Pavatharani sathianathan
சிறுகதை வரிசை எண்
# 232
துரோகங்களுக்கு மன்னிப்பில்லை
வாழ்க்கை இன்னும் எத்தனை சுவாரசியங்களை தந்துவிடப் போகின்றது என எண்ணி ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து கனடாவிலிருந்து இலங்கைக்கான பயணத்தை ரசிக்கையில் எத்தனை பசுமை ரணங்களையும் சுவாரசியங்களையும் எண்ண வைக்கின்றது இந்த பயணம் என்ற நினைவலையில் சென்று கொண்டிருந்தபோது
" ப்ளீஸ் டேக் யுவர் லன்ச்" என்ற குரலுக்கு இல்லை என்று பதிலளித்தவளாய் தனது கடந்த கால வாழ்விலும் தான் இவ்வாறு தானே எவ்வித கவலை இல்லாமல் இருந்திருக்க முடியும் என எண்ணியவளாய் விமானம் முன்னோக்கி செல்ல செல்ல எண்ணோட்டம் பின்னோக்கி நகர ஆரம்பித்தது.
பள்ளிக்காலம் எவ்வளவு அற்புதமானது. சினிமாக்களில் வரும் காதல் மன்னர்களாக தம்மை தானே உருவாக்கி காதல் வலையில் சிக்காதோர் எத்தனை பேர் ?.அந்த வகையில் தானும் தர்ஷனை காதலிப்பதாய் 10 ஆண்டுகள் கடந்து சென்ற நிலையில் வெளிநாட்டு பயணங்கள் தனக்கு கூடி வர காதலா பயணமா என்ற போது காதலையும் பயணத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவளாய் காதலனை கூப்பிடுவதாய் வாக்குறுதி அளித்து குடும்பத்துடன் பயணப்பட்டால் அவள்.
வெளிநாடு வெறும் மோகம் தானே. பணத்தை தேடி அலைந்து ஓடி ஓடி உழைத்த போதும் அவளுக்கு பணம் கையில் நிற்கவில்லை. ஆனால் கனவுகள் பல இருந்தன .பகுதி நேர வேலை செய்த போது பிரதீப் குமார் இவள் மேல் காதல் கொண்டதுடன் இவளது பணத் தேவையை பூர்த்தி செய்தவனாய் அவன் இருந்தான். எனவே தூரத்து உறவான காதலனை மெது மெதுவாய் விலக ஆரம்பித்து தனது புது வாழ்வை கனடாவில் ஆரம்பித்தாள். இடைக்கிடை செல்லரித்த முதல் காதலை மறக்க தன்னை தானே கடிகாரத்தை விட வேகமாக வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.இதனிடையே இவளுக்கு குழந்தை பிறந்த போது இவளது கணவன்
" இது நமது முதல் குழந்தை அல்லவா! அழகா இருக்கிறது உன்னை போலவே..."
என்று சொல்லைக் கேட்டபோது
சிறிது படபடப்புக்கு உள்ளாகியவளாய் தன் கவலையை உதட்டில் சிரிப்பு எனும் முகமூடி அணிந்து மறைத்தாள்.
சிறுது நேரத்தில் நித்திரையில் சென்று கொண்டிருந்தபோது அவளது முதல் குழந்தையின் முகம் கண் முன் வந்த போதும் அவ் குழந்தையின் சிரிப்பை அவளால் கடைசி வரை இணங்க காண முடியவில்லை .தான் இலங்கையில் இருந்து கனடாவிற்கு புறப்படும் போது வீசா அதிகாரியான கேசவுடன் பழக்கம் ஏற்பட்ட வேளை எல்லை மீறிச் சென்ற அவளது உறவினால் அவள் கருவுற்றதனை அறிந்தபோது உடனடியாக அதே குழந்தையை அழித்துக் கொண்டபோதும் நினைவில் அழிக்க முடியவில்லை.
" ஆம் அவளே எனது முதல் குழந்தை" என்று தைரியமாய் சொன்னவளாய் நித்திரையிலிருந்து திடுக்கிட்டு எழும்பி கொண்டாள்.
கணவனான பிரதீப் குமார் உடன் இருந்த உல்லாச வாழ்வில் சில சில சச்சரவுகள் ஏற்பட தொடங்கிய வேளையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதுடன் தனது உறவினை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தான். இதனை தாங்க முடியாதவளாய்.
" எங்களுக்கு குழந்தை உள்ளது ஞாபகம் இருக்கா"என வினவிய போது.
"
"அது எனக்குத்தான் பிறந்தது என்று என்ன உத்தரவாதம்?.
முதலில் நீ கருவை கலைத்தது எனக்கு தெரியாதோ?" என ஆதங்கத்துடன் கேட்டான்.
" யார் சொன்னது" என தளர்ந்த குரலில் கேட்டாள்.
" உங்க அம்மா டி"
நிலைகுலைந்தவளாய் " அது ஒரு முடிந்து போன கதை. அது ஒரு விபத்து. நான் மனசால கூட அவனை நினைக்கல. உங்கள மட்டும் தான் நம்பி இருக்கிறேன்" என அழுது புலம்பினாள்.
" நான் ஓர் நல்லவளை தேர்ந்தெடுத்து விட்டேன். உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை. சென்றுவிடு."
" ஓகே மிஸ்டர் பிரதீப் குமார்" என்று கூறிவிட்டு தனது பைகளை எடுத்துக் கொண்டு சென்றவளை நீ பெற்றெடுத்த குழந்தைகளை யார் பொறுப்பேற்பது என வினவிய போது.
" அது என்னோட குழந்தை மட்டுமல்ல. உன்னுடையதும் தானே. நீயே வளர்த்துக்கொள் உன்னுடைய பொருள் எனக்கு வேண்டாம் " என சொன்னது எண்ணி வருத்தப்பட்டவளாய்
கண்களைத் துடைத்து நினைவலையிலிருந்து மீண்டெழுந்தாள்.
விமானத்தில் அருகிலிருந்த பயணி சிறு சந்தேகத்துடன்
"ஹலோ மேடம் நீங்க தர்சா தானே"
" ஓம் நீங்க"
" நான் கேசவ்" என்றான்.
ஒரு நிமிடம் கண்களை அகலவிரித்து கொண்டவள் மறுநிமிடம் பயத்தில் கண்களை மூடிக்கொண்டவுளுக்கு கண்ணீர் துளிகள் தாரை தாரையாய் கொட்டியதை கண்ணாடி அணிந்து மறைத்தவளாய்.
" எப்படி இருக்கிறீங்க" என்று கேட்டாள்.
" சந்தோசமா இருக்குறன் தர்ஷா" என மெல்லிய புன்னகைத்தவனாய் சொன்னான்.
"உங்க மனைவி எங்க?"
" எனக்கு மனைவி இல்லை ஆனால் ஒரு அழகிய குழந்தை உள்ளது"
என்று அவன் சொன்ன நொடி. தான் கருவில் கலைத்த பிள்ளையை சொன்னதும் உலகமே இருண்டு போனது. நீண்ட மொளன போராட்டத்தின் பின்னர்
" நீ என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றாயா?" என அவன் கேட்ட வேளை திகைத்தவளாய்
" எனக்கு திருமணம் ஆயிற்று"
என்ற அவளது பதிலை மறுத்தவனாய் அந்தக் கதை எல்லாம் எனக்கு தெரியும்.
" நான் எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்" என்று தெளிவாக சொன்னவனை இறுக பிடித்து என்னை மன்னித்துவிடு என்று சொல்ல நினைத்தவள்.
" சில விஷயம் ஒரு தடவை தான். அதே வலிகளை திரும்ப மனம் ஏற்பதில்லை."
" ஓகே. திஸ் இஸ் மை நம்பர். உனக்கு எப்ப தோணுதோ அப்ப அழை." என மறுத்தவளாய் வாங்கிக் கொண்டு
விடை பெற்று கொண்டாள்.
இலங்கையில் தரையிறங்கிய அவள். நிரந்தரமாய் அவனிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள தனது அடுத்த நாட்டுக்கான பயணத்தை தொடங்கினாள்.
வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என எண்ணி தனது வலிகளிலும் சிரிக்க கற்றுக் கொண்டாள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்