logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Jahbar Kadhar

சிறுகதை வரிசை எண் # 142


" முற்பகல் செய்யின்....." +±+++++±++++++++++++ சிறுகதை... " வானம் பார்த்த பூமி சலுகாம்மாவின் கிராம ம்... தவறாமல் பருவ மழை பெய்திடும் பொற்காலம் ....." உளுந்து , சோளம், கம்பு , தினை , குதிரைவாலி, துவரை, மல்லி , மிளகாய், மிதுக்கங்காய், அதலக்காய் ,வெங்காயம்,.... பீர்க்கங்காய் ,சுரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய் , தக்காளி, வெள்ளரிக்காய் ... விளைந்து தள்ளி விடும். ஒரு ஏழு மாத காலத்திற்கு " சம்சாரிகள்" எப்போதும் காட்டிலும் வீட்டிலும் வேலைகளை பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். காட்டுக்கு போய் வேலை முடித்து வந்த பெண்களுக்கு உஷ்னு உட்கார நேரமிருக்காது... குடங்குடமாய் தண்ணீரை கிணற்றிலிருந்து இறைத்து பெரிய பெரிய சிமெண்ட் தொட்டிகளில் நிரப்ப வேண்டும்.. கம்மம் புல்லை உரலில் குத்தி புடைத்து , இடித்து ,மறுநாள் கஞ்சிப் பாட்டுக்கு கஞ்சி காய்ச்சி அடுப்பில்ஆறப் போட வேண்டும்.( இப்போதுள்ள தம் கட்டும் முறை) குஞ்சும் குருமானுமாய் இருக்கும் பிள்ளைச் செல்வங்களுக்கு வயிற்றுப்பசி ஆற்றி அடுச்சுப் போட்ட நாராய் உடம்பை படுக்கையில் கிடத்துவார்கள் பெண்கள்... கண்ணை சொக்கிக் கொண்டு போகும்... மறு நிமிடம் அடுத்த வாரிசுக்காய் அழைப்பு வந்து விடும். " குடும்பக் கட்டுப்பாடு" பற்றி அரிச்சுவடியும் தெரியாத காலம். ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டு பிள்ளைகளுக்கு குறைவிருக்காது... ஒவ்வொரு பிள்ளை பிறப்பின் போதும் அப்போதய நாட்டு மருந்துகளே பெண்களை ஆரோக்கியமாய் வைத்திருந்த து... " சலுகாம்மாளுக்கு நான்கு ஆணும் இரண்டு பெண்ணுமாக ஆறு பிள்ளைகள்... கடும் உழைப்பாளி. காட்டு வேலை செய்ய இப்போ தெம்பில்லை. இரண்டு பசுக்களை வைத்து பால் கறந்து தன் ஜீவனத்தையும் புருஷன் இல்லாத மகளின் ஜீவனத்தையும் பார்த்துக் கொள்கிறாள். புண்ணியத்துக்கு ஒரு மகளுக்காவது குடும்பம் அமைந்த தே என திருப்தி பட்டுக் கொண்டாள்... சலுகாம்மாவின் புருஷன் எப்பவும் சோப்லாங்கிதான் இப்ப அதுவும் இல்லையென்றாகி விட்டது... மகன்கள் வீட்டில் வைத்து கொண்டு மூன்று வேளையும் கஞ்சி கொடுத்தால் போதுமென்றிருக்கிறது. ஆனால் ஒரு பயலும் சிறுக்கியும் வாயைத் திறந்து என் வீட்ல வந்து இருமானு சொல்ல மாட்டேன்றாங்களே!!! மிகுந்த அங்கலாய்ப்புடனும் இயலாமையுடனும் சின்னவன் வீட்டுத் திண்ணையில் தலையைச் சாய்த்தாள் சலுகாமா.... " கருப்பட்டிக் காப்பி அடுப்பில் கொதிக்கும் வாசனை மூக்கைத் துளைத்த து. மிகவும் ஆசையுடன் காபி வருமென காத்திருந்தாள். பேரன் பேத்திகளின் கசமுசா சத்தம் இப்போ இல்லை. குடிச்சு முடுச்சுட்டாங்க போல. எங்கம்மா திண்ணைலதான் படுத்துக் கிடக்கு ஒரு கிளாசு காப்பி கொடேன்... சின்னவன் தன் மனைவியிடம் கெஞ்சுவது போல் கேட்கிறான்... கிழவிக்கு வேற வேல இல்ல. இங்க வந்து படுத்துக்குது. இங்கயே பத்து கிளாசு காப்பி போட வேண்டியிருக்கு. உங்க பங்கு வேணா குடுங்க . வெடுக்கென பதிலளித்து விட்டு வேறு வேலையப் பார்க்கப் போய் விட்டாள் மருமகள். மனசு கேட்காத சின்னவன் அம்மா எந்திரிமா காப்பி குடி. என தன் பங்கு காப்பியை கொடுத்தான். .. நீ ரெண்டு மொடக்கு குடுச்சுட்டு குடுப்பா ... நீர் கோர்த்த கண்களுடன் மகன் கையிலிருந்து வாங்கி காப்பியை குடித்துக் கொண்டாள் சலுகாமா. சோற்றை வடித்து வைத்து விட்டு குழம்பு வைக்க ஏலாமல் மருமகளிடம் குழம்புக்காய் வந்து நிற்கும் போதும் ,என்னத்தையாவது சொல்லிக் கொண்டே குழம்பு தருவாள் சின்னவன் பொண்டாட்டி மட்டும். மற்ற மூன்று மகன்களும் சுத்தம்..... காலப்போக்கில் சலுகாமாவின் காலம் முடிந்த து. சின்னவனுக்கு ஆறு ஆண்களும் இரண்டு பெண்களுமாய் எட்டு உருப்படிகள். காடு கரைகளில் பாடாய்ப்பட்டு தங்கள் பிள்ளைகளை வளர்த்தனர்.. ஆண் பிள்ளைகள் சற்றே வளர வளர வேலைக்கு பட்டணத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர். பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். காலப் போக்கில் அவர்களையும் " முதுமை" வந்தடைந்த து... " திடுதிப்பென வந்த நான்கு நாள் காய்ச்சலில் சின்னவன் கதையும் முடிவுக்கு வந்த து. தனி மரமானாள் சின்னவன் மனைவி சாலிஹா... ஆண் பிள்ளைகள் ஆறு பேரும் , மகள்கள் இருவரும் சென்னையில் அவரவர் வசதிக்கு ஏற்றவாரு வாழ்ந்து கொண்டிருந்தனர். பிள்ளைகளுக்கு சிரம ம் கொடுக்காமல் ,கிராமத்திலேயே வாழ்ந்து கொள்வோம் என நினைத்த சாலிஹாவுக்கு தனிமையும் நோயும் ஒத்துழைக்கவில்லை. ஏன் இப்படி தனியாய்க்கிடந்து கஷ்ட்டப்படறே உன் மக்கள்ட்டா போயிறு... உறவுகளின் வற்புறுத்தல்களும் சேர்ந்து கொள்ள சென்னைக்கு கிளம்பினாள் சாலிஹாம்மா... சென்னையின் வசதிகள் சாலிஹாம்மாவை பிரமிப்பின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றது... பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் ஆச்சாவை தூக்கி வைத்துக் கொண்டாடினர். இவரும் மருமகளுக்கு கீரை ஆய்ந்து கொடுத்தார் . கொடியில் காயும் துணிகளை எடுத்து அழகாக அயர்ன்கார ர் தோற்றுக்குமளவுக்கு நீட்டாக மடித்துத் தருவார்... வெங்காயம் காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பார்.. நினைத்த நேரத்தில் வேளாவேளைக்கு காபியும் சாப்பாடும் இருக்கும் இடத்திற்கு டானென்று வந்து விடும். மிகவும் மன மகிழ்ச்சியோடிருந்தார் சாலிஹாம்மா... "" எல்லா சொகுசும் ஒரே ஒரு மாதம்தான்.. " உங்கள மட்டுமா உங்க அம்மா பெத்தாக" ? மருமகளின் முணுமுணுப்பு.... ஒவ்வொரு மகன் வீட்டிலும் ஒருமாதம் வைத்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது.... சாலிஹாம்மாவின் வாழ்க்கை கிரிக்கெட் பந்து போலானது... ஒருமாதம் கழித்து சில நாட்கள் கழிந்த தோ அதோ கதிதான்..." "" எட்டுப் பிள்ளைகளுக்கும் ஒற்றையாளாய் தண்ணீர் இறைத்து சுமந்து சோறாக்கி வெஞ்சனம் பார்த்து அத்தனை பேர்களின் அழுக்கு துணிகளையும் தனியொருவளாய் துவைத்து, காட்டு வேளைகளையும் பார்த்து, இரவானாலும் நெடு நேரம் விழித்திருந்து கேழ்வரகு கம்பு இவைகளை காலால் மிதித்து தானியங்களை பிரித்தெடுத்து புடைத்து, உழைப்பை கொட்டிய, அந்த ஜீவனுக்கு , முதுமையில் சாப்பிடும் ஒரேயொரு தோசைக்கும் ஒரு கரண்டி சோற்றிற்கும் பெற்ற பிள்ளைகள் கணக்குப் பண்ண வேண்டிய கொடுங்காலம் வாய்த்தது..."" "" என் மகள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள் அதுவரை அம்மாவை வைத்துக் கொள்ள முடியாது. இப்படியொரு மகன். என் மகளை பிரசவத்திற்கு கூட்டி வந்திருக்கோம். மருமகன் சப்பந்திகளெல்லாம் வருவாங்க இடம் பத்தாது இன்னொரு மகன்.. எங்க வீட்டு ஓனர் எக்ஸ்ட்ரா ஆளிருந்தா வாடகை கூட்டிக் கேட்கிறாங்க. இப்படி.... உங்கம்மா என்னய கொடும படுத்துனாங்க அவங்க நம்ம வீட்டுக்கு வந்தா நான் வெளியே போயிடுவேன் புருஷனை மிரட்டும் இன்னொரு மருமகள்... இந்த சின்ன வீட்டுக்குள்ள எங்களுக்கே இடம் பத்தல இதுல அவங்கள வேற எப்படி வச்சுக்கிறது... இது இன்னொரு மறுமகள். இத்தனை மகன்கள் இருக்கும் போது நாங்கள் வைத்துக் கொள்ள முடியாது எங்க புருஷன் மாமியாரெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க . இது பெற்ற மகள்களின் நியாயம்!!!....... " இறுதலைக் கொள்ளி எறும்பாய் மகன்களின் நிலமை.. அம்மாவுக்காய் பொண்டாட்டியிடம் கடுமை காட்ட முடியாத மகன்களின் கையறு நிலை... துயரத்தின் உச்ச கட்டம்... "" எங்கம்மாவுக்கும் ஒரு கிளாஸ் காபி கொடேன் தன்னிடம் கெஞ்சிய கணவணின் முகம் கண் முன்னே வந்து போனது சாலிஹம்மாவிற்கு. சாலியா எனக்கு கொஞ்சம் குழம்பு கொடேன்.... தீன குரலில் மணிக்கணக்காய் கேட்டு காத்திருந்த மாமியாரின் குரலும் சாலிஹாம்மின் கண் முன்னே வந்த து...." " எழுதியவர்" ,ஜஹ்பர் காதர்.....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.