logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

P;SHANMUGAVADIVU

சிறுகதை வரிசை எண் # 132


சில அந்தரங்க டைரிக்குறிப்புகள்- P;SHANMUGAVADIVU 1 காஞ்சனாவின் டைரியிலிருந்து டென்த் எக்சாம் முடிஞ்சதில் இருந்து ரொம்ப ரிலாக்ஸா இருக்கு . எத்தனை ஸ்பெஷல் கிளாஸ்? எத்தனை படிப்பு, எவ்ளோ உழைப்பு? எல்லாத்துக்கும் விடுதலை. ஸ்கூல் கிரவுண்ட் ல மையத்தில் வந்து ஓ-னு உற்சாகமா கத்தனும் போல் இருந்தது. பசங்க பல பேரு பாட புக்ஸ் பக்கங்களை கிழிச்சு மேலே எறிஞ்சு சந்தோஷக்குரல் எழுப்புனாங்க ,படிச்சு என்னத்தைக்கிழிச்சானுங்க?னு இனி யாரும் கேள்வி கேட்க முடியாது படிச்சதையே கிழிச்சாச்சு.பொண்ணுங்களுக்கும் உள்ளூர ஆசை தான், அதே மாதிரி கிழிக்கனும்னு, ஆனாலும் தைரியம் இல்லை, டீச்சர்ஸ் யாராவது பார்த்து பேரண்ட்ஸ் கிட்டே போட்டுக்குடுத்துட்டா? அதனால கமுக்கமா எல்லாரும் அவங்கவங்க வீடு. போய் சேர்ந்தோம் லீவ் விட்டதால இனி வீட்ல ஒரு 2 மாசம் ஜாலியா இருக்கலாம், அடிக்கடி தனிமையில் இருக்கலாம், தனிமையிலே இனிமை காண முடியுமா?னு ஒரு பாட்டு வரி வருது. அது எந்த சிச்சுவேஷன்ல எழுதப்பட்டதோ, ஆனா டீன் ஏஜ்ல தனிமைக்கு ஏங்காதவங்க கம்மி . ஏன்னா எப்போப்பாரு அம்மாவோ அப்பாவோ இதைப்பண்ணாதே , அதைப்பண்ணாதே, அப்டி செய்யாதே , டிவில இந்த ப்ரோக்ராம் பார்க்காதேனு அதட்டிட்டே இருப்பாங்க , வீட்ல யாரும் இல்லைன்னா நம்ம இஷடத்துக்கு கொட்டம் அடிக்கலாம், கேட்க ஆளில்லை டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாரும் இல்லை பாட்டு செம ஹிட் ஆனது எல்லாருமே தனிமைக்கு ஏங்கி இருக்காங்க என்பதால்தான் அப்டினு ஒரு எண்ணம் ஓடுச்சு அப்டி ஒரு தனிமையான சந்தர்ப்பத்துல தான் அது நடந்தது. எங்க தூரத்து சொந்தம் எனக்கு சித்தப்பா முறை ஆகுது, வீட்டுக்கு வந்தார் , அம்மாவும் , அப்பாவும் இல்லை , ஒரு மேரேஜ்க்கு போய் இருந்தாங்க ,வந்தவரிடம் ஒரு ஃபார்மாலிட்டிக்கு டீ போட்டுத்தரவா? காஃபியா?னு கேட்டேன் . ஏதோ உன் இஷ்டம்னாரு . காஃபி போட்டுட்டு வந்து தந்தேன், குடிச்ட்டு அவரோட செல்ஃபோன்ல ஏதோ பார்த்துட்டே இருந்தாரு. அப்றம் டீப்பா மேல காபி கப்பை வெச்ட்டு பக்கத்துல அவர் ஃபோனையும் வெச்ட்டு பாத்ரூம் போய்ட்டு வர்றேன்னு போனாரு. ஏதோ ஒரு ஆர்வத்துல அவர் ஃபோனை எடுத்து அவர் என்ன பார்த்துட்டு இருந்தாருனு பார்த்தேன். அது ஏதோ ஒரு இங்க்லீஷ் பட க்ளிப்பிங்க்ஸ்.எனக்குள்ளே என்ன என்னமோ நிகழ்ந்தது. ஸ்கூல்ல சில டைம் தோழிகள் இது போல க்ளிப்பிங்க்ஸ் அரசல் புரசலா பார்ப்பாங்க நானும் கொஞ்சம் பார்த்திருக்கேன், கூட்டமா அவங்களோட பார்த்தது வேற ,இப்போ தனிமைல் பார்க்கறது வேற , எனக்கு உடம்பு காய்ச்சல் வந்த மாதிரி கொதிச்சுது. அவரு பாத்ரூம்ல இருந்து வர்றதுக்குள்ளே அதை பழையபடி வெச்சுடனும்னு என் மூளை அலாரம் அடிச்சது ஆனா டூலேட் , என் பின்னங்கழுத்தில் ஒரு சூடான மூச்சுக்காத்து பட்டுது.அவருதான். அவர் கை என் மேல படக்கூடாத இடத்துல வேணும்னே பட்டுது. நான் எட்டாம் கிளாஸ் படிக்கறப்ப ஒரு டைம் அம்மா குட் டச் , பேடு டச் பற்றி சொல்லிக்குடுத்திருக்காங்க , நிச்சயம் இது பேடு டச் தான், என் மூளை 2 பிரிவா பிரிஞ்சு எனக்கு ஆர்டர் போட்டுது. ஒண்ணு அவர் கையைத்தடுன்னுது, இன்னொண்ணு விடு , என்ன தான் நடக்குதுன்னு பார்த்துடலாம்னுது சினிமால ஹீரோ 1000 நல்ல கருத்துகள் சொல்வாரு அதை யாரும் கேட்க மாட்டாங்க , ஆனா அவர் ஸ்டைலா தம் அடிச்சா தம் பழக்கமே இல்லாதவங்க கூட அது மாதிரி ட்ரை பண்ணுவாங்க ,. நல்லதை விட கெட்டதுதான் சீக்கிரமா பரவும் அந்த சைக்காலஜி படி என் 2 வது பிரிவு மூளையின் சொல்படி நான் கம்முனு இருந்தேன் அவரு முன்னேறிட்டே இருந்தாரு . ஒரு கட்டத்துல என் மூளையின் , முதல் பிரிவின் உத்தரவுப்படி நடந்தேன் , வேணாம் , விட்ருங்க என கத்தினேன் அவரது பலம் அசாத்தியமா இருந்தது . உடும்புப்பிடினு சொல்வாங்களே அதை உணர்ந்தேன். ஆனா என்னால முடிஞ்ச வரை போராடுனேன். நகங்களால் கீறினேன், மணிக்கட்டில் கடித்தேன், பளார்னு ஓங்கி ஒரு அறை விட்டாரு. தலைக்குள்ளே நட்சத்திரங்கள் பறந்தன , நான் மயக்கம் ஆனேன் 2 ஜெகதீஷின் டைரியிலிருந்து கிரிமினல் லாயர்னு பேர் எடுக்கறது பெரிய விஷயம் இல்லை . பேப்பர்ல நம்ம பேரு வரனும், மீடியாக்கள் நம்மைப்பத்தி பேசனும்,நாம் போற வழி நல்லதோ கெட்டதோ , ஆனா போய்ச்சேரும் இடம் புகழின் உச்சியா இருக்கனும், இதுதான் நம்ம கொள்கை. கோர்ட் காட்சிகளுக்குப்புகழ் பெற்ற விதி டைகர் தயாநிதி , கனம் கோர்ட்டார் அவர்களே , நீதிக்கு தண்டனை நான் சிகப்பு மனிதன் , பிங்க் , நேர் கொண்ட பார்வை உட்பட பல படங்களின் கோர்ட் சீன்களை போட்டு போட்டு பார்ப்பேன்.கோர்ட்ல வாதிடும்போது சினிமா ல நடப்பது போலவே கற்பனை பண்ணிக்குவேன். நாடே பரபரப்பா பேசிட்டு இருக்கற ஒரு வழக்குல நாம ஆஜர் ஆகனும், அப்போ டெய்லி நம்ம பேரு மீடியா ல வரும் , சீக்கிரம் ஃபேமஸ் ஆகிடலாம்னு அடிக்கடி யோசிப்பேன், அப்படி ஒரு தங்க தருணம் வந்தது. பொள்ளாச்சியில் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சிலரது வழக்குகள் கோர்ட்டுக்கு வந்தது. அப்போ சக வழக்கறிஞர்கள் அட்வைஸ் பண்ணாங்க , இந்த மாதிரி கேசை எடுத்துக்க வேணாம், டெல்லி நிர்பயா கேஸ்ல குற்றவாளிகளுக்கு ஆதரவா வாதாட முன் வந்த வக்கீல்கள் மக்களின் கடும் கண்டனங்களுக்கு ஆளானாங்க, காசு எப்போ வேணா எப்படி வேணா சம்பாதிச்சுக்கலாம், ஆனா பேரு ரிப்பேரு ஆனா அதை சரி பண்ணறது கஷ்டம் , பல வருசம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பேரை ஒரே ஒரு நிமிஷ தவறால இழந்தவங்க அதிகம்னு சொன்னாங்க . அவங்களோட ப்ளா ப்ளா அட்வைஸ் கேட்க எனக்குப்பொறுமையும் இல்லை , விருப்பமும் இல்லை கோர்ட் வாசல்ல மைக்கை நீட்டிய மீடியா முன் “ நான் இந்த கேஸ்ல ஆஜர் ஆக ரெடியா இருக்கேன், பாவம் எது ? புண்ணியம் எது?னு பழம் பஞ்சாங்கம் பார்க்கற ஆள் நான் இல்லை . சட்டம் என்ன சொல்லுது? சந்தர்ப்ப சாட்சியங்கள் என்ன சொல்லுது? அதை வெச்சுதான் யார் குற்றவாளி ? யார் நல்லவன்?கறது முடிவாகும் அடுத்த நாள் டாக் ஆஃப் த டவுன் நான் தான் ,. யாருமே ஆஜர் ஆக முன் வராத வழக்கில் கிரிமினல் லாயர் ஜெகதீஷ் ஆஜர் ஆக ரெடி என பேட்டி கொடுத்திருக்கார் . என மீடியாக்களில் என் பேரும் , ஃபோட்டோவும் வந்தது . குற்றவாளி பெரிய இடம்கறதால எப்படியும் ஃபீஸ் தாராளமா கேட்கலாம் அப்டிங்கற எண்ணம் வந்தது. ஒரே கல்லுல 2 மாங்கா , இஷ்டப்படி ஃபீஸ் வாங்கிக்கலாம், நாம நினைச்சபடி மீடியாவில் ஃபிளாஸ் நியூஸா மிளிரலாம் 3 பூங்கொடியின் டைரியிலிருந்து நடிகைகள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வது எனக்குப்புதிரா இருக்கும், ஏன்னா சராசரி குடும்பப்பெண்கள் காதல் தோல்வியாலோ அல்லது தங்கள் துணை வேற ஒரு ஜோடி கூடப்போனார் என்பதாலோ விவாகரத்து கேட்பது , பிரிவது , சோகத்தின் உச்சியில் தற்கொலை பண்ணிக்கறது சகஜமா சமூகத்தில் நடப்பதுதான் , ஆனா கற்பு நெறி , ஒழுக்கம் , மனசாட்சி இதுக்கெல்லாம் பெரிய அளவில் முக்கியத்துவம் தராத சினிமா இண்டஸ்ட்ரீல காதல் தோல்வியால நடிகைங்க தற்கொலை பண்றது விசித்திரம் தான் சில்க் ஸ்மிதா , படாபட், திவ்யபாரதி ,மோனல் ,பிரதியூக்ஷா, ஷோபா -னு பெரிய லிஸ்டே இருக்கு. இவங்களோட கம்ப்பேர் பண்றப்ப நடிகை லட்சுமி , நயன் தாரா இவங்க எல்லாம் எவ்வளவோ தேவலை .ஒரு காதல்/கல்யாணம் தோல்வி அடைஞ்சா அதுக்காக அவங்க உடைஞ்சு போறதில்லை அடுத்த காதல் , அடுத்த கணவர்னு அடுத்த கட்டத்துக்கு சாதாரணமா போய்டறாங்க ,. ஐ லைட் இட் . ஆண்களுக்கு நிகரா பெண்களும் அப்டி இப்டி இருக்கலாம்னு வெளி உலகத்துக்கு காண்பிச்சதுக்காகவே எனக்கு அவங்களைப்பிடிக்கும் சில சினிமாப்படங்கள்ல மனைவியா வரும் ஹீரோயின் பாதை மாற, அல்லது மாறுவதற்கான காரணத்தை நியாயப்படுத்த நாயகியின் கணவனை ஆண்மை அற்றவனா காட்டுவதும் , குடிகாரனா , நோயாளியா காட்டுவதும் ரப்பிஷா இருக்கும், ஏன்? கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சுக்க ஆசைப்படற ஆண்கள் மாதிரி பெண்களும் நினைக்கக்கூடாதா? அந்த வகைல லட்சுமி குறும்படம் சமூக வலைத்தளங்களில் ஒரு அதிர்வை ஏற்படுத்துச்சு . ஒரு குடும்பப்பெண் வழி மாறுவதை கவிதையாக்காட்டுன படம், அது பெண்கள் மத்தியில் அபரித வரவேற்புப்பெறுவது ஆண்களுக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும், இருக்கட்டும் என் கணவரைப்பார்க்க தொழில் நிமித்தமா சிலர் வீட்டுக்கும் வருவாங்க . அதுல ஒருத்தன் எனக்கு தனியா தெரிஞ்சான்,. அவன் அடிக்கடி வீட்டுக்கு வர்றது கணவரைப்பார்க்க மட்டும் அல்ல என ஒரு நாள் உணர்ந்தேன்.ஆண்களுக்கு இல்லாத ஒரு பெரிய உள்ளுணர்வு பெண்களுக்கு உண்டு .ஒருத்தன் பார்வையை வெச்சே அவன் கண்கள் பயணிக்கும் திசைகளை வெச்சே அவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை ஒரு பெண் ஈசியா கண்டு பிடிச்சுடுவா அவன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திற்காகக்காத்து இருக்கான்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு . அப்படி ஒரு நாளும் வந்தது பாலுவின் டைரியிலிருந்து வாழ்க்கைல ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும், கொள்கை இருக்கும்.. வாழ்நாள்ல ஒரு கோடி சம்பாதிச்சிடனும்னு சிலர் நினைப்பாங்க . சினிமா ல ஹீரோவா நடிச்சு உச்ச நட்சத்திரம் ஆகிடனும்னு சிலர் நினைப்பாங்க .சிறந்த எழுத்தாளரா ஆகனும்னு சிலர் ஆசைப்படுவாங்க. ஆனா காலம் பூரா அவங்க கஷ்டப்பட்டுட்டே இருப்பாங்க ,. எதுக்கு இந்த கஷ்டம் ? யாருக்காக இந்த வலி,. இவ்ளோ கஷ்டப்பட்டு அச்சீவ் பண்ண பிறகு அதுல என்ன வருது? அதனால லட்சியமே ஒரு என்ட்டர்டெய்ண்மெண்ட்டா இருக்கனும், இதுதான் நம்ம பாதை நம்ம வாழ்நாள்ல ஒரு 1000 பேரையாவது கரெக்ட் பண்ணிடம்கறதுதான் நம்ம லட்சியம்.ஒரு ஏழைக்கு லட்சியம்னா வாழ்நாள்ல பெரிய பணக்காரன் ஆகனும்னு இருக்கலாம், ஆனா ஒரு பணக்காரனுக்கு பணம் பெரிய விஷயம் இல்லையே?பெண் போதை தனி. பொண்ணுங்க எதுல விழறாங்கனு பார்த்தேன். பொண்ணுங்க சீரியல் பார்க்கறதுல எப்பவும் ஆர்வமா இருக்காங்க அப்டிங்கறதுக்காக அவங்க முன்னால நாம அழுது வடிஞ்சு சோகமா நின்னா நம்ம மேல அனுதாபம் வரும் அப்டினு நினைச்சிடக்கூடாதுனு என் அனுபவத்துல உணர்ந்தேன். பொதுவா பொண்ணுங்களுக்கு ஜோவியலா பேசும் ஆண்களை பிடிக்குது. டைமிங் சென்ஸ் , காமெடியா ஜோக் சொல்றவங்களைப்பிடிக்குது. . கவிதை எழுதறவனைக்கொண்டாடறாங்க . அன்பே , அழகே அப்டினு வர்ணிச்சு ஒரு கவிதை எழுதி 25 காபி ஜெராக்ஸ் எடுத்து 25 பேருக்குக்கொடுத்தா அதுல ஒரு 5% மயங்கிடறாங்க இந்த தகுதிகளை எனக்குள்ளே வளர்த்துக்க ஆரம்பிச்சேன். உண்மையான நேசத்துக்கோ அன்புக்கோ பெண்களிடம் மதிப்பில்லை . நல்லா கவனிச்சுப்பார்த்தா , டீ டோட்டலா இருக்கறவன் எப்பவும் தனியா தான் இருப்பான், ஆனா பொம்பளைப்பொறுக்கி, குடிகாரன் , தம் அடிக்கிறவன் , கேடி , ரவுடி இவனுங்க பின்னால தான் பொண்ணுங்க போறாங்க . எந்த மாதிரி படம் ஹிட் ஆகுதோ அதே டைப் கதைல 50 படங்களுக்கு ஒரே நாள்ல பூஜை போடற மாதிரி பெண்களோட இந்த மனோநிலையை கருத்துல வெச்சுக்கிட்டு நானும் ஜோக் சொல்றது , கவிதை எழுதறதுனு கரெக்ட் பண்ண ஆரம்பிச்சேன் பணம் சம்பாதிக்கும்போது ஒரு லட்சம் ரூபா சேர்க்கும் வரை தான் கஷ்டம் , அதுக்குப்பின் பணம் அதுவா சேர ஆரம்பிக்கும்னு ஒரு தொழில் அதிபர் சுய முன்னேற்ற நூல்ல எழுதி இருந்தார் . அது மாதிரி பொண்ணுங்களை கரெக்ட் பண்றது ஆரம்பத்துல ரொம்ப சிரமமா இருந்தது . ஒரு 10 பேரை கரெக்ட் பண்ணின பிறகு அது நமக்கு தண்ணி பட்ட பாடாய்டுச்சு . கரெக்ட் பண்ணுன பொண்ணோட தோழி , தோழியோட தோழி , அந்தப்பொண்ணோட தங்கைனு என் எல்லைகளை விரிவு படுத்திக்கிட்டே இருந்தேன். my boss's wife ,னு ஒரு படம் பார்த்தேன் , அதுல நாயகி தன் கணவனின் கீழ் பணி ஆற்றும் ஒரு ஆளிடம் லேசா மனம் கவரப்படுவா , அடிக்கடி கணவன் கூட அந்த ஆள் இருக்கறப்ப மீட் பண்ணுவா.ஒரு நாள் கணவனுக்கு சாப்பாடு லஞ்ச் கொடுக்காம விட்டிருப்பா, இவன் டிஃபன் பாக்ஸ் வாங்க வருவான். தனிமையில் இருப்பதைப் பயன்படுத்தி அவளை வலுக்கட்டாயமா அணைப்பான், ஆரம்பத்தில் அவ எதிர்ப்பா , அப்றம் இணங்கிடுவா. இதைப்பார்க்கும்போது எனக்கு ஈரோடு ல ஒரு தியேட்டர் கதை நினைவு வந்தது. ஈரோட்ல முதன் முதலா 70 எம் எம் தியேட்டர் வந்தது அதுதான், தியேட்டர் ஓனருக்கு லஞ்ச் டெய்லி அவரோட மேனேஜர் தான் வீட்டுக்குப்போய்ட்டு எடுத்துட்டு வருவாரு , அதுல அப்படியே மேனேஜருக்கும், ஓனர் ஒய்ஃபுக்கும் கனெக்ஷன் ஆகிட்டதா அரசல் புரசலா பேச்சு நடுநிசி நாய்கள் படத்துல இதே போல் ஒரு காட்சி . வழக்கமா லவ் சப்ஜெக்ட்ல ரொமாண்டிக் போர்ஷன்களை மிகப்பிரமாதமா காட்சிப்படுத்தி பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்ற கவுதம் இந்தப்படத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியைக்கொடுத்தார் சின்ன வயசுலயே ஸ்த்ரீ லோலனா இருந்த தன் அப்பா பண்ற கில்மா லீலைகள பார்த்து வளர்ந்தவன் ஹீரோ , 10 வயசுலயே அநாதை ஆகிடறான் , அவனை பக்கத்து வீட்டு ஆண்ட்டி தத்து எடுத்து வளர்க்குது.இருவருக்கும் வயசு வித்தியாசம் 20 வருஷம் இருக்கும், டீன் ஏஜ் ஆனதும் அவன் ஒரு நாள் அந்த வளர்த்த அத்தையையே அடைய முயற்சிப்பான், ஆரம்பத்தில் அவ எதிர்ப்பா , அப்றம் இணங்கிடுவா இந்த மாதிரி படங்கள் பார்த்து என் அடி மனசுல பெண்கள் ஆரம்பத்தில் எதிர்த்தாலும் அப்புறம் இணங்கிடுவாங்க என்ற கருத்து நல்லா ஊன்றிடுச்சு அதனால ஆரம்பத்தில் அவங்க சம்மதத்தோட தப்பு பண்ணின நான் கொஞ்ச நாள் ல அவங்க எதிர்த்தாலும் தப்பு பண்ண ஆரம்பிச்சேன் எவ்ளோ பெரிய ஹிட் கொடுத்த டைரக்டரும் ஒரு தோல்விப்படம் கொடுப்பார் , உயரே போன பந்து எப்படியும் திரும்பி ஒரு நாள் கீழே வரும்ற நியதிப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் நடக்கறதுக்கு சில நாட்கள் முன்பே எனக்கு ஒரு காட்சி கண் முன் ஓடிட்டே இருந்தது. கால தேவன் , அல்லது நீதிதேவன் ஏதோ ஒண்ணு கறுப்பு கோட் போட்டுட்டு என்னை கத்தியால குத்தி தண்டிக்கற மாதிரி , அப்பவே நான் உஷார் ஆகி இருக்கலாம். க்ரைம் சப்ஜெக்ட் படங்கள் அதிகம் பார்க்கறதால அப்டி இருக்கும்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன் பரிமளா தேவியின் டைரியில் இருந்து என் பெரியம்மா பொண்ணு பூங்கொடி ஃபோன் பண்ணினா , ஊருக்கு நீ வரனும், என் கூட 10 நாட்கள் தங்கி கிருக்கனும், ரொம்ப அர்ஜெண்ட் மேட்டர் அப்டின்னா . அதுக்கு மேல என்ன விபரம் ? எதுக்கு?னு கேட்காம அவ வீட்டுக்குப்போனேன். என்னைக்கண்டதும் கதறி அழுதா , என்ன விஷய்ம்னு கேட்டேன். என் வாழ்க்கைல ஒரு மாறாத வடுவை ஏற்படுத்துன ஒரு கயவனைப்பழி வாங்கனும் , அதுக்கு நீ தான் உதவனும்னா . உன் புருஷன் ஜெகதீஷே பெரிய கிரிமினல் லாயர் தானே? அவர் கிட்டே இந்த விஷயத்தை சொன்னா அவர் அவருக்குத்தெரிஞ்ச ஆஃபீசரை வெச்சு அவனை உண்டு இல்லைனு பண்ணிடமாட்டாரா?னு கேட்டேன் அவ பதில் பேச்ல. கண்ணீர் தான் பதிலா வந்தது. கொஞ்சம் கொஞ்சமா அவ கிட்டே உண்மைகளை கறக்க ஆரம்பித்தேன்,. அவ யார் கிட்டேயோ ஏமாந்திருக்கா. அவ சம்மதத்தோட தான். தப்பு நடந்திருக்கு, ஆனா எல்லாம் முடிஞ்சதும் ஒரு ஆசுவாசமான சந்தர்ப்பத்துல அவன் செல் ஃபோனைப்பார்த்தப்ப அவ பொண்ணு காஞ்சனாவும் அவனால ரேப் பண்ணப்பட்டது தெரிஞ்சிருக்கு . ஒரே குடும்பத்தில் மனைவி மகள் இருவருமே ஒருவரால் கெடுக்கப்பட்டதை எந்த ஆண் தான் தாங்குவான்? அப்படியே அதை ஜீரணிச்ட்டாலும் உடனே பழி வாங்கும் உணர்ச்சில கத்தியோ , துப்பாக்கியோ எடுத்து அவனை பப்ளிக் ப்ளேஸ்ல யே கொலை பண்ணி மாட்டிக்குவாரு , அவரு ஜெயிலுக்குப்போய்ட்டா அப்றம் இந்த குடும்பத்தோட கதி? அதுவும் இல்லாம எந்த பாலு பூங்கொடி , காஞ்சனா 2 பேரையும் சிதைச்சானோ அவன் தான் ஊருல பலர் வாழ்க்கையையும் கெடுத்து போலீஸ் கேஸ் ல மாட்டின குற்றவாளினு தெரிஞ்சதும் அவளால வேற எதுவும் யோசிக்க முடியல. இன்னொரு கொடுமை என்னன்னா அவங்களை வேட்டையாடின அதே பாலுவுக்குதான் அவளோட கணவர் லாயர் ஜெகதீஷ் ஆஜர் ஆகறாரு கணவரும் ஜெயிலுக்குப்போகக்கூடாது , ஆனா மக வாழ்க்கையைக்கெடுத்தவனையும் பழி வாங்கனும், அதுக்குத்தான் உன் உதவி தேவை அப்டின்னா . நானும் சம்மதிச்சேன், அவ திட்டப்படியே அவளைப்பார்க்க வீட்டுக்கு வந்த பாலு என்னைப்பார்த்தான் . நாலஞ்சு சந்திப்புகள் நடந்தது. 6 வது சந்திப்பில் நான் வேணும்னே ஏற்படுத்தி வெச்ச ஒரு தனிமை சூழலில் நாங்க 2 பேரும் தப்பு பண்ணிட்டோம் பூங்கொடி ரொம்ப நன்றி சொன்னா .பொதுவா ஆண்களிடம் உள்ள பழக்கம் அந்த மாதிரி தப்பான பொண்ணுங்க கிட்டே காசு கொடுத்து போறப்ப பாதுகாப்பா தப்பு பண்ணுவாங்க , ஆனா ஃபேமிலி கேர்ள்னு நினைச்சு போறவங்க கிட்டே அசால்டா இருந்துடுவாங்க , அந்த மனோபாவம் தான் அவனைப்பழி வாங்க ஈசியா உதவுச்சு , ஏன்னா எனக்கு 7 வருசம் முன்பே எய்ட்ஸ் வந்திருந்தது இந்த மாதிரி கயவர்களை சட்டத்தின் பிடியில் தண்டனை வாங்கித்தர்றது ரொம்ப கஷ்டம் , என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ளனும்னா அவன் ஏழையா இருக்கனும்,. பண பலம் மிக்க ஒருவனை பழி வாங்க இந்த மாதிரி வழி தான் ஈசி. இவன் எய்ட்ஸ் வந்து சாக பல வருசம் ஆகும், அதுவரை எத்தனை பெண்கள் வாழ்க்கைல விளையாடுவானோ? அவனால மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாதுனு அவன் ஆண்மையை செய்ல இழக்க வைக்கும் மருந்தை அவன் சாப்பிடற சரக்குல கலந்து கொடுத்துட்டேன், இனி அவன் வாழ்நாள் பூரா எந்தப்பெண்ணையும் எதுவும் பண்ண முடியாது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஃபோன் பண்ணி அவனைப்பற்றிய தகவல்கள் , ம் முகவரி எல்லாம் குடுத்துட்டேன், இனி அவங்க கண்காணிப்பில் தான் பாலு இருப்பான் பல பெண்களின் வாழ்க்கையை பதம் பார்க்கும் கயவர்களுக்கு பணத்துக்காக ஆஜர் ஆகும் வக்கீல்கள் இந்த கிரிமினல் லாயரின் குடும்பம் இப்படி ஆனதை உணரனும்னு இதே சம்பவத்தை வெச்சு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன், அந்தப்படம் தவறானவர்களுக்கு துணை போகும் லாயர்களுக்கு ஒரு பாடமாக கிருக்கும்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.