குமரி உத்ரா
சிறுகதை வரிசை எண்
# 235
தேவதைகள் காத்திருக்கிறார்கள்..!
முக்கடலும்
சங்கமிக்கும் குமரியின் கடற்கரை!
வானுயர்ந்த வள்ளுவரும் வலிமை மிக்க இளைஞர்களைத் தாருங்கள் பாரதத்தை மாற்றிக் காட்டுகிறேன் சொல்லிய விவேகானந்தரும் அமைதியின் பிறப்பிடமாய் அங்கே..,
அலைகள் ஆக்ரோசமாய் வந்து, வந்து, சிறு பிள்ளை யின் விளையாட்டைப் போல, சில நிமிடங்களில் சிதறி போயிற்று.
சிந்தனை ரேகைகள் முகத்தில் கோடு போட நீலக்கடலை வெறித்தபடி நீலாம்பரி!
அவள் தோள் சேர்ந்தபடி உட்கார்ந்திருந்தவன் கணவன் கோபிநாத்.
என்ன நீலு என்ன யோசனை..? பிளீஸ் சொல்லுடா ..? செல்லமாக கேட்டான்.
கோபி உங்கம்மா எடுக்கிற எந்த முடிவானாலும் எனக்கு... ஓ.கே கோபி”
சொல்லும்போதே நீலாம்பரியின் குரல் பிசிறடித்தது .
""நீலாம்பரி எனக்குக் குழந்தை வேண்டும் என்கிறது நிஜம். அதற்காக, அம்மா சொன்ன மாதிரி திருமண முடிவு எடுக்க என்னால் முடியாது இந்த ஏழு வருட தாம்பத்தியத்தில் அம்மா குழந்தைக்காக.. காத்திருந்த நாட்கள் கானல் நாட்களாக முடிஞ்சி போச்சு"
"இனியும் அவங்களை ஏமாற்ற முடியாது நீலு.." கோபியின் தீர்க்கமான பதில் நீலாம்பரியை நிமிர வைத்தது.
“கோபி உங்கம்மா சொன்னபடி, இன்னொருத்தியை உங்களுக்கு உரிமையாக்க தகுதியிருக்கு. நான் என்னிக்குமே இதற்குத் தடையா இருக்க மாட்டேன் எனி..வே ஐடோன்ட் கேர்..திரும்பி நடந்தவளை பின் தொடந்தான் கோபி.
காலை டிபன் முடித்து அலுவலகம் சென்றான். "குட்மார்னிங் சார்! சில ஃபைலில் உங்க கையெழுத்து வேணும் வேகமாக வந்தாள் சுகந்தி... இவனுடைய செகரட்டரி.
அம்மா கோமதி சுகந்தியை அவன் வாழ்க்கையின் செகரட்டரி ஆக்க முடிவு செய்து விட்டாள் இவனுக்குத் தான் இருதலைக் கொள்ளி நிலை...
“மனித வாழ்க்கையில் இரு நிலைகள் உண்டு! படுத்துகிடப்பவன் தூங்க முடிவதில்லை. தூங்க நினைப்பவன் படுக்க முடிவதில்லை..
கோமதியின் இஷ்டம் இல்லாமலேயே நீலாம்பரியைக் கல்லூரிக் காதலில் கரம் பிடித்தான் கோபி. அதனால்தானோ, என்னவோ கோமதி நீலாம்பரியிடம் கோப... மதியாகவே காட்சி தருவாள் எப்போதும்.
அதற்கு ஏற்றார்போல, குழந்தை இல்லாத குறைவேறு.... .அதனால் நீலாம்பரியை அறவே பிடிக்காமல் போயிற்று கோமதிக்கு.
கோபியும். நீலாம்பரியும் ஆதர்ஷ தம்பதிகள் தான் இன்றும் என்றும் அப்படியே.... ஆனால் அம்மா புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாளே.? கோமதி ஒரு ஹார்ட் பேஷியண்ட் அதனால் தான் கோபிக்கு அவளை எதிர்த்து பேச முடியாமல் போயிற்று.
“கோபி.. எங்கேப்பா கிளம்புறே..?
"ஊட்டியில் எனக்கு ஒரு வாரம் கான்பரன்ஸ் இருக்குதும்மா.. அதை முடிச்சிட்டு வந்த பிறகு உன்னிஷ்டபடி சுகந்தியோ சாந்தியோ பார்க்கலாம்” உதட்டளவில் சொன்னாலும், உள்ளத்தில் இருந்து வார்த்தை வர மறுத்தது கோபிக்கு
ஊட்டி போகும் ரயிலில் .., தான் முன்பதிவு செய்திருந்த பெட்டியின் உள்ளே போய் அமர்ந்தான்.
ரயில் நகர தொடங்கியதுமே, ஜன்னல் அருகே அமர்ந்தான். இரவு நேரமாதலால், ரயில் நகரும் போது தூரத்தில் வெளிச்ச புள்ளிகள் தெரிந்நு மறைந்தது.. அந்த தனிமைப் பிடித்திருந்தது கோபிக்கு...
அடுத்த கம்பார்ட்மென்டில் குழந்கைளின் கரகோசமும் கைதட்டலும் காதைப் பிளந்தது, அலைபாயும் சிரிப்புகள் காதில் வந்து மோதியது.
கோபி எழுந்து அடுத்த பெட்டியை நோக்கி முன்னேறினான். வாண்டுகள் இவனை ஒருமாதிரி பார்த்தது.
ஹலோ, யூ.ஆர் வெல்கம் ஸ்டூடன்ஸ் எந்த ஸ்கூல் பசங்க நீங்க…கேட்டவனை..,
“நீங்க எந்த ஸ்கூல்”; ஒரு வாண்டு திருப்பி கேட்டது அதை தொடர்ந்து உற்சாக கூச்சல்....
“வாட் ஹாப்பண்ட்” கேட்டபடியே வந்த, அவள் இவனையே இமைக்காமல் பார்த்தாள்.
“ஹாய் கோபி… எப்படிப்பா இருக்கே? என்னைத் தெரியலே.. நான் சாதனா..."
அந்த தெற்றுப்பல் குறும்புச் சிரிப்பும், ஒற்றை ரோஜாவும் அந்த நீள மூக்கும் சாதனாவை உடனே அடையாளம் காட்டியது.
"சாதனா... நீயா..?
டீச்சராயிட்டியா... உன்னையே கட்டுபடுத்த முடியாது நீ உன்னோட ஸ்டூடன்சைக் கட்டுபடுத்துறியா"....? என்றான் கோபி.
"ஐயோ... இவங்க எல்லாம் ஸ்டூடன்ஸ் இல்லேப்பா.. என்னோடே
குழந்தைகள்”
சொல்லும் போதே அவள் முகத்தில் ஒரு சுடரின் வெளிச்சம்.
“சாதனா…....நீ அப்போ மேரேஜ்” கோபி தடுமாற்றமாய் உட்கார்ந்தான்.
"வாழ்க்கையிலே கல்யாணம் எத்தனை முறை வேணா வரும். ஆனா..காதல் ஒரு முறை தாம்பா..
“காட்டுக்குள்ளே எத்தனையோ பூ பூக்குது, வெளியுலகத்துக்குத் தெரியாமலே அது மொட்டு விட்டு மலர்ந்து உதிர்ந்து அந்த மண்ணுக்கே உரமாகுது.
அதே மாதிரி என் மனசிலே ஒரு பூ பூத்தது. அந்த பூ யாருக்கும் தெரியாம உள்ளுக்குள்ளே உதிர்ந்து உரமாயிடுச்சி கோபி...”
சொல்லியவளைக் கோபி மௌனமாய் பார்த்தான்.
“ஆமா…... நீலு எப்படி இருக்கா கோபி"…? சொல்லியபடியே ..
கதவருகே நடந்தவ ளை பின் தொடர்ந்தான்
"என்ன... கோபி என்னையே பார்க்கிறே"..?
“கல்வி என்கிற டார்ச்லைட் என்கிட்ட இருக்கு அது....,எல்லா ஊருக்கும் வழி காட்டும்.
நான்.. ஆர்பனேஜ் நடத்திட்டே...இன்னும் படிச்சிட்டு இருக்கேன் கோபி”
இமைக்காமல் பார்த்தவனை.. பார்த்ததும் விழிகளை தாழ்த்தி கொண்டாள்.
சாதனா…! கல்லூரி வாழ்க்கையில் ஒரு கலக்கல் புயல்... ஆயிரம் ஆடவர் அவளுக்காக ஏங்கினாலும்..,அவள் ஏங்கியது கோபிக்காகத்தான்.
கோபியும் நீலாம்பரியும் கல்லூரி காதலர்களாய் வளைய வந்த போது, நட்பு என்கிற கட்டத்தின் எல்லையிலே நின்று கொண்டு..இவள் மனதை பூட்டி வைத்தது என்னவோ நிஜம் .
“கோபி …நீ அம்மா சொன்ன மாதிரி, இன்னொரு கல்யாணம் பண்ணப்போறியா"..?
“என் நீலாம்பரியை விட்டுட்டா..? ந்நோ ..நினைச்சு கூட பார்க்க முடியாது சாதனா.
“கோபி.. நீ ஊட்டிக்கு தானே வர்றே..? என்னோட ஆர்பனேஜுக்கு நீ ஏன் வரக்கூடாது"..?
“ஷ்யூர் நிச்சயமாக வருவேன் சாதனா. எனக்கும் கொஞ்சம் மாறுதல் வேணும்” சொல்லி விடை பெற்றான்.
ஒரு வார முடிவில் அதை செயல்படுத்தியும் காட்டி விட்டான்.
ஆர்பனேஜ் வாசலில் இறங்கும் போதே.. மனது அவன் வசம் இழந்தது. ஊட்டியில் அழகு குவியலான....வகை வகையான வண்ண பூக்களின் நடுவே இன்னொரு மலர் குவியலாய் அந்த மழலைப்பூக்கள்...,
ரம்மியமான காலை அவனை வரவேற்றது.
""சீதாம்மா.. இரண்டு டீ"
உள்ளே குரல் கொடுத்தாள். சாதனா.
அழகான தோட்டத்தில் அவனை உட்கார வைத்து ஏலக்காய் மணக்கும் டீயை அளித்து, தானும் அமர்ந்து கொண்டாள்.
“சொல்லு கோபி என்னோட குட்டி ஆசிரமம் எப்படி இருக்கு. அப்பா எனக்காக விட்டுட்டு போன சொத்தையெல்லாம் ஒரு நல்ல காரியத்துக்கு
பயன்படுத்த வேணும்னு நினைச்சேன்”
“இங்கே தாயால் மறுக்கப் பட்ட குழந்தைகள் உண்டு”
“எங்க அப்பா இறக்கும் போது கூட, சாதனா… நீ கல்யாணம் பண்ணி குடும்பமா பார்க்க ஆசைப்படறேன்னு சொன்னாரு.
ஆனா.. எனக்காக இப்போ ஒரு பெரிய குடும்பமே இருக்கு கோபி”
மத்திய அரசு எனக்கு இரண்டு அவார்ட்ஸ்... தந்திருக்கு. தமிழ் நாடு சைல்டு டெவலப்மென்ட் தலைவராக நான் இருக்கேன். பல ஆர்பனேஜூக்கு , முதியோர் இல்லங்களுக்கு உதவி செஞ்சிட்டு இருக்கேன்"..
வெள்ளையாய் சிரித்தாள் சாதனா.
“ சாதனா நீ சாதிச்சிட்டே..., நாங்க எல்லாம் படித்தோம்... வாழ்ந்தோம்...ன்னு எதைத் தேடியோ ஓடிட்டு இருக்கோம்"...
"ஆனா...
நீ..., உன்னோட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாத்திட்டே". "இன்னொரு நைட்டிங்கேலா.. இன்னொரு தெரசாவா.. உலகம் உன்னைப் புகழப் போற நாள் வெகு தெலைவில் இல்ல
"உன்னைப் பார்த்த பிறகு நானும் ஒரு முடிவுக்கு வந்திட்டேன் சாதனா..”
“எஸ்...சாதனா நான் உன்னோட ஆசிரமத்திலே.. ஓரு குழந்தையை தத்து எடுக்க போறேன்" என்ற கோபியை ஆச்சரியமாக பார்த்தாள் சாதனா.
“எனக்காக என்னையே நம்பி வந்த நீலாம்பரியை... அம்மாவின் வற்புறுத்தலுக்காக நான் இழக்க விரும்பல"...,
"அம்மாவுக்குக் குழந்தைத் தானே வேணும்..."
"உன் ஆசிரமத்திலிருந்து எனக்காக ஒரு ரோஜாவைச் செலக்ட் பண்ண போறேன். சாதனா ..
நீலாம்பரிக்கு பெண் குழந்தைன்னா ரொம்ப விருப்பம்"
என்ற கோபியைப் பெருமையாய் பார்த்தாள் சாதனா.
"உங்கம்மா..எதுவும் சொல்லமாட்டாங்களாகோபி"..?
"அம்மாவோட குழந்தை ஆசை தான். எங்களை.. பிரிக்க நினைச்சிருக்கு.."
அதுவுமில்லாம நானும் நீலாம்பரியும்
எவ்வளவு அன்பா இருக்கோம்ன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.
இந்த குழந்தை சீக்கிரமா...அம்மா மனசை கரைச்சிடுவா"...
எனக்கு நம்பிக்கை இருக்கு.."
என்றான் கோபி நாத்.
சாதனா சம்மதத்துடன்...
குழந்தையோடு ரயிலேறியவனை வழியனுப்பி வைத்தாள் சாதனா.
குமரி உத்ரா
கன்னியா குமரி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்