தா அவங்க வயிறாவது நிறையும் என்ற எண்ணம் தோன்ற உடனே வெளியே புறப்பட்டவன் அப்படியே அம்மனையும் கடைசியாகப் பார்த்திட்டு வரலாம் என்று வீதியில் நடந்து சென்றவனின் கண்களில் ரெண்டு கைகளும் தொழுநோயால் அழுகி இருக்க அதைவிடக் கொடிய பசி அவசரப்பட கண்ணீர் வழிய சுடும்மணலில் சாலை ஓரத்தில் படுத்துக்கிடந்த பெண்ணைப் பார்த்ததும் கண்கள் கலங்கின. சங்கரன் தன்னிடம் இருந்த ரூபாயில் பத்து ரூபாய் கொடுக்க நினைத்துச் சென்றவன் அந்த எண்ணத்தை மாற்றி பக்கத்திலிருந்த கடையில் சாப்பாடு வாங்கி அந்தப் பெண்ணிடம் கொடுத்த போது அம்மன் முகத்தைப் பார்த்து அம்மா என்று அழைத்தது தவிர தாய் முகம் அறியாத அவனுக்கு அவள் தாயாகத் தோன்றினாள். சாப்பிட்ட பிறகு நன்றி சொல்லத்தெரியாது கையெடுத்துக் கும்பிட்டு நீங்க நல்லா இருக்கணும் தம்பின்னு சொன்னப்போ அந்த அம்பாளே நேரில் வந்து சொன்னது போல மனசெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த அம்மாவிடம் நாளைக்குச் சாப்பாடு வாங்கிக்கங்க என்று பத்து ரூபாயைக் கொடுத்ததும் “ஐயோ வேண்டாந தம்பி நீங்க வாங்கிக் கொடுத்த சாப்பாடே போதுங்க” என்று மறுத்ததைப் பார்க்கும் போது லட்சாதிபதி கோடீசுவரனா ஆகுறதுக்குச் சட்ட விரோதமான செயல்களைச் செய்து முன்னேற அவனை மதிக்கிற சமுதாயம்இ போதுமென்ற மனமுடைய பிச்சக்காரங்கள மதிக்க மாட்டேங்கிறது. என்ன உலகமோ? என்ன மக்களோ? “தம்பி உங்கபேர்என்ன?” நினைவிலிருந்து கலைந்தவன் பேரைச்சொன்னான். “தம்பிஇ வயிற்றுப்பசி தாங்காமஇ “ஐயாஇ தர்மம் பண்ணுங்க ஐயான்னு கெஞ்சினாக்கூட காசு போடாதவங்க வேலை செய்து சாப்பிடவேண்டியதுதான மானங்கெட்ட பொழப்புன்னு நாலு திட்டுத்திட்டிட்டுப் போடுறவங்க மத்தியிலஇ தம்பி நீங்க நல்லா இருக்கணும்” என்று கண்ணீரைத் துடைத்த அம்மாவிற்குஇ பத்து ரூபாயைக் கொடுத்து நடந்தவனிடம் யாராவது நீ மகிழ்சியாக இருக்கிறாயா? என்று கேட்டால் வாழ்நாளிலே இன்றுதான் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்லுவேன் என்று நினைத்தவன்இ பையிலிருந்த சில்லறைக் காசைக் கொடுத்து அம்மனுக்குப் பூ வாங்கியபோது அருகிலிருந்த சின்னக் குழந்தைஇ “அம்மா எனக்குப் பூ வாங்கித்தாமா ஏங்கூடப் படிக்கிற பிள்ளைங்க எல்லாரும் பூவைக்கிறாங்கம்மா இன்னக்கி மட்டுமாவது வாங்கித்தாமா” என்று அம்மாவின் புடவையப் பிடித்த குழந்தையின் கன்னத்தில் ரெண்டு அடி விழுந்ததைப் பார்த்து அதிர்ந்தான். “அரைவயிறு கால்வயிறு சாப்பிட்டு உன்னப் பள்ளிக்கு அனுப்புறதே பெரிசு. உனக்குப் பூ வேணுமாக்கும் பூ. இனிமே பூ கேட்ட தொலச்சுப்புடுவேன் தொலச்சு” என்றவளைப் பார்த்தான். காதைப்பிளக்கும் சத்தம் கேட்டு ஒதுங்கி நின்றவனின் கண்களில் காருக்குள் நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்த மல்லிகைச்சரம் தலையசைத்து இவனைக் கண்டு நகைத்தது. வேதனையோடு பார்த்துவிட்டு நகர்ந்தான். அழுத குழைந்தையிடம் மல்லிகைப்பூவைக் கொடுக்கஇ குழந்தை தாயைப் பார்க்கஇ தாய் பூவை வாங்கி குழந்தைக்குச் சூட்டியதும் மகிழ்ச்சியில் தன்னைப் பார்த்துச் சிரித்த குழந்தையைப் பார்த்துத் தானும் குழந்தையாகிச் சிரித்தான். “தம்பிஇ நீ நல்லாயிருக்கணும”; இந்த வார்த்தை அவனைச் சிரிக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நேரங்கழித்துச் சாகப்போற எனக்கு வாழ்த்துக்கள். வேடிக்கையான உலகம். கனவு காண்பது மனித இயல்பு. சங்கரனுக்கு மருத்துவனாகணும் ஏழை நோயாளிகளுக்கு பணம் வாங்காமல் இலவசமாகச் சிகிச்சை செய்யணும்இ அனாதைகளுக்கு ஆதரவு தரணும்இ ஊனமுற்றோர்க்கு உதவணும் இப்படி எத்தனையோ கனவுகள். பள்ளிப் படிப்பை முடிக்கக் கூடப் பணம் இல்லாத என்னால் எப்படி மருத்துவனாக முடியும். இருந்த ஒரு தாத்தாவும் இறந்த பிறகு அனாதையான என்னால் எப்படி அனாதைகளுக்கு ஆதரவு தரமுடியும். வேலை தேடித் தெருத்தெருவாய் அலைந்து கிடைக்காததால் சாப்பாடு இல்லாமல் படுத்த நாட்கள் எத்தனை எத்தனை! கடைசியாகப் பசிதாங்காமல் பூசெய் அறையில் குடும்ப விளக்காக இருந்து வந்த குத்து விளக்கை விற்று சாப்பிட்டு இனி வருங்காலத்தை எப்படி எதிர்நோக்குவது என்று தெரியாமல் துன்பத்தைத் துறக்க தூக்க மாத்திரைகளை விழுங்க முடிவெடுத்ததை நினைத்துச் சென்றபோதுஇ மனதில் தொழுநோயாளியும் பிச்சக்காரங்களும் வாழும்போது நான் ஏன் சாக நினைத்தேன்? அதிலும் தான் ஆண்மகன் என்பதை எப்படி மறந்தேன்? பள்ளியில் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் அதையே படியாக்கி முன்னேற வேண்டுமென்று படித்தும் அறிவில்லாது பாவச் செயலைச் செய்யத் துணிந்தேனே! தான் பசியோடு வாழ்ந்து குழந்தயப் பள்ளிக்கூடம் அனுப்புற விதவைப் பெண்ணின் மனவலிமை கூட இல்லையே. முயற்சியைக் கைவிட்டு சாவதற்குத் துணிந்தேனே. கோழைத்தனமான செயல். பசிமயக்கத்தில் சாலையில் விழுந்தவனை ஓடிவந்து ரெண்டுபேர் தூக்கினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்ததும் கண்விளித்தவனைப் பார்த்துஇ “சாப்பிட்டாயா” என்றார் பெரியவர். “இல்ல” உடனே தொலைபேசிய எடுத்து தேவாஇ சாப்பிடுறதுக்கு இட்லி இருக்கா? “இருக்கு ஐய்யா. ஆனா முதலாளி இருக்காரு.” “குடு பேசுறேன்.” “பசில ஒரு பையன் மயங்கி விழுந்திட்டான். தேவாகிட்ட உணவ உடனே குடுத்து விடுங்க.” “சரிங்க அய்யா. இதோ குடுத்துவிடுறேன்.” சங்கரன் சாப்பிட்டதும் தெம்பாக இருந்தான். “நன்றி அய்யா. மணிமேகலைல ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’னு படிச்சிருக்கேன்ய்யா.” “உன்னப்பத்திச் சொல்லு.” “சொல்ல ஒன்னுமில்ல. நா அநாதை. வேல கிடைக்காததால பசியோட வாழ்றேன்.” “வேல கொடுத்தா செய்வியா.” “நல்லா செய்வேன்யா.” சிறிது தூரம் நடந்து சென்றார்கள். அரசு பூந்காவிற்குள் நுழைந்தார்கள். அங்கே நான்கு பசங்க மண்வெட்டிஇ கடப்பாரையுடன் அமர்ந்திருந்தார்கள். அய்யாவைக் கண்டதும் எழுந்து வணங்கினார்கள். “வந்து ரொம்ப நேரமாச்சா.” “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தோம்யா.” “அரசாங்கம் முப்பது லட்சம் செலவு பண்ணி பூங்காவ நமக்காகக் கட்டியிருக்கு. ஆனா குடிகாரங்க சிலர் இரவுல குடிச்சிட்டு எடத்தப் பாழாக்குறாங்க. குழந்தைங்க விளையாடுற இடம். ஆண்கள் பெண்கள்இ நடைப்பயிற்சி உடற்பயிற்சி செய்ற இடம் மழைபெஞ்சதுனால செடிகள் வளர்ந்து கெடக்கு. தேவையில்லாதத வெட்டிச்சுத்தமாக்குங்க.” “சரிங்க அய்யா.” பெரியவர் சொல்வதைக் கேட்டு வேலை செய்தார்கள். பூங்காவைச் சுற்றிக் குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி வேம்புஇ புங்கைஇ மகிழம்பூஇ பன்னீர் மரக்கன்றுகளை நட்டார்கள். பூங்காவிற்குள் மாதுளைஇ கொய்யாஇ சீத்தாப்பழக் கன்றுகளை நட்டார்கள். வேலை பார்த்த ஆறுபேரும் பூங்கா மூலையிலிருந்த அடிபம்பில் தண்ணீர் அடித்து முகம் கை கால் கழுவினார்கள். பெரியவர் கொடுத்த அறுசுவை உணவை சாப்பிட்டார்கள். பெரியவர் சங்கரனையே பார்த்தார். “அய்யா நா மரக்கன்றுகளுக்கு தண்ணிஊத்தி நல்லா வளர்க்கிறேன்யா. இங்க தங்கி பூங்காவையும் சுத்தமா வச்சுக்கிறேன்யா. நீங்க செய்ற சமூகசேவையில என்னையும் சேத்துக்கங்கய்யா. நீங்க சொல்ற வேலய நா நல்லா செய்வேன்யா.” “இன்னக்கி நீ ஓடி ஓடி வேலசெய்றதப் பார்த்தேனே. சங்கரா என்னோட மனைவி மகளோட அமெரிக்காவுல இருக்கா. மகன் கனடாவுல இருக்கான். என்ன வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நா தொண்டு செய்யணும்னு நெனச்சு இங்க இருக்கேன். உனக்கு விருப்பம்னா என்னோட வீட்ல தங்கிக்கோ.” “உங்க வீட்ல தங்கிக்கிறேன்யா. ரொம்ப நன்றிங்கய்யா” என்று கையெடுத்துக் கும்பிட்டவனைப் பார்த்துஇ “நல்லது வா போவோம்” என்று அவன் கைபிடித்து அழைத்துச் சென்றார். பூவரசு மரநிழலில் வெக்கை தாங்காமல் அனைவரும் உட்கார்ந்தனர். எதிரே சீமைக்கருவேல மரத்தூரில் படுத்துக்கிடந்த கருப்பு நாயைப் பார்த்தார் பெரியவர். அதனருகில் தாயைப் போல கருகருவென நான்கு நாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவர் பெண்நாய்க்குட்டியை எடுத்து சங்கரனிடம் கொடுத்தார். தான் ஒருபெண்நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டார். “அய்யா நீங்க ஏன்யா ஆண்நாய்க்குட்டிய எடுக்கல” “ஆண் நாய்க்குட்டிய வீட்டுக்காவலுக்கு யார் வேணும்னாலும் எடுத்து வளர்ப்பாங்க. பெண் நாய்க்குட்டிய வளர்க்க யோசிப்பாங்க.” “ஒரு நாய்க்குட்டி போதுமே அய்யா.” “ரெண்டுனா ஒன்றுக்கு ஒன்று துணையாயிருக்கும் அதான்.” என்றார் புன்னகையோடு. பக்கத்து வீட்டுப்பையன் தயிர்ச்;சோறு கொண்டுவந்து நாய்க்கு வைத்தான். நாய் எழுந்து சாப்பிட்டது. “நீங்க ரெண்டுபேரும் ரெண்டு நாய்களத் தூக்கிட்டுப்போய் வளர்க்கப் போறீங்களா?” “ஆமா” “இன்னைக்குக் காலையில நா நாய்க்குட்டிகளுக்குப் பால் ஊத்தி வச்சன். ஒன்னோடு ஒன்னு இடுச்சுக்கிட்டு குடுச்சு வேகமா தீர்ந்து போச்சு. கொஞ்ச நேரங்கழிச்சு பால்க்காரர் பால்ஊற்றினார். அப்போ வேறு இரண்டு வெள்ள நாய்க்குட்டிக ஓடி வந்து சேர்ந்து கொண்டன. வண்டியில வந்தவர் பேரன் நாய்க்குட்டிகளப் பார்த்துச் சிரிச்சதும் ஒருவெள்ள நாய்க்குட்டியத் தூக்கிட்டுப் போனார். பாலை ஊற்றிவிட்டு ஒன்பது மணிக்கு வந்த பால்க்காரர் ஒருவெள்ள நாய்க்குட்டியத் தூக்கிட்டுப் போனார்” என்று முகமலர்ச்சியோடு சொன்னான். கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் பலர் இருப்பதால்தான் உலகம் இன்னும் இயங்குகிறது என்று உணர்ந்து கொண்டான். கண்ணுக்கு எதிரே பசுமையாய் வளர்ந்திருந்த துளசிச் செடியைப் பார்த்து பெருமாள் கோவிலில் தீர்த்தமாய் இருக்கிற உன்னைப் போல் நான் வாழ்வேன் என்று மனதிற்குள் சொன்னான். அவனைப் பார்த்து துளசிச் செடி தலையசைத்தது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.