சிதில்
சிறுகதை வரிசை எண்
# 203
தலைப்பு: வரலாற்றுச் சுரங்கம்.
ஊராட்சி மன்றத்தின் மூலமாக தண்ணி குழாய் பதித்து வீட்டுக்கு வீடு தண்ணீர் கொடுப்பதற்காக இரும்பு குழாய்கள்ஒவ்வொரு தெருவிற்கும் இறக்கி வைக்கப்பட்டிருந்தனஒவ்வொரு தெருவிலும் கோவிலில் கும்பிடு சேவை செய்வது போல இரும்பு குழாய்கள் நீள நீளமாக ஒன்றைத் தொட்டு ஒன்று பரப்பி கிடந்ததை சுப்புத்தாய் பாட்டி கண்களுக்கு மேலே இடது கையை நெற்றியில் வைத்து கண்ணுக்கு வெயில் படாமல் உற்றுப் பார்த்தாள்.இன்னும் என்ன மாற்றத்தை தான் பார்க்க போறோமோ என்ற எண்ணத்தில்மனம் தளராமல் மகன் வீட்டு நோக்கி நகர்ந்தாள் வலது கையில் கம்புடன் சுப்பு தாய் பாட்டி..
ஆண்டிபட்டியில நாலு கிணறு வத்தாத தண்ணி .ஒன்னு கீழ தெருவுல ஊருக்கு கிழக்க மாரி மூலையில் இருக்கிற நல்லதண்ணிகிணறு வடக்கத்தி அம்மன் கோயில் பக்கத்துல இருக்கு.சதுரமாகவும் இல்லாம செவ்வகமாகவும் இல்லாம சதுரத்த விட கொஞ்சம் பெருசா செவ்வகமானகிணறு வயித்த முட்டிக்கிட்டு இறக்கிற மாதிரி சுற்றுச்சுவர் இருக்கும்.சுத்திவர தண்ணி பாத்திரம் கழுவுற மாதிரி திண்டுஇருக்கும்.கிணத்துக்குள்ள நீண்ட வாக்குல ரெண்டு கல்லு இருக்கும் அதுல இறங்கி நிற்கலாம் தண்ணி அவ்வளவு சுவையாக இருக்கும்.சுப்பம்மாள் பாட்டிக்கு கிழக்குத் தெரு என்பதால் இள வயதில் அந்த கிணத்துல தண்ணி எடுத்த பழக்கம் நிறையவே உண்டு.இந்தக் கிணறு இப்போ கண்டும் காணாம இருக்குது ஆனா உயிர்ப்புடன்.
இரண்டாவது கிணறு ஊருக்கு மத்தியில கொஞ்சம் தெக்க தள்ளி வீரத்தாத்தா வீட்டு பக்கத்துல இருக்கிற வட்டக் கிணறு நல்ல ஆழம் இதுல தண்ணி சுமார்தான் ஆனா ஆடு மாடு ஜனங்கள் நல்லது கெட்டது எல்லாத்துக்குமே இந்த கிணறு தான் தண்ணி சப்ளை.ஊர் மக்களுக்கு நல்ல சேவை பண்ணுச்சு இந்த கிணறும் கண்டும் காணாம இருக்கு உயிர்ப்புடன்.
மூணாவது கிணறு ஊருக்கு தெக்க வயக்காட்டோரம் இருக்குதுகாளியம்மன் கோவில் ஓடைக்கு வடக்கேரோட்டுக்கு கொஞ்சம் மேக்க நல்லா சதுரகிணறு.இந்த கிணத்துக்கு நல்ல தண்ணி கிணறுன்னே பெயர் அவ்வளவு சுவையாக இருக்கும் வீட்டு தேவைக்கு எல்லாம் வீரதாத்தா வீட்டு பக்கத்தில் இருக்கிற வட்ட கணக்குல தண்ணி எடுத்துட்டு கடைசியாக குடிக்க மட்டும் தவளைப்பாணியை எடுத்துக்கிட்டு இந்த கிணத்துக்கு தான் ஊர் ஜனங்கள் வருவாங்க வாளிய கொண்டு தான் இறைச்சி தண்ணி எடுக்கணும்.
இந்த கிணறும் கண்டும் காணாம இருக்குது உயிர்ப்புடன்.
நாலாவது கிணறு ஊருக்கு வடக்கே ஒரு பார்லாங் தள்ளி செவக்காட்டுக்குள்ளே இருக்கு வட்ட கிணறு.அதாவது சடச்சியம்மன் கோவில் ஊரணிய தாண்டி வடக்கம சென்றால் ஒரு ஓடையை தாண்டி கொஞ்சம் தள்ளி ரோட்டுக்கு மேக்க இருக்குது இந்த வட்ட கிணறு.ஆரம்ப காலத்தில் இருந்து இந்த கிணறு தான் ஊருக்கு தண்ணி சப்ளை அத்தனை பேரும் பாத்திரங்களிலும், பானைகளிலும் தண்ணி சுமந்து செல்வார்கள்.ஊரிலிருந்து ஏலாந்தூருக்கு போகும் வழியில் தான் உள்ளது இந்த கிணறு.தினமும் போய்க் கொண்டும் வந்து கொண்டும் தான் இருக்கிறார்கள் ஆனால் யாரும் இந்த கிணற்றை கண்டு கொள்வதே இல்லை.இந்த கிணறும் யாரும் கண்டும் காணாதது மாதிரி இருக்கிறது உயிர்ப்புடன்
சுப்பம்மாள் பாட்டியும் அப்படித்தான் யாரும் கண்டும் காணாத மாதிரி தான் இருக்கிறாள் உயர்ப்புடன்.
இவ்வளவு விஷயமும் சுப்பம்மாள் பாட்டி சொல்லித்தான் தெரியும் பாண்டிக்கு.
சுப்பம்மாள் பாட்டி தனி ரேஷன் கார்டு தனி குடித்தனம் என்று தனியாக சோறு பொங்கி இன்றைக்கும் காட்டு விலைக்கு சென்ற வண்ணம் உள்ளாள்.100 நாள் வேலை சம்பளம் பொங்கல் ருவா என எல்லாத்தையும் பத்திரப்படுத்தி பேரம் பேத்திகளுக்கு பொங்கலுக்கு சட்ட துணிவு எடுக்க காசு கொடுப்பாள் அப்படிப்பட்ட தைரியசாலி ஆண்டிபட்டியில் கம்பீரமாக வலம் வருவாள் கையில் கம்புடன் தரையில் ஊண்டிக் கொண்டு..
பாண்டி எப்பொழுதுமே ஊருக்கு வந்தால் சுப்புத்தாய் பாட்டியிடம் பேச்சு கொடுக்காமல் இருக்கவே மாட்டான்.பாட்டியும் பாண்டியிடம் ஊரில் நடக்கும் விஷயங்களை ஒன்று விடாமல் சொல்லுவாள்.பாண்டி படித்து முடித்து ஊரை விட்டு சென்று பத்து வருடங்கள் ஆயும் ஊரின் மீது உள்ள மதிப்பும் பற்றும் அவனை விட்டு அகலவே இல்லை.இவன் பாட்டியை ஒரு பொக்கிஷமாகவும் ஒரு வரலாற்று சுரங்கமாகவும் நினைத்து பாட்டியுடன் பேச்சு கொடுப்பான்.
ஊருக்கு வந்து இருக்கும் ஐந்து நாள் லீவுல கூட பாட்டியை சந்தித்து பேசாமல் போகவே மாட்டான்.ஒவ்வொரு முறையும் ஊரை பற்றி பாட்டி சொன்னதை கேட்டுக்கொண்டு மனதில் அசை போட்டுக் கொண்டு திரும்பப் பட்டணத்துக்கு சென்று விடுவான்.
இந்த முறை பாட்டி சொன்னது இவனை சில நாட்களாக பைத்தியக்காரன் போல இருக்கவைத்து விட்டது.நிலத்தைப் பற்றிச் சொல்லி இருந்தால் பாட்டி.
அதாவது ஊருக்கு தெற்கே பெரிய கம்மாய் உண்டு.கரைக்கு இந்த பக்கம் எல்லாம் வயல்கள்.நம்ம ஊர் ஜனங்கள் முன்னாடி எல்லாம் கம்மா நிறைஞ்சு ஒரு போகம்நெல்லு விளைய வைத்து விடுவார்கள்.பின்பு கம்மாயில இருக்கிற மீதி தண்ணீரில் பயறு பச்சை உளுந்து பாசி விளைய வச்சிருவாங்க.செழிப்போடு இருந்தாங்க.
ஆனால் இப்போதோ நல்ல மழை பெய்தாலும் கம்மா நிறையவில்லை.கம்மாக்கி தண்ணி வரும் வழி எல்லாம் வேலி முளைச்சு கிடக்கு .கம்மா கரையும்தூர்ந்துபோச்சு.கம்மாயும் தூர் வாரப்படல.
சனங்கள் எல்லாம் சேர்ந்து ஊர் தலைவரிடம் சொல்லி பார்த்தாங்க.ஆனால் அதுக்கு அவங்க அந்த கம்மாய் பக்கத்து ஊரோட எல்லையில இருக்கான் அவங்க தான் அதை சரி பண்ணனும் நாங்க அவங்க கிட்ட சொல்லி இருக்கோம் அவங்க சரி பண்ணிடுவாங்க என்று சொன்னார்கள்.
நமக்குத்தான் அக்கறையும் வயித்து வலியும் அவங்க செஞ்சாதான் போச்சு இதுவரைக்கும் செய்யல.
அதனால ஜனங்க ஒருபோக நெல் விளைவிக்கவே முடியாமல் கஷ்டப்படுறாங்க ஒரு சில பேரு மக்காச்சோளத்தை போட்டு பயிர் பண்ணி காசு பாப்பாங்க.அதுக்கு தண்ணி ரொம்ப தேவைப்படாது.சாப்பாட்டு அரிசியை விலைக்கு வாங்கிக்கிறாங்க.கடுமையான உழைப்பு மட்டுமே கொடுக்கிறார்கள்மத்த எத பத்தியும் யோசிக்க அவங்களுக்கு நேரமில்லை.
இது ஒரு பக்கம் என்றால்,
ஊருக்கு வடக்கு பக்கம் சொல்லவே தேவையில்லை.
நம்ம ஊர் காரங்களுக்கு சொந்தமான காடுகளை எல்லாம் அந்த காலத்துல விவரம் தெரியாம நம்ம முதலாளி கேட்டாக ,நமக்கு தெரிஞ்சவங்க கேட்டாங்கனுசொல்லி நம்ம மனுசங்க காச பார்க்காம குறைஞ்ச விலைக்கு காடுகள் எல்லாம் வித்துட்டாங்க.அவங்களும் பத்திர எழுதி வாங்கிட்டாங்க.பத்திரம் எழுதி வாங்குனவங்க அவங்களாவது தோட்டம் தொறவுன்னு வச்சு பொழைச்சி இருக்கணும்.அதுவும் இல்ல.யார் யாருக்கோ வித்துப்புட்டாங்க.
இப்ப ரோட்டுக்கு கிளக்க பார்த்தீங்கனா பிளாட் போட்டு விக்கிறாங்க.கிட்டத்தட்ட 1000 பிளாட்டு கிட்ட வரும்.
ஒரு பிளாட் இவ்வளவுனு முதல்ல வித்தாங்க.ஆனா இப்போ ஒரு சென்ட் இவ்வளவுன்னு விக்கிறாங்க..
நம்ம ஜனங்க இடத்தை நம்மளே சென்ட் கணக்குல வாங்க வேண்டிய நிலைமை என்ன செய்யறது.அப்படி இப்படின்னு நிறைய இடத்தை நம்ம ஊர்க்காரர்களே வாங்கி போட்டதால நமக்கு தொந்தரவு இல்லை.அப்படி இருந்தும் வேற ஊர்காரங்களும் வாங்கி இருக்காங்க.இதுவரைக்கும் எந்த தொந்தரவும்இல்லை.
ரோட்டுக்கு அப்படியே மேற்க பார்த்தோம்னா.ஆரம்பத்திலேயே 40 பிளாட்டு கிட்ட இருக்கும்.நம்ம ஊர் காரர் களே. வாங்கிட்டாங்க எல்லாம் வீடு ஆயிடுச்சு..
அதுக்கப்புறம் கண்ணுக்கு எட்டின தூரம் மேற்கே யாரோ பணக்காரர் மொத்தமா வாங்கி இருக்காராம் ரெண்டு மூணு கை மாறிவிட்டதா சொல்றாங்க.இதுவரைக்கும் பிளாட்டு வித்ததா தெரியவே இல்லை.
ஜேசிபி வந்து நிறவுது.அப்புறம் கொஞ்ச நாளா எதுவுமே கிடையாது.முள்ளும் முளைச்சிருக்கு.மறுபடியும் ஜேசிபி வந்து நிறவு து.
இன்னும் அந்த நிலம் அந்த பாடுபடுகிறது.இப்படித்தான் நிலைமை உள்ளது.ஜனங்க ஆடு மாடு மேய்க்க கூட தாராளமாக செல்ல முடியவில்லை.அங்கு அங்கு கல் தூண்களை நட்டு வைத்து விடுகிறார்கள்.பென்சிங்மட்டும் தான் போடவில்லை.அதனால் ஆடு மாடுகள் மேய்ச்சல் சென்று திரும்பி வந்து விடுகின்றன என்று சுப்பம்மாள் பாட்டி வருத்தத்துடன் பாண்டியிடம் சொன்னாள்.
இதனைக் கேட்டு விட்டு தூக்கம் வராமல் நண்பன் வேல்முருகனிடம் சொல்லி புலம்பிக்கொண்டிருந்தான் பாண்டி.
மாப்ள பாண்டி ரொம்ப வருத்தப்படாதீரும்.எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் என்று சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பி வைத்தான் நண்பன் வேல்முருகன்.
பட்டணத்தில் பாண்டி காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு தனது அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்தான்.நகர வாழ்க்கை பரபரப்பாகவே இருந்தது.இன்று பதவி உயர்வுக்கான நேர்காணல் என்பதால் தன் உடைகளிலும் தலை சீவுவதிலும் ஒரு நேர்த்தியாகவும் மென்மையாகவும் இருந்தான்.அதே நேரத்திஅவன் குடும்பத்திலும் இருந்தது.
போன் அடிக்குது பாருங்க என்று சார்ஜ் போட்டு இருந்த போனை எடுத்து தந்தாள் மனைவி.
வேல்முருகன் பேசினான்.மாப்ள நல்லா இருக்கீரா?'என்று நலம் விசாரித்தான்.
நல்லா இருக்கேன் மாப்பிள .நம்ம சுப்பம்மா பாட்டி இறந்துட்டாங்க அதுதான் மாப்பிள்ளை நான் உனக்கு போன் பண்ணேன் என்றான் வேல்முருகன்.சரி மாப்ள நான் வந்துடறேன் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து ஒரு சில நிமிடம் அமைதியாகவே இருந்தான் பாண்டி.
மனைவியும் பாண்டியை புரிந்து கொண்டாள். நான் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன்.நீங்கள் ஊருக்குப் போயிட்டு வாங்க என்று சொன்னாள்.
மனைவியை ஒரு பெருமிததத்தோடுபார்த்துக் கொண்டே இருந்துவிட்டு ஊருக்கு கிளம்பி சென்றான்
.
மதியம் நல்ல வெயில் முடிந்து சாயங்காலத் தொடக்கம் சுப்பம்மாள் பாட்டிக்கு அனைத்து சம்பிரதாயங்களுடன் இறுதிச் சடங்கு நடந்து முடிந்து விட்டது.
ஊரில் உள்ள அனைவரும் குளித்து முடித்து இருந்தார்கள் நண்பன் வேல்முருகனிடம் சொல்லிவிட்டு பட்டணத்துக்கு திரும்பிச் செல்கையில் ஊரை ஒரு முறை திரும்பி பார்த்தான் பாண்டி.
குளித்த ஈர தலையுடன் பேச்சியம்மாள் பெரியம்மா மாட்டுக்கு கூளத்தை அள்ளி போட்டுக் கொண்டிருந்தாள்..
--------------------------------------------------------
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்