logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சாரதா ஸ்ரீநிவாசன்

சிறுகதை வரிசை எண் # 210


மனிதம் இன்னும் மரிக்கவில்லை =============================== பாய் என்ன காலையில் இருந்து ஒரே கவலையாத் தெரியரீங்க என்று கேட்ட கேசவனுக்கு என்ன ப‌தி‌ல் சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தார் காதர் பாய். பாய் எங்கிட்ட எதையும் மறைக்கா தீங்க நான் உங்க கூட இருபது வருஷமா பழகுறேன் எனக்கு உங்க முகத்து வாட்டம் எதையோ சொல்ல துடிக்குது . வாயை திறந்து சொல்லும் நான் உம்மை விட பதினைந்து வயது சிறியவன் என்றாவது நம்ம ரெண்டு பேருக்குள்ள அந்த வேறுபாடு உண்டா சொல்லும் என்று இரண்டாவது முறையாக வற்புறுத்தி கேட்ட பின் வாயைத் திறந்தார் பாய் கேசவா உனக்கு வயது முப்பத்தி எட்டு ஆரது ஆனா உனக்குள்ள விவேகமும் மனுஷங்களை படிக்கும் திறமையும் அல்லாஹ் எனக்கு குடுக்காம போயிட்டுடாரு. ரஹ்மத்துன்னிசா இன்னைக்கு ஊரில இருந்து வரது. ஏன் பாய் கல்யாணம் ஆன பொண்ணு கல்யாணம் கழிந்து புகுந்த வீட்டுக்கு போயிட்டு முதல் தடவையா வரா சந்தோஷப் படாம என்ன சங்கடம். மாப்பிள்ளை அசல் இல்லை கூடப் பிறந்த தங்கச்சி மகன் அப்புறம் என்ன. அதுதான் பிரச்சனையே. நிக்காஹ் பண்ணரதுக்கு முன்னாடியே நீ எத்தனையோ தடவை எங்கிட்ட சொன்ன உம் தங்கச்சி உம்ம பொண்டாட்டிகிட்டயே சண்டை இழுப்பா எதுக்கு உம் பெண்ணை அங்க கொண்டு குடுக்க போவதுன்னு .நான் தான் தப்பு பண்ணிட்டேன் என் மருமகன் அப்துல் பேச்சை கேட்டு ஏமாந்து போயிட்டென்.இப்போ அவ தனியா வரதா போன் பண்ணி சொன்னா . வீட்டுல உங்க அண்ணி கதிஜா அழுது அழுது மூக்கை சிந்தி சிந்தி புடவை முந்தானைல துடைச்சுட்டு உக்காந்து இருக்கா. அவளும் இந்த சம்பந்தம் வேண்டாம் னு சொன்னா. நான்தான் தேவை இல்லாம போய் விழுந்து என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டேன் என்று சொல்லும் போதே பாய் குரல் தழுதழுத்ததை உணர்ந்த கேசவனுக்கு மனசு வலித்தது. இந்த காலத்து முட்டா பசங்க எல்லாத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பண்ணுராங்க இவனுங்களை என்ன பண்ணுறது துன்னு யோசிச்ச கேசவன் பாய் கவலைப்படாதேயும் நான் அப்துல் கிட்ட பேசிப் பாக்குறேன் . முதல்ல ரஹ்மத் வரட்டும் அவகிட்ட என்ன பிரச்சினை என்னன்னு கேட்டுட்டு எங்கிட்ட சொல்லும். பெறவு பார்க்கலாம் . கல்யாணத்துக்கு பெறவு ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு வர பெண்ணை நீங்களும் அண்ணியும் சேர்ந்து இன்னும் அழ வச்சுடாதீங்க இதோ பாரும் பாய் இது ரமலான் மாதம் நீங்க வணங்கர அல்லாஹ நிச்சயம் உங்களை கை விட மாட்டார் என்று கேசவன் முடிக்கவும் அவன் கைகளை அழுத்தி பிடித்த பாய் கேசவா நீ ஒருத்தன் இருக்கிரது எனக்கு யானை பலம் .ரஹ்மத் கிட்ட பேசிட்டு அப்புறம் உங்கிட்ட பேசுறேன் என்று கிளம்பினார் கேசவனுக்கு மூன்று நாட்கள் பாய் வீட்டு பக்கம் போகாதது மனதுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்தது. ரமலான் மாதத்தில் எப்போதுமே அதிகம் அவர் வீட்டுக்கு போவதில்லை ஆனா ரஹ்மத் விஷயம் மனதை உறுத்த பாய் வீட்டு பக்கம் நடையைத் கட்டினார். பாய் என்று திண்ணையில் இருந்து கேசவன் குரல் குடுக்க ரஹ்மத் ,மாமா நல்ல இருக்கியளா என்று கேட்டு கொண்டே வெளியில் வந்தாள்.மாமா வெய்யில் வெளில இப்படி வாட்டுறது குடை எதுவும் எடுக்காம நடந்தா வந்தீங்க உக்காந்துக்கங்க திண்ணையில . தாகத்துக்கு மோரு கொண்டு வரேன் என்று உள்ளே போனாள். வெளியில் வர போகும் ரஹ்மத்திடம் எப்படி ஆரம்பிப்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த கேசவன் ரஹ்மத் வருவதை பார்த்ததும் மெதுவாக ஆரம்பித்தான் என்னம்மா மாமியார் வீடு எப்படி இருக்கு அத்தையா வேற போயிட்டாக சொகுசா இருப்ப அப்படித்தானே என்றவரிடம் ரஹ்மத், மாமா என்ன ஆழம் பார்க்கிறீகளா .அப்பா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டார் போல .மாமா தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமே கிடையாது என்று நம்பரவ நான். ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. அத்தைக்கு அம்மாவை பிடிக்காது .அதனால என்னையும் பிடிக்காது அத்தானுடைய பிடிவாதத்தால தான் என்னை தன் பிள்ளைக்கு கட்டினாக இப்போ நோன்பு அது இது ன்னு என்னென்ன செலவு எங்கண்ணன் பெண்ணை கட்டி குடுத்து அனுப்பிட்டு கண்டுக்காம இருக்கான்னு ஒரே புலம்பல் எனக்கு இங்க வாப்பா நிலைமை தெரியும் நிக்காஹ்க்கு வாங்கின கடனே அடைபடல இன்னும் அம்பது அறுபதாயிரம் ரூபாய்க்கு எங்க போவாரு பாவம் . மாமா கூட எவ்வளவோ சொல்லி பார்த்தாக அத்தை கேக்கல பொழுதன்னிக்கும் சண்டை.ரமலான் நோன்பு நிம்மதியா கழியட்டும்னு தான் நான் கிளம்பி வந்துட்டேன் வரும் போது அத்தான் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் நீங்களும் அத்தையும் வந்து கூப்பிட்டால் தான் இனிமே வருவேன்னு. பாவம் அத்தானும் தான் என்ன பண்ணுவாரு உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி மாதிரி எனக்கும் அம்மாவுக்கும் இடையில கிடந்து அல்லாடுதாக.இந்த பக்கத்தில பார்த்தா வாப்பா பாவம்.நான் யாருக்கு அண்ட குடுக்க. அஞ்சு வேளையும் அந்த அல்லாவ நினைச்சு தொழுகை பண்ற என் வாப்பாவை அவன் கை விட மாட்டான்.இதுவும் கடந்து போகும் மாமா நீங்க விசனப் படாதீங்க .அல்லா என் தலையில என்ன எழுதி இருக்காரு பார்க்கலாம் என்று சொல்லி முடித்தவ ள் எத்தனையோ முயற்சி செய்தும் கண்களில் கசிந்த கண்ணீரை அவளால் மறைக்க முடியவில்லை அவள் போட்டிருந்த துப்பட்டாவால் அழுந்த கண்களை துடைத்தாள். உள்ளே சென்ற ரஹ்மத்தை பார்த்து கொண்டு நின்ற கேசவனுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது பாவம் பெண் ஜன்மம் எடுத்தால் எவ்வளவு கஷ்டப் பட வேண்டி இருக்கிரது அருமையான குழந்தை இவளை வைத்து குடித்தனம் நடத்த தெரியாத ஒரு கூட்டம் என்று நினைத்து அவர் மனதில் ஒரு தீர்மானம் செய்தார் அவர் தீர்மானம் செய்த படி மறு நாள் காலை மேலப்பாளயத்துக்கு கிளம்பினார் நேரே அப்துல் வீடு சென்ற அவரை பார்த்த அப்துலுக்கு இவர் எதற்காக வந்திருக்கிறார் என்று யூகிக்க முடிந்தது வீடு தேடி வரும் மனிதனை வா என்பது மரபாச்சே உட்காரச் சொன்னவன் உம்மாவையும் வாப்பாவையும் அழைத்து வந்தான் எப்படி ஆரம்பிப்பது என்று சிறு திண ரலுடன் ஆரம்பித்தார் கேசவன். பெரியவங்க என்னை மன்னிக்கணும் மாப்பிள்ளை தம்பி என்ன புரிஞ்சுக் கணும் நான் எதுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னு உங்களுக்கு தெரியும். ரஹ்மத் உங்க வீட்டு மருமகளா ஆகரதுன்னு முன்னாடியே உங்க வீட்டு பொண்ணு .ரஹ்மத்தை வேறு யாருக்கும் கட்டி குடுத்து கேவலம் இப்படி பணத்துக்காக குத்தி குதறி திரும்ப அனுப்பி இருந்தா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க. உங்க பணத்தை குடுத்து பிள்ளையை வாழ வச்சுருக்க மாட்டீங்க நீங்களே இப்படி பண்ணினா எப்படி என்று கேட்டவுடன் மூவரும் அமைதியாக இருக்கவும் உங்கள் அமைதி எனக்கு சாதகமான பதிலா தோணுது . உங்களுக்கு அல்லா குடுத்தது ஒரு பிள்ளை. மகளைப் போல உங்க வீட்டுக்கு வந்தா எங்க ரஹமத்து . அருமையான பொண்ணு. வீட்டுக்கு வந்த ஸ்ரீதேவியை கலங்கடிச்சு அனுப்பி இருக்கீங்க. அவ யாரு உங்க உடப்பிறப்பு மக.உங்க ரத்தம். சொல்லப்போனா உங்க தாய் தந்தை உடைய ஆசீர்வாதம் அவ. அவ அழுதா உங்க குடும்பத்துக்கு நல்லது இல்ல நீங்க பண்ணினது தப்புன்னு உணர்வீங்கன்னு நினைக்கிறேன் இந்த ரமலான் நோன்பு பற்றி இந்து வாகிய எனக்கு சில விஷயங்கள் தெரியும் இந்த ரமலான் மாதத்தின் ஒவ்வொரு நாட்களும் எப்படிப் பட்டதாக இருக்கணும்னு நபிகள் நாயகம் சொல்லி இருக்கார் தெரியுமா "குடும்பம், நண்பர்கள், சக குடிகள், ஏழைகளை நோக்கிப் பரிவையும் அன்பையும் புதுப்பிக்கும் நாள்கள் இவை. சேவையும் பெருந்தன்மையும் நம் இதயத்தில் பொறிக்கப்படும் காலமும் இதுதான்.எடுப்பதைவிடக் கொடுப்பதே இந்த உலகின் தலையாய கடமை என்பதைப் புரிந்துகொள்ளும் நாட்கள் . ஈவதின் மகிழ்ச்சியை உதவுவதன் மூலம் மனநிறைவை உணரத் தொடங்கும் நாட்கள் . இது அத்தனையும் நபிகள் நாயகம் சொன்னது " இது இஸ்லாமியனாக இருக்கும் ஒருவன் மட்டும் கடை பிடிக்க வேண்டும் என்பது இல்லை மனிதனா பிறந்த ஒவ்வொருத் தனும் கடை பிடிக்கணும். ரமலான் மாசத்துக்கு மட்டுமல்ல வாழ்நாள் நெறிமுறைகள் இவை எல்லாம் ஆனால் நோன்பு கடமைகளை ஒழுங்காக நிறைவேற்ற நினைக்கும் நீங்கள் அடிப்படையான விஷயமாக அன்பு, ஈகை எல்லாத்தையும் மறந்து நிற்கிறீர்கள் எனக்கு கூட பிறந்தவர்கள் யாருமே கிடையாது ஆனால் அந்த நினைப்பே வராத அளவுக்கு என் அண்ணனாக எப்போதும் எனக்கு உதவுவது அறிவுரை சொல்வது எல்லாமே காதர் பாய் தான். நான் மனிதனாக இல்லாமல் மிருக நிலையில் சுற்றி திரிந்த காலத்தில் நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும் எனக்கு சொல்லி என்ன நல்வழி படுத்தியவர் அவர் அடுத்த பிறவி என்று ஒன்று உண்டு என்றால் அவருக்கு சகோதரனாக அல்லது அவருக்கு ஒரு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று அடிக்கடி பிரார்த்திக்கிறேன். அருமையான மனிதன் அவர் கண்களின் கண்ணீர் என்னை மிகவும் கலங்க வைக்கிறது மாப்பிள்ளை தம்பி ஒரு தட்டு எடுத்து வாங்க என்றவர் வெற்றிலை பாக்கு பழம் இத்துடன் ஒரு ஐநூறு ரூபாய் கட்டை வைத்து பெண்ணுக்கு சித்தப்பா முறை நான் .இந்தாங்க இதை வாங்கிக்கங்க தயவு செய்து நீங்க போய் ரஹ்மத்தை கூட்டி வாங்க என்றவுடன் அப்துல் நெடுஞ்சாண் கிடையாக கேசவன் காலில் விழுந்தான் மாமா என்னை மன்னித்து விடுங்கள். என் மாமன் கூட பிறக்காத போதும் ரத்த பந்தம் இல்லாத போதும் என் மாமன் படும் கஷ்டம் அறிந்து அதை தீர்க்க வந்து நிக்கிற உங்களை நிமிர்ந்து பார்க்க எனக்கு வெட்கமா இருக்கு என்று சொன்ன உடன் அப்துல் அம்மா ஓடி வந்து கேசவன் கை பிடித்து என்னை மன்னிச்சிடுங்க தம்பி கூடப் பிறந்த அண்ணனை அழ வச்சுட்டு நான் பண்ற நோன்பு ஒரு பலனையும் குடுக்காது ன்னு செவிட்டுல அடிச்ச மாதிரி சொல்லி ட்டீங்க .எங்களை மன்னிச்சிடுங்க .பணம் தான் பிரதானம் என்று நினைத்து இருந்த எனக்கு மனுஷங்க எத்தனை முக்கியம்னு புரிய வெச்சுட்டீங்க.நீங்க என்னை மன்னிச்சதுக்கு அடையாளமா இந்த ரூபாய் கட்டை எடுத்துக்கங்க இந்த வெற்றிலை பாக்கு என் கூடப் பிறக்காத ஒரு சகோதரன் எனக்கு குடுத்ததா நினைச்சு எடுத்துக்கரேன் என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க. இதோ உங்க கூடவே நானும் கிளம்பி மருமகளை கூட்டி வரேன் என்று சொன்ன அவர்களுடன் கிளம்பி வந்த கேசவனின் காதுகளில் வழியில் இருந்த மசூதியில் இருந்த ஒலி பெருக்கியில் அல்லாஹூ அக்பர் ஒலிக்க கேசவன் அங்கேயே தன் முழங் கால்களில் நின்று தன் இரு கைகளை விரித்து என் வேண்டுதலை நிறைவேற்றி எனது நண்பனுக்கு ஒரு நல்வழி காட்டினாய் அல்லாஹ் என்று விழுந்து கும்பிட போன அவர் தலையில் வெயிலுக்கு போட்ட வெள்ளை கைக்குட்டை தொப்பியை போல நின்று தொழுகையை முறையாக செய்ய வைத்தது .எல்லாம் அவன் செயல் என்று அவர் வாய் தானாக முணுமுணுத்தது . அதே நேரத்தில் எதிரே இருந்த விநாயகர் கோவில் மணி மசூதியின் அல்லாஹூ அக்பருடன் சேர்ந்து ஒலித்தது. பார்த்து கொண்டு இருந்த அப்துலின் மனதில் கேசவன் உயர்ந்து நின்றார் இவரைப் போல மனிதர்களால்தான் மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்று அவனுக்கு தோன்றியது. சாரதா ஸ்ரீ நிவாசன் 03/04/2023 இந்த கதை எனது சொந்த கற்பனை வேறு எந்த விதத்திலும் வெளியிடப்படவில்லை. படைப்புக்காகவே படைக்கப் பட்டது என்று உறுதியுடன் கூறுகிறேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.