logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Uthamanraja

சிறுகதை வரிசை எண் # 162


பொறுத்தார் , பூமியாள்வார். கிராமத்தின் வயல்வெளிகளிலும், நடந்துசெல்லக்கூட சரியான சாலைகளில்லாத பகுதிகளிலும் சுற்றித்திரிந்துவிட்டு, பள்ளிப்படிப்பை முடிக்கும்வரையில் நகரத்தின் வாசனையையே அறியாதிருந்தவன் நான். பின்னாட்களில் விமானம் ஏறிப் பயணம் செய்ததும் நடந்தேறியது. பள்ளியும், கல்லூரியும் ஒரே வளாகத்தில் அமைந்திருந்த பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றிற்கு கலந்தாய்விற்கு சென்றிருந்த போது, அங்கிருந்தவர்கள் பள்ளி வேறுபக்கம் உள்ளதெனச் சொன்னார்கள். புறத்தோற்றத்தை காணக் கண்களிரண்டைப் படைத்து விட்டு, அகத்தோற்றத்தை மற்றவர் அளவீடு செய்ய எதனையும் படைக்காது போன இறைவனை முதன்முதலில் அப்போதுதான் கடிந்துகொண்டதாக  நினைக்கின்றேன். என் உயரமும், உருவமும் நகைப்புக்குள்ளானதை முன்பு நான் பலமுறை அறிந்திருந்தபோதும், முதல்முறையாக உருவமைப்பைக்கண்டு அன்றுதான் கண்ணீர் சிந்தினேன்.ஒரு வாயிலை அடைத்தால், இன்னொன்று திறக்கும் என்பதுபோல,  ஒருவழியாக நல்லதொரு கல்லாரியில் சேர்ந்துவிட்டேன். கல்லூரி வாயிலாக ஒரு கட்டுமான நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வின் மூலம்  வேலைக்குச் செல்வதற்குத் தேர்வாகியிருந்தேன். ஒரு தவறான ஆனாலும் அப்போதைய சூழ்நிலையின் காரணமாக பள்ளிப்படிப்பு முழுவதிலும் பாடங்களைப் பாதி புரிந்து, ஆசிரியர் சொல்லித்தருவதைக் கவனிக்காது, பெரும்பாலானோர் செய்யும் ஒரே வித்தையான மனப்பாடம் செய்து படிக்கும் கலையை நானும் கொண்டிருந்தேன். அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படித்தவன் நான். முதல்முதலாக வேலைக்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட நிறுவனத்தின் ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆள் எடையையும் , உயரத்தையும் கணக்கில்கொண்டே ஆட்களைத் தேர்வுசெய்பவர்கள் எனக்கூறினார்கள். தோற்றத்தினால் தோட்டாக்களை அளவீடு செய்யத்தெரியாதவர்கள். கல்லூரிப் பாடங்கள் மற்றும் அதற்குப் பின் நடக்கவிருக்கும் வாழ்க்கைப் பாடங்களில் பிற்பகுதி ஆங்கிலம் கலந்ததாகவே இருக்குமென்று என் பள்ளிக்காலங்களில் நான் அறிந்திருக்கவில்லை. என் தாய்மொழியான தமிழ் நான் வேலைக்குச் சென்ற இடங்கள் அனைத்திலும் சொற்பமாகவே பயன்படுத்தப்பட்டது. பள்ளிப் பாடமான தமிழிலிருந்து கல்லூரிப் பாடமான ஆங்கிலத்திற்கு மாறி அதனைப் படித்தது கூடுவிட்டுக் கூடு மாறி ஒரு ஜென்மத்திலிருந்து மறு ஜென்மம் போய்விட்டு வந்தமாதிரி நடந்துமுடிந்தது. கேரளத்திலும், சென்னையிலும், தென்தமிழகத்திலும் பணிநிமித்தம் காரணமாக செய்த பயணங்களுக்காக கடைபிடித்த பொறுமை , 8 முறை திருப்பதி கோவிலில் பொதுவரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யத் தேவையான பொறுமைக்கு ஒப்பானது. அடுத்தகட்ட நகர்வு ஆங்கிலத்திற்கு ஹிந்திக்கு, கட்டிடத்துறை வேலையாட்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தவர் என்பதால் ஹிந்தியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகயிருந்தது. ஆரம்பகாலத்தில் சில மாதங்கள் வரையிலும். தமிழிலிலிருந்து ஆங்கிலம் அதன்பின் ஹிந்தி , அதற்குப்பிறகு தெலுங்கு மற்றும் கன்னடம் இன்னும் சிலபிற மொழிகளையும் சொற்பமாக அறிந்துகொண்டேன். நான் கட்டுமான மேற்பார்வையாளராக எனது பணியை ஆரம்பித்தேன். உருவ அமைப்பு திரும்பவும் தனது வேலையைக் காட்டத் தொடங்கியது. எனக்குக் கீழிருந்த வேலையாட்கள் நான் செய்யச் சொல்கிற பணிகளைச்செய்துதர இணங்கி வரவில்லை. சரியான ஒத்துழைப்பு என்பதைவிட ஒத்துழைப்பே தர மறுத்தார்கள். மொழியைத் தெரிந்துகொண்டு, வேலையின் நுணுக்கத்தைத் தெரிந்துகொண்டு, அதனைச் செயல்படுத்த இயலாமல் போகவே பணியில் தொய்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக இவ்வாறாகவே நடக்க எனது மேலதிகாரியின் கண்டிப்பிற்கு உள்ளாகிக் கொண்டே இருந்தேன். நடுக்காட்டில் நட்ட நடு ஆற்றில் நீச்சல் தெரியாமல் இறங்கியவனின் நிலைபோலிருந்தது என்நிலை. ‌ஒருநாள் பணியின்போது சில தவறான வார்த்தைகளை எனது மேலதிகாரி என்னிடம் உபயோகிக்க, நான் அவரிடம் பதிலுக்கு நாகரீகமான முறையில் பேசியும், அவர் திரும்பத் திரும்ப மேலும் சில அசிங்கமான வார்த்தைகளைப் பிரயோகித்தார். 02 கான்கீரிட் வைப்ரேட்டர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி வைக்கச் சொல்லியிருந்தார். 01 வேப்ரேட்டர் மட்டுமே செயல்படும் நிலையிலிலிருந்தது. 01 மட்டுமே வேலையிடத்திற்கு வந்தது. 02வது வராதுபோகவே அந்த வார்த்தைகளின் பிரயோகம், வேலைக்குச் சேர்ந்த முதல் 03 மாதங்களுக்குள். வேலைக்கான இயந்திரங்களைக் கேட்கவேண்டிய உரிய அதிகாரி இன்னாரென அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வேறு வழியில்லாது அந்த மேலதிகாரியின் உடனடித் தொடர்பு அதிகாரியிடம் முறையிட்டேன். அவரோ இந்தத்துறையில் இதெல்லாம் சாதாரணம் என சொற்ப வார்த்தைகளில் பதிலளித்துவிட்டுச் சென்றுவிட்டார். தே(னீ)ன்கூடு கல்லெறிந்து  கலைக்கப்படாதவரையில் மட்டுமே “மௌனம்” காக்கும். மேற்கூறிய சம்பவங்களுக்கான உடனடியாக அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்துவிட்டேன். மறுநாள் உடனடித்தொடர்பு அதிகாரி போன் செய்து, வேலையிடத்திற்கு உடனடியாக வரும்படி போனில் கட்டளையிட்டார். வெகு கோபத்துடன் அன்றைக்கு மதியம் வேலையிடம் சென்று அவரிடம் சண்டையிடும் நோக்கில் சென்றேன். எதிர்பார்த்ததற்கு மாறாக அன்றைக்கு அவர் உற்சாகத்துடன் இன்றிலிருந்து உனக்கு மேற்பார்வைப் பணி வேண்டாம், அலுவலகத்தில் பணிசெய்துகொண்டிரு. ஆனால் அவ்வப்போது வேலையிடத்திற்குச் சென்று அங்குள்ள பணிகளைக் குறித்துவைத்துக்கொள் என ஆணையிட்டார். அடங்கிப் போகிறவன் அடிமை இல்லை, அடங்குபவனும் இல்லை, அடக்குமுறை தெரிந்த “ஆட்சியாளன்”. அடுத்தாற்போல , அலுவலகத்தில் கணக்காளருக்கும் எனக்கும் சிறிய பிரச்சனை , நிறுவனம் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு தொகைதான் சாப்பாட்டுத்தொகையாக ஒதுக்கியுள்ளது , நீ அனுமதிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாகச் செலவுசெய்துவிட்டாய் எனக்கூறி பிரச்சனை அன்று முழுவதிலும் வேலைசெய்யவிடாமல் அவருக்குப் தக்க பதில் கூறவேண்டுமென நச்சரித்துக் கொண்டேயிருந்தார். என்னிடம் சிறிய அளவில் கூட பணமில்லை அன்று, ஒரு வழியாக உடன் வேலை செய்யும் ஒருவர் பணம்தர அன்றைக்குப் பிரச்சனை தீர்ந்துபோனது. பிரச்சனை தீர்ந்துபோனதாக நினைத்தால் சில நாட்களிலேயே அடுத்த பிரச்சனை, வேலையாட்களுக்குப் பணம் தர ஆன்லைன் பில் தயாரிப்பது என்னுடைய வேலை, 02 நாட்கள் மின்சாரம் தடைப்பட்டதால் அந்த வேலையை உரிய நேரத்திற்கு முடிக்க இயலாமல் போக, கணக்காளர் அன்றைக்கு என்னை அடித்துவிடும் நிலைக்கு வந்துவிட்டார். வேலையிடத்திலிருந்த கணினியை நம்பாமல், வெளியில் சென்று அந்த வேலையை முடித்துக்கொடுத்தேன். வேலைக்குச் சேர்ந்து நான்காம் மாதத்திலேயே சென்னைக்கு பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைத்தார்கள்.சென்னையின் உள்ளூர் இரயில் பயணத்தின்போது, பயணச்சீட்டு வைத்திருந்த நண்பன் ஒரு நிறுத்தத்திற்கு முன்னரே இறங்கிவிட, அடுத்த நிறுத்தத்தில் பயணச்சீட்டு சோதனையாளரிடம் சிக்கிக்கொண்டோம். அவரிடம் நிலைமையை விளக்கியபோதும், நாங்கள் கேட்கும்போது பயணச்சீட்டைக் காண்பிக்க வேண்டும். உங்கள் நண்பர் வரும்வரை காத்திருப்பது எங்கள் வேலையல்ல எனக்கூறி ஆளுக்கு தலா 300 ரூபாய் அபராதம் விதித்துவிட்டார். எல்லோரிடமும் (13 பேர்) இருந்த பணத்தைப் பங்கிட்டு மொத்தமாக அபராதம் செலுத்தினோம். சென்னைக்கு செய்த நீண்ட நேரப்பயணம் அதிக பயத்தை ஏற்படுத்தியது. சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் கண்டுபிடித்து அறிந்துகொள்வது மிகவும் கடினமாகதாக இருந்தது.சென்னையின் தட்பவெப்பநிலை ஒத்துக்கொள்ளாத காரணத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களிலேயே பயிற்சி வகுப்பிலிருந்து ஊருக்குத் திரும்பிவிட்டேன். இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். வேலையிடத்திற்குத் தகவல் தெரிவிக்க இயலாத சூழ்நிலையால், கணக்காளரிடமிருந்து மறுபடியும் எதிர்ப்பு, திரும்பவும் வேலையில் சேரும்போது மருத்துவரிடமிருந்து சான்றிதழ் வாங்கிவர வேண்டுமெனக் கூறியிருந்தார். பணிக்குத் திரும்பச்சென்று நான் கூறிய விளக்கத்தை அவர் ஏற்பதாகயில்லை. மருத்துவரிடம் வாங்கி வந்த சான்றிதழையும் ஏற்கவில்லை. முன்னர் எனது மேலதிகாரி என்னைத் திட்டியதற்காக நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே விடுமுறை எடுத்ததாகவும், வேலை செய்வதற்கான உடல் உறுதிச் சான்றிதழ், சிகிச்சையின்போது தந்த மருந்துச்சீட்டுகள் ஆகியவற்றை மருத்துவரிடமிருந்து வாங்கித் தந்தால் மட்டுமே உன்னை வேலைக்கு அனுமதிப்பேன் என்றும் கூறிவிட்டார். காலையில் 3 மணிக்கே எழுந்து பணியிடத்திற்கு கிளம்பி வந்தேன் , வருவதற்கு சுமார் ஐந்து மணி நேரம், திரும்பிச் செல்வதற்கு ஐந்து மணி நேரம், பேருந்திற்குக் காத்திருந்த நேரம் என அன்று ஒருநாள் முழுவதிலும் பயணம் செய்தது உடல் உறுதி எனக்கு இல்லை என மனதில் நினைத்துக்கொண்டேன். மருத்துவரிடம் சென்று சான்றிதழ் கேட்டபோது அவர் தவறுதலாக மலேரியா காய்ச்சல் என்பதற்குப் பதில் அம்மைநோய் என சான்றிதழ் தந்துவிட்டார்.  ஏற்கனவே இருந்த மனநிலையில், சான்றிதழில் எழுதியிருந்ததை கவனிக்கத் தவறிவிட்டேன். பேருந்துநிலையத்திற்கு வந்து தற்செயலாகப் பார்த்தபோது, சான்றிதழின் தவறை உணர்ந்து அதனை அப்பாவிடம் கூறினேன். அதற்கு அவர் ஒருமூச்சு என்னைத் திட்டித்தீர்த்துவிட்டார். அனுதினமும் அழுகையில் கண்ணீரும் வற்றிவிட்டது. புறஅழுகைதான் வற்றிப்போனதே தவறி அகக்கனல் ஒருபுறம் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட மாதத்தில் 10 நாட்கள் வேலைசெய்திருந்தபோதும் 21 நாட்கள் விடுப்பினால், வேலை செய்த 10 நாட்கள் சம்பளத்தையும் எனக்கு வராமல் செய்யவேண்டியதற்கான அத்தனை அரிய பணியையும், அதிக சிரத்தையுடன் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கச்சிதமாக செய்துமுடித்திருந்தார் கணக்காளர். பேருந்தில் “நாணயங்கள்” நடத்துனரிடமிருந்து தூக்கி எறியப்படுவதுபோல் அடுத்தபடியாக கேரளாவிற்கு பணிமாற்றம் செய்துவிட பரிந்துரை அனுப்பினார் கணக்காளர் , ஒரு வாரத்தில் கேரளாவிற்கு பணிமாற்றம். (வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் இடமாற்றம்)கால்பந்தில் கோல் அடித்ததும் அடுத்தடுத்து தயாராவதுபோல, ஒரு வாரம் கேரளாவில் பணியாற்றியதும் அடுத்ததாக சென்னை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்பதுபோல சென்னை சென்றபின்புங்கூட சென்னைக்குள்ளேயே அடுத்தடுத்து ஒரு வருடத்திற்குள்ளாக இரண்டு இடங்களுக்கு பணியிட மாற்றம். அதற்கடுத்த வருடத்தில், கோயம்புத்தூர் பணியிட மாற்றம் அண்டை அயலாரும் , உறவுகளும் பையன் டூர் போய்க்கொண்டே வேலைபார்ப்பதாக எண்ணிக்கொண்டார்கள். அவர்கள் பாடு கொண்டாட்டம். இங்கே திண்டாட்டம் என்றபடி போய்க்கொண்டிருந்தது. அதற்கடுத்த ஆண்டு மீண்டும் சென்னையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பணி, கால்பந்தாட்டக் கோல்கீப்பர் நம்மிடம் தோற்றுவிடுவான். போதுமடா சாமியென்று நானாக நிறுவனத்திலிருந்து  வேலையைவிட்டு வெளியேறி அடுத்தடுத்தாற்போல இரண்டு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்து, பின்பு அங்கும் ஒன்றுக்கு மற்றொன்று சளைத்ததில்லை எனப்புரிந்துகொண்டு, அரசியல் எல்லா இடங்களிலும் இருக்கிறது எனத்தெரிந்துகொண்டு, என்னையே நான் யாரென அறிந்துகொண்டேன். எழுதப்படாத விதிதான், எப்போதும் பின்பற்றப்படுகிறது, சி(ப)ல விசயங்களில். கண்ணீரே விடக்கூடாதுனு, கடவுள் கிட்ட வரம் கேட்டான் ஒருவன், வெங்காயம் வெட்டும் பணியில் அவனை அமர்த்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளின் திருவிளையாடல்போல அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின. எதை நோக்கி என் பயணம் என்பதை மற்றவர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் தெரிவிக்காது கூட்டிச்செல்லும் இறைவனுக்கே எல்லாப்புகழும். வாய்ப்பு வாசப்படி வரைக்கும் வரச்சொல்லிட்டு  போகலாம்னு பாத்தா கதவைத் திறந்து உள்ளபோக அனுமதிக்க மாட்டேங்குது. நண்பர் தொடங்கிய புதிய நிறுவனமொன்றில் பணிசெய்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலையில் தொய்வு ஏற்படத் தொடங்கி அங்கிருந்தும் பின்பு வெளியேறியாற்று. ஏகப்பட்ட Take Diversion பலகைகளைப் பார்த்துவிட்டேன் , வாகனமே ஓட்டாமல் வாழ்க்கையின் வாயிலாக. வாழ்வை நான் வெறுக்கவில்லை, வாழ்வுதான் என்னை வெறுத்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் எழுதிய சில வரிகள் மந்திரமொன்று தந்தாய் சில காலம் மட்டுமே பலிக்க (வாழ்க்கையில் வேலை) பின்பு சிறிதுகாலம் வேலை தேடி , வெறுத்து இந்தத்துறையை விட்டே விலகிவிடலாம் எனும்போது, அயல்நாட்டு வேலைவாய்ப்பு ஒன்று கிடைக்க அங்கு பறந்தாயிற்று. அங்கே தோன்றியவை. இழந்தேன்  எனக்கான தினந்தனை  இமைமூடும் வேளை  மறந்தேன் காலையிலெழுந்து விட துறந்தேன் தினசரி நாளிதழ் படிப்பதை செயலிழந்தேன் செயலிதனைப் பார்க்கக் கூட நேரமின்மையால் அன்றாடக் கடமை மறந்தேன் அனுதினமும் எனையே  என்னுள் நானே இல்லையென்பதால் என்தனில்  எனைமறந்தேன் பணமெனும் காகிதம் படுத்தும் பாடு சொல்லி முடியாது சொல்லினும் புரிவதில்லை சொற்களினை பேசுவதில்லை  மனிதம் மரித்துப்போவதை மனதினில் கண்டேன் நினைவினிலே நேரில் கண்டுவிட்டேன் முழுவதும் மரித்துப் போய்விடவில்லை எங்கோ சிறிது இன்னும் இருக்கலாம்  எனும் ஐயம் ஏற்பட்டதால் வந்திருக்கிறேன் திரைகடலோடித் திரவியம்  தேட. அங்கு சென்ற சில நாட்களில் மனம் ஒப்புக்கொள்ளாமல், உடல் மட்டும் ஒட்டிக்கொண்டு அந்நாட்டில் வேலை செய்தாயிற்று. உயிருஞ்சேர்ந்து ஒத்துழைக்கத் தொடங்கும் என எண்ணுகையில் உடல்நலம் பாதிப்பிற்குள்ளாகத் தொடங்குகிறது. விடாக்கண்டானாக விடாமல் பிடித்தாலும், குடும்பத்தில் முன்னர் நடந்த சில பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்குகிறது. உயிர் குடுத்தான் உடல்வலியையும் உடன் குடுத்தான் உடல்வலியில் உயிர்விட்டான் தாங்குவதற்கும் அளவுண்டுதானே இறைவன் மனம் படைத்தான் மறப்பதற்கு இரண்டாவதாய் ஓர் மனம் கொடுத்தான் மறப்பதை மறக்காமல் மறுபடியும் நினைப்பதற்கு சினம் எனும் குணம் உள்ளத்தில் விதைத்தான் விதைத்துவிட்டு விளையக்கூடாதென மருந்தடித்தான் நிலம்(மனம்) மாசடைந்தது. உடலும் , மனமும் ஒப்பாமல் , உடனிருப்போரும் ஒத்துழைக்காமல் , உறவுகளும் கைகொடுக்காமல் போகவே வேறு வழியின்றித் தாயகம் திரும்பவேண்டிய காலத்தின் கட்டாயம். சொற்ப நாட்களில் அங்கிருந்து திரும்பியாயிற்று. இருப்பதிலும் ஆர்வமில்லை, இல்லாமலிருப்பதிலும் விருப்பமில்லை. கற்பனையைக் கனவாக்கி ,  கனவானது நிறை(னை)வேற ,  நிஜத்தில் நிழல் தெரியும் வெளிச்சத்திலும், இருட்டினில் தெரிகின்ற ஒளியினிலும் செய்த பயணங்கள் அனைத்தும் நிஜத்தில் கனவாகி கற்பனைக்காட்சியாகவே உருமாறிப்போனது. காலைக்கடன் கழிப்பதிலிருந்து , இரவுத்தூக்கம் வரை அனைத்திலும் ஒருவிதமான இடர்ப்பாடு இருந்துகொண்டே இருக்கும் அடிக்கடி நிகழும் இடப்பெயர்வு காரணமாக. வாய்ப்புகள் வருவதாகயில்லை, உருவாக்காமல் விடுவதாயில்லை. இறுதியாக சொந்த ஊரில் வந்து சில காலங்கள் உடல் மற்றும் மனப்பிரச்சனைகளை தீர்த்து , அதன் வடுக்கள் ஆறுவதற்கு சில காலம் பிடித்தது. எந்தச் செயலிலும் மனம் ஒப்பவில்லை. இறத்தலை விடக் கொடியது  ரண வேதனையுடன் (வாழ்ந்து கொண்டு) இருப்பது. யாருக்குமே தெரியாத இன்னொரு முகம்  எல்லார்க்குள்ளயும் உண்டு. இலையுதிர்கால  மரம்போல மனது அடிப்படை கிளைகள் பக்கவாட்டு கிளைகள் உதிர்ந்த இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கிற இலைகள் உதிர இருக்கின்ற இலைகள். அடிப்படை கிளைகள் பெருவாரியான பிரச்சனைக்கு ஒப்பாகும். பக்கவாட்டு கிளைகள் அவ்வப்போது  வந்துசெல்லும் பிரச்சினைக்கு ஒப்பாகும். இலைகள் உதிர்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். 'களை'கள் நம்மைச் சுற்றியே இருக்கும். இயற்கை உரம் நமக்கு நாமே ஆறுதல். செயற்கை உரம் போடுவோர் அயலார். மொத்த மரம் பட்டுப்போவது அ அழிந்துபோவது முடிவு. மின்கம்பியில் விழுந்துவிட்ட கயிறு ஒன்று அதிலிருந்து விடுபட்டுவிட நினைக்கிறது. மின் இணைப்பு இல்லாத நேரத்தில் அதனால் விடுபட இயலவில்லை. இணைப்பு இருக்கும் நேரத்தில் விடுபட முயற்சிக்கையில் எரிந்து சாம்பாலாகிவிடும். வாழ்வோ , சாவோ முயல்வோம் எனும் நம்பிக்கையில் உள்ளினில் ஒன்றொளிந்துள்ளது  அறிந்தவர் ஞானி  அறியாவதர் யாரோ அறிந்தும் அறியாதவர் அந்நியர் தெரியாதவர் தேடல்வாதி  தெரிந்தவர் இன்றவளில் கில்(லி)லாடி அறிந்தாடி ஆராய இருக்கின்ற தேடிக் கிடைக்க இருக்கிற தேடலில் அழுதுகொண்டேயிருந்தாலும் உழுது கொண்டேயிரு என்று முன்னோர் கூறிய பழமொழி அடிக்கடி நினைவில் தோன்ற, சர்வே உரிமம் பெற விண்ணப்பித்து , அதனைப் பெற்று சொந்தமாக கட்டிட வரைபடம் தயாரித்துத் தரும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். 3 லட்சம் ரூபாய் அளவில் நடப்பு தொழில் நடந்து கொண்டிருக்கிறது. ஊமையானவன் பேசத்தொடங்குகையில் உலகம் தனது நிலையில் இருக்காது. 50 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆணை பெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்குள் ஒளிந்திருக்கும் நானே இறுதியில் நானாக ஆனேன். என்னவாக ஆகப்போகிறாய் என்பதை உன்னுள் ஒளித்துவைத்துவிட்டு  என்னவாக நீ ஆடிக்கொண்டிருக்கிறாய்  என்பதை அறியவிடாமல் ஒளித்துவைத்ததை உனக்கே தெரியாமல்  உனக்காக இடத்திற்கு  கொண்டு செல்ல  ஆடும் கண்ணாம்பூச்சி ஆட்டம் நிகழ்_கடந்த_எதிர்கால வாழ்வு (வா) என்று  தமி (ழ்)  அழை (க்) க  நம்பிக் (கை) யோடு  வாழ வந்தேன். ஒவ்வொரு கட்டிடத்தினுள்ளும் பல தூங்காத இரவுகள் விழித்துக் கொண்டுள்ளது. கண்ணீர்த்துளிகள் ஒளிந்துகொண்டுள்ளது. இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் மனதை ஒருநிலை செய்து திறம்பட செயலைச் செய்யுங்கள்  வெற்றி வாகை சூடுங்கள். பொறுத்தார் , பூமியாள்வார். பொ.கணேசன் உத்தமன்ராஜா +91 9790501836

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.