யாழ் எஸ் ராகவன்
சிறுகதை வரிசை எண்
# 208
பட்டாளத்திலிருந்து வாறேன்.
சிறுகதை
ஆயிரம் கனவுகளோடு அந்த ரயில் வண்டியின் சப்தத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டு ராஜேந்திரன் பயணிக்க த்தொடங்கினான். தமிழ்நாட்டை தாண்டியவுடன் அவனுக்கு ஏதோ ஒரு அந்நிய பிரதேசத்தில் பயணிக்கிற உணர்வு ஏற்பட்டது உணவு மக்கள் பேச்சும் பாஷை எல்லாம் புதிதாக இருந்தது. மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்ற பலமொழி பேசும் மக்கள் அந்த ரயிலில் பயணம் செய்த பொழுது வேற்று கிரகத்தில் இறங்கிவிட்டோமோ என்ற பதட்டமும் கூடியது சொந்தக் கிராமத்தை தாண்டாமல் எப்பொழுதாவது தேனிக்கும் மதுரைக்கும் சென்று வந்தால் அபூர்வம் சென்னையையே பார்த்திராத ஒருவன் காஷ்மீர் வரை செல்வதென்றால்
நினைத்துப் பார்க்கவே கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது அவனுக்கு. இருந்தாலும் ஒரு தைரியம் அம்மா கொடுத்த தெம்பு அத்தனையும் தாண்டி தம்பி தங்கைகளை முன்னேற்ற வேண்டும் என்று லட்சிய வேட்கை அதுதான் அவனைப் பெட்டி படுக்கை கொண்டு கோடாங்கி பட்டியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் துணிவையே தந்தது.
ராஜேந்திரன் கோடங்கிபட்டி அரசு பள்ளியில் நல்லா படிக்க க் கூடியவன் பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண் எடுத்து பள்ளிகளில் முதலாவதாக வந்தவன் ஆனா அப்பவே அவங்க அம்மா எப்படியாவது இவனை ராணுவத்துல சேக்கணும் அடுத்த ரெண்டு பிள்ளை இருக்கு அதை ப்படிக்க வைக்கணும் எப்படியாவது ஓட வைங்க அதுக்கு தயார் பண்ணுங்க என்று கேட்டதினால் அவன் மனசில் மேற்கொண்டு படித்து டிகிரி வாங்கிய ஆபிஸர் ஆகணும் நினைத்தாலும் கூட குடும்பத்திற்காக பட்டாளத்தை நோக்கி அவன் செல்லத் தயாராகும் விதை பத்தாம் வகுப்பிலேயே விழுந்தது.
படிப்பில் சுமாரான மாணவர்கள் நல்ல உடல் தகுதி உள்ள மாணவர்களை எப்படியாவது ராணுவத்திற்கு அனுப்புவதில் அந்த பிஈடி வாத்தியார் மிகவும் ஆர்வத்தோடு இருந்தார். அதற்கான ஏஜெண்டுகளை ப்பிடிப்பது உடல் தகுதியை வளர்த்துக் கொள்வது ஹைட் வெயிட் கயிறு ஏறுவது என்று முழுத் தகுதியை உருவாக்குவதில் அவர் பங்கு கணிசமாக இருந்தது அதில் ராஜேந்திரன் மிகத் தெளிவாக துல்லியமாக எல்லா பயிற்சிகளையும் சிறப்பாக செய்து முடித்து ராணுவத்திற்கு தயாராக இருந்தான் ஆனாலும் படிப்பில் ஆர்வம் அரசு அதிகாரி ஆக வேண்டும்.
அந்த க்கனவு கனவாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டு அவன் தன் குடும்பத்திற்காக பட்டாளத்தை நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமான நிலையை நினைத்துப் பார்த்தான்.காஷ்மீரத்தில் வந்து வண்டி இறங்கியதும் எங்கே செல்வது எப்படி கேட்பது யாரை கேட்பது யாரும் நம்மை அழைத்துச் செல்வார்களா என்று பல விதமான கேள்விகளுக்கு மத்தியில் அங்கே மிலிட்டரி கேம்ப் அலுவலர்கள் இருந்தார்கள் இவன்போலவே பிற மாநிலங்களில் இருந்தவர்கள் பிற மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் மொத்தமாக அந்த இடத்தில் கூடினார்கள் இவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
எல்லோரும் ஒரு வண்டியில் ஏற்றப்பட்டு கடும் குளிரில் அந்த முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .திருநெல்வேலியைச் சார்ந்த ராமசாமி அண்ணாச்சி இவனிடம் பாசத்தோடு பேசினார். இவனைப் பற்றியும் இவன் குடும்பத்தை பற்றி விசாரித்தார் முதலில் எல்லோருக்கும் முடி வெட்டும் வைபவம் நடந்தது .
ஊரிலே நன்கு முடிவட்டி வந்திருந்தான் அதுவே ரொம்ப கம்மி என்று நினைத்தான். ஆனால் அதற்கு அப்புறம் தலையில் ஒரு சட்டியை கவுத்தி கடுமையாக முடி வெட்டினர் முடிவெட்டி முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பார்த்து பார்த்து அழுகவும் சிரிக்கவும் கேலி செய்யவும் யாருக்கு அசிங்கமா இருக்கு என்று எல்லோரும் தங்களுக்கு தங்களை பேசிக்கொண்டும் ஆறுதல் சொல்லிக் கொண்டும் இருந்தனர்.
அங்கே போய் அவர்கள் கொடுத்த இராணுவ உடையை முதன்முதலாக அணிந்த போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஒவ்வொரு வாரமும் கடிதம் வீட்டுக்கு எழுதுவான் அங்கு தரப்பட்ட உணவின் சுவை வேலை ஒண்ணும் கடினம் இல்லை என்று அம்மாவிற்கு எழுதினாலும் அதிகாலையில் நாலு மணிக்குஎந்திரிப்பது சிரமமாக இருந்தது எழுவது மற்றும் பயிற்சி காலம் மிகவும் கடுமையான காலகட்டம் அதிகாலை நடுங்கும் குளிரில் எழுந்து கிளம்பி ஓடுவது துப்பாக்கி சுமப்பது பல்வேறு பணிகளை மாறி மாறி செய்வது கடமையாக இருந்தது இருந்த போதும் இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டு தம்பி தங்கைகள் பற்றி கடிதத்தில் விசாரித்துக் கொண்டு நாட்களி கடத்தினான்ராஜேந்திரன்.
அம்மாவின் கடிதம் அப்பொழுது ஆறுதலை தந்தது தம்பி நன்றாக படிக்கிறான் தங்கை நன்றாக படிக்கிறான் அப்பா ஒழுங்காக வேலைக்கு செல்கிறார் இப் போதெல்லாம் அவர் குடிப்பதில்லை. வயல் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஆறுதலாக அவர் எழுதும் வார்த்தைகளை நம்பித்தான் ஒவ்வொரு நாளையும் கடத்தினான் ராஜேந்திரன். போனப் புதிதில் குளிர் ஒத்துக் கொள்ளாமல் கடுமையான காய்ச்சல் வந்தது .
காய்ச்சலுக்கு மருந்து ஊசி போன்றவை அந்த ராணுவ மருத்துவமனையில்தந்தார்கள் சிறப்பாக க்கவனித்தார்கள் நான்கு நாட்கள் சுயநினைவின்றி புலம்பிக்கொண்டே இருந்தான் அவன் எங்கு இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பது அவனுக்கு சுத்தமாக நினைவே இல்லை அப்பொழுது அவன் அருகில் பார்த்த ரேகா அவனைப் பார்த்து பயப்படாதீங்க
உங்களுக்கு வந்தது வைரஸ் காய்ச்சல் தான் ஒரு வாரத்துல சரியாயிடும் கடவுள் காப்பாற்றுவார் என்று ஆறுதலான அவள் சொன்ன வார்த்தைகள் இதமாக இருந்தது போல இருந்தது நீங்க யார் என்று கேட்ட பொழுது அவள் மலரை விட மென்மையான குரலில் தன் பெயரை ச்சொன்னாள் ஊரைச்சொன்னாள்ஓசூரை சேர்ந்த நர்ஸ்.ரேகா
அவனுடன் பிரியமாகப் பேசினாள் .அவளுடைய அரவணைப்பு ஒரு முறை அம்மைகண்ட பொழுது 14 நாட்கள் முதல் தண்ணீ இரண்டாம் தண்ணீஊற்றுகிறவரை அம்மா விரதம் இருந்து வேப்பிலை எடுத்து உடம்பெல்லாம் வைத்துவிட்டு அவள் பார்த்த பக்குவத்தை எல்லாம் அந்த அனுசரணை எல்லாம் ரேகாவிடம் கண்டான் ராஜேந்திரன்.
எப்பொழுதும் கையில் பைபிளை வைத்துக் கொண்டு உனக்காக கர்த்தரிடம் வேண்டுகிறேன் விரைவில் குணமாயிடும் என்று அவள் சொன்ன வார்த்தையை அவனுக்கு மிகவும் ஆறுதலா இருந்தது அப்பொழுது முதல் அவன் அய்யனார் சாமியுடன் சேர்த்து கர்த்தரையும் வணங்கிக் கொண்டான். முழுவதுமாக குணமாகி மீண்டும் அவன் பணிக்கு ச்சேர்ந்த பின்பு அவ்வப்போது நர்ஸ்ரேகாவை சந்திப்பது உண்டு. அவர்களுக்குள் இருப்பது காதலா நட்பா தோழமையா இனம்
புரியாத ஒரு உறவு அது. பிரியத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாத ஒரு உறவு ரேகா ராஜேந்திரனுக்காக அவளே கஷ்டப்பட்டு ஒரு ஸ்வெட்டர் பிண்ணி கொடுத்தாள்.அது அவனுக்கு மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது எப்பொழுதெல்லாம் அவள் ஞாபகம் வருகின்ற போதெல்லாம் அந்த ஸ்வட்டரை எடுத்து அவன் போட்டுக் கொள்வான்.
முதல் முதலாக ஏ கே 47 ரக துப்பாக்கியை கையில் கொடுத்தபோது இந்த துப்பாக்கியை திரைப்படத்தில் தான் பார்த்திருக்கிறேன் இதை நான் பயன்படுத்த போகிறேன் என்று அவனுக்கு அந்த இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. துப்பாக்கி எவ்வளவு தூரம் பாயும் எத்தனை குண்டுகள் இயக்கலாம் எத்தனை பேர் இறந்து போவார்கள் என்றெல்லாம் தனது சீனியரிடம் கேள்விகளாக கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தான்.
பணி முடிந்த ஓய்வு நேரத்தில் சாலை ஓரத்தில் நடந்து செல்லும் போது ரேகாவும் பணி முடித்து வந்தாள். இருவரும் நடந்து சென்றார்கள். பனிபடர்ந்த அந்த பகுதியில் பிடித்தவர்கள் உடன்சேர்ந்து நடப்பது என்பது சொர்க்கத்தில்
மதிப்பது போல இருக்கும். அந்த உணர்வு இருவருக்குமே புதிது முழுக்க முழுக்க பெண்கள் படிக்கும் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்து
தன் குடும்பத்திற்காக இவ்வளவு தூரம் ராணுவத்தில் வந்து நர்சாக பணியாற்றும் ரேகாவும் சரி. விவசாய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து கடுமையான வேலை செய்து உழைத்து முன்னேறிய ராஜேந்திரனும் பக்குவம் நிறைந்தவனாக இருந்தான். துப்பாக்கி பிடித்தது இறங்கி பார்த்தது துப்பாக்கி குண்டுகளை எல்லாம் கையில் தொட்டது ஆகிய சந்தோஷங்களை எல்லாம் ரேகாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
அவன் ஆசையாய் அவன் முதன்முதலாக பார்த்த விஷயங்களை எல்லாம் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்த பொழுது போர் பற்றியும் ஆயுதங்கள் பற்றியும் வேதனையும் வெறுப்பு எனக்கு மிஞ்சுகிறது எத்தனை உயிர்களை கொள்ளுகிறது .
உயிர் போனது ஒரு பக்கம் வேதனை என்றாலும் கையிழந்து கால்இழந்து கண்ணிழந்து உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் எத்தனையோ குடும்பங்கள் இந்தத் துப்பாக்கி இரவைகளுக்கு பலியாக இருக்கின்றன.
உலகம் முழுவதும் துப்பாக்கியும் வெடிச்சத்தம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் இந்த காஷ்மீரும் நினைவு தெரிந்த நாளிலிருந்து வெடித்துக் கொண்டே இருக்கிறது.
மக்கள் அழுது கொண்டே இருக்கிறார்கள் எத்தனையோ பேர் இறந்து கொண்டே போகிறார்கள் ரத்தமும் பிணமும் அத்தனையும் உருவாக்கியது இந்த ஆயுதங்கள் தானே எல்லாவற்றையும் தூக்கி கடலில் போட்டுவிட்டு அமைதி அவ்வளவு உலகமாக இருக்காதா எனஅவள் பேசப் பேச அவனுக்கு என்னவோ போல இருந்தது அவன் பெரிதாக மதித்த விஷயம். அவளுக்கு வேதனைக்கு உள்ளாகிறது என்று யோசித்தான்.அவள் சொல்வதில் நியாயம் இல்லாமல் இல்லை இந்த க்கருவியை பார்க்கின்ற பொழுது இந்த துப்பாக்கியை பார்க்கின்ற பொழுது இந்த துப்பாக்கி குண்டு களினால் உயிரை இழந்த இழந்த மனிதர்களை உடல் உறுப்புகளை இழந்தவர்களை எல்லாம் வைத்தியம் பார்த்தவள் அவள் சொல்வது நியாயம் தான் என்று அவன் யோசித்தான்.அப்பொழுது முதல் அவன் பார்த்த வேலை அவனுக்கு
பெரிதாக தெரியவில்லை ஊருக்கு சென்று விவசாயத்தை தொடரலாம் இல்ல வேற ஏதாவது வேலைக்கு செல்லலாம் என்று கூட நினைத்தான்.ராமசாமி அண்ணாச்சி இடம் நர்ஸ் ரேகா சொன்ன விஷயங்களை எல்லாம் பகிர்ந்து இதெல்லாம் சரிதானே சொன்னதும் அவர் சிரித்து விட்டார் "ஆமாப்பா எல்லாரும் பஜனைமடத்துல சேர்ந்து ஆளுக்கு ஒரு பாட்டு பாடுவோம்"விவரம் புரியாம பேசாதப்பா ஆயுதம் இல்லனா இங்க வாழ முடியுமா சமூக விரோதிகளும் வெளிநாட்டுக்காரங்களும் நம் நாட்டை எப்படி எல்லாம் கபளீகரம் செய்ய நினைக்கிறாங்க.
நீ இங்க இப்போ பயிற்சில தானே இருக்க பயிற்சி முடிஞ்சு உனக்கு ரோந்து பணிக்கு சண்டைக்கு எல்லாம் கூட்டிட்டு போவாங்க அப்ப யாராவது துப்பாக்கி கூட உன் முன்னாடி நிக்கும்போது நீ வந்து நியாயம் தர்மம் அகிம்சை அன்பு பரிவுன்னு பேசுஉன்னை போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க இன்னும் கொஞ்ச நாள்ல பயிற்சி முடிஞ்சிடும் அதுக்கப்புறம் வேற ஒரு இடத்துல உன்னை போடுவாங்க அப்ப கொஞ்சம் கவனமா இரு ராஜா ராமசாமி அண்ணாச்சி பேசியது சரிதான் என்றும் யோசித்தான்.
ரேகாவின் சினேகம் கிடைத்த காலங்கள் வேகமாக நகர்ந்தன .முதல் சம்பளம் வந்ததும் அம்மாவிற்கு புடவை தம்பிக்கு பேண்ட் சட்டை அப்பனுக்கு வேட்டி சட்டை மறக்காமல் தங்கைக்குச் சுடிதார் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமான நாளை எண்ணிக்கொண்டே இருந்தான் எப்படி அவளிடம் சொல்வது அவளுக்கு பரிசு வாங்கி கொடுக்க வேண்டும் என்றது ஒரு மனசு பரிசு வாங்கி கொடுத்தால் ஏதாவது நினைத்துக் கொள்வாளா அவள் ஸ்வட்டர் கொடுத்ததற்கு நாம் பதிலுக்கு கொடுக்கிறோம் என நினைப்பாளா! என்ன நினைத்தாலும் பரவாயில்லை.
அவள் எப்போதும் சுடிதாரில்இருக்கிறாள் ஒரு நல்ல புடவை கட்டினால் நன்றாக இருக்கும் அதை எப்படி சொல்வது சொல்லாமல் ஊரில் இருந்து விடுமுறை முடிந்து வரும்போது தமிழ்நாட்டில் இருந்து நல்ல சேலை வாங்கி வரலாம் என்று நினைத்து இருந்தான்.
விடுமுறையில் ஊருக்கு செல்லும் நாள் வந்தது எல்லோருக்கும் ரயில் டிக்கெட் வந்து சேர்ந்தது பெட்டி படுக்கை எல்லாம் சுற்றிக்கொண்டு கிளம்புவதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் ராஜேந்திரன் ஆயத்தமானான்.எப்படியாவது ஊருக்கு செல்லும் தகவலை ரேகாவிடம் சென்று சொல்லிவிட வேண்டும் என்று தவியாய் தவித்தான் ஆனால் அதற்குள் அவனுக்கு வேறு ஒரு இடத்தில் வேலை தரப்பட்டது முதன்மையான ஹவுல்தாருக்கு பல்வேறு சொந்த வேலையை செய்ய அவனையும சேர்த்து அனுப்பி விட்டார்கள்அவள் தோழி ஒருத்தி இருக்கிறாள்.
எப்படியோ அவளை கண்டுபிடித்தான். அவளோ ஆந்திரா காரி புரியாத மொழியில் தான் ஊருக்கு செல்வதைஎப்படியாவது அவரிடத்தில் சொல்ல வேண்டும் என்று சொன்னாலன் அவள் சிரித்துக் கொண்டு புரிந்த மாதிரி தலையாட்டினாள்.
எப்போது ஊருக்கு செல்வோம் என்று ஆசையோடு இருந்தவனக்கு ரேகாவிடம் சொல்ல முடியவில்லையே என்ற மயக்கமும் கவலையும் அவளை அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்ற வருத்தமும் ஊருக்கு செல்வதை விருப்பம் இன்மையாக்கியது. அவனுக்கு பெரிய மகிழ்ச்சி தரவில்லை
ஒரு வழியாக ஊருக்கு வந்து எல்லா சொந்த பந்தங்களையும் பார்த்து அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தம்பி தங்கை அப்பா அம்மா எல்லோரும் பேச முடியாமல் நீண்ட நேரம் இருந்தனர் பின்னர் கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வாரம் ஆன பின்பு எல்லா உறவினர்களின் நலம் விசாரித்து அந்த ஊர்மனிதனாக மீண்டும் மாறினான் ராஜேந்திரன் நல்ல நாளில் கறி எடுத்து சாப்பிட்டு வெத்தலை போட்டுக் கொண்டு "அம்மாநம்ம ஊர்ல இருந்துவிடவா " . எனக்கு மறுபடியும் பட்டாளத்திற்கு போக பிடிக்கல அப்பா ராஜேந்திரா இந்த ஊர்ல இருந்து என்னப்பா செய்ய போற அம்மா ஒப்பாரி வைக்காத குறையாக பேசி முடித்தாள்.
விடுமுறை நாட்களில் சும்மா இருக்காமல் கூடமாட கடலை காட்டுக்குச் சென்று கடலைப் பொருக்குவதற்கு வேலை செய்ய வரவா என்ற அம்மாவிடம் கேட்டான் . ஏய் பட்டாளத்து பெரிய மனுஷா உனக்கு எதுக்கு அங்க எல்லாம் வேலை போதுமையா நீ வேலை செஞ்சது போய் நாட்டை காப்பாத்துற வேலை பாரு என்றாள்.
ராஜேந்திரனுக்கு தபால் வந்திருக்கிறது என தபால்காரர்பொழுது நமக்கு யார்ரா என்று யோசித்து அதை வாங்கிப் பார்த்தான்.
ரேகா என்று எழுதி இருந்தது. எல்லோரிடமும் எனது கூட்டு காரங்கஅங்கிருந்து கடிதம் போட்டு இருக்காங்க என்னை ப்பார்க்கணும் போல இருக்காம் என்று சொல்லி ஒரு வழியாக சமாளித்துவிட்டு உள்ள அறைக்கு சென்று கட்டில் படுத்துக் கொண்ட அந்த கடிதத்தை வாஞ்சையுடன் எடுத்து படித்தான்.
வேறு ஒரு கேம்புக்கு மாத்தியவுடன் அவனை சந்திக்க முடியாமல் போன வருத்தத்தை பதிவு செய்து இருந்தால் மேலும் அவருடைய தோழி ஆந்திரக்காரி தன்னிடம் தாமதமாகத்தான் வந்து சேர்த்தது பற்றிய விவரமும் எழுதியிருந்தது. இந்த இடம் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியாத இடம் இங்கு எந்த ஆபத்துகளும் நிகழலாம் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை என்று சொன்ன பொழுது கண்கள் குளமானது மனதில் ஒரு தவிப்பு ஏற்பட்டது. தான் இருக்கும் இடம் அந்த முகாமில் முகவரி அத்தனையும் அவள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தாள்.
சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது நிறைய பேச வேண்டும் போல் இருக்கிறது சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை என்று கண்ணீர் துளிகள் சுட்டி அந்த கடிதம் முடிந்து இருந்தது.விடுமுறை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று நினைத்திருந்தவன் .இந்த கடிதம் இந்த பின்பு உடனடியாக ஊருக்கு செல்லும் மனநிலைக்கு ஆயத்தமாய் கொண்டிருந்தான் அப்பொழுது அவனுக்கு அழைப்பு வந்தது இப்பொழுது வேறு ஒரு இடத்திற்கு அதுவும் ரேகா குறிப்பிட்டு இடத்திற்கு அருகில் தான்அவனுக்கு வேலை என்று சொல்லி இருந்தார்கள்.புது இடத்திற்கு சென்றவுடன் வேலை அதிகமாக இருந்தது.
நாள்தோறும் ரைப்பில் எடுத்துக்கொண்டு உஜ்வாலா மாவட்டம் பல கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் அங்கே தீவிரவாதிகளில் அச்சுறுத்தல் இருக்கிறது அங்கே பலவிதமான துன்பமான சூழல் இருக்கிறது என்று எல்லோரும் சொல்லி அவனை மேலும் குழப்பி விட்டார்கள் பயத்தோடு ராஜேந்திரன் எடுத்துக் கொண்டு நாள் தோறும்
பாதுகாப்பிற்குச் சென்று வருவது வாடிக்கை ஆனால் மனதிற்குள் ரேகா எங்க இருக்கிறார் அவரை தேட வேண்டும் என்று எண்ணம் மட்டும்தான் அதிகமாக உந்திக் கொண்டிருந்தது.தீவிரவாதிகளை தேடுகிறோம் என்று பெயரில் அப்பாவி மக்களை சுடுகின்ற சூழல் அங்கே சர்வ சாதாரணமாக இருந்தது அவன் மனதிற்கு இவை எல்லாம் ஒத்துப் போகவில்லை இருந்தாலும் கம்பெனி சொல்லுகிற வேலையை செய்வது தானே கடமை பழைய கேம்பில் இருந்தது போல அவனுக்கு ஆறுதல் சொல்லவும் அவனுக்கு உதவி செய்யவும் யாரும் இல்லைஇவன் கூட பாண்டிச்சேரியை சேர்ந்த தினேஷ் பிரபு.
உடன் பணியாற்றுபவன் அவனை இவனும் மாறி மாறி தான் ரோந்து பணிக்கு செல்வார்கள்அவன் பேச்சு இவனுக்கு சுத்தமாக பிடிக்காது எப்பயும் பெண்கள் உடல் வர்னிப்பு உறவு கொள்வதை பற்றியும் அங்கே பல பெண்களை பலாத்காரம் செய்தது பற்றியேபெருமையாக பேசிக்கொண்டே
இருப்பான் .மலரினும் மெல்லியது காமம் என திருக்குறள் சொல்வதை ஞாபகம் . வைத்திருக்கும் ராஜேந்திரன் காமம் என்பது யாரையும் வழிந்து வன்புணர்வு செய்யக்கூடாது என குழந்தை வயது முதலே அவன் மனதில் பதிந்து இருக்கிறது. தினேஷ் பாபு பேச்சும் செயலும் அவனுக்கு அருவருப்பு தந்தது இருந்தாலும் உடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது இவன் மனம் முழுவதும் ரேகா இருக்கும் இடத்தை எவ்வாறு தேடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இங்கு முகாமில் மருத்துவ பணியாளர்களின் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்தது நிறைய பேர் இறந்துவிட்டனர் சிலர் காணாமல் சென்று போய்விட்டனர் என்று அங்கே விசாரித்த போது அவனுக்கு கிடைத்த அதிர்ச்சி ரேகாவைப் பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை. இரவு நேரங்களில் படுத்திருக்கும் போது அந்த சேலையும் கண்ணாடிவளையல்களையும்பார்த்துக் கொண்டே இருப்பான்அங்கிருந்த துப்பாக்கி சூட்டில் ரேகாவு இறந்திருக்க கூடும் என்று சிலர் சொன்னார்கள்.
ஒரு மிலிட்டரி ஆபிசர் உடைய ரிட்டயர்மென்ட் பங்க்ஷனில் எடுத்த அவளுடைய புகைப்படத்தையாருக்கும் தெரியாமல்இவன் பத்திரமாக வைத்திருந்தான் .ஒரு நாள் ரோந்து போகும் இடத்தில் தினேஷ் பாபு இவனும் ஒரு டென்ட் கொட்டகை பூட்டி இருந்த பகுதிக்குள் துப்பாக்கி வைத்து துலாவினர் அங்கே ஒரு அழகான பெண்மணி தலையில் முக்காடு போட்டு அமர்ந்திருந்தாள். கையில காசு இல்ல பிள்ளைக்கு பால் கொடுத்து நான்கு நாட்கள் ஆகிறது வேணும்னா கூட படுத்துக்கோ அந்த பெண்மணி ஹிந்தியில் சொன்னாள்.
"என்ன கோடங்கிபட்டி ராஜேந்திரன் நல்லாவேலைய முடிச்சுட்டு 50ரூபாய் தூக்கிப்போட்டு வந்துரு இதெல்லாம் யாரு கண்டுக்க மாட்டாங்க இதெல்லாம் பொன்னான வாய்ப்பு எப்படிப்பட்ட டிக்கெட் 10000 கொடுத்தா கூட வெளிய கிடைக்காது" என்று ஏளனமாக அவன் பேசிய பொழுது நெஞ்சு எரிந்துவந்தது . ரெண்டு ரூபா காசுக்கு எங்க அம்மா கூட பட்டப் படைக்கிற வெயில்ல கடலை
பொறக்கப் போனவன் நான். பள்ளிக்கூடம் பாதி நாள் போகாமல் வேலைக்கு போய் சம்பாதித்து அதில் நாங்க நாலு பேர் கஞ்சி குடிச்சிருக்கோம் ஊருக்குள்ள தலை நிமிர்ந்து வாழ்ந்த குடும்பம் எங்களது ஒரு பொள்ளாப்பு எங்க மேல யாரும் சொன்னதில்லை எந்தப் பிள்ளையும் ஏறெடுத்து பார்த்ததில்லை அப்படிப்பட்ட ஏனைய போய் இப்படி நீ செய்த ஈனத்தனமான வேலையை என்னை செய்ய சொல்றியே என்று கோபமாகத்தான் பேசி விட்டான் ராஜேந்திரன்.
அப்பா நீதிமான்அப்படி ஓரமா நில்லு என்னை பாதுகாத்துக்க நான் போயிட்டு வரேன் அங்கு ஒரு அருமையான புள்ள வெயிட்டிங் நமக்கு வந்தமா நூறு ரூபாய் தூக்கிப்போட்டமா வேலையை முடிச்சமான்னு இருக்கணும் நீதி நேர்மை நான் அதெல்லாம் நமக்கு தேவையில்லை அவகேட்கிறா நான் கொடுக்கிறேன் நான் கேட்கிறேன் அவ கொடுக்கிறேன்.அவளுக்கு தேவை பணம் நமக்கு தேவை சுகம் இல்ல இதுல என்ன தப்பு இருக்கு நிறுத்துடா உன் வியாக்கியானத்தை நாய்க்கும் பன்னிக்கும் கழுதைக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் இருக்கு.அவன் கோபமாக அந்த பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான் அங்கே ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது அந்தப் பெண் இவனை பார்த்து வா வா என்று கையை அசைத்து கொண்டிருந்தது காசு கொடு என்று கேட்டுக் கொண்டிருந்தது.
குழந்தையை பார்த்து கண் கலங்கி தன் கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்தான். அவள் உடனே சேலையை விளக்கத் தொடங்கினாள்.. சீச்சீ எனக்கு இதெல்லாம் வேணாம் இந்த புள்ள அழுகுதேன்னு தான் மனசு வருத்தப்பட்டு காசு கொடுத்தேன்அதை நீயே வச்சுக்கோ என்றவன் செய்கையிலே சொன்னான்.அந்தப் பெண் அவனை கையெடுத்து கும்பிட்டு குழந்தைக்கு தூக்கி க்கொண்டு செல்ல தொடங்கினாள்.
திடீரென்று யோசனை வந்தவன் போல தனது பையில் இருந்து ரேகாவின் புகைப்படத்தை எடுத்து அந்த பெண்ணிடம் காட்டி இந்தப் பெண்ணை எங்கேயாச்சும் பாத்திருக்கியா என்று செய்கையில் கேட்டான் உற்று பார்த்து ஒரு நிமிடம் யோசித்து அந்த குழந்தைக்கு பணம் கொடுத்தானே என முதலில் தயங்கி பின் பல பெண்களை மொத்தமாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் அந்த இடத்துக்கு நான் அழைத்து போறேன் இரண்டு நாட்கள் கழித்து வா என சொன்னாள்.இரண்டு நாட்கள் அவனுக்கு எப்படி போனது என்றே தெரியவில்லை.
மரண அவஸ்தையில் இருந்தான் ராஜேந்திரன். அந்தப் பெண் சொன்ன இடத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து சென்றான் போகும்பொழுது கவனமாக சேலை வளையல் எல்லாத்தையும் எடுத்துச் சென்றான். பிச்சுபோட்ட பழைய தலகாணி மாதிரி ரேகாவை அழைத்துக் கொண்டு அந்தப் பெண்மணி அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள் வேற எதுவும் பேசாதீங்க உடனே இவங்கள எங்க இருந்து கூட்டிட்டு போங்க அந்த பெண் அவனை அவசரப்படுத்தினாள். ஒரு அழுகை இன்னொரு பக்கம் பூரிப்பு
ரேகாவும் ராஜேந்திரன் அந்த இடத்தை விட்டு வெகு தூரம் தள்ளி சென்று விட்டார்கள் வா போகலாம் ரேகா கட்டி தழுவிக் கொண்டாள் . செத்துருவேன்னு நினைச்சேன் எப்படி டா என்னை வந்து கண்டுபிடித்த என்று அவள் கேட்ட பொழுது பதில் ஏதும் கூறாமல் தான் வாங்கி வைத்த புடவையை எடுத்து கொடுத்தான்.
எத்தனை நாள் உன்னை பார்க்க முடியாமல் தவித்தேன் தெரியுமா
எப்படியாவது உனக்கு கொடுக்க வேண்டும் என்று எங்க ஊர் வந்து வாங்கி வந்த புடவை உடனே கட்டி வா என்று சொல்லி காத்திருந்தான்.இந்த வாரம் அவளுக்கு மருத்துவ பரிசோதனை எல்லாம் முடிந்து உடம்பு பூரண குணமடைந்து ஓய்வு இருந்தாள்ராஜேந்திரன் அடுத்த முறை ஊருக்கு வருகிறேன் என்று அம்மாவிற்கு கடிதம் எழுதினான் அம்மா பட்டாளத்தில் இருந்து வரேன் வரும்போது நான் மட்டுமல்ல உனக்கு மருமகளையும் கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று கடிதம் எழுதி முடித்தான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்