Saranya
சிறுகதை வரிசை எண்
# 148
"உண்மையான பயம்" வணக்கம் மக்களே, ஒரு ஊர்ல ஒரு சிறுவன் இருந்தானா, அவன் அதிகமான புத்தகம், பேய் படங்கள் போன்றவற்றை பார்த்து எனக்கு பயம் நான் என்னன்னே தெரியாத அளவுக்கு நிறைய படம் புத்தகங்களை படித்து முடித்துவிட்டான், எனக்கு இன்னும் அதிகமா பயம் வரக்கூடிய புத்தகம் வேணும் அப்படின்னு அவங்க ஊர்ல இருக்கிறவங்க பெரிய ஆள் கிட்ட போய், தாத்தா எனக்கு ஒரு பேய் கதை சொல்லுங்க மிகவும் கொடூரமான பேய் கதை சொல்லுங்க, அப்படின்னு கேட்டு இருக்கான். அதுக்கு அந்த தாத்தாவும் ஒரு பெரிய பேய் கதையை சொல்லி இருக்காங்க, அதைக் கேட்டதும், தாத்தா இந்த கதை எல்லாம் பத்தாது இன்னும் கொடூரமான எனக்கு பேய் கதை வேணும் அப்படின்னு கேட்டு இருக்கான். அதுக்கு அந்த தாத்தா வந்து நம்ம ஊர்ல இருக்கிற அந்த பழைய நூலகத்துக்கு போ ,அந்த நூலகத்துல இருக்கிற அலுவலர் கிட்ட போய் "உண்மையான பயம்" அப்படிங்கிற புத்தகத்தை நான் படிக்க ஆசைப்படுறேன் அப்படின்னு போய் சொல்லு.உடனே அந்த சிறுவனும் அந்த அலுவலகத்திற்கு சென்று அலுவலர் கிட்ட போய் "உண்மையான பயம்" என்ற புக்கை கொடுங்கள் என்று கேட்டானாம். அதுக்கு அந்த அலுவலர் அந்த புக்கா அது மிகவும் பயங்கரமான புத்தகம் ஆச்சா அந்த புக்கை எதுக்கு நீ கேட்க நீ சின்ன பையனா இருக்க உனக்கு அதெல்லாம் தர முடியாது அதை படிச்சு நீ ரொம்ப பயந்து போயிடுவ அப்படின்னு அந்த அலுவலர்களும் சொல்லி இருக்காங்க. அதற்கு அந்த சிறுவன் இந்த புக் தான் இந்த மாதிரி ஒரு கொடூரமான புக்கு தான் எனக்கு வேணும் சீக்கிரம் தாங்க அப்படின்னு போய் கேட்டிருக்கா, அதுக்கு அந்த அலுவலர் தயங்கி தங்கி அண்டர்கிரவுண்டுக்கு அந்த பையனை அழைத்துச் சென்றார் அந்த பயங்கரமான புத்தகத்தை எடுத்து அவன் கையில் வைத்தார், தம்பி இன்னொரு தடவை சொல்றேன் இந்த புக்கை நீ படிச்சே ஆகணுமா அப்படின்னு கேக்குறாரு ஆமா நிச்சயமா இது படிச்சே ஆகணும் அப்படின்னு அந்த பையன் சொல்றான் அதற்கு உடனே அந்த அலுவலரும் சரி தம்பி "இந்தா 400 ரூபாய்" அப்படின்னு அந்த புக்கை அந்த சிறுவனிடம் கொடுத்தார் அந்த சிறுவனிடம் கொடுத்து முடித்ததும் அந்த அலுவலர் தம்பி நீ புத்தகத்தை வாங்கி விட்டாய் இருந்தாலும் அந்த கடைசி பக்கத்தை மட்டும் படித்து விடாதே அதுதான் மிகவும் கொடூரமான பயம் நீ கேட்ட பயம் அதுல தான் இருக்கு என்று சொன்னார், உடனே அந்த சிறுவன் சரிங்கய்யா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்றதும் அவன் அவன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான் இந்த பய எல்லாம் பத்தாதே சரி அவர் சொன்ன அந்த கடைசி பக்கத்துல இருக்குற கொடூரமான பயத்தை என்னன்னு பாப்போம் என்று அந்த கடைசி பக்கத்தை திருப்பி பார்த்தான் பார்த்ததும் மிகவும் பயந்து தொடை நடுங்கிப் போனான், அந்த பக்கத்தில் அப்படி என்ன இருந்தது என்றால் உலகில் மிகவும் கொடிய பயமான "ஏமாற்றம்" என்ற ஒன்று இருந்தது. அப்படி என்ன அந்த கடைசி பக்கத்தில் இருந்தது என்றால் அந்த புத்தகத்தின் விலை தான், அந்த புத்தகத்தின் விலை 400 ரூபாய் இல்லை 40 ரூபாய் என்று போட்டிருந்தது. அதை பார்த்ததும் தான் அவன் கேட்ட மிகவும் கொடூரமான பயத்தை அனுபவித்தான். கருத்து: இதிலிருந்து என்ன தெரியுதுன்னா உலகத்திலேயே மிகவும் கொடூரமான பயம் என்கிறது ஒருவன் ஏமாற்றப்பட்டுவிட்டான் என்றதை அவன் உணரும் போது தான் அந்த கொடூரமான பயத்தை உணர்கிறான் என்று தெரிகிறது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்