Rajakumar Sivan
சிறுகதை வரிசை எண்
# 158
கூடும்...கூண்டும்
................................
தாய்ப்பறவை கட்டிய கூட்டிலிருந்து தனியொரு கூண்டுக்கு வந்தது போல் உணர்ந்தாள் ஷிபானா, திருமணதிலிருந்து மிதுன் அன்பாகவே கவனித்தான்.மாமியார் மட்டும் அவ்வப்போது கடிந்து கொள்வாள்.நாட்கள் நகர திருமண தம்பதிகளிடம் எதிர்பார்ப்பதை இருவரும் உணர்ந்தனர்.இருவரிடமும் மகிழ்ச்சி இருக்கிறது,மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலவில்லை.மாமியார் குத்தல் பேச்சு, உனக்கு உடலில் ஏதும் பிரச்சனையா? "ஒரு உயிர் பிறக்க ஒரு உயிரை எடுக்கும் வலி அந்த வார்த்தை"மிதுன் கண்டும் காணாமல் போவது மேலும் காயத்தை கொடுத்தது.மிதுனின் அம்மா டேய் இவளை மருத்துவனைக்கு கூட்டுச்செல்வோம், என்ன பிரச்சனை என்று பார்க்கலாம் என்றாள்.ஷிபானா கண்களில் மிரட்சி,மருத்துவனையில் சோதனை அனைத்தும் முடிந்து, மிதுன் , ஷிபானா மட்டும் மருத்துவரை சந்தித்து விட்டு வெளியே வந்தனர்.இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என மருத்துவர் கூறியதை மிதுன் தன் அம்மாவிடம் சொல்ல.... கோபத்தில் மலட்டு சனியனை இங்கே விட்டு வா...வேறு பெண் பார்க்கலாம் என்று சொல்ல, அந்த வார்த்தை ஷிபானாவின் காதில் குத்திக் கிழிக்க, வேகமாக நடந்தாள். மிதுன் அலுவலக பணி காரணமாக அயல்நாடு செல்லும் காரணத்தினால் கரு கலைப்பு மாத்திரை வாங்கி கொடுக்க...அதன் பக்கவிளைவு நிரந்திர மலடி பட்டம் பெற்று தந்து விட்டது.மிதுனை காட்டிக்கொடுத்தாலும் யாரும் நம்ப போவதில்லை.இனி இந்த மருத்துவமனையிலே செவிலித்தாயாக பணி செய்கிறேன்,என் வாழ்க்கையை இந்த கூண்டுக்குள் சுதந்திரமாக அமைத்துக்கொள்கிறேன் என கூறி விட்டு பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து...
எல்லாம் முடிந்து படியை விட்டு இறங்கும் அந்த கணம் ஷிபானா மனதில் ஏதோ சாதித்து விட்டோம் என்ற கர்வத்தில் கண்கள் இரண்டும் விரிந்து முகம் பளிச்சென மின்னியது. ஷிபா......என யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்புவதற்க்குள் அவளின் கைகளை யாரோ பற்றியதை உணர்ந்து சுதாரிப்பதற்க்குள்ளாகவே " இனி இந்த ஊர் உலகம் என்ன சொன்னாலும் நான் உன்னுடன் தான் இருப்பேன் ஷிபா"" என்று கூறியபோது தடுப்பேதுமின்றி கண்ணீர் வழிந்தோடியது இருவருக்கும்.
ப.ராஜகுமார் சிவன்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்