Lalitha
சிறுகதை வரிசை எண்
# 201
மஞ்சரி
புவனா கடைக்கு நேரமாகுது சாப்பாடு தயாரா என்றார் ரவி. இதோ வந்திட்டேன் என தோசை உடன் வந்தாள் புவனா. என்ன மஞ்சரியே காணும் கல்லூரிக்கு நேரம் ஆகுது இன்னுமா கிளம்பல என்றார் ரவி.
அவளுக்கு தலைவலினு
படுத்து இருக்கா என்றாள் புவனா. என்ன சொல்ற
நாமலே சொன்னாலும், என்ன முடியலநாளும் கல்லூரிக்கு போய்டுவளே என்ன ஆச்சு ஹாஸ்பிடல் போகலாம் என்றார் ரவி.
நான் கேட்டேன் வேணான்னு சொல்ற என்ன செய்ய? சரி நான் கடைக்கு போறேன் பத்திரமா பாத்துக்கோ என்றார் ரவி.
மஞ்சரி மதியம் மணி 2 ஆகுது என்ன பண்ற சாப்பிடவும் இல்லை, ரூம் விட்டு வெளியும் வரல என்றாள் புவனா. மஞ்சரி எதும் பேசவில்லை. ரவிக்கு போன் செய்த புவனா மஞ்சரி இன்னும்
சாப்பிடல, நீங்க வீட்டுக்கு வாங்க என்றாள். ரவி மஞ்சரி வா ஹாஸ்பிடல் போகலாம் என்றார். மஞ்சரி வரவில்லை. சரி வா வெளியே போகலாம் என்றார் ரவி. மஞ்சரி வாய் திறக்கவில்லை. வேறு ஏதோ பிரச்சனை என அறிந்த புவனா நீங்க கடைக்கு போங்க, நான் பார்த்து கொள்கிறேன் என்றாள். அதே நேரம் ரவிக்கு போனில் கடைக்கு அவசர அழைப்பு
வர புறப்பட்டார். புவனா மஞ்சரி என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க என்றாள்.
அதே நேரம் மஞ்சரிக்கு
போன் வர பதட்டமானள்.
அவள் பதட்டத்தை உணர்ந்த புவனா போனை ஆன் செய்தாள்.
மறு முனையில் ஒரு ஆணின் குரல் என்ன மஞ்சு எப்ப மீட் பண்ணலாம்? நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என்றான். சட்டேன போனை கட் செய்த புவனா, மஞ்சரியை அடித்து யார் அவன் என்றாள். இன்ஸ்டாகிராம் மூலம் அவனை பெண் என நினைத்து ஆறு மாதங்கள் பேசியதும், பின்னரே அவன் ஆண் என தெரியவர பிளாக் செய்ததாகவும், ஆனால் அவன் என்னை காதலிப்பதாக பின் தொடர்ந்து கல்லூரி செல்லும் வழியில் பிரச்சனை செய்ததும், பேஸ்புக் போட்டோவை மார்பிங் செய்து தன்னை மிரட்டுவதாகவும் கூறி அழுதாள் மஞ்சரி. ஏன் என்கிட்ட முதலில் சொல்லல என கேட்டாள் புவனா. அழுத படியே நின்றாள் மஞ்சரி. சரி நான் பாத்துக்கிறேன் என்றாள் புவனா. மஞ்சரி சிறு வயதில் தாயை
இழந்தவள், தந்தையின் மறுமணத்துக்கு பின் அவள் எங்க வீட்டில் இருந்தாலும் யாரிடமும் மனம் விட்டு பேசியது இல்லை. அவளின் மன நிலையை அறிந்தே ஒருவன் அவளை தொல்லை செய்கிறான் எனவே நீங்க தான் ஒரு வழி செய்யணும் என தன் அண்ணனான காவல் உதவி ஆய்வாளர் இடம் கூற பிரச்சனை முடிவுக்கு வந்தது. மஞ்சரி பயமின்றி கல்லூரி சென்றாள். மேலும் மஞ்சரிக்கு புவனாவின் பாசம் புரிந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்