Devadass janakiraman
சிறுகதை வரிசை எண்
# 299
பாவை
சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் பிள்ளையார் தெருவில் 7ஆம் நம்பர் வீட்டில் வசிப்பவன் கருணாகரன். அவன் கூட்டுக்குடும்பமாக வசித்தி வருகிறான். அவனுக்கு குழந்தைகள் என்றால் அவுளவு இஷ்ட்டம். கருணாகரனின் மனைவி பெயர் கல்யாணி. ஆனால் இவர்கள் இருவருக்கும் திருமணமாகியும் அவனுக்கு குழந்தையில்லை. ஆனால் அவன் அண்ணனுக்கு குமாருக்கு குழந்தை இருந்தது, அவள் பெயர் சீதா. சீதாவுக்கும் கருணாகரன் என்றால் ரொம்ப இஷ்ட்டம். எந்த அளவு என்றால் அவள் எப்போதும் கருணாகரனுடன் தான் தூங்குவாள்.
ஆனால் கல்யாணியை கண்டால் யாருக்கும் பிடிக்காது. ஏதுக்கு எடுத்தாலும் அவளின் மானியார் சிவகாமி அவளை திட்டிக்கொண்டே இருப்பால். “மலட்டு முண்ட அதை எடு” “மலட்டு முண்ட இத செய் “ என்று சிவகாமி அவளை எந்த வேலை செய்தாலும் மலடி என திட்டிக்கொண்டே இருப்பாள். ஆனால் கல்யாணி இதுவரை அவளை அதிர்த்து பேசியதே இல்லை. இவள் மாமியாருடன் சர்மிளாவுக்கு ( மூத்த மருமகள் ) இவளை பிடிக்கவே பிடிக்காது. கல்யாணி சீதாவுடன் விளையாடினால் போதும் “ஏய் சீதா” என அழைத்து “என்தன தடவை சொல்லி இருக்கேன் அந்த மலடிக்குடலம் செரக்குடதுன்னு” என சீதாவை திட்டுவாள் சர்மிலா. அப்போது கல்யாணியின் முகம் குஞ்சிகளை இழந்த பெண் கோழியைப்போல இருப்பாள்.
அப்படி ஒரு நாள் வீட்டில் கருணாகரன் இல்லாத நேரம். அன்று மதியம் ஹாலில் கல்யாணி டிவியில் மெட்டிஒலி நாடகம் பார்த்துக்கொண்டிருந்தால். அப்போது சர்மிளா, குமார், சிவகாமி மூவரும் அவள் முன் வந்து நின்றனர்.
அவளுக்கு ஒன்றும்புரியவில்லை. சர்மிளா கையில் ஒரு காகிதம் இருப்பதை மட்டும் கண்டால். அப்போது அந்த காகித்தை அவள் முன்னிட்டி “இந்த டைவஷ் பேப்பர்ல கையெழுத்து போடு” என அவளிடம் சர்மிளா சொல்லி அவளின் பார்வையால் கல்யாணியை எரித்தல். அதற்கு கல்யாணி “என்னால அதெல்ல செய்ய முடியாது” என கல்யாணி பயத்துடன் சொல்ல உடனே கோபத்தில் சர்மிளா அவளின் முடியை பிடித்துக்கொண்டு கல்யாணியின் கன்னத்தில் அறைந்து அவளிடம் டைவஷ் பேப்பரை காட்டி “ஏய்... இந்த பாருடி மறியாதைய இதுல கையெழுத்த போடு இல்ல அவலோதா உனக்கு... எங்க வீட்டு பையன் வாழ்க்கைய கெடுக்கலாம்னு பாக்குறியடி முண்ட” என அவளை சர்மிளா மிட்ட அப்போதும கல்யாணி “என்னால போட முடியாது” என கல்யாணி அழுதுக்கொண்டே சொலுகிறாள்.
அமைதியாக இருந்த சிவகாமி உடனே கல்யாணியின் கழுதை பிடித்து நெரித்து கொண்டு அவளிடம் “அடியேய் மலட்டு முண்ட. குழந்த பொறக்காத பொம்பள என்ன மைத்துகுடி. நீ செத்துடு நீ எல்லாம் எதுக்குடி உயிரோட இருக்க” என சிவகாமி அந்த தெருவே அலறும்படி காத்த. அப்போது அவள் அருகாமையில் இருந்த குமார் இருகையாள் இழுத்து கல்யாணியிடம் “மா மா... விடுமா செத்துட போறா” என குமார் கண்கள் பிதுங்க சிவகாமியை பார்த்து சொல்கிறான். உடனே அவள் கண்கள் துடிக்க அவனை பார்த்து “சாவட்டும் டா.. அப்புடியாவது என் புள்ளைக்கு ஒரு வழி பொறக்கட்டும்” என ஆக்ரோஷமாக சொல்ல.
இதை பார்த்துகொண்டிருந்த சர்மிளா அவள் முடியை பிடித்து இழுத்து அந்த டைவஷ் காட்டி “இப்போ இதுல கையேழுத்து போடுறியா இல்ல நீ பக்கத்த வீட்டுகாரகூட தொடர்புல இருக்கனு உன் குடும்பத்தியே சந்தி சிரிக்க வெக்கனுமா” என சர்மிளா சொல்ல அழுதுக்கொண்டிருந்த கல்யாணி அதிர்சியுடன் அவளை பார்க்கிறாள் . உடனே சர்மிளா கையில் இருந்த அந்த டைவஷ் பேபரை பிடிங்கிகொண்டு அவளுக்கு எதிரே இருந்த ரூமில் ஓடி கதவை சதுகிறாள்.
சில மணி நேரம் ஆகியும் கல்யாணி வெளியே வராததால் சிவகாமி சிறிது பயத்துடன் சர்மிளாவின் காதருகே சென்று “ஏய்.. எதாச்சும் செஞ்சிக்க போராடி என்னனு கொஞ்சம் பொய் பாத்துட்டு வாயே “ என முகத்தில் பயத்துடனும் வியர்வையுடனும் சிவகாமி சொல்ல அபோது “விடுங்க அத்த அப்புடியவது போயி தொலைக்கட்டும் சனியன் “ என சொல்லிக்கொண்டே அந்த கதவை தட்டுகின்றனர். அந்த கதவு திறந்தே கிடக்கிறது.
உள்ளே பேனில் கல்யாணி துக்கிட்டு தற்கொலை செய்துள்ளல். அவள் பின்புறம் உள்ள சுவற்றிள் “மலடியாக பிறந்தது என் தவறல்ல என்னை படைத்தவனின் தவறு. இதுவே உங்கள் மகனுக்கு இந்த குறை இருந்தால் அவனுக்கு என்ன பெயர் என்று தான் எனக்கு தெரியவில்லை. இப்படிக்கு பிறக்கப்படாத குழந்தையின் அம்மா” என எழுதி இருக்கிறாள் கல்யாணி. சர்மிளாவும் சிவகாமியும் அவளை பார்த்துக்கொண்டே நிற்க. அப்போது அந்த ரூமின் ஜன்னல் கற்றும் வந்தது அந்த கற்றில் கல்யாணியின் உடம்பு ஆட அவளின் முந்தாணி கிழே சரிந்தது. அப்போது கல்யாணியின் முளைகள் இரண்டும் அவளுக்கு பிரக்கப்படாத குழந்தைக்காக ஏங்கி தொங்கிக்கொண்டிருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்