logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சி. சித்தேந்திரன்

சிறுகதை வரிசை எண் # 202


செந்நாப் போதகன் புதிதாய் கட்டப்பட்டு கொண்டிருக்கும் தனியார் பள்ளியின் மூன்றாம் தளத்தில் கட கட கட என சிமெண்ட் கலவை எந்திரத்தின் சத்தத்தின் நடுவே மேஸ்திரியின் சத்தம் டேய் சீஃப் இன்ஜினியர் வரார் டா. கலவையில் சிமெண்ட் ஜல்லி எல்லாம் கரெக்டா போடுங்க... ஏம்மா பொம்பளைகளா சும்மா பேசிகிட்டு மெதுவா நடக்காம. வேகமா போங்க. அப்புறம் ஏன் தல தான் உருளும். மேஸ்திரி சொல்லி முடிக்க அருகே வந்து நின்றது விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று. சினிமால வர ஹீரோ என்ட்ரி மாதிரி காரை விட்டு இறங்கி கொஞ்சம் வயசு இன்ஜினியர் ஒருத்தரு கட்டிட வேலையில் பார்வையிட்டு கிட்டே வந்தார். எல்லாரும் பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டே இருந்தாங்க. நடந்து போய்கிட்டே மேஸ்திரி சொன்ன டயத்துல வேலைய முடிச்சு கொடுக்கணும். எதுக்காகவும் நான் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். என இன்ஜினியர் சொன்னார். சார் நீங்க சொன்ன மாதிரி கரெக்டா முடிச்சிடலாம் சார் நான் பொறுப்பு சார். என்றார் மேஸ்திரி. கார் அங்கிருந்து கிளம்புகிறது. மேஸ்திரி கிட்ட பணியாளர் ஒருத்தர் ஏய் மேஸ்திரி நீ எல்லாரையும் தண்ணிக்கு விட்டுருவ இவரை பார்த்தா மட்டும் பம்முறியே. நீ வேற சும்மா இருய்யா இவரு ஸ்ட்ரைட் ஃபார்வேர்டு. காசுக்கு ஆசைப்படாத ஆள், அது மட்டும் இல்லா ரொம்ப ஒழுக்கமான ஆளு. அவர்கிட்ட நம்ம பருப்பு வேகாது. அதனாலதான் அவர்கிட்ட எல்லா வேலையும் வந்து குமியுது. இன்ஜினியர் அவர் வீட்டுக்கு போனதும் என்னிக்கும் இல்லாத மாதிரி அவர் மூளையை ஏதோ ஒரு உணர்வு கசக்கி கிட்டே இருந்துச்சு. ரெண்டு கண்கள் மட்டும் அவளோட மனசுல வந்து வந்து போச்சு. என்ன நெனச்சார்னு தெரியல இரவு 11 மணிக்கு கிளம்பி கார் எடுத்துக்கொண்டு வேலை நடக்கிற இடத்துக்கு போயிட்டார். வேலை பார்த்துவிட்டு கலைத்து தூங்கிக் கொண்டிருந்த சிலர் திடீரென இன்ஜினியர் வந்ததை கண்டு எழுந்து வந்து நின்றனர். இன்ஜினியர் கேட்டார். காலையில நான் வந்தப்ப செகண்ட் ஃப்ளோர்ல ஒருத்தர் ஜன்னல் வச்சிக்கிட்டு இருந்தாருல்ல அவர் யாரு? பணியாளர் ஒருத்தர் சொன்னார் அது நம்ம கொத்தனார் தங்கராஜ் சார். அவர் பேரு வேற என்னமோ ஒரு பேரு சொன்னாரு. ஆனா. எல்லாரும் தங்கராசுன்னு தான் சார் கூப்பிடுவோம். இன்ஜினியர் கேட்டார். இப்ப அவர் எங்க இருப்பார்? பணியாளர் சொன்னார். இந்நேரமலாம் அந்த ஆளு குடிச்சிட்டு ஃபுல் மப்புல இருப்பார் சார். அவர் வீடு இங்க பக்கத்துல பின்னாடி தான் சார் இருக்கு அவர எதுக்கு சார் கேக்குறீங்க? வாங்க இன்ஜினியர் சொன்னார். என்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா? யாராவது என் கூட பணியாளர் ஒருவரே அழைத்துக் கொண்டு தங்கராசு கொத்தனார் வீட்டுக்கு செல்கிறார். தங்கராசன் வீட்டை அடைந்ததும் உடன் வந்த பணியாளர் கதவைத் தட்டுகிறார். அவர் சொன்னது போலவே குடித்துவிட்டு அரை தூக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்தார். வாயில் கதவு அருகே இன்ஜினியர் வந்ததும் தங்கராசு இன்ஜினியரை பார்த்து. வா சந்தோஷ். உள்ள வா நல்லா இருக்கியா? என்று சொன்ன அடுத்த நொடி இன்ஜினியர் சந்தோஷின் கண்களில் கண்ணைத் ததும்பி நின்றது வார்த்தைகள் முட்டியது.... வார்த்தைகள் வராத நிலையில் சந்தோஷின் குரல் சார்..... என்ன சார் இப்படி.....? கொத்தனார் தங்கராசு தான் சந்தோஷின் பள்ளி வகுப்பு ஆசிரியர் திருக்குமரன். கண்ணீர் தழும்பிய குரலில் என்ன சார் ஆச்சு? என்றார் சந்தோஷ் நாங்க படிக்கும் போது தெரியாம மறைஞ்சு தம் அடிக்கும் போது எங்களுக்கு எவ்வளவு புத்திமதி சொன்னீங்க.? மது போதை எல்லாம் எவ்வளவு தப்பான பழக்கம் என்ன என். எஸ். எஸ் கேம்ப்ல நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு நாளும் நாங்க நினைச்சு பாத்துட்டு இருக்கோம். அதுதான் எங்களாள இன்னைக்கு வரைக்கும் ஒழுக்கமா இருக்க முடியது. உங்களை இப்படி பாக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார்... எனக்கு கண்ணீர் மல்க பேசினார் இன்ஜினியர் சந்தோஷ். அதற்குள் அங்குபணியாட்கள் சிலரும் வந்துவிட்டனர். ஆசிரியர் புன்முறுவலுடன் ஆசிரியர் சொல்லத் தொடாங்கினார். நீங்க பிளஸ் டூ படிக்கிறப்ப எனக்கு கல்யாணம் ஆச்சு. நாங்கள் லவ் மேரேஜ் உங்களுக்கு தெரியுமே. நாங்கள் லவ் மேரேஜ் அப்படிங்கறதனால எங்க ரெண்டு பேர் வீட்லையும் ஏத்துக்கல. ஆனா வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. அடுத்த வருஷம் என் மனைவி நிறைமாத கர்ப்பிணியா இருந்தா நம்பருக்கு தான் போன் போட்டு சொல்லணும். அந்த ஸ்கூல்ல தான் டீச்சர்ஸ் யாரும் போன் யூஸ் பண்ண கூடாது இல்ல. எந்த விஷயம் நானும் ஆபீஸ் அப்படி ஒரு நாள் தான் என் வாழ்க்கையே பெரட்டி போட்டுருச்சு. என் மனைவிக்கு பிரசவ வலி ஆபீஸ்க்கு போன் பண்ணி இருக்கா. ரிசப்ஷன் இஸ்ட் பிரின்ஸ்பால் கிட்ட போய்சொல்லி இருக்காங்க. சொன்னா அவங்க மீட்டிங் இருக்கு வெயிட் பண்ண சொல்லிட்டாங்க.. என் கிட்ட நேரா வந்து ரிசப்ஷனிஸ்ட்க்கு டோஸ் விழும், அதனால் அவங்க சொல்லல. அதுக்கு அப்புறமும் என் மனைவி ரெண்டு மூனு தடவ போன் பண்ணிருக்கா. அந்த நேரம் நான் தற்செயலா ஆபீஸ்க்கு வந்தேன். என்கிட்ட மனசு தாங்காம ரிசப்ஷனிஸ்ட் சொல்லிட்டாங்க. நான் போய் பிரின்சிபால் கிட்ட சத்தம் போட்டுக் கேட்டேன். அவங்க அதெல்லாம் ஒரு விசயமாவே எடுத்துக்கல. உங்களுக்கு மாதிரி எனக்கும் ஆயிரம் டென்சன் இருக்கு சார். சரி பெர்மிஷன் லெட்டர் எழுதி கொடுத்திட்டு போங்கன்னு சொன்னாங்க. அவசரமா எழுதி கொடுத்துட்டு கேட் கிட்ட போய்ட்டேன். ஆனா, வாட்மேன் கேட் பாஸ் இல்லாம யாரையும் வெளியில் விடக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க சார். நான் கேட்ட திறக்க மாட்டேன்னு சொல்லிட்டார். கேட் பாஸ் வாங்க வந்தேன். அதுக்குள்ள பிரின்சிபால் ரவுண்ட்ஸ் போய்ட்டாங்க. ஏறக்குறைய ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம், அதுக்குள்ள என் மனைவிய பக்கத்து வீட்டுல இருந்தவங்க ஹஸ்பிட்டல்ல போய் சேத்துட்டாங்க.. எனக்கு ஒரு பெண் குழந்தை பொறந்திருந்தா. ஆனா.......... (சில விநாடிகள் அமைதி ஆனா. என் மனைவி என்னை விட்டுப் போயிட்டா..... அதுக்கப்புறம் நாள் என் பிள்ளைக்காக வாழ ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நல்ல வேலை சென்னையில் வந்துச்சு. ஒருவாரத்துல வந்து சேரச் சொல்லிருந்தாங்க. நல்ல சம்பளம். நான் போய் ஸ்கூல்ல என்னோட ஒரிஜினல் சட்டிபிகேட் வேணும்னு கேட்டேன். அதுக்கு பிரின்சிபால் உங்க இஸ்ட்டத்துக்கெல்லாம் தரமுடியாது. அப்படி உடனே வேணும்ன்னா 3 மாத சம்பளத்தை திருப்பி கொடுத்திட்டு வாங்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க. என்னோட மாத சம்பளமே அன்றைக்கு 5,000. அதுலதான் நானும் என் பிள்ளையும் பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்தோம். என்ன செய்யன்னே தெரியல... அந்த வாய்ப்பும் போச்சு. திடீர்னு ஒருநாள் ஞாபகம் வந்தது. நீங்க படிச்சப்போ ஸ்கூல்ல ஒரு புது பில்டிங் கட்டிட்டு இருந்தாங்க. அங்க வேலை செய்யுறவங்க கிட்ட சாப்பாட்டு டைம்ல சும்மா பேசிக்கிட்டு இருந்தேன். அவங்க கிட்ட உங்க சம்பளம் எவ்வளவுன்னு கேட்டேன். அவங்க சொன்னாங்க. என்ன சார் வேலை நல்லாப் படிச்சுருந்தா உங்கள மாதிரி எல்லாம் நல்ல உடுப்பு போட்டு நல்ல வேலைக்கு போயிருப்போம். என்னசார் பெரிய சம்பளம் ஒரு நாளைக்கு 600 ரூபா, 2 நேரம் டீ, வடை, காலையில் 9.00 மணிக்கு வந்து 5.30 மணி வரைக்கும் வேலை. மத்தியானம் ஒரு மணி நேரம் சாப்பாட்டுடைம். அப்படி அவங்க சொன்னதும் எனக்கு அதிர்ச்சி ஆயிடுச்சு.. ஒருமாதத்திற்கு 18000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. அப்போ என்னோட ஒருநாள் சம்பளம் 166 ரூபாய் தான். காலையில 7.30 ல இருந்து மாலை 6.30 வரை வேலை. படிச்ச ஒரிஜினல் சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்திட்டு அடிமை வேலை பார்த்துட்டு இருக்கோமேன்னு தோனுச்சு. அதான் இந்த வேலைக்கு சர்டிபிகேட் தேவையில்லன்னு பிள்ளைய தூக்கிகிட்டு ஊரவிட்டு வந்துட்டேன். பேரு உருவம் எல்லாம் மாத்திகிட்டேன். முதல்ல கொஞ்சம் வேலை கஷ்ட்டமா இருந்துச்சு. என்ன பன்னுறது பிள்ளைய படிக்க வைக்கனுமே. பிள்ளைய ஒரு சின்ன பள்ளிக்கூடத்துல சேத்து விட்டேன். நாளுக்கு நாள் ஒடம்பு வலி தாங்க முடியல. அப்பத்தான் கூட வேலை செய்யுறவங்க சொன்னாங்க இப்பிடியே இருந்தா அலுப்புக் காய்ச்சல் வந்திடும், நாளைக்கு வேலைக்கு போக முடியாது. இத குடிப்பா இது அளவா குடிச்ச மருந்துப்பான்னு சொல்லி என்ன குடிக்க வச்சாங்க. அடுத்தநாள் வேலைக்கு போகனுமே. முதல்ல உடம்பு வலிக்காகக் க் புடிச்சேன். இப்ப அது என்னைய புடிச்சுக்கிட்டு விட மாட்டுதுன்னு சொல்லிட்டு சிரிக்கிறார். அதுக்காக நம்ம சார் குடிக்கிறார் நம்ம குடிச்சா என்னன்னு எதாவது பண்ணுன.. பிச்சுடுவேன். என்னோட வார்த்தைய மட்டும் தான் பாலோ பண்ணனும். என்னை பாலோ பண்ணக்கூடாது. ஆனா ஒன்னுப்பா, இன்னைக்கு நான் நல்ல வசதியா இருக்கேன். நல்லா சம்பாதிக்குறேன். இந்த வீடு கூட என் சொந்த வீடுதான். உங்க பொண்ணு எங்கசார்? என்று சந்தோஷ் கேட்க. உள்ள படுத்திருக்கா. இரு எழுப்புறேன் என்றார் ஆசிரியர். சந்தோஷ் சார் இருக்கட்டும் எழுப்ப வேணாம்ன்னு சொல்லுறதுக்குள்ள எழுப்பிட்டார். குட்டிம்மா எழுந்திரிடா உன்னப் பாக்க ஒரு அங்கிள் வந்திருக்காங்க அரைத்தூக்கத்தில் வந்த பிள்ளையிடம் சந்தோஷ் பேசினர். ஹாய் பாப்பா. வாட் இஸ் யுவர் நேம்? என்றதும் பதிலுரைத்தாள் சிறுமி. ஹாய் அங்கிள். ஐம் சௌமி, கிளாடு டு மீட் யூ அங்கிள். ஒய் ஆர் யூ ஸ்டேன்டிங் அங்கிள்? பிளீஸ் டேக் யுவர் சீட் என்றதும்... ஆசிரியர் சிரித்துக்கொண்டே, என்னப்பா இப்படி பாக்குற. என் பொன்னு நீங்க படிச்சத விட பெரிய இங்கிலீஸ் மீடியம் ஸ்கூல்ல படிக்க வச்சிட்டு இருக்கேன். என்றார். சார் உங்களுக்குத்தான் இங்கிலீஸ் மீடியம் ஸ்கூல் புடிக்கலன்னு வெறுத்துப் போய்த்தான வெளியில் வந்தீங்க. உங்க பொண்ண மட்டும் இங்கிலீஸ் மீடியம் ஸ்கூல்ல சேத்து படிக்க வைக்கிறீங்க என சந்தோஷ். கேட்டதும். சிறிது மௌனத்திற்குப் பிறகு. நீ சொல்லுறது உண்மை தான். எனக்கு பிரைவேட் ஸ்கூல் பிடிக்காதுதான். ஆனா. படிச்சுட்டு பிரைவேட் ஸ்கூலை மட்டுமே நம்பி இருக்கிற டீச்சர்ஸ் வீட்டுல அடுப்பு எரியவேணாமா? எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அத வெளியில சொல்ல முடியாம வெளியில சந்தோஷமா இருக்குற மாதிரி நடிக்கிற ஒரு கூட்டம் இருக்கு தெரியுமா? எல்லாரும் அவங்கள சாதாரணமா கடந்து போய்டுவாங்க. அவங்களுக்கு வேற வழி இல்ல. நாஞ்சில் சம்பத் சொன்ன மாதிரி, துப்புனா துடைச்சுக்குவேன்னு சொல்லி அங்கதான் பொழப்ப ஓட்டியாகனும். என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்க ஆயிரக்கணக்கான போர் இருக்காங்க. நான் வெளியில் வந்துட்டேன். அவங்களாள முடியல.. ஸ்டூடண்ஸ் கூட முன்ன மாதிரி இல்லப்ப. உங்கள் எல்லாம் உங்க பேரன்ட்ஸ் எங்ககிட்ட சொல்லிடுவேன்னு உங்கள திருத்தப்பாங்க. இப்ப இங்க ஒரு ஸ்கூல்ல எந்த ஒரு டீச்சருக்கும். இல்ல இல்ல, மனித ஜென்மத்துக்கே நடக்கக் கூடாத செயல் ஒன்னு நடந்துச்சு. +2 ஸ்டூடண்ட்ஸ் ரெண்டு பேர் ஒரு டீச்சரோட வாட்டர் பாட்டிலை எடுத்திட்டு போய், அதுல யூரினை பிடிச்சி கலந்து வச்சிட்டாங்க. அவங்க அதை தெரியாம குடிச்சு மயக்கம் போட்டுட்டாங்க. அவங்க ஒரு பெண் ஆசிரியை,அவங்களோட பொண்ணுகூட அந்த ஸ்கூல்லதான் படிக்குது. அன்றைக்கு பிரின்சிபால் லீவ். அதுனால அங்க இருந்த ரெண்டு டீச்சர்ஸ் CCTV போட்டுப் பாத்து கண்டுபுடிச்சிட்டடாங்க. நாளைக்கு உங்க பேரண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வரணும்னு சொல்லிட்டாங்க. அடுத்தநாள், அவனுகள் பெத்தவங்க PRESS. மனித உரிமைக்கழகம். அரசியல்வாதிகள்ன்னு அது என் பையன் யூரின்னு என்ன ஆதாரம், லேப்ல கொடுத்து டெஸ்ட் பண்ணுனீங்களா? என் பையன ஒரு படையையே திரட்டிட்டு வந்து. எப்படி குறை சொல்லலாம்ன்னு சொல்லி வாக்குவாதம் பன்னுனாங்க. அந்த பையனை டி சி கொடுத்து அனுப்பிடுவாங்கன்னு தான் எல்லாரும் நினைச்சாங்க. ஆனா நடந்தது வேற. அவன் மூலமாவர பீஸ் பணம் போய்டும்ன்னு, மேனேஜ்மென்ட் என்ன பன்னுச்சு தெரியுமா? எங்க டீச்சர்ஸ் மேலதான் தப்புன்னு CCTV பார்த்துக் கண்டுபுடிச்ச ரெண்டு டீச்சர்களையும் ஒரு வாரம் சஸ்பெண்டு பண்ணினாங்க.. இதுல கொடுமை என்னன்னா? பாதிக்கப்பட்ட டீச்சர பத்தி யாரும் யோசிக்கவே இல்ல. இவ்வளவு அமானத்தையும் தாங்கிக்கிட்டு அவங்க பிள்ளை படிப்புக்காகவும் தன் குடும்பக் கஷ்டத்துக்காக அங்கேயேதான் இன்னும் வேலை பாக்குறாங்க. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குன்னு சொல்லிக்கிற மாதிரி தனியா எந்த அமைப்பும் இல்ல சந்தோஷ். தனியார் ஸ்கூல்ல வேலை பாக்குறதும் ஒன்னுதான், கேரளாவுக்கு அடிமாடா போறதும் ஒன்னுதான். சரியான வேலை நேரம் வரைமுறை இல்ல. காலையில வந்ததுல இருந்து வீட்டுக்கு போற வரைக்கும் நின்னுக்கிட்டே இருக்கனும். வகுப்புக்குள்ள டீச்சர்களுக்குன்னு இப்ப எல்லாம் டேபிள் சேர் கூட போடுறது இல்ல. இரவுல ஹாஸ்ட்டல்லயும் முழிச்சு, பகல்ல ஸ்கூல்லயும் முழிச்சு தூக்கத்தத் தொலைச்ச எவ்வளவுபேர் இருக்காங்க தெரியுமா? எவ்வளவு போர் பேரண்ட்ஸ் கிட்ட அடி வாங்கிட்டு கூட, வேற வழி தெரியாம அங்கேயே வேலை பாங்குறாங்க தெரியுமா? நம்ம ஸ்கூலுக்காத்தானே வேலை பாக்குறாங்கன்னு நிர்வாகமும் மதிக்கல... நம்ம பிள்ளைக்குத்தானே பாடம் சொல்லிதராங்கன்னு பெத்தவங்களும் மதிக்கல... நம்ம நல்லதுக்குத்தானே சொல்லுறாங்கன்னு ஸ்டுடண்ட்சும் மதிக்கல... அவங்களுக்கும் வயிறு இருக்கு சந்தோஷ். அவங்களுக்காத்தான் நான் என் பிள்ளைய அந்த ஸ்கூல்ல சேத்துருக்கேன். எனக்குத் தெரிந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படைக்கப்பட்ட சிறுகதை செந்நாப் போதகன் சி.சித்தேந்திரன் கம்பம் தேனி மாவட்டம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in