மு.அன்பு
சிறுகதை வரிசை எண்
# 149
கண்டாரோலி
கண்டான். கண்டார ஓலியை.
கண்டாரோலித்தனம் செய்து கொண்டிருந்த அவளை வேறு என்னவென்று சொல்ல?
மதியவேளை மேல் வயித்துப் பசியை தீர்க்க போனவனுக்கு உணவேதும் உண்ணாமல் தீர்ந்து போனது.
மனைவி தன்னுடைய கீழ் வயித்துப் பசியை வேறு ஒருவனுடன் தணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு.
நகர்ந்தான் அவ்விடத்தை விட்டு பணியிட மாற்றத்திற்கான ஆணையுடனும், விவாகரத்து தாள்களுடனும்.
அவள் இவனது வாழ்க்கையில் இல்லை எனத் தெரிய வந்ததிலிருந்து பெரிதாக எந்த பெண்ணின் மீதும் நாட்டம் இல்லாமல் திரிந்தவன்.
தாயின் வற்புறுத்தலால் செய்து கொண்டு திருமணம் அது.
கணவனை இழந்து தவித்த அவளின் கட்டளையை மீறக் கூடாது என வாழ்ந்து வந்ததனால் அரங்கேறிய நாடகம்.
ஊரோ புதிது.
அரசு சார்பில் ஏற்படுத்திக் கொடுத்த வீட்டு வசதி அவனுக்கு பிடிக்கவில்லை.
வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்திலிருந்து அவனால் மீள முடியவில்லை.
தூக்கமற்று போனது அந்த இரவு.
முதல் காதலியின் தோழி அவள்.
தேரென அசைந்து வந்தவளைக் கண்டு திகைத்துப் போனான் ஒரு கணம்.
கல்லூரி நாட்களில் இருந்து இவள் மீது இவனுக்கு ஒரு மரியாதை.
அறிவார்ந்தவள் அல்லவா!
"அண்ணா" என அழைப்பதன் காரணமாகவே அவளிடம் அவ்வளவாக பேசுவதில்லை.
புண் சிரிப்போடு கடந்து சென்று ஒரு வீட்டின் வாடகையை உறுதி செய்தான்.
இவனுடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரியினுடைய வீடு தான் அது எனவும் அந்த அதிகாரியுடைய மகள் தான் இவள் எனவும் பின்பு அறிந்து கொண்டான்.
தாலிக் கயிறு இல்லாமல் பார்த்தபோது ஏற்பட்ட சிரிப்பு கையில் குழந்தையுடன் அவளை பார்த்த போது காணாமல் போனது.
ஆம், திருமணமானவள்.
கணவனையும் இழந்தவள் என அதிகாரியுடன் ஏற்பட்ட நட்பின் வாயிலாக அறிய நேர்ந்தது.
பணி முடித்து அவன் வீடு திரும்பும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரிடும்.
அப்போது அவர்கள் முகத்தில் பூக்கும் புன்னகை…
அதுவே அவர்களுக்கு இடையேயான அதிகபட்ச உரையாடலாக இருந்து வந்தது.
எத்தனை நாளைக்கு தான்?
அவன் மீது ஏற்பட்ட நன்மதிப்பு அவள் வீட்டில் ஏற்படும் உரையாடலில் அவனது பெயரை இசைக்கச் செய்தது.
நெருக்கமானான் அந்த குடும்பத்துடன்.
உணவைக் கொண்டு வரும்போதெல்லாம்
"வீட்ல கொடுக்க சொன்னாங்கண்ணா, மிச்சம் வைக்காம சாப்ட்ருவிங்களாம்."
என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவாள்.
கல்லூரி நாட்களில் ஏற்படும் கோபம் அவனுக்கு இப்போது வரவில்லை.
எது அவனை அவளுடன் உரையாடத் தடுத்தது எனவும் தெரியவில்லை.
அன்று…
குளித்து முடித்து தலையில் பூவுடனும், இடது தோளில் குழந்தையுடனும் வாசற்படியில் அமர்ந்திருந்தால்.
பணி முடித்து வீடு திரும்பி வழக்கமான புன்னகையுடன் படியேற போனவனுக்கு
"கோயிலுக்கு கூட்டிட்டு போறீங்களா?"
எனக் கேட்டது அந்த ஏக்கக் குரல்.
நடந்தார்கள் கோவிலை நோக்கி…
மு.அன்பு,
CAJ,
இலயோலா கல்லூரி,
நுங்கம்பாக்கம், சென்னை.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்