logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இ.செல்வ ராஜ்

சிறுகதை வரிசை எண் # 238


அம்மையார் ஹைனூன் பீவி நினைவு சிறுகதைபோட்டி படைப்பு சிறுகதைப் போட்டி-2023 கலந்து கொள்ளும் சிறுகதை. விருத்தசேதனம் அநேகமாக இந்த முப்பது வருடத்திலே என் மனைவி முதல் தடவையாக குழப்பம் அடைந்தது முகத்தில் எதிரொலித்தது. என்ன சொல்றீங்க? சுன்னத் ஆ?.. கத்னாவா?.. விருத்தசேதனம்? சர்கம்சிஷன்?.. “ஆமாம் புனிதா எனக்கு அது பண்ணதுமாம் சுகர் கம்ப்ளெய்ன்ட் 300க்கும் மேல இருக்கறதர்ல டாக்டர் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு சுகர் சிகிச்சை பண்ணபிறகுதான் செய்ய முடியும் எனவே சுகர் டாக்டர் ஐ பார்த்தேன்.. அவரு மாத்திரையோட இன்சுலின் எடுத்துக்குங்க சுகர் வேகமாக குறையும்மனு. சொல்லி எழுதிக் கொடுத்துட்டாரு நான் என் மனைவியிடம் நான்ஸ்டாப்பாக சொன்னதை அவளால் கிரஹிக்க முடியவில்லை. பெருமூச்சுவிட்டாள்.... நான் எனது பேன்ட்டைக் கழற்றி பக்குவமாக அசைந்து நடந்து ஜட்டிமேல் மோதாமல் கோட் ஸ்டான்டில் மாட்டினேன். பிறகு சட்டையையும் கழற்றி மாட்டிவிட்டு ஜட்டியை அவிழ்க்கப் போனேன். அது சிறிது கறையுடன் கெட்ட நாற்றம் அழத்தது கூடவே டாக்டர் மருந்து போட்ட ஸ்மெல்லும் வந்தது கழற்றி அழுக்குக் கூடையில் போட்டேன். லுங்கிக்கு மாறினேன். எனது அறையில் வந்து நுழைந்து என்ன சொல்றீங்க நீங்க இன்னொரு தடவை விளங்கற மாதிரி சொல்லுங்க என என்னிடம் கேட்டாள் புனிதா.. எனக்கு யூரின் போற இடத்துலே நைட்ல சொறிஞ்சு சொறிஞ்சு புண்ணாயிடிச்சிலே உன்கிட்டேகூட காட்டினேனே அழுக்கும் சீழ் ரத்தமுமாய் அந்த சர்ஃபேஸ் துர்நாற்றத்தோட அதை ட்ரீட்மென்ட் எடுக்க சம்பந்தப்பட்ட டாக்டர் சந்திரனிடம் போனேன் காட்டினேன்... என்னது காட்டினீங்களா?.. ஆமாம் அவர் பார்த்துட்டு இது சில பேருக்கு சுகர் அதிகமாகிவிட்டால் வரும் நீங்கள் சுகர் அளவு 160 க்கு குறைச்சு செக் - பண்ணிட்டு வாங்க பிறகு டேட் தர்றேன். ஆபரேஷன் பண்ணிடலாம் என்றார். சார் வலிக்குமா? எனக்கு 54 வயது ஆகுது சார்.. இரண்டு வயசுப் பொண்ணுங்க இருக்காங்க... என்ன பண்றது பாருங்க அந்த இடத்துலே இவ்வளவு அழுக்கு சேர்த்து வச்சிருக்கீங்க.. பஞ்சாலத்தடவி எடுத்துக் காண்பிச்சாரு... வலிக்காதுங்க எறும்பு கடிக்கற மாதிரிதான் இருக்கும் பெண்கள்கிட்டே சொல்லாம மறைக்காதீங்க இது சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாததால் வருவது வேற வெனீரியல் டிஸீஸ் இல்லியே... என சிரித்துகொண்டே சொன்னார் டாக்டர்.. ஒருவாரம் கழித்து வந்து டேட் வாங்கிப்போங்க. எனக்கு அவர் அந்த எனது உறுப்பில் பஞ்சு வைத்து தடவி மருந்து வைத்து சின்னதாக துடைச்சு விட்டது குறுகுறுப்பாகவும். இன்னும் அந்த உணர்வு வேணும்னு கேட்கிற குப்பை கேட்பு ஆகவும் ரணம் இருந்தது. இன்னமும் சொன்னார். அதை சுன்னத் பண்ணி மேல்தோல் முனை எடுத்துட்டா சீழ் பரவாமல் புண் ஆறிவிடும் மறுபடியும் வராம இருக்க சேனிடேஷன் முக்கியம்னு சொன்னார். சுன்னத்?கத்னா? இந்த வயசுல கடவுளே எனக்கு இந்த சிகிச்சை தேவையா? சிறு வயதிலே எங்க ப்ரண்ட்ஸ் செக்ஸ் இம்ப்ரூவ்மென்டுக்கும் எய்ட்ஸ் வராம இருக்கறதுக்கும் பண்ணிக்க சொன்னாங்க எனக்கு கோபமா வரும் இயற்கையை எதிர்த்து போகக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தை சேர்ந்தவர்கள் இதை சிறுவயதிலேயோ பருவகாலத்திலேயோ ஒரு விழாவாக செய்வார்கள் சுன்னத் கல்யாணம் உலகத்துலேயே 68 விழுக்காடு ஆண்மக்கள் இசுலாமிய மதத்திலே விருத்தசேதனம் செய்தவர்களாக இருக்கிறார்கள் எனகூட பழத்திருக்கிறேன். இருந்தும் விறை ஆப்ரேஷன் ஹார்ட் ஆப்ரேஷன் கிட்னி ஆப்ரேஷன் -னு சொல்லாம அழகுதமிழ்ல விருத்தசேதனம்னு வச்ச அந்த மகராசனை கையெடுத்து கும்பிடணும். சின்னபுள்ளைல வரிசையாக கொல்லைப்புறத்துல ஒரு சாக்கடையோரம் டூ பாத்ரூம் போவோம் நாலஞ்சு ஆம்பினப் பசங்களோட அந்தரங்க உறுப்பு அங்கே ஆய்வு செய்வோம் நீறம்,அகலம், முனை பெருசு சிறுசுன்னு சில பேருக்கு அந்த மொட்டு அவிழ்ந்து உள்ளே தள்ளிணப்போகும் வரும் ஆனால் எனக்கெல்லாம் அப்படியில்ல ரொம்ப கூச்சப்படுவேன். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அப்படி என்ன யோசனையோ? எனது தோளை உலுக்கினாள். ஆமாம்மா. நான் என்னமோ ஆயிட்டேன். சொல்லுங்க பாரத்தை என்மீது இறக்கிவைங்க புனிதாவின் ஆறுதல் வார்த்தை இதமாக இருந்தது பக்குவமாகஇ மாத்திறைகளோட இன்சுலின் போட்டு சுகர்லெவல் குறைச்சதும் அவர்கிட்டே டேட் வாங்கப்போகனும் நம்ம பொண்ணுங்க காலேஜ்ல இருந்து வந்ததும் சொல்லும்மா.. உங்க அப்பாவுக்கு நோய் தாக்கம்னு என்னை தப்பா நினைச்சிடப்போகுது பிள்ளைங்க... மறுநாள்.... முன்பு மாதிரி பைக் ஒட்ட முடியாமல் ஆட்டோவில் பயணம் செய்து நான் வேலைபார்க்கும் அலுவலகம் சென்று அடைந்தேன். ஆபீஸ் வேலையை கொஞ்சம் எச்சரிக்கையுடன் செய்தேன் இன்சுலின் மருத்துவ அறிவுரையுடன் போட்டுக் கொண்டதால். பிறப்புறுப்பின் வலி தாக்கம் அன்று மாலை வரை சற்று குறைவாக இருந்தது. இருந்தும் இது குறித்து யாரிடமாவது கேட்கத் தோன்றியது. ராபின்சன் எனது ஆபிஸ்மேட் நிறைய செக்ஸ் பேசுவான். உலக விஷயம் அத்துபடி அவனை கேன்டீனுக்கு அழைத்துப் போனேன். மெதுவாக ஆரம்பித்தேன். எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று அவன் விழுந்து விழுந்து சிரித்தான். என்னப்பா செல்வராஜ் சுகர்ல சிக்கிட்டியே அந்த குறைபாடு மாத்திரம் என்ன என்ன செய்யும்னே யாருக்கும் தெரியாது இன்றைக்கு மருத்துவத்திலே நல்லா கொடி கட்டிப்பறக்கிற மருந்து வணிகமாயிடிச்சு சரி என்ன கேட்க வந்தே கேளு சொல்றேன். இது உயிர் நிலையா இருக்கே இது வரை என் உடம்புல டாக்டர் கத்தி என்மேல் பட்டதே இல்ல இப்ப முதல் தடவையா சிகிச்சை பயமா இருக்குது..... பயப்படாதே நண்பரே இப்பவெல்லாம் இந்த சிகிச்சை ஜீ ஜீபி வலியே இல்லாம அந்த இடத்துல அனஸ்தீசியா தந்துட்டு பத்து நிமிடத்துல பண்ணி முடிச்சு 1 மணி நேரம் கழிச்சு அனஸ்தீசியா மருந்து பவர் இழந்ததும் ஏகவலி எடுக்கும் அதுமட்டும் தாங்கிகோ என்ன உன்னைச்சுற்றி நாங்கள் தேவதைகளாய் சூழ்ந்திருப்பாங்க டாகடர் பண்றது உனக்கு தெரியவரும். எறும்பு கடிக்கிற வலிதான்.... போதுமா? போதும்பா.... என்னவோ ஏதோ பயந்துகிட்டு இருந்தேன். ஆமாம் இந்த சுன்னத் உங்க கிறிஸ்டியானிட்டியிலே எல்லாம் கிடையாதா? என்ன அப்படி கேட்டுட்ட இதன் வரலாறு ரொம்ப பெருசு இந்த சர்கம் சிஷனை விருத்தசேதனம் அல்லது ஆண்விருத்த சேதனம்னு சொல்வாங்க முஸ்லீம்கள் கத்னா- சுன்னத் என்று பெயரிட்டுக் கொண்டனர். ஆண்குறியின் முன் தோலை நீக்கும் சமயசடங்கு அல்லது அறுவைசிகிச்சை இது. சமயம் மற்றும் கலாச்சார ரீதியிலும் செய்ற இந்த விருத்த சேதனம் சுகாதார நோக்கிலும் பண்றாங்க. வடகிழக்கு ஆப்ரிக்க பழங்குடி மக்கள்தான் இந்த முறையை முதன் முதலில் செய்தவங்க நடைமுறைக்கு கொண்டு வந்தவங்க அதன்பின் ஆபிரகாமிய மதங்களான யூதம் மற்றும் இசுலாம் ஆகியவற்றில் இது புனிதசடங்கு ஆக நடைமுறைப் படுத்தப்பட்டது சார் இதுக்கு விழா எடுத்தவங்க முதல்லே நாங்கதான். இயேசுவின் விருந்தசேதன விழா என்று இயேசு கிருத்துவுக்கு யூத மரபுப்படி குழந்தை பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டு இயேசு எனும் பெயரிடப்பட்ட நாளினை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படும் ஒரு கிருத்துவ விழாவாகும். தங்கமரபு 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதைகளில் இந்த நிகழ்வு இயேசு முதன் முதலில் ரத்தம் சிந்திட மனுகுலத்தின் மீட்பு செயலை துவங்கியதற்காக முக்கியத்துவம் பெறுகிறது. சரி போதும் ராபின்சன் இவ்வளவு வரலாறா? முடிச்சுடறேன். செல்வராஜ் இது பண்ணிகிட்ட வலிப்பு- கனவு ஒழுக்கு ( சொப்னஸ்கலிதம்) கண்பார்வை குறைபாடு ஆகியவற்றைத் தடுக்குதுன்னு ஒருகாலத்துல ஆய்வு செய்ஞ்சு கண்டுபிடிச்சாங்க அதுசரி நல்லது பண்ணிக்கோங்க. நான் கேட்டேன் இது தமிழ்நாட்ல இருந்ததா? ஒருக்காலத்துல பல ஜாதிகள் கிட்ட இனத்தார்கிட்ட தொடர்ச்சியாக விருத்தசேதனம் இருந்தது. தற்போது பிறமலைகள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள் தொன்றுதொட்டு இதை ஒரு விழாவாக வழிவழியாக செய்து வருகிறார். நாங்கள் இருவரும் வேறு வேறு பிரிவுகளில் பணிக்கு போய் அமர்ந்தோம். இப்போது எனக்கு பயம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது. வேகமாக ஒழயது ஒரு வாரம் ஆவாரம்பூவுடன் நீரில் ஊறவைத்த வைந்தயம் எல்லாம் கைகொடுக்க சர்க்கரை அளவு 150ஐ குட்டி கரணம் அடித்து எட்டிப்பிடித்தது. டாக்டர் சந்திரன் குறித்துக் கொடுத்த ஆகஸ்டு 8ம் தேதி மதியம் 4 மணி அந்த மருத்துவமனை எனக்கு கவுன் போர்த்தியது வில்லன் கணக்காய் தோற்றம் கொண்ட ஒரு மிசைக்கறப் பேர்வழி என்னை பாத்ரூம் பக்கம் தள்ளிக் கொண்டு போனான் என் பின்னால்வந்த புனிதா, மகள்கள் இருவரையும் வெளியே போயிருக்கச் சொன்னாரு அவரு யாருன்னே எனக்கு அறிமுகம் ஆகலே என்னை அழுக்கான ஒரு இடத்தில் படுக்கச் சொன்னான் கவுனோட படுத்தேன். படு கூச்சம் எனது பிறப்புறுப்பு சுற்றி தண்ணீர் மசாஜ் செய்தார். 10 வது தடவையாக பயன்படும் போலிருக்கு அந்த பிளேடு முடியை அகற்றினார் வலியோ வளி பிரானனை போகும் வலி துடிதுடித்துப் போனேன். என்னங்க, புது பிளேடு போடக்கூடாதா? என்றேன். எழுத்துக்க எடு நுாறு ரூபாய் என்றார். வெளியே எனது மனைவியைத் தரச்சொன்னேன். அறுவை சிகிச்சை கூடம் சுற்றிலும் ஆயுதங்கள் புடைசூழ நான் நடுநாயமாக கிடத்தப்பட்டேன் நண்பன் ராபின்சன் நினைவுக்கு வந்தான். எறும்புகடி வலிக்குமோ என்ற அடிவயிறு பிசைதல் டாக்டர் சந்திரன் மற்றும் நர்ஸ்கள் விளக்குகள் பளிச்சிட செல்வராஜ் ஐந்தே நிமிடம் வலிக்காது.. நீங்க எங்கே வேலை பாக்கறீங்க? எத்தனை பிள்ளைகள் உங்க மனைவி பேரு என்ன? எறும்பு மொய்க்க ஆரம்பித்துவிட்டது போல உணர்வு என் புண் சூழ்ந்த பிறப்புறுப்பை டாக்டர் ஏதோ செய்கிறார். நர்ஸ் அம்மா என்னை அன்பு வார்த்தைகளால் கேள்விகேட்டது. உங்க பொண்ணுங்க எத்தனையாவது படிக்கிறாங்க? சக்சஸ் அவ்வளவுதான் செல்வராஜ் முடித்து கை கழுவினார். நம்பவே முடியல வலியே. இல்லை. கீழ்பகுதி அடிவயிற்றில் முதலில் அனஸ்தீசியா ஊசி போடும்போது வலித்தது.அந்த இடம் இப்போது மரத்துப்போனநிலையில் கட்டு கட்டப்பட்டு இடுப்புசுற்றி துணி சுற்றப்பட்டிருந்தது சிறுநீர் கழிக்க மட்டும் இடம்விட்டு பிளாஸ்டர். மாத்திரைகள் சகிதமாக மனைவியைப் பார்த்தேன். அவள் கண்களில் கண்ணீர்துளிகள் மகள்களைப் பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ஒரு ஆட்டோபிடித்து வீடு வந்துசேர்தேன். மாடிபோர்ஷன் எனது. என்னால் படிக்கட்டுகள் ஏறவே முடியவில்லை கட்டு கட்டி பிளாஸ்டர் போட்டது துருத்தியது. இரண்டு நண்பர்களை பக்கத்து வீடுகளிலிருந்து வரவழைத்து தூக்கிப் போக சொன்னோம் சல்லடைத்துணி (மருத்து இட்டது) பஞ்சு பிளாஸ்டர் சகிதம் பெரும் வரவேற்புடன் எனது சிறுநீரை கழித்தேன். சிறுதுவாரம் என்னைத் திட்டியது போலிருந்தது. இரண்டு நாள் ஆச்சு நாள் மெதுவாகப்போயிற்று எனது மனைவியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை ஸ்வீட் திருடியாவது தின்னும்போது தான் பலமுறை தடுத்தும் தின்னியே. பல அவஸ்தை என செல்லமாக கோயித்தாள் இரு மகள்களின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க சங்கோஜப்பட்டேன். சில மணித்துளிகள் வீட்டுக்குள்ளே நடந்து பார்த்தேன். ஏதோ வீ.டி.நோய் பெற்றவன் காலை அகட்டிவைத்து நடப்பது போல் உணர்ந்தேன். ஆபிஸில், வெளியே எவன் எவன் எப்படி கேள்வி கேட்பார்களோ? அத்தனைக்கும் பதில் மனதில் இருந்து ஒரு ஃப்ளோ ஆக வரணுமே... விடுப்புமுடித்து ஒரு போர்வீரனைப்போல் புறப்படத்தான் நினைத்தேன். பொந்து எலிபோல் பதுங்கி பதுங்கி இறங்கினேன். ஆட்டோ வரைவந்து ஏற்றிவிட்டாள் புனிதா அவள் இதழ்க்கடையோரம், என்னைப்பத்தி ஒரு புன்னகை கடவுள் தண்டிச்சிட்டான் என்ற பேருவகை. படிக்கட்டு இறங்கும்போதுதான் எனது முன் கட்டு முந்திரிக்கொட்டை மாதிரி திணறி திணறி இறக்கியது. அலுவலகம் ஹாய் ஹலோ என்ற உதிரி வார்த்தைகள் ஒவ்வொருவர் வலது கை களிலும் முளைக்க, ஓரிருவர், என்னசார் ஆச்சு? இப்படி நடக்கிறீங்க? ஏதாவது ஆப்ரேஷனா? விடாது கேட்ட சக நண்பர்களுக்கு ம்ம்..ஆமாம்! சின்னதா பின்புட்டத்துலே கட்டி..கட்டீ.. ஆப்ரேஷன். எப்படி எப்படியோ சமாளித்தேன். கண்காணிப்பாளர் இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நிமிடத்துக் கெல்லாம், பியூன் துரை வந்து சார் ட்டி ஓ கூப்பிடறாரு சார்.. என்றான் எனது கண்களைப் பார்த்து என்னா சுன்னத் பண்ணிக்கிட்டிங்களா? என்றும் சுரிர்னு வார்த்தையால் கிள்ளி புன்னகைத்தான். உனக்கெப்படித் தெரியும்? ஹாங் உனக்கு கிழிந்த பிளேடிலே ஷேவ் பண்ணினானே. அந்த தடியன் சொன்னான். ஆபிசர் அறைக்குள் மெல்ல ஆடி ஆடி அசைந்து சென்று நின்றேன். வாங்க செல்வராஜ் என்ன 2 நாள் திடீர்னு லீவு போட்டுட்டீங்க பட்டக்ஸ்ல கட்டியா? இல்லை சார் அது வந்து அது வந்து போட்டுடைத்துவிட்டேன். உண்மையை.. அவர் பகபகவென சிரித்தார்... அது கேலியா? கழிவிரக்கமா? விருத்தசேதனம், நல்லா இருக்கே அந்த பேரு நான் கேள்விபட்டதேயில்லை. சரியாப் போயிடும்ங்க இந்தாங்க இந்த லட்டர் மேல உடனே ஆக்ஷன் எடுக்கச் சொல்லுங்க என்றார். வெளியேறினேன். டீ டைம் எனது நண்பர் ராபின்சன் என்ன நண்பரே முடிந்ததா வி.சே. என்றார் நமுட்டுச் சிரிப்புடன். வாங்க ராபின்சன் போய் ஒரு டீ சாப்பிட்டுகிட்டே பேசலாம். ஐநூறு மீட்டர் தொலைவைக் கடந்தால்தான் நல்ல டீக் கடைவரும் நடந்தேன். என் எதிர்ப்படுபவர்கள், கிராஸ் பண்ணி போகிறவர்கள் அனைவரும் என்னை, நான் நடப்பதை ஊன்றிக் கவனிப்பவர்களாகவே சென்றார்கள். அப்படியா? அல்லது எனது மனம் எழுப்பும் சந்தேகமா? எங்கேயோ குதிரை ஒட்டி எசகுபிசகா பிடிச்சுக்கிட்டு வந்துட்டாரு போல. பரிகசிப்புகள் பிடுங்கித்தின்ன திரும்பி வந்து எனது இருக்கையில் கசப்புடன் அமர்ந்தேன். எனது நெஞ்சம் விம்மியது. என்ன மனிதர்கள்? எல்லா வற்றையும் குதர்க்கமாகப் பார்க்கும் மனோ பாவத்தை மாற்றவே முடியாதா? அதன்பிறகு கட்டு அவிழ்க்கும் வரை டீக்கு போவதேயில்லை. ஃப்ளாஸ்க் எடுத்துவந்து குடித்துக் கொண்டேன். ஒரு வாரம் கழித்து கட்டு அவிழ்க்கப்பட்டது. மிகவும் வலித்த முனைப்பகுதி ஒரு தோல் மலர் போல் மலர்ந்திருந்தது. டாக்டர் அழுக்கு சேராமல் நல்லாத் தேய்ச்சுக் குளிங்க மார்கோசோப் போடுங்க.. என்றார். வீடு மாடி போர்ஷன் ஏறினேன். உறுத்தவில்லை. விருத்தசேதனத்தின் நன்மை தீமைகளை இதற்குள் ராபின்சன் பெரிய உரையையேப் பண்ணி எனக்கு உணர்த்தியிருந்தான். என்றைக்கும் இல்லாமல் இன்று சற்று சந்தோஷம் கூடுதலாக புனிதாவின் முகத்தில் தெரிந்தது. ஏங்க..... ரூமுக்கு வாங்க.... அவள் அழைப்பில் எதோ இருந்தது. ஒண்ணுமில்லை.. கத்னாவுக்குப் பிறகு உங்க ஆப்ரேஷன் பண்ண இடம் எப்படி இருக்குன்னு எனக்கு காட்டறீங்களா? நோ நோ.. இது ஹஸ்பென்ட் ஒன்லி இடம்.. காட்டமாட்டேன். சொன்னேனே தவிர எனது அன்பு மனைவிக்கு அறுவை சிகிச்சை பண்ணிய இடம் காண்பித்தேன். அவளின் திடீர் வெட்கம் பல ஆயிரம் நுண்ணிய உணர்வுகளை வெளிச்சம் போட்டது. செல்வ ராஜ் குடியாத்தம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in