தலைப்பு : கடன்.
கதிர் கல்லூரி சென்று வந்த சோர்வில் படுத்து கொண்டிருந்தான், அவன் ஓயாமல் இரும்பி கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்த தன் அண்ணனான அரவிந்தை தன் மெல்லிய குரலில் அழைத்தான் “இப்படி இவன் கூப்பிட மாட்டானே” என்று எண்ணிய அரவிந்த் உள்ளேன் நுழைந்தான் , தன் இடுப்பிலிருந்து ஒரு சிறிய சாவி எடுத்து தன் அண்ணனிடம் கொடுத்தான். “அலமாரியில் உள்ள அறையை திறந்து பார் இரண்டு ஃபையில் இருக்கு அதை எடுத்து படி” என்று சொன்னான் கதிர். அரவிந்த் வேகமாக சென்று அறையைத் திறந்தான் , பைல்களை எடுத்து தன் அறைக்கு சென்று அமர்ந்தான் . கதிர் அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது அவனது அப்பாவின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது “ஹலோ யாரு” என்றான் கதிர், “நாங்க லைஃப் இன்சூரன்ஸில் இருந்து பேசுறோம் நீங்க இன்சூரன்ஸ் பண்ணினா பின்னாடி உங்க குடும்பத்துக்கு உதவும் சார்”, “எங்க வரணும் சார்” , “கவர்மெண்ட் ஸ்கூல் பேக் சைடுல வாங்க”, “ஓகே சார் நாளைக்கு நான் வரேன்”, “ ஓகே தேங்க் யூ சார்” கதிர் போனை வைத்துவிட்டு தன் அப்பா வாங்கி வரும் கடனை எண்ணி கணக்கு போட்டான் பின்னாளில் இது மிகப்பெரிய பிரச்சனையில் முடியும் என்று எண்ணி இதற்கு இன்சூரன்ஸ் தான் கரெக்ட் என்று மனதில் நினைத்தான் பள்ளி முடிந்து இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு சென்ற கதிரை கண்டு ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார்கள் “ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் எதுக்கு இங்கே வந்திருக்கிறான்” என்றார்கள். “ சார் எனக்கு இன்சூரன்ஸ் போடுங்க”, “தம்பி நீ ஸ்கூல் படிக்கிற உனக்கு எதுக்கு இதெல்லாம்” ,“எனக்கு வேண்டும் சார் போடுங்க சார்” என்று கெஞ்சி கேட்டேன் அவர்களும் ஒப்புக்கொண்டனர் “ சரிப்பா எவ்வளவு போடலாம் சார்”, “ ஒரு இருப்பது லட்சம் போடுங்க சார்” என்றான் “தம்பி இருபது லட்சத்துக்கு எத்தனை சைபர் தெரியுமா” ,“ஆ அதெல்லாம் தெரியும் சார்” ,“நீ இவ்வளவு கேக்குறதுனால போடுறேன் சரியா மாதம் மூனு ஆயிரம் கட்டணம் முடியுமா” , “ஆ சார்” ,“எப்படி கட்டுவ”, “நான் வேலைக்கு போவேன் சார்”, “சரி இந்தா ஃபைல் எல்லாம் முடிஞ்சு போச்சு மாதம் மாதம் சரியா பணத்த கட்டிருப்பா சரியா”. கதிர் பணத்திற்கு என்ன செய்வது என்ற யோசனையுடன் வெளியே வந்தான். பள்ளிக்கு அருகில் உள்ள ஓட்டலில் மதியத்திற்கு மேல் பாத்திரம் கழுவும் வேளையில் சேர்ந்தான். வீட்டுக்கு தெரியாமல் அரை நாள் பள்ளி அரை நாள் வேலை என பள்ளி முடியும் நேரத்திற்கு சரியாக வீடு திரும்புவான், இதனால் யாருக்கும் சந்தேகம் வராமலேயே ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு தொடங்கினான். ஒருநாள் கதிர் வேலையை முடித்து வீடு திரும்பும் வேளையில் மயங்கி கீழே விழுந்தான் , அங்கு உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள் . தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் கதிரிடம் தனியாக பேச அழைத்தார் , “தம்பி உனக்கு ரத்த புற்றுநோய் இருக்கு ஆனா கவலைப்படாதே வீட்டில போய் சொல்லு, ஒரு இருபது லட்சம் செலவு பண்ண சரி பண்ணிடலாம்”, “டாக்டர் எங்களுக்கு ஏற்கனவே பதினெட்டு லட்சம் கடன் இருக்கு இந்த நிலைமையில இருபது லட்சம் செலவு பண்ண முடியுமா... இதற்கு வேறு வழி இல்லையா”, “ஒரே வழி இருக்கு மரணத்தை தள்ளி போடலாம்” என்றார் மிகவும் அதிர்ச்சி அடைந்தான் கதிர். பூப்பதற்கு முன்பே காய்ந்த மொட்டை போல உணர்ந்தான். தளராமல் “அதற்கு என்ன வழி” என்றான் “ பரவாயில்லை இந்த சின்ன வயசுல இவ்வளவு தைரியமா கேள்வி கேட்கிறாயே! இதுதான் முதல் வழி மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருக்கனும் , பிறகு தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்” , “அவ்வளவுதானா டாக்டர்” என்று கேட்டு வீடு திரும்பினான் கதிர் இதைப் பற்றி தன் குடும்ப நபர்கள் உட்பட யாரிடமும் சொல்லாமல் கல்லூரி படிப்பு வரை மாத்திரையும் இன்சூரன்ஸ் உட்பட தன் வருமானத்தை கொண்டு பின்பற்றி வந்து உள்ளான் என்பதை கண்ணீரோடு தெரிந்து கொண்டான் அரவிந்த் ஃபைலை மூடினான். பின்புறம் கடவுள் இல்லை என்று எழுதியிருந்தான் “ஆம் கடவுள் இல்லை” என்றான் அரவிந்த் , மற்றொரு ஃபைலில் மூனு லட்சம் கட்டிய இன்சூரன்ஸ் காண சான்றிதழ் , அதன் இறுதியில் தன் இறுதிச்சடங்குக்காக இருபது ஆயிரம் ரொக்க பணத்தையும் வைத்துள்ளான் கதிர் . அரவிந்த் வேகமாக கதிரின் அறைக்கு சென்றான் கதிர் வாயில் ரத்தத்துடன் இறந்து கிடந்தான் . ஒரு இருபது லட்சம் பணம் இருந்திருந்தால் தன் தம்பி உயிரோடு இருந்திருப்பான் என்பதை நினைத்து நினைத்து கதறி அழுதான். போகும்போது பணத்தை என்ன கொண்டா போக போறோம் என்று சொல்வெதல்லாம் முட்டாள் தான் அவர்கள் பணம் கொண்டு போவதில்லை என்றாலும் அவர்களை கொண்டு போக பணம் தேவை இல்லையா அதை உணர்ந்துதான் பணத்தை வைத்துவிட்டு போனான் போல கதிர்.
கதிரின் பணத்திலேயே அவனின் இறுதிச் சடங்கு முடிந்தது. கடன் பட்டோர் வாழ்க்கை கடலில் கரைந்த பெருங்காயம் போல என்பது உண்மைதான் என்று நினைத்தான் அரவிந்த். கதிர் பட்ட கஷ்டத்தின் பலனாக இன்சுரஸ் பணம் கதிர் குடும்பத்திற்கு கிடைத்தது. தன் கடன்களை எல்லாம் அடைத்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது கதிரின் குடும்பம். நான் மட்டும்தான் குடும்பத்திற்காக சிறுவயதில் இருந்து வேலைக்கு போறோம் என்று எண்ணி தினமும் வருந்தும் அரவிந்த் , தன் தம்பியும் சிறு வயதிலேயே இருந்து வேலைக்கு போறான் அது தெரியாமல் வேலைக்கு போ வேலைக்கு போ என்று சொன்னது எல்லாம் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது. கடன்களை எல்லாம் அடைத்தாலும் கூட தன் தம்பியிடம் பெற்ற கடனை என்றும் அடைக்க முடியாமல் போனதை நினைத்துக் கொண்டே கடினப்பட்டு கண்களை மூடி உறங்கினான் அரவிந்த்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்