செய்யது இப்ராஹிம் நூ அ
சிறுகதை வரிசை எண்
# 14
தாய்
வணக்கம், இன்று நாம் பார்க்க போகும் கதையின் தலைப்பு " தாய் ".
நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த ஒரு ஜீவன் யார் என்றால் நம் தாய் தான். அப்படி பட்ட ஒரு தாயை தன் மகனே தனக்கு இடையூராக இருக்கின்றார் என்று பெற்ற தாயை கொன்று விட்டான். அவன் எதற்காக இப்படி செய்தான் என்பதை பற்றி இந்த கதையில் நாம் பார்ப்போம்...
ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் தன் பிள்ளைகளின் படிப்பிற்காக சென்னை வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது. ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும். ஆண் பிள்ளையின் பெயர் கோகுல். பெண் பிள்ளையின் பெயர் சுமதி. இவரது தந்தை மிக பெரிய தொழில் அதிபர். இவர்களது தாய் வீட்டில் இருந்து பிள்ளைகளையும் தன் கணவரையும் கவனித்து வருகிறார். தன் இரண்டு பிள்ளைகளையும் தன் இரு கண்கள் போல் பார்த்து கொண்டு வந்தார் இவர்களது தாய். இவர்களது பிள்ளைகளை சென்னையில் உள்ள பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். இருவரும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். கோகுலிற்கு கெட்ட பழக்கம் எனப்படும் புகை பிடித்தல் மற்றும் குடி பழக்கம் இருந்து வந்தது. இவனது அப்பாவிற்கு அது ஒரு நாள் தெரிய வந்தது. இவனது அப்பா இவனை அடிக்கடி தனியாக அழைத்து சென்று அறிவுரை வழங்குவார். இவனது அம்மா வந்து " என்னவென்று கேட்டால், ஒன்றும் இல்லை " என்று கூறி மறைப்பார்கள். இது இவனது தந்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது. நாட்கள் ஓட இவர்களது பெண் பிள்ளை பள்ளி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக வெளி நாட்டிற்கு சென்றாள். இவனும் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களது பெற்றோர் இவனிடம் " நீயும் நல்ல மதிப்பெண் எடுத்தால் உன்னையும் நாங்கள் வெளி நாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்போம் " என்று கூறினார்கள். இவன் பதில் எதும் கூறாமல் அமைதியாக இருந்தான். பின்பு ஒரு நாள் இவனது பள்ளியில் இருந்து இவனது அம்மாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் " நீங்க உடனே கிளம்பி வாங்க " என்று கூறினார்கள். இவனது அம்மாவிற்கு பயம் வந்தது. ஏனென்றால் இவனிற்கு ஆஸ்துமா மற்றும் அடிக்கடி மூச்சு முட்டு வரும் வியாதி உள்ளது. இவர்களும் உடனே கிளம்பி வாருங்கள் என்று கூறுவதை வைத்து தன் பிள்ளைக்கு எதும் தவறாக நடந்து விட கூடாது என்று இவனது தாய் கடவுளிடம் வேண்டி கொண்டு சென்றார். அங்கு போய் பார்த்தால் இவனது அம்மாவிற்கு தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது... கோகுலின் கையில் காவல் துறையினர் விளங்கு மாட்டி வைத்து இருந்தனர். உடனே இவனது அம்மா அங்குள்ள காவல் துறையினரிடம் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரித்தனர். என்ன நடந்தது என்று. அவர்களும் " அம்மா உங்க பையன் கூட படிக்கிற ஒரு பொன்ன கற்பழித்து விட்டான். அது மட்டும் இல்லாம அந்த பொன்ன படம் எடுத்து வைத்து விட்டு பணம் கேட்கிறான் தொல்லை செய்கிறான். ஏன் இப்படி பண்ண என்று கேட்டால் எங்க அப்பா பெரிய தொழில் அதிபர் அப்படி என்று மிகவும் திமிராக பதில் அளிக்கிறான் ". பெண் வீட்டார் போலீசாரிடம் புகார் தெரிவித்து விட்டார் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆசிரியர்கள் கூறினார்கள். காவல் துறையினரும் அவனை அழைத்து சென்றார்கள். பின்பு இவனது அம்மா உடனே அவனது அப்பாவிற்கு தொடர்பு மேற்கொண்டார். அவர், தன் மகனை காவல் துறையினர் பிடித்து விட்டார் என்பது தெரிந்து, இவள் அதற்காக தான் தொடர்பு கொள்கிறாள் என்று தெரிந்து அவர்களது தொடர்பை அவர் மேற்கொள்ளவில்லை. பின்பு தொடர்ந்து தொடர்பு மேற்கொண்டும் அவர் எடுக்க வில்லை. பின்பு இவனது அம்மா அவர்களுக்கு தெரிந்த வழக்கறிஞரை அழைத்து சென்று அந்த பெண் வீட்டாரிடம் இவனது அம்மா காலில் விழுந்து " தயவு செய்து புகார் வாபஸ் வாங்குங்க " என்று காலில் விழுந்து கதறி அழுதனர். பின்பு அவர்களும் காவல் நிலையம் வந்து புகாரை வாபஸ் செய்து விட்டு கோகுலை பார்த்து " டேய், உங்க அம்மாகாக தான் உன்ன மண்ணிச்சி விடுறேன் " என்று அந்த பெண்ணின் தந்தை கூறினார். பின்பு இவனது அம்மா இவனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அன்று இரவு இவனது அப்பா வீட்டிற்கு வந்தார். இவனது அம்மா தன் கணவரிடம் " நான் உங்களுக்கு எத்தன நேரம் தொடர்பு கொண்டேன் ஏன் என்னோட அழைப்பு எடுக்கல " என்று கேட்டார். அதற்கு அவர் " ஒரு முக்கியமான மீட்டிங் அதான் எடுக்க முடில " என்று கூறினார். இதற்கு இவனது அம்மா " ஏன்க நம்ம பிள்ளைய விட உங்களுக்கு மீட்டிங் தான் முக்கியமா " என்று கேட்டார். அதற்கு இவனது அப்பா " ஏன் மா நீ இன்னும் அப்பாவியா இருக்கே... " என்று கண் களங்கி கூறினார். உடனே இவனது அம்மா " ஏன்க என்ன சொல்றீங்க , எனக்கு ஒன்னும் புரியல தெளிவா சொல்லுங்க " என்று கெஞ்சினார். பின்பு இவனது தந்தை கோகுலை பற்றிய உண்மைகள் அனைத்தும் கூறினார். “ இவன் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே புகை பிடிக்கும் பழக்கமும் குடி பழக்கமும் இருந்தது. அதான் சரி சென்னை வந்தாலாச்சும் மாறுவான் என்று பார்த்தேன் மா ஆனா இங்க வந்த பிறகு அவனோட நடவடிக்கை எல்லாம் மாறிவிட்டது. நானும் அவன்கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்துடேன். அன்பாகவும், கோபமாகவும் சொல்லி பார்த்துடேன் ஆனா அவன் கேட்கல நமக்கு அவன் மட்டும் இல்ல நம்ம பொண்ணு இருக்கா அவளுக்கும் நம்ம எதாச்சும் சேர்த்து வைக்கனும், அதான் அவன் தலை எழுத்து படி ஆகட்டும் என்று சொல்லி விட்டேன் " என்று மன வருத்தத்துடன் கூறினார். இவனது அம்மா " இவ்ளோ நடந்திற்கு என்கிட்ட ஏன் சொல்லல " என்று கேட்டார். " இல்ல மா உன்கிட்ட நீ வேற கஷ்ட படுவே அதான் சொல்லல மா " என்று இவனது தந்தை கூறினார். " சரி, நீ எதும் தெரியாத மாதிரி இரு , போய் முகம் கழுவிட்டு தூங்கு " என்று இவனது தந்தை இவனது அம்மாவிடம் கூறினார். பின்பு மறுநாள் இவனது தந்தை தொழில் விசயமாக 3 நாள் வெளி ஊருக்கு சென்றார். கோகுலும் இவனது அம்மா மட்டும் வீட்டில் இருந்தனர். இவனது அம்மா இவனிடம், " தம்பி இந்த கெட்ட பழக்கம் எல்லாம் வேண்டாம் பா கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடு " என்று அன்பாக கூறி வந்தனர். இவன் இவனது அம்மா முன்பு கஞ்சா அடித்து வந்தான். இவனது அம்மாவும் அன்பாக இது எல்லாம் வேண்டாம் என்று கூறி வந்த நிலையில் இவனிற்கு போதையுடன் கோபமும் தலைக்கு ஏறி பெற்ற தாய்யை கொன்று விட்டான். கொன்று விட்டு அவரிடம் உள்ள நகை அனைத்தும் அறுத்துவிட்டு கொள்ளையர்கள் நகைக்காக கொன்று விட்டது போல் கதையை மாற்றி விட்டான். பின்பு இவனது தந்தை அந்த இரவு வீட்டிற்கு வந்தார். வந்து பார்த்தால் இவர்களது மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்தார். பின்பு இவர் காவல் துறைக்கும் 108ற்கும் தொடர்பு மேற்கொண்டார். காவல் துறையும் கொள்ளையர்கள் தான் இந்த கொலையை செய்து இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர். பின்பு இவனது அக்கா சுமதியும் தன் அம்மாவின் அடக்கதிற்கு வந்தாள். தன் அம்மாவின் சாவிற்கும் தனக்கும் எந்த வித சம்மதமும் இல்லை என்பது போல் நல்லவன் போல் தன் அம்மாவின் பிணத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு " அம்மா என்ன விட்டு பொய்டியே அம்மா " என்று ஒப்பாரி வைத்து நாடகம் ஆடினான். இவனது அப்பா இது எதையும் நம்ப வில்லை " இவன் தான் கொலை செய்து இருப்பான் " என்று தெரிந்தும் அதை வெளி காட்டாமல் இருந்து வந்தார். அடக்கம் எல்லாம் முடிந்த பின்னர் சுமதியின் அப்பா இந்த கொலைகாரனிடம் இருந்து தன் மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்று சுமதியிடம் நீ உடனே ஊருக்கு கிளம்பு என்று கூறி தன் மகளை ஊருக்கு அனுப்பி வைத்தார். பின்பு சில மாதம் கழித்து இவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவரை கோகுலின் அப்பா சந்திக்க சென்றனர். அப்பொழுது அவர் " சார், நான் உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும் " என்று கூறினார். அதற்கு அவர் " ம் சொல்லுங்க "என்று கூறினார். அவரும் " சார், உங்க மனைவியை கொள்ளையர்கள் கொலை செய்யவில்லை உங்க பையன் தான் கொலை செய்தாரு " என்று கூறினார். இவருக்கு தூக்கி வாரி போட்டது உடனே இவர் " என்ன சொல்றீங்க நீங்க பாதிங்களா " என்று கேட்டார். அவரும் " ஆம் நான் பார்த்தேன் என்று கூறிவிட்டு நடந்த அனைத்தையும் கூறினார், நான் அன்னிக்கி வேலை முடிச்சிட்டு வரும் போது உங்க வீட்டுல ஒரே சத்தமா இருந்திச்சி நானும் உங்க வீட்டு கதவு கிட்ட நின்னு பார்த்தேன் என்று கூறினார். இதற்கு கோகுலின் அப்பா " உள்ள போய் பார்த்து இருக்கலாம் ல " என்று கேட்டார். அதற்கு அவர் " இல்ல சார் உங்க பையன் ஏற்கனவே எங்க வீட்டுல என்ன நடந்தாலும் நீ தலையிட கூடாது என்று கூறி என்னை அடித்து விட்டார் அதான்...." என்று கூறினார். உடனே கோகுலின் அப்பா " சரி, அப்புறம் என்ன நடந்தது " என்று கேட்டார். உங்க பையன் உங்க மனைவி தலைல ஒரு கட்டைய வச்சி அடி அடினு அடிச்சி கீழ தள்ளிவிட்டாரு அவங்க வலில துடிசாங்க சார் ஆனா உங்க பையன் அத கண்டுகாமா அவங்க கிட்ட இருந்த நகை எல்லாம் எடுத்துட்டு பொய்டாரு " என்று கூறினார். இவனது அப்பா இடிஞ்சி போய் உட்காந்தார். தகவலை தெரிவித்தவருக்கு நன்றி கூறிவிட்டு கிளம்பினார். இவருக்கு தன் மகன் மீது கோவம் அதிகமானது அந்த கோபத்துடன் வீட்டிற்கு சென்றார். கோகுலும் வீட்டிற்கு வந்தான். இவனது அப்பா கோகுளை அழைத்தார். அவனும் வந்து என்ன அப்பா என்று கேட்டான். இவர் " வா டா அப்பா பிரியாணி வாங்கிட்டு வந்திற்கேன் வா சாப்பிடலாம் " என்று அழைத்தார். அவனும் வந்து சாப்பிட ஆரம்பித்தான். கோகுல் அப்பாவிடம் " என்ன அப்பா பிரியாணி என்ன விசேசம் " என்று கேட்டான். அதற்கு அவர் " அம்மாவ கொன்னது யாருனு தெரிஞ்சிட்டு " என்று கூறினார். இவனிற்கு உடனே வெற்று ஊற்றியது கோழி திருடன் போல் திறுதிரு என முளித்து வந்தான் ". இதனை இவனது அப்பா கவனித்தார். " ஏன் பா என்னாச்சு என்னமோ நீ கொல பண்ண மாதிரி இப்படி வெற்று உத்துது " என்று இவனது அப்பா கேட்டார். அவன் " அப்படி எல்லாம் இல்ல பா அம்மாவ கொண்ணவன உயிரோட விட கூடாது " என்று கூறினான். இவனது அப்பாவும் அவனிடம் " சரி பா என்ன பண்ணலாம் சொல்லு " என்று அவனிடம் கேட்டார். அவன் " நா என்ன பண்ண முடியும் பா , நான் சின்ன பையன் " என்று கூறினான். அதற்கு அவனது அப்பா " அம்மாவ ஏன் அப்போ கொன்ன " என்று ஆக்ரோஷமாக கேட்டார். அவன் பதில் கூறாமல் திருதிறு என முளித்தான். அவனது அப்பா அவரது ஆத்திரம் தீரும் அளவிற்கு அவனை அடி அடி என அடித்து நோரிக்கினார். " உன்ன அவ நெஞ்சில வச்சி வளர்த்தாலே டா ". " எப்படி டா உனக்கு அவள கொள்ள மனசு வந்துச்சி உன் மேல தான டா அவ உயிரே வச்சி இருந்த கடைசில நியே அவ உயிர எடுத்துட்டியே டா பாவி ". " நான் உன்ன கொள்ளாம விட மாட்டேன் டா " என்று கத்தியை எடுத்து அவனை குத்த சென்றார். அவன், " அப்பா நா உன் புள்ள பா என்ன கொள்ளாத பா " என்று கூறினான். இவரும் குத்த வருவதை நிறுத்தி விட்டு அவனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். " இனிமே உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்ல எனக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான். இப்போ நா ஏன் உன்ன உயிரோட விடுறென் தெரியுமா நீ ரோடு ரோடு ஆ சாப்பாட்டிற்கு நீ பிச்சை எடுக்கணும் டா அப்போதான் உன்னோட அம்மா அருமை உனக்கு தெரியும் " என்று கூறி துரத்தி விட்டார். இவனும் தெரு தெருவாக திரிந்தான். யாரும் இவனிற்கு சாப்பாடு தரவில்லை கையில ஒரு ரூபா கூட இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் திரிந்தான். பசி மயக்கத்தில் அவன் அற மயக்கத்தில் " அம்மா உன்ன நா தெரியாம கொண்ணுடேன் மா , மா எனக்கு பசிக்குது மா , எனக்கு கரெக்ட் ஆ பசி எடுக்கும் போது என்ன கூப்டு சாப்பாடு பொடுவியே மா , இப்போ நா சாப்பிட்டு 1 வாரம் ஆகுது மா , " சாப்டியா இல்லையா என்று கேட்க ஒரு நாதி இல்லாம ஆனதையா இருக்கேன் மா , மா உன்னோட அருமை இப்போதான் மா எனக்கு புறிது திரும்பி வா மா , மா மா மா மா.......... " என்று கூறி கோகுல் இறந்து விட்டான்........
கருத்து : இந்த கதையின் மூலம் நாம் அறிந்தவை என்னவென்றால் போதை பழக்கம் தன் உயிருக்கு மட்டும் அல்ல பிற உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது தான். இந்த கதையில் கோகுல் தன் போதை பழக்கத்திற்கு அம்மா தடையாக நிற்கின்றார் என்று பெற்ற அம்மாவையே இவன் கொன்று விட்டான். ஆனால் தன் தாய் இல்லாமல் ஒரு வேலை சாப்பாட்டிற்கு அவன் படும் கஷ்டம்.... சொல்ல வார்த்தைகள் இல்லை.
" ஒருவர் இருக்கும் பொழுது அவர்களது அருமை நமக்கு தெரியாது. அவர் நம்மை விட்டு சென்ற போது தான் அவரது அருமை நமக்கு புரிய வரும் " என்பது பழமொழி. அதேபோல் கோகுலிற்கு அவனது அம்மா அவனுடன் இருக்கும் போது அவரது அருமை தெரியவில்லை அவர் இல்லாத போது தான் புரிகிறது. எனவே தன் தாயை சுமையாக பார்க்காமல் நம் கண் இமைப் போல் பார்க்க வேண்டும். தாய் இல்லாமல் ஏங்கும் குழந்தைகளுக்கு தாயின் அருமை புரியும். நாம் அனைவரும் நம் தாயை மதிப்போம். தாயை தாயாக பாராமல் தெய்வமாக பார்ப்போம்.
நன்றி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்