V.A.Shanbakam pandian
சிறுகதை வரிசை எண்
# 144
பெற்ற அன்னையை விட்ட மகன்.
சிவராமன் சிலநாள் நலியாய் இருந்து காலமாகி பதினாறாம்நாள் காரியங்கள் முடிந்தன.ஒரே பிள்ளை வாசு அமெரிக்காவில் இருந்து குடும்பத்தோடு வந்திருந்தான்.மனைவியும் பணியில்.ஒரு மகன் ஒரு மகள்.
பிள்ளைகள் படிப்பிற்க்காக குடும்பத்தை முதலில் அனுப்பிவிட்டான்.தன் அம்மாவிடம் , "அம்மா இங்கே தனியாக ஏன் இருக்க வேண்டும், அப்பாதான் எங்களோட இருக்க வர மாட்டேன் என்றார்.நீங்களாவது எங்களோடு வந்துவிடுங்கள்.நானும் அவளும் வேலைக்கு சென்றுவிடுவதால் பிள்ளைகளுக்கு துணையில்லை. நீ வந்து பார்த்துக்கோம்மா"உங்களிடம் வளர்ந்தால் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி கவலையில்லாமல் இருப்போம் நானும் உன்மருமகளும் என்றான்.
அதுவரை கிராமத்தை விட்டு அதிகமாக வெளி உலகம் பார்க்காத சிவகாமி மகன் சொல்வது சரி என்று இருக்கும் அசையும்,அசையா சொத்து எல்லாவற்றையும் விற்றுவிட சம்மதித்தார்.
விமான நிலையத்திற்க்கு வந்தவுடன் அவரை வெளியே உட்காரவைத்துவிட்டு வாசு லக்கேஜூடன் உள்ளே சென்றுவிட்டான்.
பலமணிநேரம் சென்ற பிறகு விமான நிலைய அதிகாரிகள் இவர் ஒரே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருப்பதை காமிரா வழியாக பார்த்து விசாரிக்க இவரோ மகன் அமெரிக்கா செல்ல டிக்கெட் வாங்க சென்றிருப்பதாக கூற மகன் ஏமாற்றிவிட்டு சென்றது தெரிந்தது.
அதிகாரிகள் உங்கள் மகன் உங்களை ஏமாற்றி இங்கேயே விட்டு அமெரிக்கா சென்றுவிட்டான். இப்போது சொல்லுங்கள் நாங்கள் அவரை கைது செய்து திரும்பி வரச்செய்கிறோம் என்றார்கள்.
சிவகாமி கண்கலங்க "வேண்டாமய்யா அவன் போகட்டும். அவன் அப்பா யாரையும் நம்பி நம் இடத்தை விட்டு சொல்லாதே என்பார்.நான் அவர் சொன்னதைக் கேட்கவில்லை.போகட்டும் அவனாவது நன்றாக இருக்கட்டும் பொண்டாட்டி பிள்ளைகளோடு. நான் இங்கே ஏதாவது கோவிலில் ஊழியம் செய்து என் காலத்தை கடத்துகிறேன்.அதற்க்கு மட்டும் வழி செய்யுங்கள்"
என கையெடுத்து கும்பிட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த மோகன் என்பவர்'சிவகாமியிடம் அம்மா நான் என் சகோதரியை வழியனுப்ப வந்தேன் .இளம் வயதில் பெற்றோரை இழந்தவர்கள் நாங்கள்.சமீபத்தில் என் மனைவியும் இறைவனடி சேர்ந்து விட்டார். நான் டாக்டராக இருக்கிறேன். பள்ளி செல்லும் இருமகள்கள்.என்னோடு வாருங்கள் எனக்கு அம்மாவாகவும், என் மகள்களுக்கு பாட்டியாகவும் இருங்கள்.கடைசிவரை உங்களை நான் பாதுகாக்கிறேன்" என்றார்.
பிறகு அங்கிருந்த அதிகாரிகள்,காவல்துறை மூலம் சிவகாமியின் விருப்பத்தோடு அவரோடு அனுப்பி வைத்தனர்.
பெற்றப்பிள்ளை கைவிட்ட நிலையில் பெறாத மகனாக வந்தவரோடு கிளம்பினார் தன் எதிர்காலத்தை எண்ணி.பெற்றால்தான் பிள்ளையா?
நன்றி.
V.A.ஷெண்பகம் பாண்டியன்
சத்துவாச்சாரி. வேலூர்.
632 009.
(உண்மை செய்தியை ஆதாரமாக கொண்ட சிறுகதை)
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்