Jeevanandham
சிறுகதை வரிசை எண்
# 198
தலைப்பு : கண்ணெதிரே கடவுள்
கேரளா சுற்றுலாவை முடித்து விட்டு கடைசியாக பழனி கோவிலுக்கு வந்து சேர்ந்தது அந்த இளைஞர் கூட்டம். கல்லூரி கடைசி வருடம் என்பதால் இந்த சுற்றுலா போல வேனிலிருந்து இறங்கி எல்லோரும் மலையேற சென்றனர்.
மலையேறுவதற்கு செல்லும் பாதை முழுக்க எக்கச்சக்கமான மற்றும் பலவிதமான கடைகள் நிரம்பி வழிந்தன.
குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், டேடி பியர், விலங்கு பொம்மைகள் போன்றவையும்
சாப்பிடுகின்ற பொருள்களான அல்வா, பஞ்சாமிர்தம், லட்டு, பொரி உருண்டை போன்றவையும் சாமி படங்கள், தாயத்து இவ்வாறாக அனைத்து கடைகளும் இருபுறமும் கலந்து கலந்து காணப்பட்டன. அதுமட்டுமல்லாமல் மலையேற செல்லும் நபர்களைப் பார்த்து , கற்பூரம் வாங்கிட்டு போங்க, தேங்கா பழம் வாங்குங்க, வாங்க வாங்க... என அவர்களின் கூச்சலுமாக இருந்தது செல்லும் பாதை முழுக்க....
மலை ஏறுவதற்கு ஒரு பாதை இறங்குவதற்கு ஒரு பாதையென இரு பாதைகள் காணப்பட்டது. ஏறுவதற்கான படிகளில் ஏறியதும்
ஒன்றாக சென்ற கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக பிரிந்து நால்வர், ஐவர் என பிரிந்து மலையேற ஆரம்பித்தனர்.
ஹரி, சிவராமன், வெற்றி, அய்யப்பன், சக்திவேல் முதலிலும் , மணிகண்டன், வசீகரன்,ஜீவா, சங்கர நாராயணன், சத்திய நாரயணன் என்ற இரட்டையர்கள் இவர்களுக்கு பின்னும் , அரவிந்த், மணி, புஷ்பராஜ்,அன்பு, சதீஷ் என ஒவ்வொரு குழுவாக சென்றனர்.
படிகளும் செங்குத்தாக இல்லாமல் எளிதாகவே இருந்தது.
சிறிது நேரம் நடக்க ஓய்வெடுக்க என சென்றனர், நாம் இரண்டாவது சென்ற குழுவை பின் தொடர்வோம்
ஜீவா மணியிடம் பேச்சு கொடுத்தான்,
அப்றம் மணி காலேஜ் முடிச்சுட்டு என்ன பண்ணலாம்னு இருக்க
எங்க மச்சான் வீட்டுல என்ன சொல்றாங்கனு தெரியல
ஏன்டா ஒருமாதிரி சலிப்பா சொல்ற
என்ன மச்சான் சொல்றது வீட்டுல அப்படி
ஏன் என்ன ?
எனக்கு Cini photography தான்டா ஆச
நா 12th முடிச்சப்பவே போலாம்னு நெனச்சேன் வீட்ல ஒத்துக்கல
ஏன் ?
அதெல்லாம் தேவயில்லாத செலவு எதாவது டிகிரிய முடிச்சிட்டு வேலைக்கு போடானு சொல்லிட்டாங்க
நீ இப்பக்கூட உங்க அண்ணன் கூட
கல்யாணத்துல ஃபோட்டோ எடுக்கப்போவல
ஆமாம் மச்சான் , எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் இப்ப எக்ஸாம் வருதே எப்படியாச்சி டிகிரி வாங்கிட்டனா வீட்ல பேசி பாக்கனும்
இந்த மாதிரி எண்ணமெல்லாம் எனக்கு வந்தது இல்லடா, படிச்சு வேலைக்கு போகனும் அவ்ளோதான் அதுக்கு மேல வேற எதுவும் யோசிக்க மாட்டேன்.
உனக்கு எப்படி மச்சான் இதுல மேலே ஆர்வம் வந்துச்சு ?
தெரியலடா பத்தாவது படிக்கிறதுல இருந்து...
"முகம் காட்டு நீ முழு வெண்பனி".....
ஜீவா ஃபோனிலிருந்து அழைப்பு வர எடுத்தான்
சங்கர நாராயணன் அக்கா....
டேய், சக்கர உங்க வீட்ல இருந்து ஃபோன்
யாரு மச்சான்
உங்க அக்கா டா
பின்தங்கி வந்தவன் விரைவாக வந்து
ஃபோனை வாங்கி கொண்டான்
சரி டா நீ பேசிட்டு வா நா முன்னாடி போயிட்டு இருக்கேன்
மணி நீ எதோ பத்தாவதுனு ஆரம்பிச்சியே
அது என்னனா நா பத்தாவது படிக்கிறதுல இருந்து
அண்ணன் கூட போறதுனாலயா இருக்கலாம் டா அதான் சொல்ல வந்தேன்
மச்சான் இன்னொரு விஷயம் நீங்க படம்பாக்குறதுக்கும் நா பாக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குடா
வாட் ? இதுல என்ன இருக்கு
சொல்றேன் இரு, இப்ப நீ ஒரு படம் பாத்தினா எதோ ஒரு சீனோ இல்ல ஷாட்டோ ரொம்ப புடிக்கும் அத ரசிச்சு பாப்பஆனா, நா அந்த சீன இல்லனா ஷாட்ட எந்த இடத்துல கேமரா வச்சு எடுத்து இருப்பாங்கனு யோசிப்பேன்
வாவ் சூப்பர் மச்சான் வித்தியாசமா இருக்குடா ஒன்னோட சிந்தனை இப்ப எனக்கும் அந்த மாதிரி யோசிக்க தோணுது
போய் சேரு மச்சான் பாத்துக்கலாம்
எக்ஸாம் முடிச்சிட்டு ரிசல்ட் வந்தவுடனே பாக்கனும் டா
ஓகே டா
நடக்க ஓய்வெடுக்க என எப்படியோ மலை ஏறி விட்டனர். முன்னே சென்றவர்கள் முருகனை காணச்செல்லும் வரிசையில் நிற்க
அப்படியே பின் வருபவர்களும் சென்றனர். சிறிது தூரத்திற்கு பிறகு இரண்டு வரிசைகள் வரவே ஆளாளுக்கு ஒரு வரிசையில் செல்ல
மலையேறும்போது இருந்த குழு மாறியது. மணி, சங்கர நாராயணன் சத்திய நாரயணன், வசீகரனை விட்டு ஜீவா பிரிந்து முதலில் சென்ற குழுவுடன் சேர்ந்துவிட்டான்.
வரிசையில் அதிக நேரம் எடுக்கவே இருவரிசையில் இருந்தவர்களும் அமர்ந்து விட்டனர்.
ஜீவாவுக்கு பக்கத்து வரிசையில் எதிரில் குழந்தை ஒன்று அமர்ந்திருந்தது அதனுடன் விளையாட ஆரம்பித்தான்
குழந்தை காலை நீட்டி வைத்திருந்தது அதைப்பார்த்த இவனும் காலை நீட்டினான். சிறிது நேரத்திற்கு பிறகே இவனை கண்ட குழந்தை, என்ன நம்மள மாதிரியே கால நீட்டிருக்கான் என தன் ஒற்றைக் காலை மடக்கி விட்டு இவனை பார்த்தது. இவனும், ஓ ஒத்தக்கால மடக்கறியா நானும் மடக்குறேன் இரு
என மடக்கினான்.
குழந்தை, நாம என்ன செஞ்சாலும் செய்வானோ நம்ம கன்னத்த கிள்ளுவோம். நீ கன்னத்த கிள்ளிறியா நானும் கிள்ளுவேன் வேணாம் அமைதியா இருப்போம் என்ன பண்ணுதுனு பாப்போம்.
குழந்தை, என்ன அமைதியா இருக்கான் நம்மள ஒருவேள பாக்கலையோ என அவனை உற்று நோக்க அவன் திடீரென்று கன்னத்தை கிள்ள
குழந்தை புன்னகையுடன் முகத்தை திருப்பி தந்தையின் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டது. அவனோ தனது நண்பனின் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
குழந்தை இரு கைகளையும் கொண்டு முகத்தினை மூடி அவனை பார்த்தது
மொகத்த மூடுறியா நானும் செய்யுறேன் இரு... அந்த கொழந்த நம்மல பாக்குமோ
அவன் நம்மள பாப்பானோ என இருவரும் ஒருகணம் விரலிடுக்கில் ஒருவரையொருவர் கண்டனர்.
குழந்தை என்ன செய்கிறதோ அதையே அவனும் செய்ய குழந்தை புன்னகை பூக்க மழலையின் சிரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது. அச்சமயத்தில் அவனுக்கு
"குழலினிது யாழினிது..... என்ற குறள் நினைவிற்கு வந்தது
அருகிலிருந்தவர்கள், ஏ சின்னக் குழந்தையா டா நீ
போடா மயிரு
அக்குழ்நதையிடம் பேச்சு கொடுத்தான்
உன் பேரு என்ன
என் பேரா.....
ம்... சொல்லு
அண்ணன் கேக்குறாங்குள சொல்லு என குழந்தையின் தந்தை கூறினார்
என் பேரு.... யாழினி
வாவ் சூப்பரா இருக்கு உன்னோட பேரு
உன்னோட பேரு என்ன
என் பேரு ஜீவா
ஓ.....
என்ன ஓ....
ஒன்னுமில்ல
என்ன ஊரு நீ
இன்னா ஊருப்பா நாம
திருப்பத்தூர் மா
ஹான்.... திருபதூர்
புன்னகையுடனே சரி
எங்க வீட்டுக்கு வா போலாம்
உங்க வீடு எங்க இருக்கு
திருவண்ணாமலையில
நா வரமாட்டேன்
ஏன்?
நா அப்பாக்கூட தான் இருப்பேன்
வரிசையில் முன்னிருந்தவர்கள் எழும்ப எல்லோரும் எழுந்தனர். குழந்தையின் வரிசை வேகமாக செல்ல
பாய்.... யாழினி
பாய்....
அக்குழந்தையை மறுபடியும் பார்ப்போமோ என்ற நினைப்பிலே இருந்தான் ஆனால் முடியவில்லை...
அந்த நிமிடங்கள் இனிமையாக இருந்தது.
வரிசை முருகனிடம் வந்தது
முருகனையும் நின்று நிதானமாக பார்க்க விடவில்லை ஆட்கள் வர வர தள்ளிக்கொண்டே இருந்தனர். அனைவரும் வேகவேகமாக வெளிய வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சிவராமன்,
இன்னா மச்சான் தள்ளி தள்ளி விடுறானுங்க சரியா பாக்கவே விட மாட்றானுங்க
ஜீவா,
மச்சான் நம்ம காசு இல்லாம போனோம்ல அப்படித்தான், காசு குடுத்து போயிருந்தா பக்கத்துல பாத்துருக்கலாம், வேகமா தள்ளியும் விட மாட்டானுங்க
நீ ஏற்கனவே வந்துருக்கியா
வந்துருக்கன் மச்சான் அப்ப 500ரூபா காசு குடுத்து கொஞ்சம் பக்கத்துல பாத்தேன். என்னவிட பக்கத்துலயும் பாத்தானுங்க
அவனுங்க எவ்ளோ காசு குடுத்தாங்கனு தெரியல. இத பாத்தா அன்பே சிவம் படத்துல கமல் சொன்ன டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது
"காசு குடுத்தாதான்....
அப்படியே நீ எதுனா சொல்ல ஆரம்பிச்சிடுவ போடா டேய்
மச்சான் நா சொல்றத கேளுடா
அதுலாம் கேக்க முடியாது போடா நா கீழப்போறன்
ஏ நில்றா 6:30 மணிக்கு தங்கத்தேர் வரும் இன்னொரு பத்து நிமிஷம் தான் இரு பாத்துட்டு போயிடுவோம்.
உனக்கு எப்படி தெரியும்?
கேள்விப்பட்டிருக்கேன் இரு பாப்போம்
இவ்ளோ பேர் கீழ எறங்காம நிக்குறாங்களே அது கூடவா கண்ணுக்கு தெரியல உனக்கு
கீழே இறங்கி செல்லும் படிகளுக்கு முன்னே இடது பக்கத்தில் ஒரு அறை இருந்தது அது தாழ்ப்பாளும் போடப்பட்டிருந்தது. அறைக்கு இருபுறமும் காவல் அதிகாரி நின்றிருந்தனர்.
சிவராம அங்க ரூம் தெரியுதுல அங்க இருந்துதான் தேர் வரும்னு நெனைக்குறேன்
எப்படி சொல்ற ?
போலீஸ்காரன் நிக்குறான் பாரு அங்க
நம்மள இழுக்க விடுவாங்களா
விட மாட்டாங்கனு நெனைக்குறேன்
கோவில்லே இருக்குறவங்க யாரவது செய்வாங்க மச்சான்
அதான் போலீஸ் நிக்குறானே எப்புடி விடுவான்
மச்சான் கதவ தொறக்குறாங்க போல எல்லாம் பக்கத்துல போறானுங்க
அப்படி பக்கத்தில் செல்லும்போது வயதான மூதாட்டியை அங்கிருந்த காவலர், அங்குட்டு போமா வேகமா வந்துட்ட என கூறி தள்ளி விட்டார்.
அப்போது ஜீவாவின் மனதில், இதுவே ஒரு வசதி படைத்தவன் அருகில் சென்றிருந்தால் அந்த காவலன் அப்படி செய்திருக்க மாட்டான். மனிதர்களே இப்படித்தான் போல.... என சலித்து கொண்டான்.
அரோகரா அரோகரா..... என்ற கோஷத்தை பக்தர்கள் எழுப்ப முருகன் தஙக்ததேரில் காட்சியளித்தான். தேரானது பாதையை சுற்ற ஒருசிலர் பின்னே செல்ல மற்றவர்கள் கீழ இறங்கினர்.
இவர்களும் இறங்க ஆரம்பித்தனர்
படிகளும் கீழ்நோக்கி இருக்க வேகவேகமாக இறங்கினர் யாரும் பேசவில்லை.
கீழே இறங்கியவுடன் ஹரி, மச்சான் எல்லாரும் வாங்க வீட்டுக்கு தேவையானதுலாம் வாங்குவோம் ஒரே கடையில மொத்தமா போனா கம்மி பண்ணி கேக்கலாம்
ஜீவா, என்னட்ட கையில 150ரூபா தான்டா இருக்கு பத்தாதே
பர்ஸ் எடுத்துட்டு வரலயா
இல்லயே
மொபைல்ல அமௌண்ட் இருக்குல அப்படி அனுப்பி வாங்கிக்க
அதுவும் சக்கரகிட்ட இருக்க
அப்ப அவன் பூ.... கோவில்ல இருக்கேன் பாக்குறேன்
அவனுங்க வந்தவுடனே வா நாங்க போறோம்
சரி போங்க போங்க
ஜீவாவும் அவர்களுக்காக காத்திருந்தான் கால்மணி நேரம் ஆகியும் வராததால்,
அவனுடைய மனதில் பல சிந்தனைகள் ஓடியது, ஒருவேளை படி பிரியுமே ஏறுறதுக்கு ஒன்னு எறங்குறதுக்கு ஒன்னுனு அது ஏறுறதுல இறங்கிடுவானுங்கலோ..? எதுக்கும் நம்ம படி பிரியுற எடத்துல போய் நிப்போம்.
அங்கும் 10 நிமிடம் ஆகியது, என்ன இன்னும் வரல ஒருவேள அவனுங்க இறங்குனத நாம கவனிக்கலையோ..?
கீழ எறங்கி யார்கிட்டயாவது ஃபோன் வாங்கி கால் பண்ணலாமா..? நாம கீழ எறங்குற நேரத்துல அவனுங்க போயிட்டானுங்கனா..? இல்ல இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாமா..? அதிகபட்சம் போயிருக்க மாட்டானுங்க நாம கீழ எறங்கி யார்கிட்டயாவது மொபைல் வாங்கி கால் பண்ணுவோம்
கீழ போவோம்.
என்ன எல்லாரும் நிக்காம போயிட்டே இருக்கானுங்க யார்ட்ட வாங்குறது, எதாவது ஒரு பொண்ணுகிட்ட வாங்கி பண்ணுவோமோ பொண்ணு நம்பரும் கெடச்ச மாதிரி இருக்கும். ச்சீ.... நம்ம என்ன அல்ப்பமா இருக்கோம் இங்கதான் நெறைய கட இருக்கே அங்க யார்கிட்டயாச்சி கேப்போம்
படிகளுக்க பக்கத்திலே கடை இருக்க அங்கே சென்று,
அண்ணா மொபைல் தறீங்களா ஒரு கால் பண்ணிட்டு தரேன்
சரிப்பா....
6374.... ரிங் போக சங்கர நாராயணன் எடுத்தான், ஹலோ.... யாரு
சக்கர நான் ஜீவா பேசுறன் டா
ஹலோ.... சரியா கேக்கலைங்க யாரு
டேய் ஜீவா டா.....
ஹலோ....
மணி ஒன்னும் கேக்கல நீ யாருன்னு கேளு
ஹலோ....
அடேய்... நா ஜீவா டா
சொல்லு மச்சான்
சக்கர எங்கடா இருக்கா, சீக்கிரம் வா டா
டேய் நா மணி பேசுறேன் டா வந்துட்டே இருக்கோம்
சீக்கிரம் வா மச்சான் கையில காசுல்ல மொபைல் வச்சுதான் எல்லாம் வாங்கனும்
இதோ வரோம் டா
எறங்குற வழியில வாங்க டா நா அங்கதான் நிக்குறேன்
ஓகே டா ஓகே டா
ரொம்ப தேங்க்ஸ் ணா....
மீண்டும் ஒரு பத்து நிமிடம் ஆகவே ஜீவா கடுப்பானான்.
என்ன இவனுங்க இவ்ளோ நேரமா வாரனுங்க நாமளே தங்கத்தேர் பாத்துட்டு வேகமா வந்துட்டோம் இவனுங்க வரும்போது அதுவும் இருந்திருக்காது எவ்வளவு நேரம் எரிச்ச மயிராவுது ச்சைய்... ஃபோன குடுத்தது என் தப்பு மொதல்ல இவ்வாறு நினைத்து கொண்டிருக்கவே அவர்கள் வருவது தூரத்தில் தெரிய
கை காட்டினான் அவர்களும் பார்த்து அவனிடம் வந்தனர்.
டேய் மணி எவ்ளோ நேரம் டா வெயிட் பண்றது உங்களுக்கு சாமி...
கூட்டம் அதிகமாயிடுச்சா டா நாங்க என்ன பண்றது நாங்க எதோ வேணும்னு வந்த மாதிரி பேசுற
செரி விடு விடு, பஞ்சாமிர்தம்,அல்வாலாம் வாங்கப்போறேன் நீங்க வறீங்களா
இல்லடா, இவனுங்க கரண்டி, தட்டு அந்த மாதிரி வாங்கனுமா அந்த கட உள்ள இருக்காம் அத வாங்கிட்டு தான் வரனும்
நீயும் வறீயா போலாம்
இல்லடா நீங்க போங்க
அவர்கள் வெளியே செல்ல ஜீவா,
பஞ்சாமிர்தம் இங்கேயே நெறைய விக்குது அத வாங்கிட்டு மத்தத வெளிய போய் வாங்கிப்போம். எங்க வாங்கலாம்?
ஹான்.... வெளிய போறதுக்கு கொஞ்சம் முன்ன ஒரு கட தெரியுது அங்கப்போய் வாங்குவோம்.
அண்ணா... பஞ்சாமிர்தம் எவ்ளோ ணா
30ரூபா 40 ரூபா ல இருக்குப்பா ஒனக்கு எது வேணும்
40ரூவால ரெண்டு குடுங்க
இந்தப்பா வாங்கிக்க , 100 ரூவா குடுத்தியா
ஆமா ணா
மீதி 20ரூபாய் வாங்கி கொண்டு வெளியே வந்தான் எதிரிலேயே சிப்ஸ், அல்வா என அனைத்து திண்பண்டங்களும் விற்கும் கடையைப்
பார்த்து அங்கேயே வாங்கலாமென சென்றான்
வாங்க தம்பி என்ன வேணும்
நேந்திர சிப்ஸ் 1 கிலோ, லட்டு-5,
பொரி உருண்டை ரெண்டு பாக்கெட் குடுங்க ணா
வேற எதாவது வேணுமாப்பா
ஹான்... அல்வா 1/2 கிலோ குடுங்க
முறுக்கு ரெண்டு பாக்கெட் குடுங்க
வேற
அவ்ளோதான் ணா, மொத்தம் எவ்ளோ ணா
350₹ ப்பா
ஸ்கேனர் குடுங்க ணா அனுப்புறேன்
இந்தாப்பா
ஃபோன்பே செயலி மூலம் ஸ்கேன் செய்தான் ஸ்கேன் ஆகவில்லை
என்ன ஸ்கேன் ஆக மாட்டிங்குது ஒருவேள டவர் சரியா கெடைக்கலயா
இல்லையே நல்லாதான் கெடைக்குது அப்புறம் என்ன சரி
இன்னொரு முற ட்ரை பண்ணுவோம
என்ன இப்பயும் ஆகல
என்னப்பா ஆச்சு
ஸ்கேன் ஆக மாட்டிங்குது ணா
இன்னொரு ஸ்கேனர் தரேன் அதுல பண்ணி பாருப்பா
ஸ்கேன் ஆகுதாப்பா
ஹான்... ஆகுது ணா
350 என அடித்து பணம் அனுப்புவதற்கான குறியீட்டை இட்டான்
அனுப்புவதில் தோல்வி என வந்தது
மீண்டும் மீண்டும் முயற்சித்தான் தோல்வி என்றே வந்தது. அவனுக்குள் பயம் கலந்த பதற்றம், கோபம் என அனைத்தும் தொற்றிக் கொண்டது.
ஸ்ப்பா.... என்னடா இது இம்சையா இருக்கு காசு வேற போய் தொலைய மாட்டிங்குது, பர்ஸ்ஸ வேற வேன்ல வச்சுட்டு வந்துட்டேன்
ஸ்.....
மறுபடியும் கடைக்காரர்,
என்னப்பா ஆச்சு
காசு போக மாட்டிங்குது ணா
மறுபடியும் ட்ரை பண்ணி பாருப்பா என
ஸ்கேனரை துணியால் துடைத்து மீண்டும் வைத்தார்
சரி ணா,
மத்த ஆப்ல ட்ரை பண்ணி பாப்போம்
பற்களை கடித்துக் கொண்டே, என்னடா இது எதுல பண்ணாலும் போய் தொலைய மாட்டிது ஓத்தா.... இந்த மாதிரி நேரத்துல இப்படி ஆகனுமா
அவன் ஒருமாதிரி ஆவதைப் பார்த்த அவர் மீண்டும் என்னவென்று கேட்டார்
காசு போக மாட்டிங்குது ணா என பதட்டத்துடன் கூறினான்
பொறுமையா ட்ரை பண்ணுப்பா
மீண்டும் பல முறை அனுப்ப முயன்றான் இம்முறையும் அதே ரிசல்ட் தான்
முன்னைவிட அதிக பதட்டமும் என்ன செய்வதென அறியாமல் குழப்பமும் அடைந்தான்.
காசு போகவே மாட்டிங்குது ணா ஃப்ரண்ட்ஸ் யாருக்காச்சி ஃபோன் பண்றேன் இங்கதான் எங்கயாவது இருப்பாருனுங்க எதுவும் தப்பா நெனச்சுக்காதிங்க
சரிப்பா சரிப்பா
யாருக்கு ஃபோன் பண்றது ஹரிக்கு பண்ணுவோம், அழைப்பு விடுத்தான்
Not Reachable.....
ஸ்.... எல்லாம் ஒரே நேரத்துல வந்து தொலையுது
சதீஷ், அன்பு, சிவராமன், அய்யப்பன் பலருக்கும் அழைப்பு விடுத்தான்
அதே Not Reachable.....
ஸ்.... டென்ஷன் மயிராவுது
என்ன தம்பி ஆச்சு
யாருக்கும் ஃபோன் போகல ணா, மறுபடியும் ஸ்கேனர் காட்டுங்க ட்ரை பண்றேன்
ஆனால், இந்த முறை
அதிக நேரம் சுற்றியது, போயிடு போயிடு... Transaction Failed
என்ன மயிரு ஃபோன் இது
ஒம்மால ஒன்னும் போய் தொலைய மாட்டிங்குது
இப்ப என்ன பண்றது, இவனுங்க எவனாச்சும் இந்த பக்கம் வருவானுங்களா எங்க இருக்கானுங்க ஒரு மயிரும் தெரியல கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணலாமா அவனுங்க கண்ணுல படுறானுங்கலானு வேணாம் அவரு சங்கட்டம் படுவாரு எதுக்கு
இந்தாங்க ணா வச்சுக்குங்க காசும் போகல ஃபோனும் போகமாட்டிங்குது நா என்ன பண்றது என கூறிவிட்டு,
வாங்கிய அனைத்தையும் கடையில் வைத்துவிட்டு புறப்பட்டான்.
அப்போது ஒரு குரல் கேட்டது
அந்த குரலிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவனை வியப்பும் அதிர்ச்சியும் அடைய வைத்தது
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான்.
ஆம், அது கடவுளின் குரல்
என்ன ணா சொன்னிங்க மறுபடியும் ஒருமுற சொல்லுங்க
மென்மையான குரலில்,
இத எடுத்துட்டு போப்பா
காசு நாளைக்கு காலையில கூட அனுப்புனு சொன்னேன்
மீண்டும் அதிர்ச்சி இம்முறை அதிர்ச்சி மட்டுமல்லாமல்
அவனுக்கு மனது எதோ மாதிரி ஆனது கண்கள் கலங்கியது
அவன் தயங்கியே நின்று கொண்டிருந்தான்
என்னப்பா தயங்குற எடுத்துட்டு போ
இல்லணா.....
ஒன்னும் இல்ல தம்பி எடுத்துட்டு போ இங்க நெறைய பேர் இருக்குறதால சர்வர் அப்படி இருக்கும் நீ காலையில அனுப்பு
அவனால் ஒன்றும் பேச முடியவில்லை
என்ன சொல்வதென்றும் புரியவில்லை
தம்பி, எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்குப்பா எடுத்துட்டு போ
என்னோட மொபைல் நம்பர் வாங்கிக்க காலையில அனுப்பு போதும்
நீண்ட நேர தயக்கத்துக்கு பின்,
ரொம்ப நன்றி ணா....
உங்க நம்பர் குடுங்க ணா நா கோவில விட்டு வெளிய போய் அனுப்பிறேன்
நீ பொறுமையா காலையில கூட அனுப்புப்பா
ரொம்ப நன்றி ணா, நா போயிட்டு வரேன்
அங்கிருந்து அவன் நடக்க ஆரம்பித்தான் அப்போது அவனுடைய மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றின, வாவ்... என்ன மனுஷன் அவரு எப்படி என் மேல அவ்ளோ நம்பிக்கை வச்சுருக்காரு
அந்த எடத்துல நா இருந்திருந்தா கூட கண்டிப்பா இப்படி நடந்திருக்க மாட்டேன்.
என்ன கண்ணுலாம் கலங்குது நமக்கு ஆனந்த கண்ணீர் வருது போல...
இடது பக்கம் திரும்ப கரும்பு ஜூஸ் கடை இருந்தது, அண்ணா ஒரு ஜூஸ் குடுங்க
அதனை குடித்துக் கொண்டே,
இப்ப நமக்கு நடந்ததா பாக்கும்போது
அன்பே சிவம் படத்துல கமல் சொன்ன டயலாக் தான் ஞாபகம் வருது
"அந்த மனசுதான் சார் கடவுள்"....
மீண்டும் கண்கள் குளமாகியது
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்