Raavan
சிறுகதை வரிசை எண்
# 300
விட்டுக்கு வெளியே சென்றுக்கொண்டே குமார் அவர் அம்மாவிடம் "நான் வயலுக்கு போய்டு வர" என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சொல்கிறான். அவன் பின்னாலே அவன் அண்ணன் மகன் வேலு செல்கிறான். இதை பார்த்த குமாரின் அம்மா "அவன ஏன் கூட்டிடு போர அவங்க அப்பன் பாத்த எதாவது சொல்லப்போராண்டா..." என சொல்லும் போதுதான் குமாருக்கு தெரியவருகிறது. குமார் திரும்பி பார்த்து வேலுவிடம் "டேய் நி எங்கடா வர உங்க அப்பன் பாத்தா திட்டுவாண்டா." என்று சொல்ல "இல்ல நானும் வரன்" என்று அடம்பிடிக்கிறான். "நா வயலுக்கு போய் மாட்டுக்கு தண்ணி காட்ட போரண்டா... நீ அங்க வந்து என்ன பண்ணப்போர” என்று சொல்ல வேலு அடம்பிடித்து இல்ல நானும் வருவனு சொல்லி அவன் சித்தப்பா உடன் செல்கிறான். குமாரும் அவனை அழைத்துக்கொண்டு செல்ல சிறிது தூரத்திலேயெ வழிமாற்றி அழைத்து செல்ல வேலு திரு திருனு முழித்துக்கொண்டே செல்கிறான். ஓரிடத்தில் ஒரு பழய மண்ணு வீட்டினுல் குமார் செல்ல வேலு வெளியவே நின்று சுற்றும்முற்றும் பார்கிறான். உள்ளே சென்ற குமார் சிறிது நேரம் கழித்து வெளியே வருகிறான். அவன் கையில் இரண்டு சராயப்பாக்கெட்டும் ஒரு மிச்சர் பாக்கெட்டும் இருக்கின்றன . சாரயத்தை அங்கவேகுடித்துவிட்டு கிழே போட்டுவிட்டு மிச்சர் பாக்கெட்டை மட்டும் கொண்டுவந்து வேலுவிடம் கொடுத்துவிட்டு வாப்போலாம் என்று அழைத்துச்செல்கிறான். போகும் வழியில் குமார் சிறிது போதையில் தல்லாடி நடக்க வேலு அவன் கையை பிடித்துக்கொண்டு சொல்கிறான். அப்போது ஒரு பனைமரத்தை பார்த்து வேனு நுங்கு வேனுனு சொல்ல குமார் மரத்தில் எரி பனங்காயை பரித்துக்கொண்டு கிழே வந்து வாயாலெயெ கடித்து அதிலிருந்து நுங்கு எடுத்து கொடுக்கிறான். இருவரும் நன்கு தின்றுவிட்டு அங்கிருந்து செல்கின்றனர். அடுத்த தோப்பிற்க்கு செல்ல அங்கு தென்னைமரத்தை பார்த்த கனத்திலெயெ குமார் தென்னை மரத்தில் எரி இளநிரை இரக்கிவிட்டு கிழே இரங்கும் போது அவன் வயலுக்கு பக்கத்தில் இருக்கும் முல்லுக்காட்டுக்குள் யாரொ இருப்பது போல தெரிகிறது. குமார் அதைப் பார்த்தவாரே மரத்திலிருந்து கீழ் இறங்குகிறான். இருவரும் குடித்துவிட்டு வயலை நோக்கி செல்ல வேலுவும் பின்னாலெயெ செல்ல அப்பொது ஒரு முயல் இவர்கள் வயலிருந்து முல்லுக்காட்டுகுள் ஒட அதை பார்த்த குமார் அதை துரத்தியவாரெ சென்று அங்கு முல்லுக்காட்டுக்குள் இருப்பது யாரு என்று பார்கிறான். அங்கு தெகக்கட்டுடன் நின்று ஒரு வயசு பெண் முல்லு வெட்டிக்கொண்டு இருக்கிறாள். குமார் அங்கேயெ நின்ருக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு இருக்க பின்னால்வந்த வேலு சித்தப்பா அந்த பக்கம் பொது பாரு... பாரு... என்று சொல்லும் போது தான் சுய நினைவுக்கு வருகிறான்.குமார் திரும்பி வேலுவை பார்த்து "நி போய் பாட்டிகிட்ட வெங்கயம் தக்காளி மசாலா எல்லாம் வெட்டி வாங்கிடு வா.. நான் அதுக்குள்ள அந்த முயல புடிச்சிறன்" என்று சொல்லி வேலுவை அங்கிருந்து அனுப்பிவிடுகிறான். மோட்டர் ரூமில் இருந்த கண்ணியெ எடுத்துக்கொண்டு போய் முல்லுக்காட்டுக்குள் முயலுக்கு கன்னி வைக்க செல்வது போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உள்ளெச்செல்கிறான். அதே வேலையில் வேலுவும் அவன் பாட்டியிடம் சென்று சொல்லி அனைத்தையும் வாங்கிக்கொண்டு வயலுக்கு வருகிறான். வயலுக்கு அருகில் வரும்போழுது பார்த்தால் வயலில் ஒரே கூட்டம் அருகே சென்று பார்கிறான். அவன் சித்தப்பாவின் கால் வெட்டப்பட்டு படுத்துக்கிடக்கிறான்.
வெட்டுக்கண்ணி...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்