Akshaya
சிறுகதை வரிசை எண்
# 150
முரடன்!
ஏங்க ஆஃப்பிஸ்கு டைம் ஆச்சு பாருங்க. இன்னும் கிளம்பலயா நீங்க? என்று வினவியபடியே கஸ்தூரிக்கு தலை வாரிக் கொண்டிருந்தாள் விமலா.
இதோ கிளம்பிட்டேன் என்றபடியே வந்தான் ரகு. அவனை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது பன்னிரண்டு வயது மகள் கஸ்தூரியிடம் வந்து "நேற்று என்ன நடந்ததுனு சொல்" என்றாள் விமலா!
கஸ்தூரி பள்ளியில் இருந்து வந்தவுடன் அவளை கவனித்து அவளுக்கு சாப்பிட ஏதேனும் கொடுத்து விட்டு விமலா கோயிலுக்கு செல்வது வழக்கம். ஆனால் நேற்று கஸ்தூரி சற்று தாமதமாக வந்ததால் விமலா கோயிலுக்கு முன்னதாகவே சென்றிருந்தாள். கோயிலில் இருந்து வருகையில் கஸ்தூரி எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணனின் வீட்டில் இருந்து அழுது கொண்டே தன் வீட்டுக்கு செல்வதும் பின்னாலயே அந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் முரடன் பிரசாத் செல்ல முனைந்து தன்னை கண்டதும் அவன் வீட்டுக்கே திரும்ப சென்றதையும் கண்டு பதறிப்போன விமலா அவசர அவசரமாக தன் வீட்டுக்கு சென்று கஸ்தூரியிடம் என்ன நடந்தது என்று என்ற விசாரிக்க சென்றாள். அதற்குள் கணவன் ரகு அலுவலகத்தில் இருந்து வந்துவிட்டமையால் எதுவாக இருந்தாலும் நாளை காலை விசாரித்து கொல்லலாம் என்று அமைதியாக இருந்துவிட்டாள். தற்போது கணவன் அலுவலகத்துக்கு கிளம்பி விட்டமையால் கஸ்தூரியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தாள்.
கஸ்தூரி அழுது கொண்டே நேற்று நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள். நேற்று நீ கோயிலுக்கு போய்ட்டன்னு கண்ணன் அண்ணன் வீட்டிற்கு போய் சாவி வாங்க போனேன், அப்போ அந்த அண்ணன் உள்ள வர செல்லி கதவ சாத்தி என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பன்னாரும்மா. அப்போ அந்த வழியா வந்த பிரசாத் அண்ணா தான் என்ன காப்பாத்தினாரும்மா! என்று சொல்லி விமலாவை கட்டிக் கொண்டு அழுதாள் கஸ்தூரி.
பார்த்தாலே ரவுடி போல் இருக்கும் பிரசாத் ஐ கண்டாலே விமலாவிற்கு பிடிக்காது. அதனால் அவனிடமிருந்து கஸ்தூரியை விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்வாள் விமலா.
கண்ணன் பார்ப்பதற்கே அப்பாவி போல் தோற்றமளிப்பதாலும் தன் கணவனிடம் நெருங்கி பழகுவதினாலும் அவனை மிகவும் நம்பியதற்கு அவன் செய்த காரியம் விமலாவிற்கு மிகவும் வருத்தமளித்தது.
அன்று மாலை முதல் வேளையாக கஸ்தூரி பள்ளியில் இருந்து வந்தவுடன் அவளை கராத்தே வகுப்பில் சேர்ந்து விட்டு நன்றி உணர்வோடு பிரசாத் வீடு நோக்கி நடந்தாள் விமலா.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்