Nishapandi
சிறுகதை வரிசை எண்
# 216
*கருவேலங்காடு*
என்னோட பெயர் நிஷா நான் சொல்ல போறது என்னோட கதை எவ்வளவு தான் மழை பேஞ்சாலும் ஏப்ரல், மே வந்த எப்பவுமே வரும் தண்ணீர் பஞ்சம்....!!
கண்ணுக்கு அழகா பசுமையா எவ்ளோ தான் இடம் இருந்தாலும் அதிகமா முளைச்சு நிக்குற கருவேலம் மரம்...!
அடிக்கிற காத்துல கூட உப்பு வாசனை கலந்து தான் வரும் ....
என் ஊருனு பெருமையா சொல்ல இதைவிட பெருசா வேற என்ன வேணும்...
ஆமாங்க இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் கடலோர கிராமம் தான்
என்னோட ஊரு......
என்னோட அப்பா கணேஷ், ஒரு விவசாயி விவசாயம்தான் நாட்டை உயர்த்தும்னு நம்புரவர்...
என்னோட அம்மா மீனா ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவரா இருக்காங்க....
வாங்க என்னோட வீட்டுக்குள்ள போகலாம்
மீனா ஒரு டம்ளர் டீ எடுத்துட்டு வா நான் தோட்டத்துக்கு போகணும்...
இதோ வரேன்...
எங்க அப்பாவுக்கு தினமும் காலையில செய்தி பாக்கல அப்படின்னா அந்த நாலு போகாது என்ன ஆனாலும் காலைல செய்தி பார்க்கணும் கேட்கணும் இல்லன்னா அவ்வளவுதான்....!
என்னோட கதை என்னன்னு யோசிக்கிறீங்களா? இதுல வரும் நானும் என்னோட குடும்பமோ கதை இல்லங்க...
அங்க என் அப்பா படிக்கிற செய்திதான் கதை பாக்கலாமா...?
இல்ல படிக்கலாமா? வாங்க...
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சாலையில் முழுவதுமாக வெட்டப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடக்க பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து காவலர் விசாரணை நடத்தியதில் அது தேவைப்பட்டினத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் உடல் என தெரியவந்துள்ளது..
கொலையாளியை பற்றி எந்த தகவலும் இல்லை தொடர்ந்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்...
யார் இந்த முருகேசன்?
பார்ப்போம்.....
முதல் கட்ட பிரேத பரிசோதனையில் முருகேசன் உடலில் 48 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளது எனவும் கத்தியால் குத்தியவர் ஒரு மனநிலை நோயாளியாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது...
இதனை அடுத்து காவலர் அடுத்த கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்....
கொலை நடந்த இடத்தில் எந்த தடயமும் இதுவரை இல்லை என்பதால் விசாரணையில் சோர்வு ஏற்பட்டுள்ளது...
காவல்துறை ஒரு பக்கம் விசாரிக்கட்டும்...
நம்ம ஒரு பக்கம் விசாரிக்கலாமா..?
வாங்க...
நாம இந்த கொலைய பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி முருகேசன் பத்தி ஊருக்குள்ள உள்ளவங்க கிட்ட கேப்போம் ....
ஐயா....
ஐயா ....
என் பேரு நிஷா ... நான் ஒரு நாளிதழ் ல வேலை பாக்குறேன்... இன்னிக்கு நடந்த கொலைய பத்தி செய்தி போடணும்..
கொலை செய்யப்பட்ட முருகேசன உங்களுக்கு தெரியுமா?
நல்லா தெரியும் ..
ரொம்ப நல்லவன்..
பொண்டாட்டி குழந்தை குட்டின்னு அவனுக்குன்னு சொல்லிக்கிற மாதிரி யாரும் இல்ல ...
அவன் அண்ணன் பொண்ணு ராணிக்காக அவன் கல்யாணமே பண்ணிக்கல....
ராணியா?...அது யாரு..?
ராணி முருகேசனோட அண்ணன் ரமேஷ் ஓட பொண்ணு ...
ராணி பொறந்த அப்பவே அவளோட அம்மா பிரசவத்துல இவள பெத்து போட்டு செத்துப் போயிட்டா...
அவ போனதை நினைச்சு ரமேஷும் மூனு வருசத்திலேயே மேல போய் சேர்ந்துட்டான்...
அப்புறம் ராணிக்கு எல்லாமே முருகேசன் தான்..
அவளுக்காகத்தான் இவன் ஒரு கல்யாணம் கூட பண்ணிக்கல ...
நல்லா தான் இருந்தான் இவன யாரு இப்படி கொன்னான்னு தான் தெரியல?
சரிமா...
வேலை கிடக்கு நான் போறேன்...
சரிங்க ஐயா..
முருகேசன் ரொம்ப நல்லவர் போல தெரியுது..
சரிதான்...
முதல்ல தெரிந்ததை மட்டும் வச்சு யாரையும் எடை போட முடியாது இல்லையா இன்னும் விசாரிக்கலாம் வாங்க...
முருகேசன் பத்தி நாம இங்க விசாரிக்கிறத விட அவரோட வீட்டுக்கு பக்கத்துல இருக்குற யாரையாச்சும் கேட்டா தெரியும்...
வாங்க போவோம்..
ஆத்தா ...ஆத்தா....
நில்லு ஆத்தா...
நான் பாட்டு கூப்டுட்டே இருக்கேன் நீ பாட்டு கண்டுக்காம போற....
என்ன கண்ணு ...
சொல்லு ..
ஆத்தாக்கு காதுல விழாம தானே போன என்ன கேட்ட ....
அது ஒன்னும் இல்ல ஆத்தா...
நேத்து செத்துப் போனாருல முருகேசன்..
அவர பத்தி தான் விசாரிக்கணும்..
உனக்கு அவரை தெரியுமா.?
எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுக்காரன் தான் அவன்..அவன பத்தி தெரியாம இருக்குமா
கண்ணு ..
அவ ரொம்ப நல்லவன் தாயி ..
எந்த கெட்ட பழக்கமும் இல்லை..
என்ன பண்ண கழுதை குடிக்க மட்டும் செய்யுவான்...
குடிச்சாலும் யார்கிட்டயும் எந்த வம்புக்கும் போக மாட்டான்..
கடலுக்கு போனா எப்படியும் மூணு நாள் கழிச்சு தான் வருவான்..
எனக்கு தெரிஞ்சு பெருசா யாரையும் அவன் எதிரின்னு வச்சுக்கல..
எந்த பாவி கொன்னானோ?
அவனை சாமி தான் கேக்கணும்..?
சரி கண்ணு..
நான் வரட்டுமா?
ம்ம்ம்...சரி ஆத்தா..
என்னடா யாரைக் கேட்டாலும் முருகேசன பத்தி நல்லவிதமாவே சொல்றாங்களேன்னு இருக்கா ...
எந்த கெட்ட பழக்கமும் இல்லன்னு சொல்றாங்க ஆனா குடிப்பாருன்னு சொல்றாங்க அப்படின்னா இன்னும் விசாரிச்சா தான் உண்மை என்னன்னு தெரிய வரும் அந்த வீட்ல யாராச்சும் இருக்காங்களான்னு பார்ப்போம்...
யாராச்சும் இருக்கீங்களா?
யாரு..?
அக்கா கொஞ்சம் இங்க வரீங்களா. ?
நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் நீ உள்ளார வாமா....!
அக்கா என் பேரு நிஷா.. நான் ஒரு நாளிதழ்ல வேலை பாக்குறேன்..
செத்துப்போன முருகேசனை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு வந்து இருக்கேன். ...
அவன பத்தி பேச என்ன இருக்கு...
நாசமா போறவன்...
நல்ல வேளைஅவன யாரோ கொன்னுட்டாங்க..
இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா நானே அவனை கொன்னு இருப்பேன் ..
ஏன் அக்கா இப்படி சொல்றீங்க.?
அவரை எல்லாரும் நல்லவர் தான் சொல்றாங்க..
யாரு அவனா நல்லவன்..???
கல்லுக்கு சேலையை கட்டி வச்சா கூட அதை பொண்ணுன்னு முறைச்சு பாக்குறவன் அவன்...
பாவம் அந்த பொண்ணு ராணி ....
இவனை வைச்சு எப்படியோ வளந்துட்டா..
சரிக்கா ..
ரொம்ப நன்றி ...
(அடுத்த நாள் காலை)
மூன்று நாட்களுக்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே நடந்த கொலை குற்றவாளி யார் என்பது தெரியாமல் உள்ள நிலையில் காவல்துறை விசாரணை செய்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்..
பொது மக்களுக்கு காவல்துறையின் சார்பில் கூறி இருப்பதாவது கொலை நடந்தது தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் எனும் போது வடமாநில கொள்ளையர்களால் பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அந்த கண்ணோட்டத்தில் விசாரணை மிக தீவிரமாக நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது...
என்ன அப்பா காலை செய்தியா..?
ஆமாமா ...
சரிப்பா ...
இந்த கொலையை யார் பண்ணி இருப்பா..?
எதுக்காக பண்ணி இருப்பாங்க. .?
என்னமா உன்னோட வேலையை என்னை பாக்க சொல்ற போல...!
அப்படி இல்லைப்பா... உங்க யூகத்தை தான் கேட்டேன்...!
யார் பண்ணா எதுக்காக பண்ணாங்கன்னு சொல்ல முடியாதுமா ஆனா ஒன்னு கண்டிப்பா கொன்னவனுக்கும் முருகேசனுக்கும் முன் விரோதம் இருக்கணும்...
எப்படிப்பா சொல்றீங்க..?
ஆமாமா ...
இத்தனை இடத்தில கத்தியால குத்தி கொன்னு இருக்கான்..அப்படினா அதுல ஏதோ இருக்குமா..!
சரிப்பா...
நான் கிளம்புறேன்..
எங்கம்மா போற..?
உண்மைய தெரிஞ்சுக்கனும் அதை என்னோட இதழ்ல தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கனும் அதிக வேலை இருக்குப்பா...!
சரி மா ..
கவனமா இரு..
சரிங்கப்பா..
(முருகேசன் வீட்டில்)
ராணி ....ராணி...
இருக்கீங்களா?
யார் தாயி நீ...
நான் ராணியை பார்க்க வந்திருக்கேன் மா ...
அவ உள்ளே இல்லைமா..
ராணி எப்படிப்பட்ட பெண்ணுமா..?
அவளுக்கு என்ன குழந்தை மாதிரி யாரு கிட்டயும் அதிகம் பேச மாட்டா கோபப்பட மாட்டா எப்பவுமே குழந்தைங்க கூடவே விளையாடிட்டு இருப்பா...
ரொம்ப அமைதியான பொண்ணு ...
பாவம் அப்பனும் ஆத்தாளும் இல்லாம தனியாவே வளர்ந்திருச்சு...
அதுக்குன்னு இருந்த ஒரே ஒரு சித்தப்பனையும் யாரோ கொன்னுட்டாங்க...
பாவம் இப்ப யாரும் இல்ல அனாதையா நிக்குது...
இப்போ ராணி எங்க..?
அவள இப்பதான் ஆத்தங்கரையில பாத்துட்டு வரேன்...
தனியா உட்கார்ந்து ஏதோ பேசிட்டு இருந்துச்சு ..
பாவமா இருக்கு அந்த பொண்ண பார்க்க .....
எந்த ஆத்தங்கரையில மா ..?
இப்படியே வடக்கால போயி கொஞ்ச தூரத்துல இடது பக்கமாக வருமே அந்த இடத்துல....
ஓ வறட்சி பாறையா..?
ஆமாமா ...
ரொம்ப நன்றி அம்மா..
இருக்கட்டுமா...!
ராணி...ராணி ...ராணி... இங்க
என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?
நான் என்கிட்டே பேசிட்டு இருக்கேன்...
உன்கிட்ட என்ன பேசுற நீ..
நீ யாரு..?
நான் ஏன் உன் கிட்ட சொல்லனும்...
உனக்கு என்னால முடிச்ச உதவியை செய்யலாம் னு வந்திருக்கேன்...!!
அப்போ ஏன் இத்தனை வருசமா வரலை...
எனக்கு இப்பதான் தெரியும்..
என்ன தெரியும்
அவன கொன்னத பத்தியா..?
யாரு முருகேசனயா? அவர் உன் சித்தப்பா தானே.?
ம்ம்ம்......
யாரு கொன்னா தெரியுமா ..?சொல்லு தண்டனை வாங்கி கொடுப்போம்....
(வெகு நேரத்திற்கு பிறகு)
நான் தான்...
நானே தான்....
நீயா .....?
ம்ம்....நான்தான்....
ஏன்? கொலை பண்ண.?
அது கொலை இல்லை...
தண்டனை ....
அவன் செய்த குற்றத்திற்கான தண்டனை...
அப்படி என்ன பண்ணாரு கொலை செய்கிற அளவுக்கு ...?
திரும்பத் திரும்ப அதை கொலை னு சொல்லாத..
அது கொலை இல்ல தண்டனை...!தண்டனை..!!!
சரி ..சரி...மரண தண்டனை கொடுக்கிற அளவுக்கு அப்படி என்ன தப்பு பண்ணாரு...?
அவன் என்ன தப்பு பண்ணல...
அவன் பண்ண எல்லாமே தப்புதான்...
வலினா என்னனு தெரியாத வயசில வலில துடிச்சேன் ...
விவரமே தெரியாத வயசுல என்ன தப்பா பயன்படுத்துனது தப்புதான் ...
உணர்வுகளை பத்தி நான் எதுவுமே அறியாத வயசுல என்னை பாலியல் உணர்வுக்குள்ள கொண்டு போனது தப்பு இல்லையா..?
அண்ணன் பொண்ணு அவனோட பொண்ணு னு யோசிக்காம அவனோட காம பசிக்கு என்ன கொடுமைப்படுத்துனது தப்பில்லையா? எது தப்பு இல்ல ...?
அவனோட ஒவ்வொரு இச்சைக்கும் என்னோட இரத்தம் சிந்தினது தப்பா? இல்லையா?
ஒரு பொண்ணா நீ சொல்லு..?
குழந்தையை குழந்தையா பாக்காம அவனோட ஆசைக்கு இணங்குற ஒரு பொருளா பாத்தான் ..
எனக்கும் உசுரு இருக்கு அதுக்குள்ள ஒரு மனசு இருக்குனு அவனுக்கு ஏன் தெரியலை..
உனக்கு மட்டும் இல்லை இந்த ஊருக்கு கூட என்னோட வலி தெரியாது..
கதறி அழ கூட முடியாம எத்தனை நாள் நான் தனியா அமைதியா அழுது இருப்பேனு உனக்கு தெரியுமா..?
எத்தனையோ நாள் எங்க அப்பா அம்மா போன இடத்துக்கு போய் சேரனும் நினைச்சு இருக்கேன் அது தெரியுமா உனக்கு..?
என்ன தெரியும் உனக்கும் இந்த ஊருக்கும்...?
அந்த வீடு
வீடு இல்லை... நரகம்
அங்க இருக்கிறதை விட இந்த சுடுகாடு எவ்வளவோ பரவாயில்லை..
நான் கேக்குற எதுக்காச்சும் பதில் இருக்கா உன் கிட்ட..
பதில் சொல்ல முடியாது உன்னால..
யாராச்சும் என்கிட்ட மனசு விட்டு பேச மாட்டாங்களானு எவ்வளவு நாள் நினைச்சு இருக்கேன் தெரியுமா..?
ஒரு பொண்ணா இங்க இருக்கிற ஒட்டுமொத்த ஆண்களையும் நான் வெறுக்கிறேன்..
என்னை இந்த நிலைக்கு ஆளாக்குன
அவன கொல்லனும் நெனச்சேன்.....
கொன்னேன்....
அவனோட காம ஆசையை தான் அவனுக்கு எதிர பயன்படுத்தின...
எத்தனையோ வருசம் கனவு கண்டது இப்பதான் நடந்துச்சு...
அவன் உயிரோட இருந்தா என்னால உயிரோட வாழ முடியாது..!
நான்தான் கொன்னேன்...
நான்தான் கொன்னேன்...!
ஒரு பொண்ணா நீ செய்தது தான் சரி ராணி..!
இருந்தாலும் இதுல இருந்து நீ எப்படி உன்னை பாதுகாத்துக்க முடியும்...!
எப்படியும் காவல்துறை அதிகாரிகள் கொலையை யாரு பண்ணது னு கண்டுபிடிச்சுரு வாங்க...
கண்டு பிடிக்கட்டும்...
அப்போ பதில் சொல்றேன் அதுக்கு...
என்ன ஆச்சு....ராணி ராணி....
மயக்கப்பட்டு விழுந்த ராணிய உடனே நான் அந்த பக்கமா வந்த ஊர்காரர் ஒருவரின் உதவியோடு எங்க அம்மா கிட்ட கூட்டிட்டு போனேன்..
எங்க அம்மா அவளை முழுசா பரிசோதனை பண்ணிட்டு அவ சின்ன வயசுல இருந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதையும் அதை தொடர்ந்து அனுபவித்ததால் மனதளவில் அவள் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சொன்னாங்க...
உடனே நான் அவளை சென்னை மனநல மருத்துவமனைக்கு என் அம்மாவின் உதவியோடு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டேன் ....
அவ பண்ணது கொலை இல்லை அது அவன் செய்த குற்றத்திற்கான தண்டனை...
இந்த உலகில் எங்கோ ஓர் மூலையில் ஒரு ராணி உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள்...
காமம் என்பது ஒரு உணர்வு மட்டுமே அதற்கு பெண்மையை பலியாக்கிட வேண்டாம்..
கொலையை தாண்டியும் எத்தனையோ பெண்களின் தற்கொலையும் எழுதப்படாமலே இருக்கிறது....
பெண்மையை அறிவோம் ...
நன்றி
மகிழ்வுடன் .....
தாரகை நிஷா
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்