ஒ.முஹம்மட் மபாஸ்
சிறுகதை வரிசை எண்
# 247
வெவ்வேர்கள்
மே மாதக் கடைசி வாரத்தில் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் சாய ஆலையில் வேலை செய்யும் ராஜேஸூம், மஹீஸூம் காரியாலயத்திற்கு சென்றார்கள். சாய ஆலை என்றால் தெரியும் தானே. துணிகளுக்கு சாயமிடுவது உட்பட இன்னும் சில வேலைகள் அங்கு இடம் பெறும். ராஜேஸூம் மஹீஸூம் அபிவிருத்தி திணைக்களத்தின் சாய ஆலையில் வேலை செய்பவர்கள்.
ராஜேஸ் இங்கு சில வருடங்களாக பணிபுரிகிறான் ராஜேஸின் அலுவலகத்தில் மஹீஸூம் புதிதாக பணியாற்றுகிறான்.
சாய்ந்தமருதில் இருந்து அபிவிருத்தி அலுவலகத்திற்கு நான்கு பணியாளர்கள்
நியமிக்கப்பட்டார்கள். முதல் நாளில் ஒவ்வொருவரும் தம்மை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
ராஜேஸூடன் நான்கு பேரில் ஒருவராக றிஸ்னா அங்கு பணியாற்றுகிறார். வெகுளித்தனமாக இவளுக்கு ஹிந்துக்களுடன் சோசலிசமாக பழக வேண்டுமென்ற எண்ணம். மனதில் துளிர் விட்ட நிலையில் ராஜேஸூம் றிஸ்னாவும் மொபைல் இலக்கங்களை பரிமாறிக் கொண்டனர். நான்கு பேரின் மத்தியில் ராஜேஸ் ஹீரோவாக வலம் வந்தான்.
ஏனென்றால் ராஜேஸை பற்றி மூவரிடமும் நல்லவர் என்று றிஸ்னா கூறியபடியால் அவர்களும் நம்பி விட்டார்கள்.
நாட்கள் சென்றன. றிஸ்னாவின் மனதில் திருப்பங்கள் திகைக்க ஆரம்பித்தன. என்னவாக இருக்கும் என்று எழுகின்ற வாசகர்களுக்கு ஒரு பாடலை கற்பனை வரையட்டும். ராஜேஸிடம் இருந்து “ஐ லவ் யூ” என்று குறுஞ்செய்தியொன்று றிஸ்னாவிற்கு வந்ததது. இவளும் என்னவென்று கேசுவலாக கேட்கிறாள்.
அவனின் பதில் தவறுதலாக வந்து விட்டதாக கூறினான். சிறிது நாள் கழித்து மீண்டும் அதே போல் குறுஞ்செய்தி வந்தது. அதற்கு அவளின் எண்ணம் விளங்காமல் அனுப்பப்பட்டிருக்கும். என்ற எண்ணத்தோடு அவனிடம் கேட்டாள் அதற்கு அவன் தவறுதலாக வந்ததாக கூறினான். இப்படியே நாட்கள் போக மீண்டும் அதே போல் குறுஞ்செய்தி வந்ததது. அதற்கு றிஸ்னா,
“இனி இது சரிபட்டு வராது” என்ன நினைத்து அதைப்பற்றி அவனிடம் கேட்டாள், ராஜேஸ் றிஸ்னாவை காதலிப்பதாக கூறினான். “இது சரியாக வராது” என்று ஒற்றை வார்த்தையில் கூறினாள்;.
இவனும் மன உளைச்சலுக்கு உள்ளாகினான். இருவரும் பேசுவதில்லை. வேலைத்தளத்திலும் முகம் சுருங்கப்பட்ட நிலையில் காலங்கள் கடந்து போயின. ராஜேஸின் அப்பா சிறுவயதில் அம்மாவை விட்டு விலகியவர். ராஜேஸுக்கு இரண்டு தம்பிகள். முதல் பையனான ராஜேஸ் அம்மாவின் செல்லப் பையன். அம்மா பெரும் கஷ்டத்துக்கு மத்தியிலும் வேலைக்கு சென்று அவனைப் படிக்க வைத்தார்.
ராஜேஸ் வேலை செய்யும் இடத்திலிருந்து வீடு தூரம் என்பதால் வேலை செய்யும் இடத்தின் விடுதியில் தங்குவது வழக்கம். றிஸ்னாவின் வாப்பா கடற்றொழில் “உம்மா ஹவுஸ் வைப்”;
ஒரு தாத்தாவும் இரண்டு தம்பிகளும். சாதாரண வசதியுடன் படித்து வந்த இவளுக்கு ராஜேஸின் வரண்ட முகத்தை கண்டு காதல் மலரத் தொடங்கியது. ஹிந்துக்களின் மீதான சோசலிச நட்புறவில் மதத்தை மறந்து மனித இரத்தத்தில் ஓடும் குணத்திலும்,
பண்புகளிலும் பலவீனங்கள் பாரில் பறிக்கப்பட்டது.
மனம் போன போக்கில் போனால் இதற்கான பாடலும் வாசகர்களுக்கு வயலின் மூலம் இசையமைக்கட்டும். ராஜேஸ் தன்னுடன் பணிபுரியும் மஹீஸூடன் நல்ல நட்புறவில் இருந்ததால் நான் ஒரு முஸ்லிம் பெண்னை காதலிப்பதாகவூம் அவளை தான் திருமணம் செய்யப் போவதாகவும் கூறினான். சந்தோசமான நிலையில் இருக்கும் போது அவன் காதலிக்கும் பெண்னை பற்றி கூறுவதுண்டு. மஹீஸுக்கு சற்று சந்தேகம் வந்தது றிஸ்னாவை தான் ராஜேஸ் காதலிப்பது என்று அவனுக்குள் தோன்றியது. எப்படியூம் கதை வெளியில் வரும் என்ற நிலையில் இருந்தான்.
சாய ஆலையில் வேலை செய்பவர்களை செயலமர்வுக்காக சாய்ந்தமருதுக்கு போகச் சொன்னார்கள். ராஜேஸூம் மஹீஸூம் சென்றார்கள்;. மூன்று நாள் செயலமர்வில் ஒருநாள் இரவு சாப்பாடு றிஸ்னாவின் உம்மா சமைத்துக் கொடுத்தார். அப்போது தான் உணர்ந்தான் றிஸ்னாவின் வீட்டுக்கு அருகில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்தான்.
அடுத்த வருடத்தின் ஆரம்பம், மஹீஸ் றிஸ்னா பணிபுரியும் நிலையத்திற்கு மாற்றப்பட்டான். றிஸ்னாவூடன் நட்புறவுக்கு ஆளானான்.
அவ்விடத்தில் றிஸ்னாவிற்கு ராஜேஸுக்கும் இடையிலான தொடர்பு எந்தளவுக்கு போய் கொண்டிருக்கிறது. என்பதை அறிந்த மஹீஸ். ராஜேஸ் பற்றியும் அறிந்திருந்தான். தம்பி என்ற ரீதியில் றிஸ்னாவிடம் உறவான மஹீஸ், ஏமாற்றப்பட்டு விடக் கூடாது எண்ணத்தில் றிஸ்னாவை பற்றி யோசித்தான்.
ஒருநாள் றிஸ்னாவிடம் உங்களிடம் தனியாக பேச வேண்டுமென கூறினான். றிஸ்னா என்ன நினைத்தாலும் பரவாயில்லை. ராஜேஸ் இதற்கு முன்பு எப்படி இருந்தானோ தெரியவில்லை மத ரீதியாக ஒன்று சேர்வதால் பிளவுகள் பிரச்சினைகள் இருக்கிறது. இரு வேறு வேறு சக்கரங்களை வாகனத்தில் பொருத்தி ஓட்டுவது போல் விடயம் அது வாழ்க்கையிலும் பயணிப்பதும் நஷ்டமென்று விவரிக்க அதற்கு றிஸ்னா இதையெல்லாம் “ஏன் என்னிடம் சொல்றீங்க?” என்று கேட்டாள். தம்பி என்ற ரீதியில் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று முகத்தின் முன்னால் “ராஜேஸை நீங்க லவ் பண்ணுறீங்களா?” எனக் கேட்டான்.
அதற்கு றிஸ்னா ஆரம்பத்தில் என்னுடன் நல்ல பிரண்ட் அவ்வளவு தான்இ எல்லாத்தையும் மறைத்து பொய் சாட்டுக்களை கூறினாள். வேற யாரோ லவ் பண்ணினே அவரை தான் பேசி வைத்திருப்பதாக கூறினாள். அதற்கு மஹீஸ் தான் இப்படி கேட்ட விடயத்தை ராஜேஸிடம் கூற வேண்டாம் என சத்தியம் வாங்கினான். அன்றிரவு ராஜேஸ் மஹீஸ்க்கு கோல் பண்ணினான.; “ஏன்டா கேட்டாய்”; என்றான், “என்றோ ஒருநாள் எப்படியும் விளங்கத்தானே போகுது” என்று சொல்லவும் அவதிப்பட தேவையில்லை என்று சுமுகமாக பேசிவிட்டு வைத்தான். சத்தியத்தை மீறிய றிஸ்னாவையும் மறைத்து வைத்த காதலையும் பற்றியும் றிஸ்னா விடயத்தில் தெளிவாகிக் கொண்டான் மஹீஸ். இதை இப்படியே விடுவோம்,
இதற்கு பிறகு இதை பற்றி கேட்க தேவையில்லை என்று மீண்டும் வழக்கம் றிஸ்னாவிடம் பேசி வந்தான். நாட்கள் நகர்ந்தன மீண்டும் மஹீஸ் ராஜேஸ் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டான்.
கைத்தொழில் முறைகளை முன்னெடுக்கும் வகையில் கண்காட்சி வேலைகள் தொடங்கப்பட்டன, சரஸ்வதி பூஜை வந்ததது. அந்த நேரத்தில் திணைக்கள கோவிலில் விஷேட பூஜை இடம்பெற்றது. ஐயருக்கு உதவிக்கு ஆள் தேவை என்று ராஜேஸை கூப்பிட்டார்கள்.
ராஜேஸூம் பிரசாதத்தை கொடுத்தான்.
..
எல்லாம் முடிந்து சாய ஆலையில் வைத்து மஹீஸ் நீங்கல்லாம் சும்மா பொய்க்கு மாறுவேன் என்று சொன்னீங்கே என்றவூடன். அரைந்து விடுவேன் என்று கூறி திருநீரை தண்ணீரில் கழுவி விட்டு. வேறொருவரும் இல்லாத பட்சத்தினாலயே ஐயருக்கு அசிஸ்ட்டானாக செல்ல வேண்டி இருந்ததை கூறினான். மஹீஸூம் புரிந்து கொண்டான் அன்று இருவரும் சங்கடத்தில் இருந்தார்கள். அடுத்த நாள் ராஜேஸ் கதைத்தான்.
கண்காட்சி வேலைகள் மெதுவாக தொடங்கின ஒவ்வொருவருக்கும் வேலைப்பளு அதிகமானது. பணிகள் தொடர்ந்தது. நாட்கள் கடந்த நிலையில் இவர்களின் காதல் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் விளங்கத் தொடங்கியது. கண்காட்சி சிறப்பாக முடிந்தது. சில மாதங்கள் கடந்தன.; ராஜேஸூம் றிஸ்னாவூம் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க தொடங்கினார்கள். பத்து லட்சம் லோன் போட்டு அதில் பைக் வாங்கி மீதியில் றிஸ்னாவூம் இவனும் சேர்ந்து வீடு கட்டுவதற்கு ஆலோசித்து வீட்டு வேலைகளும் கொஞ்சமாக ஆரம்பிக்கஇ இவனும் பைக்கில் சாய்ந்தமருதுக்கு சென்று வருவதும் றிஸ்னாவின் தாத்தாவின் மகனுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கிச் செல்வதும், றிஸ்னாவிற்கு நகை வாங்கி கொடுத்தான்.
இவனது ட்வீட்டர் கணக்கில் றிஸ்னாவின் தாத்தாவின் மகனை போட்டு இவளுக்கு பிடித்ததால் இவனும் சந்தோசப்பட்டு கொள்கிறான். மஹீஸ் சாய்ந்தமருதுக்கு ஒரு வேலையாக சென்று றிஸ்னாவின் வீட்டிக்கும் செல்கிறான். றிஸ்னாவின் உம்மா “எப்படி வீடு தெரியூம்?” என்று கேட்க “ராஜேஸூடன் இதற்கு முன்பு வந்திருக்கின்றேன்.” என்று கூற முற்படும் போது றிஸ்னா கண்ணால் கூற வேண்டாமென கூறி றிஸ்னா நான் தான் வழி சொன்னேன் என்றாள். மஹீஸ் சிறிது நேரம் உரையாடி விட்டு விடை பெற்றான்.
மஹீஸ் வேலைக்கு வந்த போது ராஜேஸ் மஹீஸிடம் தெரியாத மாதிரி நக்கலுக்கு “எங்கே போய் வந்தீங்க?” என்று கேட்கிறான். இவனும் “உங்களுக்கு தெரியாதா?” என்று பேசி சென்றார்கள். ஒருநாள் “எப்படி தொழ வேண்டும்” என மஹீஸிடம் ராஜேஸ் கேட்டான். இவனும் தொழும் முறைகளை காட்டிக் கொடுக்கிறான். நாட்கள் சென்றன.
றிஸ்னாவின் தம்பி றிப்னாஸ் ராஜேஸ் வேலை செய்யும் இடத்திற்கு யாருக்கும் தெரியாமல் வந்து சுத்தி பார்த்து விட்டு சென்றான். ராஜேஸ் சந்தோசத்தில் ஏத்தி சென்று சுத்தி காட்டி வழி அனுப்புகிறான். மஹீஸிடம் றிப்னாஸ் வந்த விடயம் பற்றி கூறவேண்டாம் என்று சொல்லி அவனை சந்திக்க வேண்டாம் என்றும் கூறி. விடுதி பாதுகாப்பாளரிடம் ப்ரண்ட் தம்பி என்று இருக்க சொன்னான். நோன்பு வந்ததது ராஜேஸை இப்தாருக்கு அழைக்கிறான். மஹீஸ் ராஜேஸூடன் சேர்ந்து இப்தார் செய்து மஹீஸ் நண்பர்களுடன் சந்தோசமாக பேசி விடை பெறுகிறேன். அதன் பிறகு மஹீஸின் ஏரியாவில் சந்தை இடம் பெற்றது அரிசியில் பெயர் எழுத சொல்லி ராஜேஸ் கேட்க மஹீஸ் இவரின் பெயரையும் எழுதி கொடுக்கிறான். அரிசியில் பெயர் எழுதுபவரிடம் அவன் பெயர் பார்த்து விட்டு மஹீஸ் பார்த்து முழுசுகிறான். மஹீஸ் அரிசியை வந்து ராஜேஸிடம் கொடுத்து சில நாட்கள் சென்றன. மஹீஸ் வேலை செய்யும் இடத்தில் இருந்து சம்பளப் பிரச்சினையில் நின்று விட்டான்.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை ராஜேஸிடம் இருந்து மஹீஸுக்கு தீடீரென கோல் வந்ததது.
என்னவென்று கேட்கவே, எனக்கு பள்ளியில் வைத்து கத்னா செய்திருக்கு என்றதும் மஹீஸ் சந்தோசமடைகிறான். பள்ளி சென்று பார்த்து பேசிவிட்டு பெயர் என்ன வைத்தது என தெரியாமலே சந்தோசத்தில் செல்கிறான்.
ராஜேஸ் தன் கூடவே நிற்க சொல்லியும் அடுத்த நாள் கொழும்பில் வேலைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அரை மனதோடு மஹீஸ் செல்கிறான். சில வாரங்களில் மதம் மாறிய ராஜேஸ் தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றினான்.
ராஜேஸ் அடிக்கடி சாய்ந்தமருதுக்கு றிஸ்னாவை சந்திக்க சென்றான். இருவரும் நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவருடைய குடும்பத்திற்கும் விடயம் தெரிய வந்தது. றிஸ்னாவின் வீட்டில் ஆரம்பத்தில் எதிர்த்தாலும் பின்னர் ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டனர். ராஜேஸின் வீட்டில் தான் ஏகப்பட்ட பிரச்சினை. ஒரு கட்டத்தில் பிரச்சினை முற்றி பூதாகரமாகியது. இருவரும் ஏற்கனவே வாழ்க்கையை ஆரம்பித்திருந்தனர். அதன் சாட்சியாக றிஸ்னா கர்ப்பம் தரித்தால். ராஜேஸின் தாயின் தொடர் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் றிஸ்னாவை விட்டு வழுக்கட்டாயமாக ராஜேஸ் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான். இருவரும் தனித்துப் பயணித்தனர்.
ராஜேஸின் அம்மா நஞ்சை குடிப்பேன் என்று சொன்ன ஒற்றை வார்த்தைக்காகவே றிஸ்னாவை விட்டு வந்து கதிர்காமத்திற்கு சென்று மாலை அணிந்தான். இவர்கள் செய்த தவறினால் அவளின் வயிற்றிலுள்ள குழந்தை என்ன பாவம் செய்தது. எல்லாமே விதியின் பாதையில் பயணிக்கிறது. சிசுவின் கருவை களைத்து விட்டு றிஸ்னா பெரும் துயரத்திற்குள்ளாகினால் அவள் வாழ்க்கை இருள் சூழ்ந்து அதையடுத்து அவள் திருமணம் செய்து கொண்டாள். ராஜேஸூம் திருமணம் செய்து கொண்டான்.
இருவரின் வாழ்க்கை வெவ்வேர்களாக
முளைத்துக் கொண்டது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்