பால.உமா முருகாணந்தம்
சிறுகதை வரிசை எண்
# 173
படைப்பு சிறுகதை போட்டி: 2023
##########################
அம்மையார் ஹை நூன் பீவி
#######################
தலைப்பு:
#######
காலமெனும் நதியினிலே:
#####################
அசோகவனம் என்ற ஊரில் பாலாவும் வசுமதியும் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள்தான் இக்கதையின் கதாநாயகர்கள், இருவரும் பள்ளிதோழர்கள், ஊரின் பெயருக்கேற்ப இது ஒரு அழகான கிராமம்.
இக்கிராமத்தில் நிறைய அசோக மரங்களும் மற்ற மரங்களும் நிறைந்து காணப்பட்டன. சாலையின் இருமங்கும் காணப்படும் மரம் சாலையில் வெயிலை குறைத்து குளிர்ச்சியை தந்து கொண்டிருந்தது.
காலைக்கதிர் இலைகளின் இடைவெளியில் அப்பப்ப எட்டி பார்ப்பது மயில்தோகை போன்ற ஒரு அழகிய தோற்றத்தை சாலையில் தந்தது.
நிழல்தரும் ஊரின் எல்லையில் காணப்படும் ஊருணி எனப்படும் ஏரி நீர் நிலை, அதில் வந்து குளித்து செல்லும் பறவைகள், அதை ஒட்டி கரையில் இருக்கும் மரங்களில் ஊஞ்சாலாடும்விதவிதமானபறவைகள் மற்றும் அவற்றின் ஒலி கீதமாக கேட்கும்.
இதை ஒட்டிய சிறிது தூரத்தில் பள்ளிக்கூடம்,மொத்தத்தில் மக்கள் வாழ்வதற்கேற்ப அடிப்படை வசதி நிறைந்த அழகான கிராமம், வசுமதியின் அப்பாவும் பாலாவின் அப்பாவும் வணிகரீதியாக நல்ல நண்பர்கள், அதனால் அவர்கள் குழந்தைகளின் நட்பும் தொடர்ந்தது. சிறுவயதில் இருந்தே பாலாவிற்கும் வசுவிற்கும் இடையே படிப்பு மற்றும் இதர விசயங்களில் ஒற்றுமையும் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தது.
நாட்கள் சென்றது பன்னிரண்டாம் வகுப்பை எட்டிய நிலையிலும் இருவருக்குள்ளும் இளம் வயதிலிருந்தே அதே பாசத்தோடு நகர்ந்தது. ஆண் பெண் பேதம் அவர்களுக்குள்.ஏற்படவில்லை.இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே பாடப்பிரிவில் சேர்ந்து படித்து வந்தனர்.
வசுவை அவர்கள் உறவினர்கள் அவளின் தந்தை வேணுவிடம் பெண் கேட்டனர். இதை பாலாவின் தந்தை சரவணனிடம் வேணு கூறினார். இதைக்கேட்ட சரவணன் வேணுவிடம் நான் உன்னை ஒன்று கேட்பேன் ஆனால் நீ கோபப்படக்கூடாது என்றார்.வேணு உடனே கேள் என்றார். என் மகனிற்கு உன் மகளை மணமுடிக்க தருவாயா? எனக் கேட்டார்.
இதை கேட்ட வேணு நண்பனை கட்டி ஆரத்தழுவினார். நீ இதை கேட்கமாட்டாயா என ஏங்கிக்கொண்டிருந்தேன். இரு நண்பர்களும் மகிழ்ச்சியாக பேசிவிட்டு குழந்தைகளிடமும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும்.
நாளைக்கு வாழப்போகிறவர்கள் அவர்கள்தான் என்றார்கள்.அன்று மாலையே இருவரின் தந்தையும் அவர்கள் பிள்ளைகளிடையே இக்கருத்தை தெரிவித்தனர்.
இதை கேட்ட பாலா இப்ப கல்யாணத்திற்கு என்ன அவசரம். நான் நல்ல ஒரு வேலைக்கு போனபிறகு யோசிக்கலாம் என்றான்.
வசுவை பெண் கேட்கிறார்களாம், வேற ஒருவர்க்கு மனைவியனால் உங்க நட்பை தொடர முடியாது. நன்றாக யோசி என்று இருவர் தந்தையும் தனித்தனியே அவர்களுக்கு கூறினர். இருவரும் நீண்ட நேரம் தூங்காமல் யோசித்துக்கொண்டே விடியலில் தூங்கிபோயினர்.
கல்லூரி செல்லும் நேரம் நெருங்கிவிட்டதால், கல்லூரிக்கு இருவரும் விடுப்பு போட்டுவிட்டு ஒரு பூங்காவில் சந்திக்கலாம் என போனில் பேசி முடிவெடுத்தனர். அதேபோல அழகான அந்த பூங்காவில் இருவரும் சந்தித்து பேசி திருமணம் பற்றிய ஒரு முடிவை எடுத்தனர்.
இருவருக்கும் பெரிதாக காதல் எதுவுமில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் வைத்த நட்பும், பாசமும் பெரிதாக இருந்தது. மற்ற ஒர் ஆணோ, பெண்ணோ அவர்கள் வாழ்வில் வந்தால் நிச்சயமாக அவர்கள் நட்பு தொடராது, என அறிந்து இருவரும்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
முக்கியமான உறவுகளை கூப்பிட்டு எளிமையான முறையில் திருமணம் நடந்தேரியது. இருவரும் கல்லூரி இறுதி ஆண்டை முடித்தனர். பாலா ஒரு வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணி ஆற்றினார். வசுமதி இல்லதரசியாக இருந்தாள். பாலாவின் தந்தை பால் வியாபாரம் செய்து வந்தார்.
தனக்கு ஒரே தம்பியான ரகுவையும் நன்கு படிக்க வைத்து தன்னுடைய செலவிலேயே திருமணமும் செய்து வைத்தார். தனது பிரியமான மனைவியுடன் வேலையின் காரணமாக பாலு தனிக்குடித்தனம் வந்தார்.
கருத்து ஒத்த தம்பதியராயினும் வாழ்க்கை பத்து ஆண்டை கடந்தும் அவர்களுக்கு குழந்தை இல்லை.
நிறைய மருத்துவம் செய்தும் பலளிக்கவில்லை, சில கஷ்டங்களை பொது இடங்களில் வசு அடைய நேரிட்டாலும் கணவனின் அளவில்லா அன்பே அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
அப்பொழுது மன வளக்கலை பற்றி ஒரு நண்பர் மூலம் அறிந்த பாலா அதன் விபரத்தை அறிந்து மனைவியையும் அழைத்துக் கொண்டுபோய் இருவருமாக மன்றத்தில் சேர்ந்து அனைத்து பயிற்சிக்களையும் கற்று ஆசிரியர் தேர்வும் எழுதி அந்நிலையை எட்டினர்.
இன்று வரை இன்பமாக போன அவர்கள் வாழ்வில் நாளைவரப்போகும் பெருந் துன்பம் அறியாமல் பாலா மகிழ்வாக இருந்தான். மறுநாள் அதிகாலை மனைவி திடீரென ஏற்ப்பட்ட நெஞ்சுவலியால் துடித்தாள்.
வசுமதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.அவளை பரிசோதித்த டாக்டர் 25 நிமிடம் முன்பே அவள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்ட பாலா மயங்கி விழுந்தான்.
இந்த நிகழ்வால் நிலைகுலைந்த பாலா, வீட்டிற்கு வந்து அவளுக்கான காரியங்கள் எல்லாம் செய்துமுடித்தனர். உறவுகள் அனைவரும் கிளம்பிவிட்டனர் தாய், தந்தையும் மட்டும் அவனோடு 30 நாள் இருந்தார்கள்.
அதன் பின் அந்த வீட்டை காலி செய்து அவர்களுடன் புறப்பட்டான். மெல்லமெல்ல மனதை மாற்றுவதற்கு மனவளக்கலை மன்றங்களுக்கு சென்று வந்தான் 24 மணிநேரமும் தன்னுடன் இருந்த ஒரு ஜீவன் இப்ப இல்லை என்பது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேறொரு திருமணம் செய்துக் கொள்ள உறவினர்களும் தாய் தந்தையரும் வற்புறுத்த பாலா ஒத்துக் கொள்ளவில்லை.
தன் மனைவியின் நினைவை சுமந்து தனது வீட்டின் வருமானத்திற்காக அக்குபங்சர் மருத்துவம் பயின்று அதையும் தொழிலாளாக செய்து வந்தார். இப்படியே ஏழு வருடங்கள் ஓடின. தாயிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டது.
தலையில் மூளைக்கு செல்லும் நரம்பில் இரத்த கசிவு, இதை சரி செய்ய அறுவை சிகிச்சைக்கு 3 இலட்சம் கடன் வாங்கி செய்தார்.
வீட்டிற்கு வந்து 6 மாதத்திலேயே தாய் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். தொடர்ந்துவரும் துன்பத்தை கண்டு பாலா துவண்டுபோனான்.
மனைவி, தாயின் இழப்பு, கடன் எல்லாம் சேர்ந்து கழுத்தை நெறிக்க வாழ்க்கையின் மீது வெறுப்புற்று யாருக்காக வாழவேண்டும் என்ற அளவிற்கு மனஉளைச்சலுக்கு பாலா ஆளானா ன்.
எதிர்பாராதவிதமாக அவனுடைய வாழ்வின் திருப்புமுனையாக ஒரு தோழி கிடைத்தாள், யாரிடமும் அதிகம் பேசாத அவனுக்கு அவளுடைய அன்பும் தோழமையும் ஆறுதலாக இருந்தது.
நந்தினி என்ற சமூக சேவகியான அப்பெண் தேங்கிய கடலாக இருந்த அவனை உற்சாகப்படுத்தி வேலையிக்கும் மனவளக்கலைக்கும் சென்று பணியாற்ற சொன்னாள்.
கடவுள் உன்னை தனிமைபடுத்தி இருப்பது கஷ்டப்படும் மக்களுக்குகாக நீ கற்றறிந்த மனவளக்கலை மூலம் அவர்களின் உடல்நலத்தை பேண உடற்பயிற்சி சொல்லிக் கொடு, மனதை வளப்படுத்த அகத்தவத்தை சொல்லிக்கொடு, மற்ற உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபட நீ உதவி செய் என்று கூறியதோழியை நன்றியுணர்வுடன் கை கூப்பி தனது வேலையை பாலா தொடங்கினான்.
அன்றிலிருந்து மனதிற்குள் உறுதிமொழியேற்று அப்பகுதியில் உள்ள அனைத்து மன வளக்கலை மன்றத்திற்கும் சென்று அனைத்து பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தான்.
இந்த பூமியில நான் பிறந்ததற்க்கான பயன், துன்படுவரின் துயர் நீக்குவது தான் இதனால் ஆரோக்கியமான மனிதன் உருவாகிறான், அறிவுதிறன் ஓங்கி சமுதாயம் மேம்படும். என்ற தெளிவான மனநிலையோடும், தோழியின் உதவியோடும் அவனுடைய பயணம் இன்றும் நதி போல வறண்ட இடங்கண்டு பயணிக்கிறது.
கதையின் நீதி :
############
பூமியில் தோன்றிய ஒவ்வொரு மனிதனுக்கும் பிரபஞ்சத்தையும் மக்களையும் காக்கும் கடமை இருக்கிறது. அறிந்து செயல்பட்டு அமைதியான மகிழ்வான உலகம் படைக்கலாம் என்ற நீதியை சொல்கிறது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்