logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சு.இராஜேந்திரன்

சிறுகதை வரிசை எண் # 176


பீடி எலேய் மதுர கதவை சாத்திக்கிட்டு தூங்கு ச்சைய் வீசள்ளக் கிளம்புது இந்தக் குளிரு முருகாயின் குரலும் குளிரைப் போலவே போர்வைக்குள் ஊடுருவ புரண்டு மல்லாக்க படுத்து எதிர் சுவரில் மணி பார்க்க கடிகாரம் போலக் கூட எதுவும் தெரியாமல் எழுந்து உட்கார்ந்து தலையணைக்கடியில் இருந்த தீப்பட்டியை எடுத்து விளக்கைப் பொருத்தினான். மங்கலான மஞ்சள் வெளிச்சம் பரவி நிரம்பியிருக்கிற பனியில் ஊடுருவ நேரம் பிடிக்கும் போலத் தெரிய போர்வையை தோள்களைச் சுற்றி போட்டுக் கொண்டே திண்ணைக்கு வந்தவனை ஏன்டா தூங்கலையா இரண்டு போர்வையினால் போர்த்தியும் நடுக்கமான குரலில் கேட்டாள் முருகாயி . எங்க கொசு மாதிரி குளிரும் காதுல ஙொய்யிங்குது விளக்கை ஓரத்தில் வைத்துக் கொண்டே சொன்ன மதுரை, எம்மா வெளியே கிடக்கிற விறகுதானா வேற இருக்கா போர்வையை விலக்கி எழுந்த முருகாயி அடுப்படியில விறகுக்கட்டு போட்டு இருந்தேன் பாரு எதுக்கு இப்ப பதிலே சொல்லாமல் திரும்பி உள்ளே போக பழைய கட்டிட பலகைகளை வைத்து அடித்து கதவு போல இருந்த கதவில் முட்டு முட்டாக ஒட்டியிருந்த சிமெண்ட் காரைகள் மதுரையின் கைகளில் உரச குளிரில் ஒன்றும் தெரியவில்லை ஆனால் காலையில் குளிக்கிறப்ப எரியும் என்று நினைத்து தேய்த்து விட்டுக் கொண்டே போய் சின்ன குறுக்குச்சுவரின் அந்தப் பக்கம் குனிந்து விறகு கட்டை எடுத்து வந்து வாசல் அடுப்பு அருகே போட்டான் எலி ஒன்று ஓடி மருதாணி வேலிக்குள் புகுந்தது நிமிர்ந்து வானம் பார்த்தான் நிலா சோம்பலின் உச்சத்தில் தெரிய பனியிரங்கும் மெல்லிய வெளிச்சத்தில் துளிர் விட்டிருந்த மருதாணி செடிகளின் இளம் பச்சையின் பளபளப்பை பார்த்துக் கொண்டே நின்றான் ஏன்டா இப்படி நிக்கிற அந்த போர்வையை தலையோடத்தான் போடேன் என்று முருகாயி கத்த எம்மா மருதாணி இலையை அரைச்சு கையில வச்சுக்கிட்டோம்னா பைத்தியம் கூட தெளிஞ்சிடுமாம் சரஸ்வதி மகால்ல சுவடி படிக்கிறப்ப ஒருத்தர் சொன்னாரு என்றவனிடம் ஆமா இப்படி நடுராத்திரியில் எழுந்து பாத்துக்கிட்டே நின்னின்னா பைத்தியம் தானா தேடிவந்து பிடிச்சுக்கும் போர்வை உதறிக் கொண்டே சொன்ன முருகாயி எழுந்து வாசலுக்கு வந்து நான் ஒரு பத்த வைக்கிறேன் நவுரு என்று அமர்ந்து இரண்டு பக்கமும் சமமாக விறகை வைத்து சற்று தூக்கி சாம்பலை ஒரு குச்சியால் கிளறிவிட்டு இவன் பக்கம் கையை நீட்ட தீப்பெட்டியை கொடுத்தான் முருகாயி சிறு குச்சிகளுக்கு நெருப்பு வைத்து ஊதி ஊதி பெரிய குச்சிகளுக்கு நெருப்புப் பரவச் செய்ய காடுகளின் ஆதித் தாய் ஒருத்தி இரண்டு கற்களை உரசுவது போன்ற அழகை பார்த்துக் கொண்டே நின்ற மதுரையை உட்காருடா நெருப்பு பிடிச்சுகிச்சு என்று சொன்ன முருகாயியின் எதிர்பக்கத்தில் போர்வையை நன்கு இழுத்து சுற்றிக் கொண்டு அடுப்பின் அருகே அமர்ந்து அடுப்பை தாண்டிய தீ மேல் நோக்கி எரிய கைகளை நீட்டி வைத்து வெப்பத்தை கன்னங்களுக்கு மாற்றினான் இந்த சட்டக்காரிங்க வீட்டுல கம்பளி போர்வையை தொவைக்க போடுறப்ப அப்படியொரு வேகம் வரும் எனக்கு தூக்கி அடிச்சு கும்மி துவைக்க முடியாது மலை மேலயா இருக்காளுங்க இதப் போர்திக்கிறாளுங்கன்னு நினைச்சுக்குவேன் ஆனா அது மாதிரி ஒன்னு வாங்குனா இந்த இந்த குளிர்காலத்தை ஓட்டிபோடலாம் டா என்று சொல்லி மதுரையை பார்த்த முருகாயி அவன் தீயையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து மதுரை தள்ளி உட்கார்ந்துக்க அனல் அதிகமாகுது பாரு. இப்ப டீ குடிச்சா நல்லா இருக்கும் ஆனா சீனியும் இல்ல டீ தூள் இல்லை என்று சலித்துக்கொண்ட முருகாயிடம் இப்பதான் சின்ன பாக்கெட்ல விக்கிறான்ல வாங்கி வச்சுக்கலாம் இல்ல என்றான் மதுரை அது என்ன டீ தூள் மாதிரியாடா இருக்கு எள்ளு கணக்கா வழவழன்னு பர்மாவில் இருந்து இங்க வந்தப்ப கிடைக்கிற வேலையை செஞ்சோம் தேயிலை பிடுங்க கேரளா பக்கம் கூட்டிட்டு போனானுங்க குட்டையா கனம் மொத்தமா செடிங்க வருச மாறாம நிக்குது. போய் புடுங்குகன்னு சொல்றான் காண்ராக்ட்காரன் போனா புடுங்க முடியல நம்ம அமரா இருக்காள்ல சின்ன அருவா இருந்தா குடுங்கன்னு கேட்டா காண்டாக்ட்காரன் எதுக்குடின்னான் புடுங்க முடியல பாதியா வெட்டிட்டு புடுங்குனா கையோட வந்திரும்ன்னா கான்ராக்ட்காரன் பாவிங்களா குடியே கெடுக்க வந்திங்களாடின்னு ஓன்னு கத்திக்கிட்டே வந்து இலையை புடுங்கனும் செடிய இல்லங்குறான் அதுவும் தெரியாம நின்னோம் ஏன் சொல்றேன்னா அங்க அரைப்பானுங்க டீத்தூளு வாசமா இருக்கும் என்று சொல்லி வேகமாக எரியும் விறகுகளை அடுப்பில் இருந்து கொஞ்சம் வெளியில் இழுத்து நெருப்பை தணிக்க, நீ ஒரு ஆளும்மா பர்மா டீ தூள் என்ன வேற மாதிரியா இருக்கும் எல்லாம் ஒன்னு தானே என்ற மதுரையிடம் என்ன எல்லாம் ஒன்னு அங்கன மாதிரி இங்க இல்ல ஒத்த வேட்டியும் தூண்டும் உடுப்பா இதெல்லாம் அங்க கலர் கலரா சட்டை உடம்போடு சக்குனு புடிச்சுக்குற கைலி வெத்தல சுண்ணாம்பு புயல இங்க எதுவும் சரி இல்லை உனக்கு தெரியுமா வடிச்ச சோத்த ஒரு முக்கா ஒன்னா உட்கார்ந்து தின்னுடுவோம் ஒரு வேளைக்குன்னா ஒரு வேளைக்கு தான் இஙக மாதிரி காலைக்கு இராவுக்குன்னு ஒன்னா வச்சுகிறது இல்ல வீட்டு வேலை பார்க்கிற இடத்துல உள்ளவனுங்க கனித்தனியா தான் சாப்பிடுதுங்க ஒன்னும் புரியல என்கிற முருகாயிக்கு இப்படி எல்லாத்துக்கும் பர்மாவோட ஒப்பீடு தான் இத்தனைக்கும் பர்மாவுலேந்து வந்து இருபது வருஷம் ஆச்சு, ஆனா தன் இளமை முழுக்க பர்மாவில் இருந்தவள் எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்ட மதுரையிடம் டேய் என் படுக்கையில சுருக்குப் பை இருக்கும்பாரு சொல்லிக் கொண்டே விறகுக்கட்டில் சுள்ளியை தேடிக் கொண்டிருந்தாள் திண்ணைக்கு சென்று இருட்டில் துழாவி எடுத்து வந்து சுருக்குப்பையை நீட்ட வாங்கி பக்கத்தில் வைத்துக் கொண்டால் முருகாயி. சுருக்குப் பையின் நிறம் அம்மாவின் நிறத்திற்கு மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது. அம்மாவின் கைக்கும் சுருக்குப் பையிக்கும் இடையான இணக்கம் எப்படின்னா எத எடுக்கணும்னு நினைக்கிறாளோ அத சரியா எடுப்பா எனக்கு இன்னும் என் பாக்கெட்ல இருக்கிறதை கூட சரியா எடுக்க தெரியல கேட்டா பர்மாவுலன்னு எதையாச்சும் சொல்லுவா என்று நினைத்து ஏம்மா பர்மாவுல சுருக்குப் பை உண்டா கேட்டுவிட்டு முருகாயியைப் பார்க்க எப்ப காசுன்னு வந்துச்சோ அப்பவே சுருக்குப்பையும் வந்திருக்கும்டா என்று சொல்லிக் கொண்டே சுருக்குப்பைக்குள் கையை விட அம்மா இப்படித்தான் பர்மாவைப் பற்றி அவளா சொன்னாத்தான் உண்டு இல்லாட்டி ஆமாம் போ என்னத்த பர்மான்னு பேச்சை முடித்துக் கொள்வாள். ஒருஅடித்தள்ளி குளிரும் அடுப்பிலிருந்து வரும் சூடும் இந்த நடுஇரவு விடியலை ஞாபகப் படுத்த முருகாயியைப் பார்த்தான். அவள் சுருக்குப் பையிலிருந்து ஒரு பீடியை உருவி எடுத்து பீடியின் தலையை அமுக்கி அடுப்பில் பத்த வைத்து வாயில் வைத்து இரண்டு ஊது ஊதி ஆழமாக இழுத்து புகையை உள்ளே நிறுத்தி மெதுவாக வெளியே விட்டுக் கொண்டே மதுரையிடம், கொப்பன் கணேஷ் பீடிதான் குடிப்பாரு எனக்கு அந்தக் காரம் சரிவரல அப்புறம் அவருதான் தாஜ்மஹால் பீடி வாங்கிக் கொடுத்தாரு என்று சொல்லிக் கொண்டே அவள் பீடியை மீண்டும் இழுத்துக் கொண்டிருக்க மனைவிக்கு தாஜ்மஹால் பீடி என்று சொல்லிக் கொண்டே மருதாணி இலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் மதுரை. சு.இராஜேந்திரன் 12/B,முதல் தெரு,அண்ணாநகர், விளார் சாலை, தஞ்சாவூர் – 613006 PH- 9940826808

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.