Saratha R
சிறுகதை வரிசை எண்
# 229
காதல் தேவதை
எம்.ஆர்.எம். கல்லூரியின் பட்டமளிப்பு விழா. பலத்த கரகோக்ஷத்துடன் மேடை ஏறினாள். ரதி
கல்லூரியின் முதல்மாணவியாக தேர்வு பெற்றிருந்தாள். கல்லூரியின் தாளாளர், முதல்வர. ஏனைய பெரியோர்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.
கல்லூரியின் முதல்வர் உரையாற்றினர்.
அனைவருக்கும் வணக்கம்.
இந்த கல்லூரி எண்ணற்ற மாணவர்களை ,
உருவாக்கி உள்ளது அதற்கு நம் ஆசிரிய பெருமக்கள் உழைப்பு , ஒரு பகுதி என்றால்
மாணவர்களின் ஒத்துழைப்பும், இருந்தால்தான் ஒரு கல்லூரி வளர்ச்சி அடைய முடியும்.
அனைவரும் ஊக்கமாக இருந்து படிப்பிற்கு , முன்னுரிமை கொடுத்தால் இந்த ரதி போல , ஓராயிரம் ரதிகள் உருவாக முடியும். இந்த முன்னுரிமை பெற்று அவளை பெற்றவர்களுக்கும் பெருமை தேடித்தந்துள்ளாள் . என்று பாராட்டி வாழ்த்துகள் கூறி அமர்ந்தார் .
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு, வந்திருந்த ரதியின் அப்பா அம்மா. ஒரு முடிவு எடுத்தார்கள் ஏற்கனவே அவளை விரும்பி மதன் என்ற ஆபிஸர் ஒருவர் பெண் கேட்டு வந்திருந்தார்.
இவர்கள் மறுத்திருந்தார்கள். ரதியும், அவராக
என்னை விரும்பி வந்து கேட்கிறார் . நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? என்று கேட்டிருந்தாள் .
இவ்வளவு பெருமைத் தேடித்தந்த தன் செல்ல தேவதைக்கு, மதனையே முடித்துவிடலாம் என முடிவு எடுத்தார்கள்.
மதனின் தாய், தந்தையரை, வரவழைத்து பேசினார்கள். அவர்களும் என் மகன் விருப்பமே எங்கள் விருப்பம் என்று சம்மதம் தெரிவித்தார்கள்.
ரதி, மதனின் திருமணம் மிக சிறப்பாக, இரு வீட்டு பெரியவர்கள், ஆசிகளுடனும் பங்களிப்புடனும் சிறப்பாக நடந்தது. மாணிக்கம், அபிராமி இருவரும் மதனிடம் , எங்கள் தங்க மகளை உங்களின் அபிமான காதல் தேவதையாக, உங்களிடம் மனமுவந்து தருகிறோம் என்று ரதியின் கரங்களை மதனிடம் ஒப்படைத்தார்கள்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்