இளமதி பத்மா
சிறுகதை வரிசை எண்
# 163
நதி மூலம்!
நான்கு நாடகளாக தொடர்ந்து மழை பெய்ததில் மெல்லிய விசில் சத்தம் போல் சந்திராவிறகு மூச்சிறைத்தது. "இந்த வீசிங் ஆளைக் கொல்லாமல் கொல்லும் வியாதி. நூறு பவுனுக்கு ஆசைப்பட்டு பெருமையாக மகனுக்குக் கட்டி வைத்து சிறுமையைத் தேடிக் கொண்டேன்" என்று மாமியார் புலம்புவதைக் கேட்டுக் கேட்டு சந்திராவிற்கு சலித்து விட்டது. குழந்தை பிறந்தால் புருசனோடு ஜாலியா இருக்க முடீயாதுனு நினைக்கிறா போல என்று வருவோர் போவோரிடமெல்லாம் குறைப்பட்டுக் கொள்வதை வழக்கமாகவே காத்திருந்தாள்.
" இன்னுமா குளிக்கிறாய்… ? டாக்டரைப் பாரேன்! காலகாலத்தில் பெற்றல்தான் வளர்க்க முடியும்!" என்று பலர் பல விதமாய் கூறும் போது, " நான் தள்ளிப் போடலை. கரு தங்கலை" என்று முணுமுணுப்பாள்." மாமியார் கிழவியிடம் தன் ஆற்றாமையை கொட்டித் தீர்த்து விட வேண்டும் என்ற ஆவேசத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொள்வாள். தன் கணவன் கதிரவனிடம் கோபப்படுவாள்.
" உங்கம்மாவை அதட்டி வைங்க! குழந்தையை செய்தா வச்சுக்க முடியும்…? குறை சொல்லிட்டே இருந்தால் டென்சனாகுது. எனக்கெல்லாம் பொறுமையில்லை. உதறி விட்டுட்டு போய்விடுவேன். காலத்துக்குக் கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்கேன். உங்கம்மாவோட இறங்கி சண்டை போட முடியாதா… ? சொல்லி வைங்க. தேவையில்லாமல் பேசினாங்கனா இனி நல்லா இருக்காது."
" சந்திரா அவங்க குணம் அப்படித்தான் அணுசரிச்சு போயேன்." என்ற மதன் இப்பெல்லாம் சயின்ஸ் நிறைய டெவலப் ஆயிடுச்சு. குழந்தை பெத்துக்க நிறைய வழி இருக்கு." என்றவன் சந்திராவை கீழ் கண்ணால் பார்த்தான்.
" உங்களுக்கென்னக் குறை…?"
" இருக்கு அதனால்தான் சொல்றேன்"
" என்ன உளறீங்க…?"
" உளறலை! உண்மையைச் சொல்றேன்! ஒரு உயிரை என்னால் உருவாக்க முடியாதுனு தெரிந்த போது அதிகம் மனசு வலிச்சுது! கல்யாணம் பண்ணிக்கிறதில்லைனு முப்பது வயது வரை கடத்தினேன். ஆனால் அம்மாவின் அழுகை என்னைக் கட்டுப்பட வச்சுது. தவிர உன்னைப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. மறுக்க முடியலை!"
" இதை ஏன் மறைச்சீங்க… உங்கம்மாவிடம் உண்மையை எடுத்து சொல்லி புரிய வைங்க." என்றாள் விரக்தியான குரலில்.
" இல்லை சந்திரா. அவங்க ஹார்ட் பேசண்ட். ஏதாவது ஆயிடுச்சுன்னா எனக்குக் காலம் முழுவதும் உறுத்தலா இருக்கும்"
" இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சு என்னை கல்யாணம் செய்தது
உறுத்தலா இல்லையா…?"
"இருப்பதால்தான் இனியும் மறைக்க வேண்டாம்னு சொன்னேன்."
" நமக்குக் கல்யாணமாகி ஒரு வருசம்தான் ஆனது! இப்பவே உங்கம்மா என்னை மலடினு பலமுறை சொல்லிட்டாங்க. வலிக்குதுங்க!"
" ஸாரி சந்திரா எனக்காக அவங்க பேசினதை மறந்துடு. நீ மட்டும் சரினு சொன்னால் அடுத்த வருடம் நம்ம வீட்ல ஒரு குழந்தை இருக்கும்! உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.
" இல்லைங்க. எனக்கு அருவருப்பா இருக்கு! யாரோடதோ, எப்படிப்பட்டவனோ, எதுவுமே தெரியாமல்… வேண்டாங்க என்னை வற்புறுத்தாதீங்க."
" உனக்கு இதுதான் பிரச்சனைனா, எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருத்தர் இருக்கார். நீ முதலில் ஓகே சொல்லு. அந்த நபரை பார்த்த பிறகு முடிவு பண்ணலாம். சாதாரணமா ஆள் யாரு சொல்ல மாட்டாங்க. பார்க்கவும் அனுமதிக்க மாட்டாங்க. முயற்சி செய்வோம்! சரியா…? ஏன் இவ்வளவு இறுக்கமா இருக்கே… சிரியேன்." என்று மனைவி சந்திராவை கலகலப்பாக்க முயன்றான். குப்புறப்படுத்து உடல் குலுங்க அழுதவளை சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனான். மருத்துவரை சந்தித்து விளக்கமாகக் கேட்ட பிறகு, இது வெளியே தெரிந்தால் என் கதை கந்தலாகிவிடும் மதன் ஜாக்கிரதை! என்று எச்சரித்து அனுப்பிய மருத்துவர், ஒரே வாரத்தில் ஒரு நாளையும் தேதியையும் குறித்து அன்று வரும்படி அழைத்தார்.
சந்திரா மாமியாருக்கு சந்தேகம் வராதவாறு மிக மிக கவனமாகப் பேசினாள். " அத்தை உங்கள் பேரனைத் தூக்கத் தாயார இருங்க." இன்று டாக்டர் பார்க்கப் போறோம். குறை யாருக்குனு தெரிஞ்சுடும் என்றவள் தன்னையும் தயார்ப்படுத்திக் கொண்டாள். பரஸ்பரம் அறிமுகமாகும் போது, இருவருக்கும் ஒரு சங்கடம் வரவே செய்யும்! மதனுக்கும் வரும்! தேவையில்லாமல் தலைவலியை வருவித்துக் கொள்கிறோமோ என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் பார்த்ததும் விருப்பமில்லை என்று சொல்லி விடலாம் என்று முடிவோடு இருந்தாள்.ஆனால் இறைவனின் முடிவு தப்பாதே. நமக்கானதை நாம் அனுபவித்துதானே ஆக வேண்டும்!
மதன் சொன்னது போல் இரண்டு வாரங்கள் போக்குக் காட்டிய டாக்டர், இறுதியில் சேமிப்பிலிருந்த சற்று மேம்பட்ட வீரிய விந்தணுக்கள் சிலதை சந்திராவின் விருப்பத்திற்கு மாறாக கர்ப்பப்பையினுள் செலுத்திய போது,மயக்கமானாள்.
********* ********* ********* ********* *******
விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை வைத்து திருப்தி பட்டுக்கணும் என்ற அம்மாவின் பேச்சு எரிச்சலூட்டினாலும், விருப்பத்திற்கு மாறாக நடந்தத் திருமணத்தில் ஈடுபாடு அற்ற தன்மை இருந்தாலும், காலப் போக்கில் சமன்படுத்திக் கொண்டு வாழத் தொடங்கிய சந்திராவிற்கு கணவனின் செய்கை எரிச்சலூட்டியது. ஒரு முறைக்கு இருமுறை முயற்சி செய்தும் கரு கலைந்து போனதில் சற்று நிம்மதியாகக் கூட இருந்தது.
" துக்கிரி! இவள் தரிசு நிலம் டா. அப்பன் வீட்டுக்கு அனுப்பிடு. உனக்குப் பெண்ணா கிடைக்காது…?" என்று மாமியாரின் முன்பாக ஆவேசமாய் வந்து நின்றாள். "தரிசு நிலமா நான்… உங்கள் பிள்ளைக்குத்தான் குறை! இரண்டு முறை செயற்கை கருத்தரிப்புதான்! மனசுக்குப் பிடிக்கலை கலைஞ்சு போச்சு. உங்களோடு சேர்ந்து கர்மாவை கழிக்கணும்னு என் தலையெழுத்து. என்னை தயவுசெய்து விட்ருங்க." என்று கத்திய சந்திராவை அணைத்துக் கொண்டான் மதன்.
" ஏன் இப்படி சத்தம் போடுறே சந்திரா… உன் விருப்பத்திற்கு மாறாக இனி எதுவும் நடக்காது. அம்மா ஆற்றாமையில் பேசியதை பெரிய படுத்தாதே ப்ளீஸ்… ப்ளீஸ் என்று கெஞ்சினான் மதன்.
" என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க ப்ளீஸ் " என்ற சந்திரா எழுந்து சென்று அறைக்கதவை மூடிக்கொண்டதும், அம்மாவின் அருகில் சென்று என்னை மன்னிச்சுடு மா." என்ற மகனின் தலையைக் கோதியபடி, கண்ணீர் உகுத்தாள் கமலா. துக்கம் தொண்டையை அடைத்தது பேச்சில்லை!
சந்திராவின் மனது பாறாங்கல்லாய் கனத்தது. ஒரு முடிவோடு துணிகளை அடுக்கினாள். கால் டாக்சிக்கு புக் செய்து விட்டு முகம் அலம்பியவள் ஒரு முறை கணவனைப் பார்த்தாள். " நான் புறபடுறேன் மனசு சமாதானமாகும் போது வரேன். என்னைத் தேடி வர வேண்டாம்! " என்றபடி படியிறங்கினாள்.
" சந்திரா… என்றழைத்த மாமியாரைத் திரும்பிப் பார்க்காமல் டாக்சியில் அமர்ந்ததும் பிளாக் செய்து வைத்திருந்த மனோஜின் நம்பருக்கு போன் செய்தாள். " ஹலோ… எனக்கு உன்னைப் பார்க்கணும்! "
" எதுக்கு…? நான் உயிரோடு இருக்கேனா… இல்லையானு பார்க்கவா…?"
" மனோஜ் என் நிலைமைப் புரியாமல் பேசாதே. உன் ஃபிரண்ட்ஸ் இருந்தால் உடனே அனுப்பிடு. உன்னோட கொஞ்சநாள் தங்கப் போறேன்."
" இதென்ன விபரீதம் சந்திரா… நீ திருமணமானவள்! உன் கணவனுக்குத் தெரிந்தால் என்னாகும்… யோசிச்சியா…? எதுக்கு வரே… ?" என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் போனை கட் செய்தாள்.
மனோஜ் தர்மசங்கடமாய் உணர்ந்தான். கண்களால் சிரித்து, வார்த்தைகளாய் பேசி காதலை வளர்த்தவள், ஆறே மாதத்தில் என்னை மறந்துடு என்று விலகிச் சென்றவள், இப்போது ஏன் வருகிறாள். அதுவும் ஓராண்டுக்குப் பிறகு…ஒரு வேளை டைவர்ஸ் ஆகிவிட்டதா.. ? அடுத்த மாதம் முகூர்த்தம் வைக்கலாமா தம்பி, லீவு கிடைக்கும் பா…என்று கேட்ட அம்மாவின் நினைவு வந்ததில் தடுமாறினான். வாசலில டாக்சி சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தான். டாக்சியை அனுப்பி விட்டு கையில் சூட்கேஸூடன் வந்த சந்திராவை பார்த்தான். சிறிதும் தோற்ற மாறுதலின்றி அப்படியே இருந்தாள். முகத்தில் வருத்தத்தின் சாயல்.
" எப்படி இருக்கே மனோஜ்…?"
" இருக்கேன்." " நீ சந்தோசமாய் இருக்கியா…?"
" வாழணுமேனு வாழறேன்."
" கணவர் நல்லவர்தானே "
" ம்ம்ம் நல்லவர்தான்"
" ஏதாவது பிரச்சனையா…?"
ஒரு வருட கதையை அரைமணி நேரத்தில் சொல்லி முடித்த சந்திரா," உன் மூலம் எனக்கொரு குழந்தை வேணும் மனோஜ்" என்றதும் திடுக்கிட்டான்.
" இல்லை சந்திரா. அது சாத்தியமில்லை!
" ஏன்…"
" நீ வேறொருவரின் மனைவியான பின் எப்படி…?"
" ஓ… அவ்வளவு உத்தமனா நீ… என்னை பணிய வைத்து அனுபவித்தது மறந்து விட்டதா… "
" நீதான் என்னை மறந்து துறந்து ஓடினாய். நானில்லை சந்திரா. தவிர என் வாழ்க்கை வேறொரு பெண்ணுடன் இணையப் போகிறது. மறுபடியும் நம் உறவு தொடர வேண்டாமே… உன் வழியில் இனி நான் வர முடியாது."
" முட்டாளே… உன் வாழ்க்கை யாரோட இணைந்தாலும் நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் உன்னோடு இருக்க அனுமதி கொடு."
" நான் எச்சில் இலையில் சாப்பிடுவதில்லை"
" நீ சாப்பிட்ட இலைதான் இது!
" சந்திரா…"
" பசிக்கிறது மனோஜ் சாப்பிட ஏதாவது இருக்கிறதா…?" என்றதும் மனோஜ் செருப்பை மாட்டிக் கொண்டு படியிறங்கிச் சென்றதும் சந்திரா புடவையிலிருந்து நைட்டிக்கு மாறினாள். மனோஜ் டிபன் பொட்டலங்களோடு வந்த போது படு கேஷூவலாக சோபாபில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
" உனக்குப் பிடித்த சோளாப்பூரி மசாலா சென்னா. சாப்பிடு பேசுவோம்"
அமைதியாக சாப்பிட்டு முடித்த சந்திரா, " என்னைப் பார்த்தால் பயமா இருக்கா மனோஜ்… ?"
" இல்லை! கவலையாக இருக்கிறது."
" கவலைப்படாதே. உன்னை விட என் கணவர் நல்லவர்தான். எங்கடிப் போறேனு ஒரு வார்த்தை கேட்கலை." என்ற போது அலைபேசி அழைக்க எடுத்து பேசினாள்.
" எங்க இருக்க சந்திரா… ? உன் அப்பா போன் செய்தார். உன் தங்கையை நாளை பெண் பார்க்க வருகிறார்களாம். உன்னையும், என்னையும் வரச்சொன்னார்."
" வர முடியாதுனு சொல்லுங்க. நான் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கேன். என் பீரோவில் ஒரு லட்டர் எழுதி வச்சிருக்கேன் படிச்சுப் பாருங்க. நாளைக்கு போன் பண்றேன் என்றவளை உற்றுப் பார்த்தான் மனோஜ். " நம் காதலை சொல்லிட்டியா சந்திரா…?"
" சகலத்தையும் சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டேன். இப்ப உன்னோட இருப்பதை கூட சொல்லிட்டேன்."
" உன் கணவர் உன்னை வெளியே போடினு சொல்லிட்டா என்ன செய்வாய் சந்திரா…?"
" ஹா ஹா ஹா… பயப்படாதே! இங்கு வந்து நிற்க மாட்டேன் என்ற சந்திரா மனோஜை ஒரு முறை ஏற இறங்க பார்த்தாள். கொஞ்சம் குண்டாய்ட்டே… என்றவள் மனோஜின் தோளில் சாய்ந்து கொண்டாள். " நம் வாழ்க்கை இப்படி திசை மாறும்னு நான் நினைக்கலை." குட்நைட் மனோஜ் என்றபடி ஒரு குஷனை எடுத்து தலைக்கு வைத்தபடி ஹாலில் கை கால் நீட்டி தரையில் படுத்துக் கொண்டாள்.
******** ******** ********** ********* *********
அத்தியாயம் - 2
ஒவ்வொரு நாளும் நெருப்பின் மேல் நிற்பது போல் உணர்ந்த மனோஜ், சந்திராவின் பிடிவாதம் அறிந்தவனாய், " எங்காவது வெளியூர் போகலாமா சந்திரா…என்று கேட்டான். " ஏன்…. இந்த வீட்டில் நீயும் நானும் காதலை மட்டுமா பரிமாறிக் கொண்டோம்….?"
" சந்திரா நடந்த நிகழ்வுக்கு நான் மட்டுமா பொறுப்பு…?"
" நானும்தான் மனோஜ்! மனம் முழுவதும் ரணமாகி வந்திருக்கிறேன். என் கணவரின் குறையை ஊருக்கெல்லாம் பறை சாற்ற விரும்பவில்லை. அதோடு மலடி என்ற பட்டமும் எனக்கு வேண்டாம். செயற்கை முறையில் யாரோ ஒருவரின் உயிரணுவை என் வயிற்றில் தாங்க விருப்பமில்லை. அதற்காகத்தான் உன்னைத் தேடி வரும்படி ஆயிற்று."
" எனக்கு இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்க முடியுமா…? என்ற மனோஜ், எனக்கென்னவோ இதில் ஏதாவது பிரச்சனை வருமோ என்று பயமாக இருக்கிறது."
" மனோஜ் அத்துமீறி அன்று நடந்து கொள்ளும் போது வராத பயம் இப்போது மட்டும் வருகிறதா… உன்மீதிருந்த காதல் தொலைந்து போய் வெகு காலமாச்சு. குழந்தைக்காக மட்டும்தான் வரம் கேட்டு வந்திருக்கிறேன். காலம் கடத்தாதே ப்ளீஸ்" என்ற சந்திராவின் கெஞ்சலுக்கு ஓரிரு நாட்களில் மனோஜ் பணிந்தான். . காதல் அங்கே புனர்ஜென்மம் எடுத்ததில் உணர்வுகளின் வேட்கை அங்கே பரிபூரணமானது. மனம் நெகழ்ந்த நிலையில் மனோஜின் மடியில் தலை சாய்ந்திருந்தாள் சந்திரா. கண்கள் மூடியிருக்க, கண்ணீர் வழிந்த்து! மனோஜ் அவளைத் தூக்கி அணைத்துப் கொண்டான். " எத்தனை நாட்கள் என்னோடு இருப்பாய்…?" கிசுகிசுப்பாய் கேட்டான்.
" தெரியலை மனோஜ்! என் கணவர் அழைக்கும் வரை அல்லது குழந்தை உருவாகும் வரை."
" சுயநலப் பிசாசா நீ… என்னைப்பற்றி அன்றும் யோசிக்கவில்லை. இன்றும் யோசிக்கவில்லை."
"என்ன செய்ய மனோஜ்… பெண் சூழ்நிலை கைதியாகவே வாழ வேண்டி இருக்கிறதே."
" நீ இங்கு வராமல் இருந்திருக்கலாம் சந்திரா. உன்னை இனி பிரிந்து வாழ முடியுமா என்று தெரியவில்லை! "
" இல்லையில்லை. அப்படி யோசிக்காதே! அம்மாவின் சொல்படி திருமணம் செய்து கொள் மனோஜ். நம் உறவு தற்காலிகமானது அதை நீடிக்க நினைக்காதே. ஆசையும், மோகமும் தீர்ந்த பின் சலிப்பாகி விடும்!"
" இருக்கலாம்! ஆனால் காதல்…?"
" நான் இங்கிருக்கும் வரை கூடிக்களித்து தீர்த்து விடு" என்ற சந்திராவை புரியாமல் பார்த்தான். " நீ என்னை வதைக்கிறாய்! தயவுசெய்து போய்விடு." என்று விலகி அமர்ந்தான். எண்ண ஓட்டங்கள் எங்கெங்கோ பறந்து சென்றது. ஒரே ஊரில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் ஒரு வருடம் கழிந்த நிலையில், பார்த்ததும் விசிறி விட்ட நெருப்பாய் காதல் பற்றிக் கொண்டது. இதை அணைக்கும் மார்க்கம் உண்டா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கையில், சந்திராவால் எப்படி வெகு இயல்பாக இருக்க முடிகிறது…?
" என்னாச்சு மனோஜ்… வாழ்க்கை விசித்திரமானது! நம் எண்ணம் போல் வாழ முடியாது. ஆகையால் நிறைய யோசிக்காதே. நா வறட்சிக்கு தண்ணீர் போதும்! வறண்ட நிலத்திற்கு மழை வேண்டும்! அம்மழையாய் நீ மட்டுமே இருக்க முடியும்! புரிந்து கொள்! வீணாக மனதை போட்டு வருத்திக் கொள்ளாதே." என்ற சந்திரா மனோஜின் அருகில் வந்து அணைத்துக் கொண்டாள். அணையாத நெருப்பாய் உள்ளே கனன்று கொண்டிருந்த காதலும் காமமும் கொழுந்து விட்டு எரிய இருவரும் மூழ்கி மீண்ட போது, உயிர்த்துளி ஒன்று உருண்டோடி சந்திராவிற்குள் பாதுகாப்பாய் தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டது.
அதிவேகமாய் நாட்கள் விரைய, மதன் தன் மனைவி சந்திராவின் வரவிற்காகக் காத்திருந்தான். குழந்தை, குழந்தை என்று தன் அம்மா கமலா கூப்பாடு போடாமல் இருந்திருந்தால், ஒரு குழந்தையையைத் தத்தெடுத்திருக்கலாம். அவசரப்பட்டு ஏதோ செய்யப் போக, விபரீதமான விளையாட்டை சந்திரா மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டாள் என்று மனம் வெதும்பிய நிலையில் இருந்த போது சந்திரா வந்து நின்றாள். மனைவியோடு பேச முடியாமல் இறுக்கமாய் இருந்தான்
மதன். கணவனின் உணர்வை புரிந்து கொண்டவளாக மெளனமாக இருந்தவளை மாமியார் கமலா அவளை அன்புடன் வரவேற்றாள். உன் தோழி வீட்டில் எல்லோரும் சுகமா சந்திரா…? மதன் விவரமாய் சொன்னான். உன் தோழி டாக்டராமே ஆரம்பித்திலேயே அவளை கலந்து பேசியிருக்கலாம். உன்னை பரிசோதித்தாளா… என்ன சொன்னாள்… ?"
" அம்மா அவளை ரிலாக்ஸ் பண்ண விடும்மா. வந்தவுடன் வரிசையா கேள்வி மேல் கேள்வி கேட்டால் அவள் என்ன செய்வாள் பாவம்! தளர்ந்து போய் வந்திருக்கிறாள் என்ற தொணியில் நக்கல் தெறித்ததை கவனித்த சந்திரா கணவனை ஆழமாய் பார்த்தாள். மாமியார் முன் பேச வேண்டாம் என்று அறைக்குள் சென்று அமர்ந்தாள். பின்தொடர்ந்து வந்த மதன், கதவை அறைந்து சாத்தியதில் அவன் கோபம் உணர்ந்து அமைதி காத்தாள். "ஆனாலும் உனக்கு இத்தனை நெஞ்சழுத்தம் கூடாது. காதலித்த விசயத்தை சொல்லியிருந்தால் உன்னை அவனோடு சேர்த்து வைத்திருப்பேன்.
" உங்களைப் பற்றிய உண்மையைச் சொல்லி திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே. ஏன் நிறுத்தலை…? உங்கள் உடல் இச்சைக்கு வேறு பெண் கிடைக்க மாட்டாள் என்ற எண்ணம்தானே…"
" ஆமாம்! அப்படித்தான் வைத்துக் கொள்! நான் திருமணம் ஆகும் வரை எந்த பெண்ணையும் சிநேகித்ததில்லை. ஆனால் நீ…"
"உண்மையை சொன்னதற்கு குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரணை நடத்துகிறீர்களா…
" வாயை மூடு. அம்மாவிற்குக் கேட்கப் போகிறது! உன்மேலிருக்கும் அக்கறைப் போய்விடும்!"
" ஆமாம் ரொம்ப அக்கறைதான்!" என்று முணுமுணுத்தபடி கைப்பேசியில் மனோஜை அழைத்து பத்திரமாக சேர்ந்த்தை தெரிவித்தாள். மனைவியை முறைத்துப் பார்த்த மதன், " உன் திருவிளையாடலை நிறுத்துவாயா அல்லது தொடர்வாயா என்று தெளிவுப்படுத்தினால் நல்லது" என்றதும்,
" இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை…?! சந்திரா பேசி முடிக்கும் முன் கன்னத்தில் அறைந்தான். " எதிர்த்து பேசினே தொலைச்சுடுவேன்." என்றவன் கோபமாய் வெளியேறிச் செல்ல, கன்னத்தில் கை வைத்தபடி சந்திரா சரிந்து அமர்ந்தாள்.
********* ********* *********** ********* *********
மதனுக்கும் சந்திராவிற்கும் இடையில் பனிப்போர் தொடர்ந்தவாறு இருக்க, வாந்தியும், மயக்கமுமாய் கர்ப்பகால அவஸ்தையை பரிபூரணமாய் அனுபவிக்கத் தயாரானாள். முகம் தெரியாத ஒருவனின் விதையை விதைக்கத் தயாராக இருந்த மதன், சந்திரா தன் காதலனோடு சேர்ந்திருந்த நாட்களை எண்ணி. உள்ளுக்குள் குமைந்தான். நாட்களும், வாரங்களும் மாதங்களாகப் பறக்க, சந்திராவின் வயிறு மேடிடத் துவங்கியதில் மாமியார் கமலாவிற்கு ஏகத்துக்கு சந்தோசம்! ஏதோ இந்த மட்டில் தனக்கொரு பேரனோ பேத்தியோ பிறந்தால் போதும்! என்றிருக்க, மதன் தன் மனைவியின் குழந்தையை தன் குழந்தையாக ஏற்க முடியுமா…? என்ற கேள்வி எழவே செய்தது.!
வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் முடிந்து சந்திரா பிரசவத்திற்காகத் தாய்வீடு சென்ற பின், ஒரு மாலை வேளையில் அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்தபடி சந்திரா பற்றிய உண்மைகளைச் சொல்லி அழுத போது, மகனின் தலையை வருடிக் கொடுத்தாலே தவிர ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.
மறுநாள் பெண் குழந்தை பிறந்த செய்தியை மாமனார் சொன்ன போது அதை சாதரணமாக எடுத்துக் கொண்ட மதன், மாலையில் வீடு திரும்பும் போதுதான் அம்மாவிடம் சொன்னான்.
" என்னப்பா… இவ்வளவு தாமதமா சொல்றே… பிரசவம் பெண்ணுக்கு மறுபிறப்பு மாதிரி. உடனே புறப்படு போய்ட்டு வந்துடுவோம் என்ற அம்மா கமலாவை வருத்தத்தோடு பார்த்தான்.
" அது என் குழந்தை இல்லையேம்மா."
" மதன்… இப்படி நீ நினைப்பது மகா தவறு! உனக்காக நீ சொன்னபடி செயற்கை கருத்தரிப்பிற்கு சம்மதித்து வந்த போது நன்றாக இருந்ததா… அப்படிப் பார்த்தால் அதுவும் உன் குழந்தை இல்லையே… அதை ஏற்றுக் கொள்ளத் தயாராகத்தானே இருந்தாய். ஏன்… ஆண் என்ற ஆணவம்தானே… செயற்கை கருத்தரிப்பு தோல்வியில் முடிந்த பிறகுதானே சந்திரா இந்த முடிவெடுத்தாள்! யாருக்காக…?
உனக்காகத்தான்! நீ குமுறி அழுதாயே அதற்காகத்தான்! நதி மூலம், ரிஷி மூலம் ஆராய்ந்தால்… நிம்மதியற்றத் தன்மைதான் நிரந்தரம்! அம்மாவின் பேச்சில் சற்று தெளிந்தவனாய் உடனே புறப்பட்டான்.
மருத்துவமனையில் மயக்கம் தீராத நிலையில் மனைவியைப் பார்த்ததும் மனம் நெகிழ்ந்தான்! உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தைத் தடவிய அந்த நொடி அவன் கண்கள் கலங்கியது! நிறை மனதுடன் அம்மாவைப் பார்த்தான்.
என்னை மாதிரி இருக்கா இல்லையாம்மா என்ற போது… விழித்துக் கொண்ட சந்திராவின் கையை ஆதரவாய் பிடித்தபடி, ஐ லவ் யூ என்று கிசுகிசுப்பாய் கூற, சந்திராவின் முகத்தில் செம்மை படர்ந்தது!
இளமதி பத்மா
முற்றும்.
பின் குறிப்பு: இந்த கதை என் சொந்தக் கற்பனை என்றும், இதுவரை எங்கும் இக்கதை பிரசுரம் ஆகவில்லை என்றும், போட்டியின் முடிவுகள் வரும் வரை வேறு எங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
என் இயற்பெயர்: மு. அன்புசெல்வி
Ilamathi Padma
ETA Star globevill township
Block No : 2 , 2nd floor
Door No : 225
(Opp. Saint gobain glass factory )
Mambakkam
Sriperumbudur
Pincode - 602106
Mobile No : 7550049411

படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்