logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

DINESH KANNA

சிறுகதை வரிசை எண் # 237


உதிரத்தில் மலர்ந்த காதல்: யாருமற்ற வீதிகளில் தன்னந்தனியே தன்னிலை மறந்து பித்தேறி நடக்கிறான் மகிழன். வீதிகளில் நடப்பது தனி சுகம் தான் ஏதேதோ ஞாபகங்கள் மனதினில் ஓடிக்கொண்டே இருந்தன ஆனால் எதிலும் மனது நில்லாமல் அடுத்தடுத்த விடயங்களில் தன்னை மறந்து ஓடிக்கொண்டே இருந்தான் இடையே ஞாளி குறைத்தது எதையும் பொருட்படுத்தாமல் தன்னவளின் நினைவுகளை கனவுகளை கற்பனைக் குதிரையில் ஓடிக்கொண்டு இருந்தான் மகிழன். இவன் கல்லூரியில் பக்கத்து துறையில் படித்த பெண்ணொருத்தியின் காதல் செய்தான். ஏதேதோ காரணங்களைச் சொல்லி அவள் வேண்டாம் என்று ஓடி கிட்டே இருந்தாள் அவளுக்கும் ஆசை மனதில் இருந்தது. ஆனாலும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை அதுதானே மனிதஇயல்பு. கல்லூரி முடித்து விடுதியில் தங்கி படித்து கொண்டு இருந்தான் மகிழன். ஒரு நாள் கல்லூரியில் ஆண்கள் யாரும் நுழைய அச்சபடுகிற இடத்தில் இருந்து ஏதோ சத்தம் இவனது கவனத்தை திசை திருப்பியது ஆம் அது பெண்கள் கழிவறை இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை பக்கத்திலும் யாருமில்லை கல்லூரி முடித்து அனைவரும் வீடு சேர்ந்து கொண்டிருந்த அந்திம காலம். சரி என்ன பண்றது தெரியாமல் முழித்து கொண்டிருந்தான். ஆனால் அவளோ சொல்ல முடியாத வலியில் அவள் துடித்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்துக்கு மேல் எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம் சரி என்று வெற்று உடம்புடன் பக்கத்தில் இருந்த துண்டினை போத்தி கொண்டு ஓடி போய் பார்த்தான். அவனுக்கு அதிர்ச்சி தான் அது அவளே தான் கல்லூரியில் மானாக துள்ளி வரும் மாஞ்சிட்டு இன்று மயங்கி தன்னிலை மறந்து சுவற்றில் சாய்ந்து கொண்டு கதறி கொண்டிருந்தாள் இவன் சிறிதும் யோசிக்காமல் அவளை பிடித்து தூக்க போனான். அவள் சற்றே சுயநினைவுக்கு வந்தவளாய் வேற யாராவது லேடீஸ் இருந்தா கூப்பிடுங்க என்றாள். கல்லூரிக்குள் காலையில் வரும் போதே சிறிதே முதுகுவலி இருப்பதை உணர்ந்து இருந்தாள் மகாகி. சரி நேற்று காலை ல வீட்டை சுத்தம் செய்ததால் வந்த நிகழ்வாக இருக்கலாம் என்று தான் கண்டுக்காம விட்டாள் மணிமொழி. இவள் டையர்டாக இருப்பதை பார்த்து சக தோழி மகாகி ஏய் நீ ஏன் ரொம்ப ரெஸ்ட் லஸ் இருக்க என்றாள். ஒன்னும் இல்லை பா நேத்து வீட்டில் கொஞ்சம் வேலை அதான் இப்படி என்றாள் மணிமொழி. ஆர் யூ ஓகே என்றாள் மகாகி ஓகே தான் பா என்றாள் மணிமொழி. அடுத்து பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழையவும் வகுப்புகள் ஆரம்பமானது அன்றைய தினம் வணிக மேலாண்மை பற்றிய வகுப்புகள் வணிக மேலாண்மை குறித்து பேராசிரியர் பல்வேறு விஷயங்களை வைத்து வகுப்புகளை நடத்தி கொண்டிருந்தார். வணிக மேலாண்மையின் முக்கியத்துவம் முதல் பிரிவை சொல்லி விட்டு இது பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க என்று சொல்லி விட்டு மாணவர்களை நோக்கி திரும்பினார் பேராசிரியர் கார்த்தி. இவர் NCCன் கல்லூரி பயிற்றுநராக இருக்க கூடியவர் தேசிய மாணவர் படைக்கும், இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனது கல்லூரியில் இருந்து மாணவர்களை இராணுவம் நோக்கி பயணிக்க வைக்க கூடியவர் பேராசிரியர் கார்த்தி. மாணவர்களுடன் சக நண்பனாக பழக கூடிய இயல்பினை உடையவர், முக்கியமாக மாணவர்களின் பல்ஸ் தெரிந்தவர் இவர் என்பதால் கல்லூரியில் எந்த விதமான முக்கிய முடிவுகளையும் கல்லூரி முதல்வர் இவரது கருத்துக்கு பின்னரே எடுப்பார்கள். இப்போது கல்லூரியில் நடக்கவிருக்கும் உணவு திருவிழா பற்றிய ஆலோசனைக்கூட்டத்திற்கு கருத்து கேட்க இவரை முதல்வர் அழைத்தாக ராசி அண்ணா வந்து சொல்லிட்டு மாணவர்கள் பதில் சொல்லும் முன்னரே அழைத்து கொண்டு போனார். சரி சரி வாங்க நம்ம வேலையை ஆரம்பிக்கலாம் என்று உணவு திருவிழாவுக்கு நம்ம துறை சார்பாக என்ன உணவு விற்பனை செய்யலாம் யாருக்கு என்னென்ன சமைக்க தெரியும் என்று துணைப் பேராசிரியர் ராமமூர்த்தி கேட்க சார் சதீஷ் நல்லா சமைப்பான் சார் இவுங்க சொந்தமா ஓட்டல் வைச்சிருக்காங்க சார் என்றார் இரஞ்சித் அப்ப ஓகே முதலில் என்ன உணவு என்று முடிவு செய்வோம் என்றார் ராமமூர்த்தி சார் நாம் நூடுல்ஸ் போடலாம் சார் என்றான் சதீஷ் ஓகே பா அதுக்கு என்னென்ன தேவை என்று ஒரு லிஸ்ட் கொடு நாளைக்கு என்று சொல்லி விட்டு அடுத்து வேற எதாவது சொல்லுங்க பா என்றார் ராமமூர்த்தி. சார் மெகந்தி போடலாம் சார் என்றாள் பவதாரிணி ஓகே மா யாருக்கு மெகந்தி போட தெரியும் இதோ இவளுக்கு தான் என்று ஆர்த்தியை நோக்கி கையை கோராஸாக காட்டினார்கள். ரைட் விடு அதுக்கு எவ்வளவு கோன் தேவைபடும் என்பதை சொல்லுமா என்றார் ராமமூர்த்தி. சார் நாம் எவ்வளவு பேருக்கு போடப்போறோம் சார் என்றாள் ஆர்த்தி நமது பசங்க எல்லாம் சேர்த்து ஒரு ஆயிரத்தி இருநூறு என்று வைத்துக் கொள்வோம் மா என்றார் ராமமூர்த்தி. அப்ப ஒரு கோனுல ஐந்து பேருக்கு சிம்பிள் டிசைன் ல போடலாம் சார் அப்ப தோராயமாக ஆயிரம் கோன் வரை தேவைபடும் சார் என்றாள் ஆர்த்தி ஓகே மா அப்ப பத்து பாக்ஸ் தேவைபடும் ல ஒரு பாக்ஸ்ல ஏறக்குறைய பத்து பீஸ் இருக்கும் சார் அப்ப நூறு பாக்ஸ் வரும் சார் என்றாள் ஆர்த்தி அப்ப சரி மா அதை கொட்டைஷனா எழுதி கொடு மா என்றார் ராமமூர்த்தி. ஓகே சார் நாளைக்கு காலைல வாங்கிக்கோங்க சார் என்றாள் ஆர்த்தி ஓகே மா நாளைக்கு காலை ல இரண்டு பேரும் கொடுங்க பசங்க எல்லோரும் கம்மிங் மண்டே உணவு திருவிழா நம்ம காலேஜ் ல நடக்குது சோ எல்லாரும் கட்டாயம் கலந்துக்கனும் என்று உள்ளே வந்தார் கார்த்தி சார் தேதி முடிவாகிடுச்சா சார் இப்ப தான் சார் சொல்லி இருக்காங்க ஆனால் காரிக்கிழமை தான் சார் உணவுத் திருவிழா திங்க கிழமை நாம ஃபைனல் கொட்டேஷன் கொடுக்கனும் சார் என்றார் கார்த்தி சார். நாம நாளைக் சாயந்திரம் கொடுத்திடலாம் சார் என்றார் ராமமூர்த்தி. ஓ பேசிட்டிங்களா சார் என்று கேட்டார் கார்த்தி சார் இல்லை சார் இன்னும் பைனல் பண்ணணும் சார் அதுக்கு கார்த்திக் சார் வந்தா தான் சரியாக இருக்கும் சார் என்றார் ராமமூர்த்தி. அதான் நீங்க ஃபைனல் பண்ணிட்டிங்களே அப்புறம் என்ன சார் என்றார் கார்த்தி. என்ன இருந்தாலும் எச்.ஓ.டி நீங்கள் தானே சார் என்றார் ராமமூர்த்தி. அட விடுங்க சார் நம்ம ஸ்டாஃப் எல்லாரையும் வர சொல்லுங்க எல்லாரும் சேர்ந்து பேசுவோம் சார் என்றார் கார்த்தி சார். அனைவரும் சேர்ந்து பேசி ஃபைனல் செய்யபட்டது பாய்ஸ் நூடுல்ஸ் என்றும் கேர்ள்ஸ் மெகந்தி என்றும் முடிவு செய்து எஸ்டிமேட் கொடுத்தும் ஆகி விட்டது. முதல்வர் பரிமிஷனும் தந்து விட்டார் இனி என்ன அவரவர்கள் துறை சார்பில் போடப்பட்ட ஸ்டில்களில் அவரவரது வேலைகளை செய்தனர் இந்த உணவு திருவிழாவில் கல்லூரியின் நிறுவனர், அலுவலர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சொல்லி வைத்தார் போல் நிகழ்வுகளை அனைத்தையும் கணகச்சிதமாக செய்து இருந்தார்கள் மாணவர்கள். உணவு திருவிழா வெகு உற்சாகத்துடனும், கொண்டாத்துடன் நிறைவு பெற்றது. ஒரு நாள் மாலை வேளையில் ஏதோ கத்துகிற சத்தம் கேட்டது மகிழனுக்கு பக்கத்தில் யாரும் இல்லை என்று தூக்க போனவன் இரத்த வாடை கண்டு சற்று அதிர்ச்சி ஆகி நின்றான் அவனுக்கு நிலைமை புரிந்தது தான் போர்த்தி கொண்டிருந்த துண்டினை அவள் மீது போர்த்தி சற்றே இரண்டு கட்டிடங்கள் தாண்டி இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் கொண்டு போக கேட்டில் இருந்த வாட்ச் மேனுக்கும் விஷயம் தெரிய வார்டன் பக்கத்து அறையை இவனுக்கு காட்டி தம்பி இங்க படுக்க வை பா நான் போய் வார்டனை கூட்டிட்டு வாரேன் என்று போய் வார்டனை கூட்டிகிட்டு வந்தார் வாட்ச் மேன் துரைசாமி. வார்டன் வந்ததும் இப்படி ஒரு பெண் துடித்ததை பார்த்து என்ன ஏது என்று கேட்க. வார்டன் கிட்ட இவள் நிறைய இரத்தம் வந்துட்டே வந்திருக்கிறது என்ன என பாருங்கள் மேம் என்று தயங்கி தயங்கி சொன்னான் மகிழன் . தம்பி ரொம்ப நன்றிபா நீயும் வாட்ச் மேனும் கொஞ்சம் வெளியே இருங்க. நான் அவளை பார்த்து விட்டு வருகிறேன் என்று அறைக்குள் நுழைந்தார்கள் வார்டன். கொஞ்ச நேரத்தில் அவளது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுக்குள்ள அவளது கல்லூரி தோழிகள் சிலர் உள் நுழைவதை கண்டு இவனும் உள் நுழைய முற்பட டேய் நீ வெளியே இருடா நாங்கள் பார்த்துக்கிறோம் என்றாள் அவளது நெருங்கிய தோழி மகாகி. அப்புறம் அவளை எழுப்பி தண்ணீர் குடிக்க வைத்து அவளை முழுவதுமாக வெந்நீரில் துடைத்து சுத்தம் பண்ணி விட்டு மகாகி தான் இரகசியமாக வைத்திருந்த பேடை எடுத்து அவளது அந்தரங்க உறுப்பில் வைத்து விட்டு அவளது உள்ளாடைகள் உட்பட மாற்றி விட்டு பழைய ஆடைகளை யார் கண்ணிலும் படாமல் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்து விட்டு இவளுக்கான உணவுடன் உள் நுழைந்தாள் மற்றொரு தோழியான மாலதி. உணவை இவளுக்கு ஊட்டி விட சொல்லி விட்டு வெளியே வந்தார் வார்டன். என்ன என மகிழன் பதட்டத்துடன் கேட்க தம்பி இது நார்மல் தான் என்ன நடைமுறைக்கு மாறாக கொஞ்ச நாள் முன்னாடியே வந்துள்ளது என்பதால் கொஞ்சம் வலி அதிகமாகிடுச்சி போல அதான் துடித்து கொண்டு இருந்திருக்கிறாள் தம்பி ஒன்னும் பிரச்சினை இல்லை அவுங்க அப்பா கிட்ட விஷயத்தை சொல்லியிருக்கேன் நீ போய் படிக்கிற வேலையை பாரு பா என்றார் வார்டன் வளர்மதி. இல்லைங்க மேம் வேணா நான் போய் பார்க்கலாம் ல என்றான் மகிழன். போய் பாரு பா என்றார் வார்டன் வளர்மதி. ரொம்ப தேங்க்ஸ் மேம் நீங்கள் இல்லைனா அவளை நான் உயிரோட பாத்திருக்க முடியாது என்றான் மகிழன். டேய் இவ்வளவு துடிக்கிற அவள் என்ன உனக்கு காதலியா என்றார் வார்டன் வளர்மதி. ஆமாம் என்பதை போல் தலையை ஆட்டி விட்டு உள் நுழைந்தான் மகிழன். இவன் வருவதை கண்டு அவளது அவளிடம் தோழி சொல்ல அவள் சற்றே எழுந்திரிக்க முற்பட வேண்டாம் நீங்கள் படுங்க என்று தன்னையறியாமல் அவளது கையை அமர்தினான் மகிழன். இதை சிறிதும் எதிர்பாராத மணிமொழி. சற்றே அயர்ந்தாள் மணிமொழி ஆம் பூ ஒன்று வெயிலின் வெண்மை தாங்காமல் சுருண்டு கிடப்பது போல் பெட்டில் கிடந்தாள் மணிமொழி. இதை பார்த்தவன் அவளது முகத்தை பார்க்காமல் மகாகி இப்ப எப்படி இருக்கு மணிமொழிக்கு உடம்பு என்றான் டேய் ரொம்ப தான் அவ தான் இருக்காளே என்றால் மகாகி . சொல்லு மா என்ன ஓவரா ஏய் என்றான் மகிழன். உடம்பு நல்லாதான் இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும் அவள் என்றால் மகாகி. வலியிலும் இதை பார்த்து நமட்டு சிரிப்போடு இரசித்து கொண்டிருந்தாள் மணிமொழி. ஆம் தனக்கு ஒன்னுனா எப்படி துடிச்சி போய் இருக்கான் பாரு இவன் என்று நினைத்து அவனை தனது மனதிற்குள் வைத்து கொண்டாள் மணிமொழி. சரி சரி உடம்பை பாத்துக்க சொல்லு நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லு என்று சொல்லி விட்டு தனது அறையை நோக்கி இவன் செல்ல முற்பட சட்டை இழுத்து பிடித்தாள் மணிமொழி அதுக்குள்ள அவுங்க அப்பா வர சுயநினைவுக்கு வந்து அவரவர் வேலையை கவனிக்க தொடங்கினார்கள். ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்றார் மணிமொழி அப்பா மாணிக்கம். சரி என்று அவளை தனது மகிழுந்தில் கைத்தாங்கலாக தாங்கி கொண்டு உட்கார வைத்து விட்டு கதவை சாத்தி விட்டு ரொம்ப தேங்க்ஸ் மேம் என்று வண்டியில் வீடு நோக்கி பயணித்தார்மாணிக்கம் . வீட்டில் அவளது அம்மா மாலதி கைத்தாங்கலாக தனது பெண்ணை அவர் அழைத்து வருவதை திடுக்கிட்டு பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு கைகால் புரியாமல் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் உள்ளே வந்து விட்டார்கள் இருவரும் பெற்ற தாய்க்கு முகத்தை பார்த்தாலே தெரியுமே கொஞ்சம் லெமன் ஜூஸை குடிக்க கொடுத்தாள் மாலதி. அவள் குடிக்க முடியாமல் சற்றே திணறி திணறி தான் குடித்தாள். முகத்தில் ஏற்பட்டுள்ள அயர்ச்சியின் காராணமாக சற்றே மயங்கிய நிலையில் இருந்தால் மணிமொழி. ஏய் அவளுக்கு வலி நிவாரணி மருந்துகளை கொடு கொஞ்சம் வலி சரியாகட்டும் அப்புறம் மற்றதை பேசிக்கலாம் என்றார் மணிமொழியின் அப்பா. சரிங்க நான் போய் கொண்டு வாரேன் நீங்கள் இவளை பாத்துக்கோங்க என்றபடி உள் நுழைந்தான் கபோர்டில இருந்து வலி நிவாரணி மருந்துகளை எடுத்துகிட்டு அப்படியே கொஞ்சம் தண்ணீர் எடுத்து கிட்டு வந்து கொடுத்தாள் மாலதி. மெல்ல அப்படியே இவளை நிமிர்த்தி தனது மார்பில் சாய்த்து கொண்டு மணி மா மணி மா என்று குரல் கொடுக்க சற்றே கண் திறந்து பார்த்தாள் மணிமொழி இந்தா மா இதை சாப்பிட்டு விடு என்று சில மாத்திரைகளை வாய்க்குள் போட்டு தண்ணீர் குடிக்க வைத்தார் மாலதி. இவளை இருவரும் கைத்தாங்கலாக கொண்டு போய் பெட்டில் படுக்க வைத்து விட்டு உடனடியாக இவுங்க குடும்ப மருத்துவர் நந்தினிக்கு கால் செய்து மணிமொழிக்கு இது மாதிரி இருக்கு டாக்டர் கொஞ்சம் என்ன என்று பாருங்கள் டாக்டர் என்றார் மணி மொழி அப்பா மாணிக்கம் . நான் இவ்னிங் வருகிறேன். அது வரைக்கும் அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க நான் வந்து பாத்துக்கிறேன் என்றார் நந்தினி டாக்டர். ஓகே மேடம் நீங்க வந்த பிறகு நாங்கள் எழுப்பி விடுகிறோம் என்று சொல்லி விட்டு காலை கட் செய்தார் மணி மொழி அப்பா மாணிக்கம். சாயந்திரம் ஒரு ஆறு மணி போல் போல் வந்து காலிங் பெல்லை அமுக்கினார் மருத்துவர் நந்தினி. வந்து கதவை திறந்தாள் மாலதி வாங்க டாக்டர் வாங்க உட்காருங்க இதோ அவரை கூப்பிடுறேன் ஏங்க ஏங்க டாக்டர் வந்துட்டாங்க வந்து என்ன என்று பாருங்கள் என்றாள் மாலதி . மாணிக்கம் வந்து வாங்க டாக்டர் வாங்க முதலில் காஃபியை குடிங்க அப்புறம் வேலையை பாக்கலாம் என்று சொல்லி விட்டு காஃபியை இருவரும் குடித்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து மணிமொழி எங்க என்று கேட்டாங்க டாக்டர் நந்தினி. அவள் பெட்ரூம் ல படுத்து இருக்கா டாக்டர் வாங்க வாங்க என்று அறையை காண்பித்தார் மாணிக்கம். டாக்டர் பல்ஸ் செக் பண்ணிட்டு கொஞ்சம் வெந்நீர் கொடுங்க என கேட்க கொஞ்ச நேரத்தில் கொண்டு வந்தாள் மாலதி . வெந்நீரில் அவளது முகம்,கை கால்களை துடத்தி விட்டு ஒரு விட்டமின் ஊசியை போட்டு விட்டு அவளை கொஞ்ச நாளைக்கு வெளியே அனுப்ப வேண்டாம் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் கம்மிங் மண்டே வந்து நான் செக் பண்ற அப்புறம் அனுப்பலாம் என்று சொல்லி விட்டு போய் வரேன் மாணிக்கம் நீங்கள் உங்கள் ஹெல்த் தை பாத்துக்கோங்க என்றபடி வெளியே வந்தார் டாக்டர் நந்தினி. அவ ஓகே தானே பெருசா ஒன்னும் பிரச்சினை இல்லை ல என்று வெளியே வந்து தனது சந்தேகத்தை தெளிவு படுத்தி கொண்டார் மாணிக்கம். அவள் நல்லாதான் இருக்கா கிளைமேட் சேஞ்ச் நாளா கொஞ்சம் பாதிக்க பட்டிருக்கா மற்றபடி அவள் நல்லாதான் இருக்கா. ஓகே டாக்டர் ரொம்ப நன்றிங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க என்று வழியனுப்பி விட்டு வீட்டுக்குள்ள நுழைந்தார் மாணிக்கம். இவளுக்கு கொஞ்சம் சாதத்தை கஞ்சி மாதிரி பிசைந்து கொடுத்து கொண்டிருந்தாள் மணிமொழி. அவளும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு அவளை அப்படியே பெட்டில் படுக்க வைத்து விட்டு இவர்கள் சாப்பிட்டு விட்டு அவளுக்கு பக்கத்திலேயே படுத்து கொண்டனர். மறுநாள் காலை எப்போதும் போல அவளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான் மகிழன் தனது சகாக்களுடன் அவள் வரவில்லை மகாகி கிட்ட கேட்டதற்கு உடம்பு முடியல அதான் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்குமாறு மருத்துவர் பரிந்துரை செய்ததால் வர முடியல என்று தனக்கு கால் பண்ணி சொன்னதாக சொன்னாள் மகாகி. அடச்சை இந்த டாக்டர்களுக்கு இதே வேலை தான் போல என்று சலித்து கொண்டான் மகிழன். சண்டே டாக்டர் வந்து செக் பண்ணுவதற்கு முன்னரே சற்று புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள் மணிமொழி ஆம் இவளை வந்து பார்த்து விட்டு இவள் ‌ நல்லா இருக்கா ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்கள் தாரளமாக கல்லூரிக்கு அனுப்பலாம் என்று சொல்லி விட்டு டாக்டர் நந்தினி கிளம்பினார். சரியாக ஒரு வாரம் கழித்து இவன் எதிர்பாராத நேரத்தில் பூமகள் கல்லூரிக்குள் நுழைந்தாள். தீடிரென ஏதோ ஒன்று பாசிட்டிவ் ஆக இருப்பதை உணர்ந்தான் மகிழன். ஆம் அது மணிமொழியின் வருகையை உறுதி படுத்தி இருந்தது சற்றே ஏறக்குறைய மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் மகிழன். ஒரு வாரத்தை ஒரு யுகங்களாக மாற்றியவள் இன்று ஒரு நாளை ஒரு நொடியாக மாத்தி இருந்தாள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் அவர்களையும் அறியாமல் மலர்ந்திருந்தது. ஆம் இருவரும் காதல் வயப்பட்டனர் இல்லை இல்லை காதல் இவர்கள் வயபட்டது கொஞ்சம் கூட யோசிக்காமல் காதலை அவளது பிறந்தநாள் அன்று சொன்னான் மகிழன். அவளோ என்ன சொல்ல என்பது போல் ஏத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் கண்ணத்தில் ஒரு இச் இச் கொடுத்தான் அவன் அவ்வளவு தான் வேற என்ன சொல்ல அடுத்த நொடியே இருவரும் கட்டி அணைத்து காதல் கொள்ள தொடங்கினர். காதல் கதைகள் பல பேசி பூங்காக்களிலும் கடற்கரை சாலையிலும் சுத்தி கிட்டு இருந்தனர். ஒரு தேர்வில் மகிழன் ஐந்து அரியர் வைத்து விட்டான் நீ இதை கிளியர் பண்ணா தான் நான் பேசுவேன் என்று கட்&ரைட்டாக சொல்லி விட்டாள் மணிமொழி இவனும் இவன் பங்குக்கு அவளது தோழி இவனது தோழன் என்று மாற்றி பேச சொல்லி தூதும் விட்டான் காதல் சண்டையில் தூதுக்கள் எல்லாம் துள்தூளாகின. இனி இவங்க கிட்ட பேசவே கூடாது என்று எண்ணும் அளவிற்கு செய்கைகளை தரமாய் செய்து விட்டால் மணிமொழி . விட்ட தூதுக்கள் எல்லாம் வந்து சொன்னே ஒரே பதில் ஒழுங்கா அரியர் கிளியர் பண்ணு இல்லை அவளை மறந்து விடு என்று தான் சொன்னார்கள் என்னது அவளை மறப்பதா நெவர் படிச்சு கிளியர் பண்றேன் என்று முடிவெடுத்து அடுத்த தேர்வில் கிளியரும் பண்ணிணான் மகிழன். அந்த ஆறுமாத காலம் இருவரும் பார்த்து கொள்ளவே இல்லை ஆனால் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து கொண்டே இருந்தது. ஒருவரை மாற்றி ஒருவர் விசாரித்து கொண்டு தான் இருந்தார்கள் அவர்களது நண்பர்கள் இதை அவனிடமோ அவளிடமோ சொல்லிக்கொள்ள வில்லை ஆம் இருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற அக்கறையில் தான். எவ்வளவு நெருங்கி பழகினாலும் இருவருக்கும் இடையில் இரண்டடி கேப் இருந்து கொண்டே தான் இருந்தது. உண்மையான காதலுக்கு தொடுதல் தேவை இல்லையே புரிதல் தானே தேவை அதை நன்கு தனக்குள்ளே இருவரும் நன்கு உணர்ந்திருந்தார்கள். கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் காதல் தனது வேலையை செய்து கொண்டே இருந்தது. காதல் எல்லாத்தையும் சாத்திய படுத்தியது . மகிழன் அந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தான். இதை கேட்டவுடன் மற்றற்ற மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் மணிமொழி இவளே வம்படியாய் போய் கட்டி பிடித்த முத்தங்களை அள்ளி கொடுத்தாள். மகிழன் ஆடிப்போய் நின்றான் இதுவரை எத்தனையோ முறை கேட்டும் கொடுக்காததை இன்று ஏன் இப்படி அள்ளி கொடுத்திருக்கிறாள் மாமு என்று யோசித்து கொண்டு இருந்தான் மகிழன்.கொஞ்ச நேரத்திற்குள் சுயநினைவுக்கு வந்தவன் அவளுடன் நடை பழகி கொண்டிருந்தான் காதல் நடை. பார்ப்பவர்கள் கண்ணுக்கு இவர்கள் தோழன் தோழி போலவே தெரிந்தார்கள் ஆனால் இவர்களின் நெருங்கிய நட்பு வட்டத்துக்கு மட்டுமே தெரியும் இவர்கள் யார் என்று அப்படியே சுற்றிக்கொண்டு இருந்தார்கள் இவர்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய நேரம் வந்தது ஆம் கல்லூரி இறுதி தேர்வு இருவருக்கும் தாங்க முடியா நரக வேதனை ஒவ்வொரு நாளும் ஏங்க தொடங்கினர் இந்த நிமிடம் இப்படியே நீளாதா என்று இது காதல் உணர்வின் உச்சம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.