logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

குளோரி செல்வமணி.அ

சிறுகதை வரிசை எண் # 138


**வழி மாறா மேய்ப்பர்** (சிறுகதை) டீச்சர்,மணி என்னை அடித்துவிட்டான் என்று ஓடிவந்தான் நளன்.ஏண்டா நளன்? ஏன் இப்படிச் செய்தாய்? என்று ஆசிரியர் கேட்க,அவன் கெட்ட வார்த்தை சொல்லி அழைத்தான்.ஆகவேதான் அடித்தேன் என்று பதில் சொன்னான் நளன். கெட்ட வார்த்தை சொன்னால் அடிப்பாயா? என்னிடம் வந்து சொல்ல வேண்டியதுதானே எனக்கேட்டுக்கொண்டே ஆசிரியர்,மணியைப்பார்த்து," இந்தப்பாடவேளை வெளியே நில்.நாளை வரும்போது உன் அப்பாவை அழைத்து வா "என்று சொல்ல,மணியும் அழுதுகொண்டே வெளியே நின்றான். நின்றவனின் எண்ணம் ,முந்தைய நாள் வீட்டில் நடந்த நிகழ்வை அசைபோட்டுக் கொண்டிருந்தது. ஆத்தா! எனக்கு சப்பாத்தி சாப்பிட ஆசையா இருக்கு..இன்னைக்கு செஞ்சு தாரியா? எனக் கேட்டான் மணி.அடச்சீ சனியனே! ஒன்னப் பெத்தவ விட்டுட்டு ஓடிப்போயிட்டா..ஒன்ன வச்சிக்கிட்டு நான் பட்ற அவஸ்தை இருக்கே..அப்பப்பா...யார்கிட்ட போய் சொல்ல? அரிசி சோறு பொங்கிப்போடவே முடியலியாம்..இதுல ராசாவுக்குச் சப்பாத்தி கேட்குதாம்..போ..போ காலையில வச்ச சோத்துல கொஞ்சம் மீதியிருக்கும்..அதில் தயிரை ஊத்திக் கரைச்சுக் குடிச்சிட்டுப் படு என்றாள் ஆத்தா. லாரி ஓட்டுநரான தன் அப்பாவிற்குப் போன் செய்தான் மணி.அப்பா! பிளீஸ் இன்னைக்கு சப்பாத்தி வாங்கியாப்பா .சாப்பிடணும்னு ஆசையா இருக்கு என்றான்.எதிர்முனையில் இருந்த அப்பா குடிபோதையில் இருந்தார்.மகன் சொல்வதைக் கேட்கவே இல்லை.மகனிடம் கெட்ட வார்த்தையில் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார். ச்சே..என் அம்மா ஏன் என்னை விட்டு ஓடிப்போனாள்?நான் கறுப்பா அசிங்கமா இருக்கிறேன் என்றா..இல்லை அப்பாவின் குடிபோதை தாங்காமலா? பெற்றவள் இப்படித் தவிக்கவிட்டுப் போய்விட்டாளே என வருந்தியவன் கண்களில் நீர் ஒழுக அப்படியே தூங்கிப்போனான். காலையில் எழுந்து அவசரம் அவசரமாய் குளித்துவிட்டு 7 மணி பேருந்தைப்பிடிச்சுப் பள்ளிக்கு வந்துவிட்டான்.வகுப்பிற்கு வந்ததும் வகுப்புத் தோழி ராதா, அன்னைக்குனு பார்த்து,சப்பாத்தி கொண்டுவந்து தந்தாள்.மணியும் விரும்பிச் சாப்பிட்டான். சாப்பிடும்போது,பக்கத்தில் இருந்த நளன்,மணியையும்,ராதாவையும் கிண்டல் செய்த போது மணிக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே கெட்ட வார்த்தை பேசிவிட்டான்.பதிலுக்கு நளன்,அடித்துவிட இப்போது வகுப்பறைக்கு வெளியே நிற்கிறான். நாளைக்கு அப்பாவை அழைத்துவரவேண்டும் .எப்படி அழைத்து வருவது என்ற சிந்தனை தற்போது ஓடிக்கொண்டிருக்க அந்தப் பாடவேளை முடிந்து மதிய உணவுக்கான மணியடித்தது. அடுத்த நாள்,மணியின் அப்பா,டீச்சரைப் பார்க்க பள்ளிக்கு வந்தார்.காலையில் வந்ததும்,தகாத வார்த்தையில் மணியைக் குறிப்பிட்டு,என்ன செய்தான் என கேட்க,ஆசிரியர்க்குக் கோபம் வந்துவிட்டது.பொது இடம் என்றுகூட பார்க்காமல்,அதுவும் பள்ளியில்வந்து இப்படி கெட்ட வார்த்தை நீங்கள் பேசலாமா? உங்களிடம் கேட்ட வார்த்தைகளைத்தான் இவனும் பேசுகிறான்.இனிமேலாவது பிள்ளைகளிடம் நல்ல சொற்களைப் பேசுங்கள் என்றார் ஆசிரியர். இவன் அம்மா இவனை விட்டுட்டு வேறொருத்தன் கூடப் போயிட்டா..அஞ்சு வருசமா இவன எங்கம்மாதான் வளர்க்கிறாள்.இனிமேல் அவனை நல்லவிதமா பார்த்துக்கிறேன் என்றவாறு,பள்ளியை விட்டுச் சென்றுவிட்டார். ஆசிரியர்க்கு மனசு ரொம்ப வலித்தது.எல்லாப் பிள்ளைகளும் நல்லவர்களே..சூழ்நிலை காரணமாகச் சிலரின் போக்கு இவ்வாறு மாறிப்போகிறது என்பதை உணர்ந்தவராய் மணியை அழைத்தார்.மணி! "நேற்று உன்னை வெளியே நிற்க வைத்ததற்கு சாரிடா" எனக் கூற மணி அப்போதும் அழுதான். இன்றிலிருந்து நீ நல்ல பையனாய்,நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும் .இனிமேல் என்னை அம்மா என்றே நீ அழைக்கலாம் எனச்சொல்ல மணிக்கு சந்தோசம் தாங்கமுடியல."நிச்சயமாக அம்மா" எனச் சத்தமாய்க் கூறிக்கொண்டே தன் கனவுலக அம்மா கிடைத்த மகிழ்வில் அன்றிலிருந்து நன்றாகப் படிக்க ஆரம்பித்தான். குளோரி செல்வமணி.அ கரூர்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.