logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

லீலாவிநோதன்

சிறுகதை வரிசை எண் # 260


அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி 2023. நிறம் மாறும் சட்டைகள் - லீலாவிநோதன் (7871329115) இன்றோடு சம்பளம் கிடைத்து ஆறுமாதமாகியது அருணுக்கு, மனைவியின் வருமானத்தால் மானம் இழக்காமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வேலையும் சரியாக கிடைக்காத பட்சத்தில், கடைசியாக சாப்பாடு டெலிவரி செய்யும் ஸ்விக்கி (SWIGGY) யில் வேலை செய்ய முடிவுச் செய்து அதில் சேர்ந்தான். இதில் ஒரு சௌகரியமிருந்தது சென்னை நகரத்தை எல்லா கோணத்திலும் பார்க்கலாம். நீண்டதெரு, குறுகிய சந்து, முட்டு தெரு, அழகான சாலைகள், பாலங்கள், கூவங் கடலோடு சேர்ந்து மணக்கும் வாழ்க்கை சென்னையின் அடையாளங்களை அனுபவிக்க வசதியானது. அருணுக்கு ஒதுக்கப்பட்டது சென்னையில் மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் சேர்ந்து வாழ்க்கை நகர்த்தும் தி. நகர் பகுதி, எல்லோரும் மீட்டிங் ஸ்பாட்டாக உள்ள நடேசன் பார்க்கில் கூடி காத்திருக்க வேண்டும். அங்கிருந்து வருகின்ற செல்போன் தகவலுக்கேற்ப நகர வேண்டும். இன்று மகள் கேட்ட “இபாகோ ஐஸ்” கிரீம்மை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் எண்ணத்துடனே பணியே துவங்கினான். தியாகராய்யா நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் மாதவி அபார்ட்மெண்ட்ஸ்க்கு இரண்டும் ஐஸ் கிரீம் டெலிவரி ஆர்டர் வந்தது. கடைக்கு சென்று டெலிவரியை வாங்கி கொண்டபின். வண்டியில் காலையில் தான் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி இருந்தான். SWIGGY டெலிவரியில் சௌகரியமுண்டு எந்த பகுதியோ அந்த பகுதிக்கு மட்டுமே டெலிவரி. செய்ய தகவல் அனுப்புவர்கள். வீட்டாண்ட யாருக்கும் இந்த வேலையை தாம் செய்வது தெரியாது. இதற்காக நண்பன் ஆபிஸில் டி-சர்ட்டும், பையையும் வைத்து விட்டு காலை கிளம்பும் போது எடுத்துச் சென்று, பூங்காவில் மாற்றிக் கொள்வான். அதேயும் மீறி சிலர் கண்களில் அகப்பட்டுமிருக்கலாம். அப்படி தான் வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள நண்பன் குமாரை பார்க்கும் போதும் அதை அவனும் பெரியதாக கேட்கவில்லை. வண்டி நகர்ந்த சிறிது துரத்திற்க்கு எல்லாம் ஏதோ ப்ராபளத்தில் ஆப்பாகிவிட்டது. அருண் தனக்கு தெரிந்த வித்தைகளைப் பயன்படுத்தி பார்த்தான் வண்டி நகர்வதாய் இல்லை. அந்தப் பக்கத்தில் உள்ள இன்னொரு டெலிவரி ஆளிடம் இதை கொடுக்கும்படி சொல்ல அவனுக்கு ஏற்கனவே நான்கு டெலிவரி இருக்க “ப்ரோ சாரி” என நகர்ந்தான். நேரம் கடந்துக் கொண்டேயிருந்தது. இவ்வாறு காலை பதினொரு மணிக்கு யார் ஐஸ் கிரீம் ஆர்டர் செய்வார்கள் என யோசித்தப்படி அருகில் உள்ள டூ வீலர் மெக்கானிக் கடையில் வண்டியை தள்ளிச் சென்று காண்பிக்க மெக்கானிக் வண்டியின் ஸ்டார்ட்டிங் ப்ளேக்கை கையிலிருந்த பிளேடால் கீறி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்தான். மாதவி அபார்ட்மெண்ட்டை ஒரு வழியாக தேடி சேர்ந்தான். நான்காவது மாடியில் உள்ள வீட்டின் காலிங் பெல்லை அழுத்த நாற்பது வயது மதிக்க தக்க பெண் வந்தாள். பின்னே மூன்று வயது இருக்கும் சிறுமியும் வந்தாள். சிறுமி மகிழ்ச்சியுடன் அம்மாவுக்கு பின் நின்றாள். “ஏம்பா உனக்கு எப்போ ஆர்டர் கொடுத்தது எப்போ ” இப்போதான் வர, “இல்லை மேடம் கொஞ்சம் வண்டி ப்ராப்ளம் அதான்“. “ம் கொடு”. கவரை எடுத்துக் தந்தான். அந்த யுவதியும் அரை மனத்துடன் அந்த டெலிவரியை வாங்கினாள். அவளிடம் ஏதும் எதிர்பார்க்க முடியாது என உணர்ந்தபடி நிற்க, அவனுக்கு அடுத்த ஆர்டர் வந்தது.. “நில்லுப்பா என்ன வாங்கியந்தே” “ஐஸ் கிரீம் மேடம்”. ”பாருப்பா எல்லாம் உருகி தண்ணியா இருக்கு, எனக்கு வேணாம் எடுத்துக்குனு போப்பா”. “இல்லே மேடம் கொஞ்சம் பிரிட்ஜில் வைத்தால் சரியாகிவிடும்” ” ம்ம் எனக்கு வேணாம்பா இந்த ஐஸ் கிரீம்”, அம்மா பரவாயில்லை, பிரிட்ஜில் வைத்து மத்தியமாய் சாப்பிடுகிறேன் வாங்கு அம்மா என சிறுமி கூறியதையொட்டி அந்த பெண் விரக்தியுடன் வாங்கிக் கொண்டாள். சிறுமி கண்சிமிட்டி சிரித்தாள். இந்தப்பாயென யுவதி கொடுத்த காசை வாங்க மறுத்து வெளியே வந்தான் நேரம் மதியம் ஒன்று இருபது ஆகிவிட்டது. ஐயோ! இனிமேல் ஐஸ்கிரீமே பாதுகாக்க பெரிய தர்மாபாக்ஸ் கொடுப்பானுங்களோ! அதையும் சேர்த்து சுமக்க வேண்டும்மா யோசிக்க ரோட்டின் எதிர்பக்கமிருந்து பக்கத்து வீட்டு முத்துக்குமார் பெயர் சொல்லி அழைத்தான். சீக்கிரம் இந்த ஏரியா விட்டு வேறு ஏரியாவுக்கு மாறவேண்டும் என உள்மனம் கூறியது. அருண் காலையில் மனைவி மதி கொடுத்த பழைய சாதத்தில் தயிர் நன்றாக கலந்து சாப்பிட்டான். உலகில் சாப்பாடு போடுகிறவர்கள் எல்லாம் பழைய சாதத்தை சாப்பிடுகிறார்களோ? என்னமோ? வேலை கிடைக்காது அலைந்து ஓய்ந்தவர்கள். இதுப்போல வேலையை கடைசியா தேர்வுச் செய்வது இந்தியாவில் சாதராணமாகிவிட்டது.. அருணுக்கு இன்று ஒதுக்கப்பட்ட ஏரியா ராயபுரம் பகுதி, இந்த ராயபுரம் பகுதிக்கு அவனை மாற்றியதற்க்கு காரணம் ஊரில் அவனுடைய மாமா தங்கவேல் இறந்துவிட்டது தான். சொல்லாமல் விடுப்பு எடுத்தற்க்கு தண்டனையாய் இந்த ராயபுரம் ஏரியாவிற்க்கு கடந்த நான்கு நாட்களாக வந்துக் கொண்டுயிருக்கிறான் வடசென்னைப் பற்றி ஊடகங்கள் கூறியதில் முழுவதும் உண்மையில்லை, எங்கள் நிறுவன விதிமுறைகளை உங்களுக்கு சொல்கிறேன் கேளுங்கள், சாப்பாட்டை விரைவாக டெலிவரி செய்ய வேண்டும், ஆகையாலேயே நீங்கள் சிவப்பு டி-ஷர்ட் போட்ட எங்கள் ஆட்கள் ரோட்டில் வேகமாக சிக்னல் விழுந்ததும் முதலாக வண்டியில் பறப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரு நாளில், குறைந்தது இருநூறு கிலோமீட்டர் வரை பயணம் செய்து ஆக வேண்டும். எப்படி இருநூறு என உங்களுக்கு குழப்பம் வரலாம். ஒரு நாளில் பதினாறு டெலிவரிக்கு மேல் செய்தால் மட்டுமே இன்சென்டிவ் கிடைக்கும் பதினாருக்குள் செய்தால் வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைக்கும். பதினாருக்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெலிவரிக்கு தொகை ஏறி வரும், எங்கள் நிறுவன சூப்பர்வைசர் உண்மையிலேயே பாராட்ட வேண்டும் அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுப்பதில் அவர் பொதுவுடமை சித்தாந்தத்தை அப்படியே கடைப்பிடிப்பார். அப்போது தான் அனைவருக்கும் குறைந்தது ஒரு நாள் கூலியாக 700 ரூபாய் கிடைக்கும். அதற்காகவே நானும் ஓடிக்கொண்டுயிருக்கிறேன். மதியம் மூன்று மணிக்கு ராயபுரம் மாதாகோவில் சந்தில் உள்ள சார்லஸ் என்பவரின் வீட்டிற்க்கு ஒரு ‘சிக்கன் லாலிபப்‘ கொண்டு சென்றேன்.. அவர் வீடு. எப்படியோ வழி கேட்டு சென்றுவிட்டேன். இதை கூற மறந்துவிட்டேன். எங்களுக்கு வழியை கூறும் . ஒரு சில ஆட்டோக்காரர் மட்டுமே சரியான வழியை கூறுகின்றனர். காலிங்பெல்லை நீண்ட நேரமாக அழுத்திக் கொண்டு நின்றுயிருக்கிறேன், யாரும் கதவை திறக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அவருடைய செல்போனுக்கு டயல் செய்தேன், யாரும் எடுக்கவில்லை ரிங் மட்டுமே ஆகிக் கொண்டுயிருந்தது. என்ன? செய்வது ஏன தெரியாது வெளியே வந்தேன் வண்டியை ஆன், செய்யும் முன் என் செல்போன் சினுங்கியது. “ஹலோ யார் சார் நீங்க” என மரியாதையுடனான அழைப்பு அது. . “சார் நான் swiggy டெலிவரியிலிருந்து பேசுறேன் நீங்க ஆர்டர் கொடுத்திங்க சார் அதான்” “ஓ அதுவா” வாங்க சார் எப்ப வருவிங்க” “சார் நான் பத்து நிமிஷமா காலிங் பெல்லை அழுத்திப் பார்த்தேன். யாரும் வரலே“ “சாரிங்க பெல் வொர்க் ஆகாது சார் பிளீஸ் திருப்பி வாங்க சார்“ சமீப காலங்களில் என்னை மரியாதையாக சார் போட்டு அழைத்ததால் நானும் டெலிவரி செய்துவிடலாம் என வேகமாக அந்த சந்தில் சென்று அவர் வீட்டை அடைந்தேன். மீண்டும் கதவு மூடியபடியே இருந்தது. மீண்டும் செல்போனில் அழைத்தேன். இந்த முறை சார்லஸ் மிக வேகமாக கதவை திறந்தார். “சாரிப்பா வா உள்ளே என அழைத்தார்”. உள்ளே சென்று அவர் சொன்ன சேரில் உட்கார்ந்தேன். அவரிடம் உணவுப் பொட்டலத்தை கொடுத்துவிட்டு, திரும்புகையில் தம்பி இருந்தப்பா என சார்லஸ் இருநூறு ரூபாய் கொடுத்தார். பரவாயில்லை வைச்சுக்கோ என கையில் அழுத்தினார். ரூபாய் வந்த மகிழ்ச்சியில் என் மனதில் சந்தோஷம் தலை தூக்கியது. “வாங்க சாப்பிட்டு போகலாம்” என சார்லசின் அழைப்பு என்னை இந்த நாளுக்கான தொகையை சம்பாதித்து விட்டாய் உணர்த்தியது. உள்ளே சென்று சார்லஸ் பிரிட்ஜில் இருந்து சில்லான இரு பீர் பாட்டிலுடன் வந்தார். வைத்து விட்டு வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை மூடி விட்டு அமர்ந்தார். “வாங்க தம்பி வெய்யிலேயே எவ்வளவு சுத்தற ஒண்ணு சாப்பிட ஒன்னுமாகாது.” என்றார். செல்போனை அனைத்தேன் சார்லஸின் கட்டளைக்கு அடிப்பணியும் வேலையாளாக மாறி, நீண்ட நாளுக்கு பிறகு சென்னையில் சுத்தமான இடத்தில் பீர் குடித்தேன். மணி எட்டு மணிக்கு விழிப்பு வந்து எழுந்தேன். என் முன்னே சார்லஸ் டி‌.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டுயிருந்தான். அவரிடம் நன்றி சொல்லி விடைபெற்றேன். வீடு வந்து சேர மணி பத்தரை ஆனது. வீட்டில் எதுவும் பேசாமல். மதி கொடுத்த சப்பாத்தியை சாப்பிட்டு உறங்கினேன். நீண்ட நாளுக்கு பிறகு மதியம் நல்ல தூக்கம் போட்டதால் இப்போது தூக்கம் வர நேரமாகியது. மறுநாள் மதியம் அண்ணாநகர் ரவுன்ட்டான பகுதியில் டெலிவரி மெசேஜ்க்கு காத்திருக்கிறேன். அண்ணாநகர் பகுதியை பொறுத்தவரை பெரிய மனித தொல்லைகளில்லை. இங்கு மனிதர் ஒருத்தர் ஒருத்தரை பார்த்து பேசுவதில்லை போலும். எல்லோர் முகத்திலும் புன்னகையின்றி கடுப்பான முகத்துடன் சென்றுக் கொண்டிருக்கிறார். பன்னிரண்டு முப்பது மணிக்கு மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம். செல்போன் சிணுங்கியது. அதில் SBI காலனியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பிற்க்கு தயிர் சாதம் மற்றும் முழுசாப்பாடு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் டெலிவரி பெரிதும் சைவப் சாப்பாடாகவும், அதற்கு நேர் எதிராக முகப்பேர், திருமங்கலம் பகுதியில் அசைவப் சாப்பாடாகவும் ஆர்டர்கள் வருவது நடைமுறை. குடியிருப்பை அடைந்தேன். வெளியே நாய்கள் ஜாக்கிரதை போர்டு இருந்தது. நாய்கள் இந்த வேலையில் எங்களுக்கு பெரிய எதிரியாகும். அப்படிதான் போன மாதம் நண்பன் ஒருவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் அதிக டெலிவரி செய்ய எத்தனித்து நாய் கடி உடன் வேலைவிட்டு சென்றான். நாய் இருப்பது பெரிதும் வெளியே இருக்கும் போர்டில் நாய்கள் ஜாக்கிரதை இருக்கும். ஆனால் இந்த குடியிருப்பில் நாய்கள் இல்லை கேட்டின் உள்ளேயும் வெளியேயும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. வெளியே செக்யூரிட்டி ஒருவர் இருந்தார் தயங்கியபடி அவரிடம் சென்று ஆர்டர் விவரத்தை கூறினேன். ”தம்பி அந்த பக்கமாபோய் சோத்து கை பக்கமா திரும்பு, அங்கே லிப்ட் இருக்கும்” என்றார். லிஃப்டை எதிர்பார்க்காமல் நடந்து நான்காவது தளத்தில் உள்ள வீட்டின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்தினேன், சில நிமிடங்களுக்கு பிறகு வயதான பாட்டி ஒருவள் வந்தால். ”என்னப்பா”, என கதவை காலடிக்கும் குறைவாக திறந்து பாட்டியின் குரல் கேட்டது. ”சாப்பாடு டெலிவரி” . ”தாப்பா” என கை நீட்டினாள். சாப்பாடு அந்த கதவுக்கும் சங்கிலிக்கும் இடைப்பட்ட பகுதியில் நுழைய முடியவில்லை சங்கிலியில் பூட்டு ஒன்றும் போடப்பட்டு இருந்தது. பாட்டிக்கு மிகவும் சிரமமாக இருந்தது வீட்டில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. “இந்தப்பா இப்படி வா அந்த ஜன்னல் பக்கமா வாப்பா“ என கூற,. ஜன்னல் இன்னும் மோசம் அதில் கொசுக்கள் நுழையாமல் இருக்க வலை ஒட்டப்பட்டு இருந்தது. அந்த பகுதியிலும் சாப்பாடு கவரை கொடுக்க முடியவில்லை. “இல்லை பாட்டி கதவாண்ட வாங்க., எப்படி ஆர்டர் செய்திங்க“ என கேட்டேன். “நான் எங்க ஆர்டர் செய்தேன் பெசன்ட் நகரில் உள்ள என் மகள் தான் ஆர்டர் தர்ரா எனக்கு அவ ஆத்துக்கார்ருக்கும் சரியா ஒத்து வராது. அதான் என் பையன் வீட்டில் இருக்கேன். அவனும் நேத்து நைட்டு பெங்களூருக்கு ஒரு வேலை விஷயமா போய் இருக்கான். அதான் போகும்போது கதவை திறக்க கூடாது என உத்தரவும் போட்டு பூட்டி சாவியை எங்கோ ஜன்னல் வழியா தூக்கி போட்டான்.” “இத்தனை நாளா சரியா நுழையர மாதிரி தான் ஆர்டர் செய்தான். இன்னைக்கு என்ன ஆச்சினு சளித்துக்கொண்டாள்“. உணவு இரண்டு வேலைக்கு ஆனதாய் நான் உணர்தேன். பாட்டி சாவியை தேடுங்க. இப்ப வரேன் என்று சென்றவள் திரும்பி பார்த்தால். ஜன்னல் பக்கமா வாப்பா கோபத்துடன் சென்றவள் கொசுவலையை இழுத்து எறிந்தால். ஜன்னலை முன்பக்கமா தள்ளி கை நீட்டி வாங்கிக்கொண்டாள். ரொம்ப நன்றி பா இவ்வளவு நேரம் காக்க வச்சிட்டேன். எனக்கூறி இந்தப்பா கையிலிருந்த ஐம்பது ரூபாய் தவறி விழுந்தது. இன்னைக்கு டெலிவரி குறைவாக வந்தது வந்த டெலிவரியில் பெரிய அளவில் டிப்ஸ் கிடைக்கவில்லை. நந்தகுமார் ஸ்விக்கிக்கு பதில் சொமோட்டோ (zemato) டெலிவரிக்கு வரும் படி கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான். சொமோட்டோவில் ஒரு நாளில் கணக்கில்லாத டெலிவரி மூலம் அதிக பட்சமாக 800 ரூபாய் வரை கிடைப்பதாக கூறினான். ஆனால் அதில் ஒரு சங்கடம் உள்ளது. டெலிவரி குறிப்பிட்ட ஏரியாவை சார்ந்தது இல்லை ரயில் வண்டியை போல தொடர்ச்சியாக ஆர்டரின் அழைப்பில் நீண்டுக்கொண்டே செல்லும். அவ்வாறு நீண்டு வருவது வீடு பக்கத்து ஏரியாவிற்க்கும் வந்து விடும். ஏரியாவில் சாப்பாடு பையுடன் அலைவது கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையை கொடுக்கும். அதை எல்லாம் பார்க்க முடியாது இந்த மாதம் பசங்களுக்கு பீஸ் கட்ட வேண்டும். அந்த வாரமே சொமோட்டோவில் கருப்பு டி-ஷர்ட்டுடன் வேலைக்கு சேர்ந்தேன். சென்னை நகரங்களின் சந்துகள் புதிரான அமைப்போடு எப்போதும் எல்லோரையும் வரவேற்க தயாராகிருக்கிறது. உண்மையில் நான் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி என்றால் நீங்கள் “ச்சு ச்சு” என சொல்லி என்னை கடந்து தானே போய்யிருப்பீர்கள். ======= லீலாவிநோதன், பேச 7871329115 உறுதிமொழி கடிதம் தங்களின் அறிவிப்பை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இந்தச் சிறுகதை முழுக்க என்னுடைய கற்பனை மற்றும் அனுபவத்தின் வாயிலாக எழுதப்பட்டது. பிற மொழி கதையின் தழுவலும் இல்லை என உறுதியாக கூறிக்கொள்கிறேன். வேறு பத்திரிக்கையில் பிரசுரமாகவில்லை எனவும், இந்தப் போட்டியின் முடிவுகள் வரும் வரை வேறு இதழுக்கோ, இணைய ஊடகத்திற்கோ அனுப்ப மாட்டேன் என உறுதியாக தெரிவிக்கிறேன். தங்கள் உண்மையுள்ள, லீலா விநோதன் 31, காமராசர் சாலை, இராஜா அண்ணாமலை புரம் சென்னை- 28 செல் 7871329115

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.