logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஏகலைவன் மு.அ.காதர்

சிறுகதை வரிசை எண் # 100


.... மீண்டும் வசந்தம்... 🍀🍀🍀🍁🍁🍁🌸🌸🌸 ****** சிறுகதை ***** இயற்கை சூழ்ந்த கிராமம் சுற்றிலும் பரந்த வயற்பரப்புப்பின் நடுவே ஒத்தைரோட்டில் அதிகாலைப் பனிப்பொழிவின் ஊடே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ரவீந்திரன் ரவீந்திரன் வாழ்வின் அரைசதத்தை தாண்டியவர் என்றாலும் பார்வைக்கு வயது நாற்பதை தாண்டாமல் மதிக்கும்படி உடல்வாகை கச்சிதமாக வைத்திருப்பார் மத்தியஅரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார் பக்கத்து ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் ரவீந்திரன் இந்த கிராமத்தில் தனியாக ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார். தனது இருபத்தி நான்குவயதில் காதல்மனைவியை கைபிடித்து இல்வாக்கையை தொடங்கியவர் இவர்களின் காதலுக்கு இரு குடும்பங்களும் சம்மதிக்காததால் தம்பதிகள் இருவரும் தனித்து விடப்பட்டனர்... தன்னம்பிக்கையை இழக்காத ரவீந்திரனும் அவரதுமனைவி வாசுகியும் தளராமல் வாழ்க்கையை தொடங்கி சந்தோஷமாக குறைகளின்றி குடும்பம் நடத்திவந்தனர் தனியார் கம்பெனிகளில் தற்காலிக பணிகளில் இருந்த ரவீந்திரனுக்கு சிலஆண்டுகளில் மத்திய அரசுப்பணியும் கிடைத்தது... ஆண் .பெண். என இரண்டு பிள்ளைகளுடன் வசந்தமாய் கடந்தது இவர்களின் வாழ்க்கை... கால்நூற்றாண்டை நெருங்கிய ரவீந்தரனின் வசந்தவாழ்வில் புயல்வீச ஆரம்பித்தது... ஆம்...ரவீந்திரனின் மனைவி வாசுகி சுகவீனமடைந்தார்... அன்புமனைவியை காப்பாற்ற ஆறுமாதமாதமாகபோராடினார் ரவீந்திரன் அவரின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை இறைவனடி சேர்ந்தார் வாசுகி மனைவின் இழப்பு ரவீந்திரனை மிகவும் பாதித்தது உலகில் அனைத்தையும் இழந்ததைப்போல் உணர்ந்தார்.... ஆளுக்கொரு ஆறுதல்சொன்னாலும் ஆறவில்லை அவர்மனம் கடைசியாக பிள்ளைகள் இரண்டும் அப்பாவின் அருகில் வந்தன அப்பா...எங்களை தேற்றவேண்டிய நீங்களே இப்படி உடைந்துவிட்டால் எங்களை தேற்ற யாரப்பா இருக்கிறது என்றனர்... பிள்ளைகளின் இந்தவார்த்தை அவருக்கு மனதில் சிறுதைரியத்தையும் பொருப்பையும் ஏற்படுத்தியது... மெல்ல... மெல்ல... இயல்புநிலையடைந்தார் ரவீந்தின் பிள்ளைகளின் நலனும் அவசியமும் கருதி இருவருக்கும் ஒன்றாகவே திருமணம்முடித்து வைத்தார் மகளின் கணவருக்கு வெளிநாட்டில் வேலை அமையவே கணவருடன் வெளிநாடு சென்றுவிட்டார் மகன் மருமகளுடன் சிறிதுகாலம் வாழ்ந்த ரவீந்திரனுக்கு மனைவியின் அரவணைப்பும் பாசமும் கிடைக்காமல் மிகவும் ஏங்கினார்.... தனிமையை விரும்பும் மருமகளின் நடவடிக்கையால் மகனால் கிடைத்த கொஞ்சம் நிம்மதியையும் இழந்தார் ரவீந்திரன் இதைச்சொன்னால் மகனின் நிம்மதியை பாதிக்குமே என உணர்ந்தவர் போகப்போக சரியாகிவிடும் என பொருமை காத்தார்... பலனில்லை... மருமளைப்பற்றி தான் ஏதாவது சொன்னால் தன் மகனின் வாழ்க்கை பாதித்து விடக்கூடாதே என எண்ணியவர் தானாகவே மாற்றல் வாங்கிக்கொண்டு மனஅமைதிக்காக இங்கேவந்தார்.... அவர் நினைத்த அமைதி இந்த கிராமத்தில் அவருக்குகிடைத்தது யாருடைய தொந்தரவும் இல்லாத தனிமையான மாடிவீடு கீழே உரிமையாளரின் பருத்திக்குடோன் சீஷனுக்கு மட்டுமே புழக்கத்தில் இருக்கும்... வீட்டின் உரிமையாளர் அருள்செல்வம் ரவீந்திரன் மனைவி வாசுகியின் உறவினர் இவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்த்தபோது இவர்களுக்கு ஆதரவாய் இருந்து கைபிடிக்க காரணமாய் இருந்தவர் தன் சுக துக்கங்கள் அனைத்தையும் இவரிடம்தான் பகிர்ந்துகொள்வார் ரவீந்திரன் இவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் இங்கே மாற்றலாகி வந்தார் இந்தவீடும் முன்பு அருள்செல்வன் குடியிருந்த வீடுதான் வீட்டுக்கே எதிரே அடைப்புபோடப்பட்ட கொள்ளைகள் இரண்டு பெரிய கொள்ளைகளுக்கு நடுவே ஒரு சின்ன கொள்ளை அதில் ஒரு கூறைவீடு அந்த வீட்டில் கணபதி வெள்ளையம்மாள் என வயதான தம்பதி அவர்களின் மகள் வள்ளி மற்றும் வள்ளியின் ஐந்து ஆறு வயது குழந்தைகள் இரண்டுபேருடன் வசித்து வருகின்றனர்.... விசாரித்து பார்த்ததில் சிறிது விவசாயநிலம் ஆடு மாடு கன்று என தன்னிறைவோடு வாந்த குடும்பம்தான் மகளின் திருமணச் செலவுக்காக வீட்டைத்தவிர எல்லாவற்றையும் இழந்து சற்று நொடித்துவிட்டனர்... வள்ளியின் வாழ்க்கையும் பொல்லாத விதியாக அமைந்தது வள்ளியின் உதவாக்கரை கணவனால் வள்ளியும் தங்களின் பிள்ளைக்கு இப்படியொரு விதியை தேடிவைத்துவிட்டோமே என அவளின் தாய்தந்தையும் கஷ்டமும் மனவேதனையும் அடைந்தனர்... கணவனின் எல்லைமீறிய கொடுமையை பொருக்கமுடியாத வள்ளி ஒருகட்டத்தில் ஊர்பஞ்சாயத்தில் கணவனே வேண்டாமென முடித்துக்கொண்டு பிள்ளைகளுடன் வயதான அப்பா அம்மாவுக்கு துணையாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள்... வயதான காலத்திலும் மகளுக்காவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் இருவரும் தங்களால் இயன்ற கூலிவேலைக்கு செல்வார்கள் வள்ளியும் கூலிவேலைக்கு செல்வாள்.... இவர்களின் கதையைக்கேட்டு பரிதாபப்பட்டார் ரவீந்திரன் காலை ஐந்துமணிக்கெல்லாம் விழித்துக்கொள்ளும் பழக்கம்உடையர் ரவீந்திரன் தன்வேலைகளை தானேபார்த்துக்கொள்வார் சாப்பாடு நான்தருகிறேன் என அருள்செல்வன் வற்புறுத்தியும் மறுத்துவிட்டார் தனக்கான உணவை அவரே தயார் செய்துகொள்வார் காலை ஒன்பதுமணிக்கெல்லாம் ஆபீஸ்கிளம்பிவிடுவார் மாலை ஆறுமணிக்கு திரும்புவார் எதிர்வீடும் இவரும் தினசரி சந்தித்துக்கொள்வதாள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வார்கள்... நாளடைவில் எதிர்வீடும் இவரும் நல்லபழக்க வழக்கத்துடன் இணக்கமாக இருந்துவந்தனர் இருப்பதைக்கொண்டு திருப்திஅடையும் எளிமையான வாழ்க்கை குடும்பத்தில் உள்ள அனைவரும் கள்ளம்கபடமில்லாம் பழகும் அந்த குடும்பத்தை ரொம்ப பிடித்திருந்தது ரவீந்திரனுக்கு. வள்ளி எப்போதுமே அமையாதிகவே இருப்பாள் சிறுவயதில் துறுதுறுவென குரும்பாக இருப்பாளாம் மிக செல்லமாக வளர்ந்தவளாம் திருமணவாழ்க்கை அவளை அமைதியாக்கி விட்டது வள்ளியின் பிள்ளைகள்மீது ரவீந்திரன் பாசமாக இருந்துவந்தார் பிள்ளைகளும் இவரோடு நன்றாக ஒட்டிக்கொண்டது ஆபிஸ் முடிந்து வரும்போது பிள்ளைகளுக்கு திண்பண்டங்கள் வாங்கிவருவார்... மாலையில் அவர்களின் வீட்டுகொள்ளையில் உட்கார்ந்து எல்லோரும் பழைய கதைகளெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள் சிலநாட்களில் பிள்ளைகளை மாடிக்கு அழைத்துச்சென்று டிவி பார்த்துக்கொண்டிருப்பார் தனக்கு செய்யும் இரவு உணவில் பசங்களுக்கும் கொடுத்து சாப்பிடச்சொல்லுவார்... டிவிபார்த்தபடியே சிலசமயம் பசங்களும் தூங்கிவிடுவார்கள் வள்ளிவந்து பசங்களை தூக்கிச்செல்வாள் மீதமிருக்கும் உணவுகளையும் வள்ளியிடடம் கொடுத்துவிடுவார் வேனாம் சார்... எல்லோரும் சாப்பிட்டுட்டோம் சார் என்பாள்... பரவாயில்லை கொஞ்சம்தான் இருக்கு நீ சாப்ட்டுரு என்று கொடுத்துவிடுவார்... பசங்களுக்கு முடியவில்லை என்றால் பக்கத்துஊர் ஆஸ்பத்திரிக்கு பசங்களையும் வள்ளியையும் பைக்கில் கூட்டிச்சென்று வருவார் இப்படியாக அந்தக்குடும்பத்திற்கும் ரவீந்திரனுக்குமான. நட்பு மிகஅன்யோன்யமாக வளர்ந்தது ஒருநாள் இரவு ஒருமணிஇருக்கும் சார்...சார்....என வாசலில் கதவுதட்டும் சத்தகேட்டு திறந்தார் வாசலில் வள்ளி பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தாள் என்னம்மா...என்னாச்சு ...என்றார்... அப்பாவுக்கு திடீரென்று முடியலசார்... உடம்பெல்லாம் வேர்த்து சில்லுன்னு இருக்குசார்... ஆட்டோக்காரர்கள் ரெண்டுபேருமே எழும்பமாட்டிங்கிறாங்க சார்... கொஞ்சம் வந்து என்னான்னு பாருங்கசார் என்றாள்... வள்ளியுடன் அவசரமாக இறங்கி அவர்களின்வீட்டிற்குசென்று கணபதியின் நாடியைப்பிடித்து பார்த்தார் துடிப்பு கொஞ்சம் கம்மியாக இருந்தது... பைக்கில் ஏத்திக்கொண்டு போயிருவோமா அப்பாவை கெட்டியா புடிச்சிக்கிருவியா என வள்ளியை கேட்டார் புடிச்சிக்கிறேன் சார் என்றாள் வள்ளி... ரொம்ப சிரமப்பட்டு ஒருவழியாக ஆஸ்பத்திரியில் வந்துசேர்த்தார்கள்... இரவுப்பணி நர்ஸ் சோதித்துப்பார்த்து பாட்டிலும் ஊசியும் போட்டார் பாட்டி ஓடிக்கொண்டிருந்தது இன்னொரு பாட்டில் போடனும்மா என்றார் நர்ஸ்... சார்...காலைல நீங்க வேலைக்குப்போகனும் நீங்கபோயி தூங்குங்க சார் விடிந்ததும் ஆட்டோவரச்சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்றாள் வள்ளி... பரவாயில்லை...பார்த்துட்டு கூட்டிக்கிட்டே போயிடுவோம் என்றார்.... இரண்டு பாட்டிலும் ஓடி முடிய நாலரை மணிஆகிவிட்டது.... கூட்டிட்டு போம்மா இப்போதைக்கு சரியாகிவிட்டார் ரெண்டுநாள் கழித்து பெரிய ஆஸ்பத்திரியில் செக்பண்ணி பாத்துக்கோங்க என்றார் நர்ஸ் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்து விட்டுவிட்டு வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றார் ரவீந்திரன்... இரவுநடந்த விஷயங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டே நடந்தார் அப்பாவின்மேல் வள்ளி வைத்திருக்கும் பாசம் அவரை நெகிழவைத்தது... நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்த ரவீந்திரன் வீட்டுவாசலில் வள்ளியும் அவள் அம்மாவும் இருப்பதைக்கண்டு ஏன் என்னாச்சு என பதட்டுத்துடன் கேட்டார்... ஒன்னுமில்லசார் ... அம்மாதான் உங்கள பார்க்கனும்னு வந்தாங்க என்றாள் வள்ளி.... கண்களில் நீர் ததும்ப கையெடுத்து கும்பிட்டார் வெள்ளையம்மாள் அவரின் பார்வையும் கண்ணீரும் கணவன்மேல் உள்ளபாசத்தின் அளவை காட்டியது இதுக்காக ஏம்மா...முடியாம மாடிப்படிஏறி வந்தீங்க... இது...சகமனிதர்களுக்கு மனிதர்கள் செய்யும் சாதாரண உதவிதாம்மா எனச்சொல்லிவிட்டு... வள்ளி...அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டுப்போ எனக்கூறி அனுப்பிவைத்தார்... மாலை ஆபீஸ்முடிந்து வரும்போது கணபதிக்கு பழங்கள் ஹார்லிக்ஸ் வாங்கிவந்து வீட்டில் வள்ளியிடம் கொடுத்து அப்பாவை நல்லாசாப்பிட சொல்லு பழங்களை ஜூஸ்போட்டு கொடு என சொல்லி கொடுத்துவிட்டுப்போனார்... வள்ளிமீதும் அவள் குடும்பத்தின்மீதும் இனம்புரியாத உணர்வொன்று அவர்மனதில் தோன்றி வதைத்தது.... இரவெல்லாம் பல நினைவுகளும் யோசனைகளுடனும் நீண்டநேரம் தூக்கம்வராமல் விழித்திருந்தார்.... காலை கதவுதட்டும் சத்தம் கேட்டு விழித்துப்பார்த்தார்... மணி எட்டு ஆகிஇருந்தது... சார்...சார்...என வாசலில் வள்ளியின் குரல்கேட்டது.... எழுந்து சென்று கதவைத்திறந்தார்.... என்ன சார்...ஆச்சு உடம்புஏதும் சரியில்லையாசார்.... இல்லம்மா.... உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்ல... நல்லா அசந்து தூங்கிட்டேன்... நீங்க குளிச்சுட்டு ரெடியாகுங்க சார் நான் டிபன் வாங்கிட்டு வாரேன் என்று சொல்லி இறங்கிப்போய்விட்டாள் குளித்துவிட்டு ரெடியானேன்... சார்.... வாசலில் வள்ளியின் குரல்கேட்டது... உள்ளே..வா...என்றேன்.. கையில் ஒருபார்சலுடனும் டிபன்பாக்ஸுடனும் வந்தாள்... பார்சலைகொடுத்து இத...சாப்பிடுங்க டிபன்பாக்ஸ ஆபீஸ்க்கு கொண்டு போங்கசார் என்று கொடுத்துவிட்டுச் சென்றாள்... சாப்பிட்டுவிட்டு ஆபீஸ்க்கு கிளம்பும்போது எதிர்வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி வள்ளி...என கூப்பிட்டார்... என்ன...சார்... என்றே ஓடிவந்தாள் வள்ளி ... வீட்டு சாவியை வள்ளியிடம் கொடுத்து பாத்திரங்களை மட்டும் கொஞ்சம் கழுவிப்போட்டுடேன்... என்று சொல்லிவிட்டு ஆபீஸ்க்கு கிளம்பிச் சென்றார் ரவீந்திரன் மாலைஆபீஸ்லிருந்து வரும்போது வழக்கம்போல் பசங்களுக்கு திண்பண்டங்களை வாங்கிவந்தவர் வள்ளி...என வாசலில் நின்று குரல்கொடுத்தார்... வீட்டுச்சாவியுடன் வந்தாள் வள்ளி திண்பண்டங்களை கொடுத்துவிட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்... வீட்டை ஆச்சர்யமாக பார்த்தார்... அலங்கோலமாக கிடந்தவீடு லெஷ்மித்தனமாக இருந்தது... துணிகளெல்லாம் துவைத்து காய்ந்துகொண்டிருந்தது... எல்லாப்பாத்திரங்களும் கழுவி காயவைத்திருந்தாள்.. சமையலறை பாத்ரூம் உட்பட சுத்தம்செய்து வீடுமுழுவதும் மோப்அடித்து செய்து பளிச்சென்று காட்சியளித்தது.... சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த வாசுகியின் படத்தை சுத்தம்செய்து ஒருமேஜைமேல் வைத்து பூ போட்டு விளக்கும் போட்டு வைத்திருந்தாள் .... ரவீந்திரனின் கண்களில் சிறிதாக நீர் கசிந்தது.... வாசுகியை நினைத்தும் வள்ளியை நினைத்தும்.... மனைவி இறந்தபின் மருமகள் வந்தபின்னும் தன்வீட்டு பாத்ரூமைக்கூட ரவீந்திரன்தான் வாரம்ஒருமுறை சுத்தம் செய்வார்.... இன்று வேலைக்குப்போகாமல் வீட்டை சுத்தம்செய்திருக்கிறாள்.... காசு கொடுத்தாலும் வாங்கமாட்டாள்... காசுகொடுத்தாள் வருத்தப்படுவாள் .. தன்மீது வள்ளி காட்டும் அக்கரைக்கு அவள்மனம் நோகாமல் ஏதாவது கைமாறு செய்தே ஆகவேண்டுமென மனதுக்குள் நினைத்துக்கொண்டார் ரவீந்திரன் இவர்களின் கபடமற்ற நட்புக்கு வழக்கம்போல் களங்கம் கற்பித்தார்கள் ஊரில் சிலர்.... ஆனால்...இதெல்லாம் எதுவுமே ரவீந்திரனுக்கு தெரியாது... ஊரில் வெளிப்புழக்கம் அவருக்கு இல்லை தன்வீடு எதிர்வீடு ஆபீஸ்... காலையில் வாக்கிங் அதுவும் ஆறரைமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார்... இதுதான் அவருடைய அன்றாட பழக்கவழக்கம் மதியநேரம் ஆபிஸில் இருக்கும்போது அன்புசெல்வனிட மிருந்து போன்வந்தது... சொல்லு...அன்பு.... ரவி...நல்லாருக்கியா... கொஞ்சம் வேலையா வெளியில போயிட்டேன் அதான் வரமுடிய.... கோவிச்சுக்காதே... பரவாயில்ல ...அதெல்லாம் ஒன்னுமில்ல... அப்புறம்...சொல்லு... சும்மா..போட்டியா.... ஏதும் சேதியா... சேதிதான்...சாயங்காலம் வீட்டுக்கு வர்றீயா... ம்ம்....வர்ரேன்... என்ன சேதியாக இருக்கும்...என்ற குழப்பத்துடன் போனை கட்பண்ணினார் ரவீந்திரன். வீட்டுக்கு வந்து நுழைந்ததும் மீண்டும் அன்புவிடமிருந்து போன்அடித்தது.... தோ...இப்பதான் வீட்டுக்கு வந்தேன் அன்பு... முகம் கால் கழுவிட்டு உடனே வருகிறேன்... வேனாம்...வேனாம்... ரவி.. நீஅங்கேயே இரு ஒரு அரைமேணிநேரத்துல நான்வர்ரேன்... என சொல்லிவிட்டு போனை வைத்தார் அன்புசெல்வன் உடைகளை மாற்றி முகம் கால் கழுவி விட்டு சமையலறைக்கு வந்து அன்புக்கும் சேர்த்து காபிபோட்டார் ... ரவி..... வாசலில் குரல்கேட்டு.. உள்ளே...வா...அன்பு...என வாசலுக்கு வந்தார் .. உள்ளே வந்த அன்புச்செல்வனுக்கு மேஜைமேல் விளக்குடன் வைக்கப்பட்டிருந்த வாசுகியின் படம் கண்ணில்பட்டது இருவரும் காபி குடித்தனர்... அப்புறம் என்னசேதி சொல்லு... என ஆரம்பித்தார் ரவீந்திரன் கொஞ்ச வெளியில போயி பேசிட்டு வருவோமே... என்றார் அன்புசெல்வன் ம்ம்...வா..போகலாம் என கிளம்பினார்கள்... வாசலுக்கு வந்ததும் ஓரக்கண்ணால் எதிர்வீட்டை நோட்டமிட்டார் அன்பு.. ஒரு பத்துநிமிட பயணத்திற்குப்பின் புழக்கமில்லாத ஒரு தரைப்பால கட்டையை அடைந்து அங்கே இருவரும் அமர்ந்தார்கள்... என்னடா என்னைப்பற்றி நல்லாஅறிந்தவனே இப்படி கேக்குறாரேன்னு தப்பா நினைக்காதே.... என் காதுக்கு வந்ததை உன்கிட்ட சொல்லிவிட்டு என்னவிபரம்னு தெரிஞ்சுக்கிறலாம்னுதான் கேக்கறேன் என்றார் அன்பு.. ரவீந்திரன் ஒன்னும் புரியவில்லை சற்று குழப்பத்துடன் என்னவென்று கேட்டார்... எதிர்வீட்டுப்பெண்ணும் நீனும் அதிகமான நெருக்கமாக இருப்பதாகவும் தவறான கண்ணோட்டத்தில் ஊரில்உள்ள சிலர் என்னிடம் சொன்னார்கள் என்றார்... உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்ததைப்போல் இருந்தது ரவீந்திரனுக்கு.... ச்சே....என்ன மோசமான உலகமென நொந்துகொண்டார் நடந்ததை ஒன்றுவிடாமல் அன்புசெல்வனிடம் கூறினார் உன்னைப்பற்றி எனக்கு நல்லாவேதெரியும் ரவி... உன்மேல ஒரு சின்னசந்தேகம்கூட எனக்கு கிடையாது.. என் காதுக்கு வந்தும் நான்உன்னிட கேட்கலேன்னா பின்னால் உனக்கு தெரியவந்து இதுபற்றி அன்புகூட நம்மிடம் கேட்கவில்லையே என நினைத்துவிடக்கூடாது என்றுதான் என்காதுக்கு வந்ததை உனக்கு உடனே தெரிவித்தேன்... இது கிராமம் ரவி... ஒரு சின்னவிஷயத்தைக்கூட கண்ணு காது மூக்கெல்லாம் வச்சி பேசுவாங்க... வேலைவெட்டி இல்லாதவங்க அடுத்தவங்களப்பத்தி பேசுறதுதான் கிராமத்துல வேலை அதிலும் அந்தப்பொண்ணு புருஷன் இல்லாம இருக்கு சொல்லவா வேனும்... நம்ம மனசுல தப்புஇல்லேங்கறத அவங்களுக்கு விளங்கவைக்க முடியாது... நம்ம நடவடிக்கைகளை ஊருக்கு தகுந்தமாதிரி மாத்திக்கனும் சரி...ரவி விஷயத்தை தெளிவுபடுத்திக்கிட்டேன் உன்மேல உள்ளஅக்கரையிலதான் இத கேட்டேன் தப்பா எடுத்துக்காதே ... அப்புறம் ஒரு அட்வைஸ்... நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி.. உன் நிலைமை கடவுள் யாருக்கும் கொடுக்கக்கூடாது... இருந்தாலும் அதைமாற்றிக்கொள்ளும் நிலையை நாம் உருவாக்கி கொள்வதில் தவறில்லை... தனிமை வாழ்க்கை என்பது நீண்டதூரம் பயணிக்க இயலாது கடைசிவரை உன்னுடன் பயணிக்க உரிமையுள்ள ஒருதுணையை நீ அமைத்துக்கொள்ளலாம் என்பது என்கருத்து உன்னை கட்டாயப்படுத்தவில்லை பொருமையாக யோசித்து முடிவெடு பிள்ளைகள் என்ன சொல்லுவார்கள் என நீ யோசிக்கலாம்... அவர்களிடம் நான்பேசிக்கொள்கிறேன்.... பல உதாரணங்களைக் கூறி நீண்ட நேரம் பேசினார் அன்புச்செல்வன்... பிறகு இருவரும் அன்புவீட்டுக்கு சென்று இரவு உணவை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார் ரவீந்திரன்... வீடுவந்து சேரும்போது மணி ஒன்பது வாசலில் லைட் எரிவதைப்பார்த்த வள்ளி சாப்பாட்டுடன் வீட்டுக்கு வந்தாள் சார்..... வள்ளியின் குரல்கேட்டு வாசலுக்கு வந்த ரவீந்திரன் கையில் டிபன்பாக்ஸுடன் நின்றிருந்த வள்ளியிடம் என்ன இது என்றுகேட்டார்.... இட்லி சார் ... எட்டுமணி வரைக்கும் பார்த்தேன் நீங்கவீட்டுக்கு வரல... இதுக்கு மேல வந்து நீங்க டிபன் தயார்செய்ய நேரமாயிடும் என்று இப்பதான் அவித்தேன் சார்... சூடா..இருக்கு சாப்பிடுங்க என்று கொடுத்தாள்... சாப்பிட்டுவிட்டேன் என்றுசொல்லி அவளை கஷ்டப்படுத்த விரும்பாத ரவீந்திரன் வாங்கி வைத்துக்கொண்டார் குடிக்கிற தண்ணீரெல்லாம் இருக்கா சார்.... இருக்குமா.... வள்ளி சென்றபின் கதவை தாழிட்டு உள்ளே வந்து படுக்கையில் அமர்ந்தவர் அன்புசெல்வன் சொன்னதை நினைத்து பலகோணங்களில் சிந்தித்தார்... அன்புச்செல்வன் காதுக்கு போனவிஷயம் வள்ளிக்கு தெரியாமல் இருக்குமா.... தெரிந்தும் தெரியாமல் காட்டிக்கொள்கிறாளா... சாயங்காலம் அன்புகூட போனதைப்பார்த்தும் சற்றுமுன்வரை வீட்டுக்கு வந்து சாப்பாடு தந்துவிட்டுப்போகிறாளே... வினா தெரியாத கேள்விகளால் மனதுக்குள் திணறினார் ரவீந்திரன்... இரவுமணி பண்ணிரெண்டு மணியாகியும் தூக்கம்வராமல் தவித்தார்.. பசிப்பதுபோல் தெரியவே வள்ளி தந்த இட்லியைச் சாப்பிட்டு படுத்தார் மறுநாள் ஆபீஸிலும் வேலைகளில் கவனம் செலுத்தமுடியவில்லை மனசெல்லாம் பாரமாக இருந்தது வேலை முடிந்து ஊருக்கு வந்தவர் சாவி வாங்க எதிர்வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தினார் சாவியுடன் வந்த வள்ளி ரவீந்திரனின் முகத்தில் வாட்டத்தை கண்டாள்... ஏன்...சார் ரொம்ப சோர்வா இருக்கீங்க சாப்பிடலையா.. வீட்டில் சாப்பாடு ஏதும் செய்தமாதிரி தெரியலையே சார்... அங்கே ஹோட்டல்ல சாப்பிட்டேம்மா என பொய் சொல்லிவிட்டு சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப்போனார்... ஒருவார காலமாக ரவீந்திரனுக்கு இதே மனஅழுத்தம் தொடர்ந்தது... இன்றுகாலை எழும்போதே ஒருமுடிவுடன் எழுந்தார் இன்று ஆபீஸ்விட்டு வந்ததும் இது சம்பந்தமாக வள்ளியிடம் பேசிவிடவேண்டும் பாவம் என்னால் அவள் வீண் பழியையும் இன்னொரு துயரைத்தையும் அனுபவிக்ககூடாது என்று எண்ணியவர் வள்ளியிடம் சாவியை கொடுக்கும்போது சாயங்காலம் எங்கேயும் போகமாட்டீயே...என்று கேட்டார்... இல்ல சார்...எங்கேயும் போகல... ஏன்...சார்... சாயங்காலம் வந்து பேசுவோம் என சொல்லிவிட்டு கிளம்பினார்... இப்போது வள்ளியின் மனதில் இனம்புரியாத தடுமாற்றம் தொற்றிக்கொண்டது சார்...என்னசொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் ஐந்துமணிக்கெல்லாம் ரவீந்திரனை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தாள் வள்ளி இரவு மணி 7:30ஆகியும் ரவீந்திரன் வரவில்லை பதட்டமானாள் வள்ளி... கீழே குடோன் வாசலில் இருந்த அன்புசெல்வனின் கைபேசி நம்பருக்கு போன்செய்தாள்.. எதிர்முனையில்.. அன்புசெல்வன் ஹலோ.....யாரு... அண்ணே...நான் எதிர்வீட்டு வள்ளி பேசுறன்ணே.... சொல்லும்மா.... சார் அங்கே...வந்தாங்களா... இல்லையேம்மா.... மணி எட்டாச்சி இன்னும் சார் வீட்டுக்கு வரல... அவங்க போன்நம்பருக்கு போட்டு கேளுங்கண்ணே.... என்றாள் வள்ளி வள்ளியின் குரலில் இருக்கும் பதட்டத்தை உணர்ந்தார் அன்புசெல்வன்... ரவீந்திரனின் நம்பருக்கு கால்செய்தார்... முழு ரிங்கும் போய் அழைப்பை ஏற்கவில்லைஎன கூறியது... இப்போது அன்புசெல்வனும் சற்று பயந்தார்... மீண்டும் முயற்சி செய்தார்... மூன்றாவது முயற்சியின் போது ஃபோன் எடுக்கப்பட்டது.... எதிர் முனையில் பேசியது ரவீந்திரனின் குரல் அல்ல.. ஹலோ...யாரு... ரவி...எங்கே.... நீங்க....? சார்....என்பெயர் சாதிக். பக்கத்து ஊர்லேர்ந்து பைக்ல வரும்போது வழியில இந்த சார் பைக்கிலிருந்து விழுந்து கிடந்தார்.. இங்கே ஆஸ்பத்தியில கொண்டுவந்து சேர்த்திருக்கேன் சின்ன காயம்தான் பயப்படுறமாதிரி ஒன்னும் இல்ல...ட்ரிப் ஓடிக்கிட்டுருக்கு... சார்தான் ரொம்ப பயந்தமாதிரி இருக்கார்... நான் இங்கேயே இருக்கேன் வாங்க சார் என்று இலக்கத்தை சொல்லி போனை வைத்தார் சாதிக் என்பவர்... உடனே காரை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தார் அன்பு செல்வன்... கொஞ்சம் முன்னாடி..இங்கே ரவீந்திரன்னு.... ஒரு பேஷன்ட்... என்று வரவேற்பில் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே... சார்....என பின்னாலிருந்து குரல்கேட்டது... போனில் பேசிய அதே நபர்.... ரொம்ப...நன்றிங்க என்னு கைகூப்பினார் அன்புசெல்வன்... கூடவே உதவியாக இருந்து ரவீந்திரனை அன்புசெல்வனுடன் அனுப்பிவைத்து விட்டு சென்றார் சாதிக் ரவீந்திரனை அழைத்துக்கொண்டு அன்புசெல்வன் தன்வீட்டுக்கே வந்துவிட்டார்.... வள்ளிடமிருந்து ஆறு மிஸ்டுகால் வந்திருந்தது அன்புசெல்வனுக்கு... வள்ளிக்கு பேசினார் சொல்லுங்கண்ணே... சார் எங்கேண்னே.. என்று பதட்டம் குறையாமல் கேட்டாள்.. ஒன்னுமில்லேம்மா.... பைக் கொஞ்சம் ரிப்பேர்... நான்போயி அழைச்சிட்டு வந்துட்டேன் வீட்லதான் இருக்காப்ல... காலையில வருவாப்ல என்று சமாளித்தார் அன்பு.... பேசியது வள்ளிதான் என புரிந்துகொண்டார் ரவீந்திரன் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என வள்ளியின் உள்மனம் சொல்லியது இரவு முழுவதும் தூக்கமின்றி அழுதுகொண்டிருந்தாள்... காலையில் காபி குடித்ததும் என்னை வீட்டில் விட்ரு என்றார் ரவீந்திரன்... ரெண்டுநாள் இங்க இருந்து பார்த்துட்டுபோ ரவி... வேனாம் அன்பு... எனக்கு ஒன்னுமில்ல ரெஸ்ட்எடுத்தா சரியாயிடும் நான் அங்கே வீட்ல போயி படுத்துக்கறேன் .. அன்பு எவ்ளோ வற்புறுத்தியும் கேட்கவில்லை வீட்டுக்கு அழைத்துவந்தார் காரிலிருந்து காயங்களுடன் ரவீந்திரனைக்கன்ட வள்ளியும் அவரது குடுபத்தினரும் பதறியடித்து ஓடிவந்தார்கள்... ரவீந்திரன் மீது அவர்கள் கொண்டிருந்த அக்கரையையும் கலங்கியதைப்பார்த்த அன்பும் கண்கலங்கினார்.. கைத்தாங்கலாக மாடிக்கு கூட்டிச்சென்றார் அன்பு... பத்து நாட்களாக வள்ளியும் அவள் குடும்பத்தினரும் ரவீந்திரனுக்கு செய்த பணிவிடைகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது... வள்ளியின் தாய் வெள்ளையம்மாள் ரவீந்திரனுக்கு துணையாக அங்கேயே இருந்தார் வள்ளியின் பணிவிடைகளை பார்க்கும்போது வாசுகியே வள்ளி உருவத்தில் வந்ததைப்போல் உணர்ந்தார் ரவீந்திரன்... அன்பும் தினசரி வந்துபோனார் பூரண குணமடைந்து நாளை ஆபீஸ்போக தயாரானார் ரவீந்திரன்... இரவு டிபனுடன் வந்தாள் வள்ளி.. சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைகளை எடுத்து கொடுத்தாள் வெள்ளையம்மாள் தூங்கி கொண்டிருந்தாள்... மனதில் தேக்கமாய் உறுத்திக்கொண்டிருந்ததை கேட்டாள் வள்ளி.. அன்னிக்கி சாயங்காலம் வந்து சொல்றேன்னு சொல்லிட்டு போனீங்களே சார் என்ன சார் அது... இல்ல வள்ளி...அதப்பத்தி இப்ப பேசி பிரயோஜனம் இல்ல ... நான் இப்ப கேட்கப்போறதுக்கு மட்டும் பொறுமையா யோசித்து பதில் சொல்லு.... சொல்லுங்க சார்... எனக்கு சுத்திவளைச்சு பேசத்தெரியாது நேராகவே கேட்கிறேன்... என்னை மறுமணம் செய்துகொள்ள உனக்கு விருப்பமா...என்றார்... ஆயிரம் மின்னல்கள் அவள் மூளையில் வெட்டியது... இந்தக்கேள்வியை எதிர்பார்க்காத வள்ளி வாயடைத்துப்போனாள்... என்ன....சார்...இப்படி கேட்டுட்டீங்க... தழுதழுத்தது வள்ளியின் குரல்... ஒன்னும் அவசரமில்லை.. நிதானமாக யோசித்து அப்பாஅம்மாகிட்டேயும் கேட்டுட்டு சொல்லு... தளர்ந்த நடையுடன் வீட்டுக்குச் சென்றாள் வள்ளி மனதில் உள்ள பாரத்தை இறக்கிவைத்த நிம்மதியில் மனம் பஞ்சுபோல் இருப்பதாக உணர்ந்தார் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றிரவு நிம்மதியாக உறங்கினார் காலையில் சாவியைகொடுக்க வாசலில் பைக்கை நிறுத்தினார் வள்ளி வரவில்லை அவள் பையன்தான் கொண்டுவந்தான்... அவர் எதிர்பார்த்ததுதான் பதினைந்து நாட்களுக்குப்பிறகு மனதில் புத்துணர்வுடன் அலுவலகம் வந்தார் ரவீந்திரன்... அலுவலகத்தில் உள்ள அனைவரும் நலம் விசாரித்தனர் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அன்புசெல்வனுக்கு ஃபோன்போட்டு வீட்டுவந்துவிட்டு போகுமாறு அழைத்தார் சிறிதுநேரத்தில் அன்புசெல்வனும் வந்தார் எப்படிஇருக்கு இப்ப உடம்புக்கு ஒன்னும் பிரச்னைஇல்லையே ... ஒன்னுமில்ல நல்லாருக்கு... அப்புறம் ஏதும் சேதியா.... ஆமா...அன்பு.... மனதில் உள்ளதையும் நேற்றிரவு வள்ளியிடம் சொன்தையும் சொன்னார் ரவீந்திரன்... ரொம்ப...சரியான முடிவு ரவி... உன் நல்லமனதுக்கு சரியான துணையை இறைவன் காட்டிஇருக்கிறான்... வள்ளி இன்னும் சம்மதம் சொல்லலையே என்றார் ரவி.. நிச்சயமாக ஒத்துக்கொள்வாள் கவலைப்படாதே என நம்பிக்கை கொடுத்தார் அன்புசெல்வன் உன்பிள்ளைகளிடம் நான் பேசிக்கொள்கிறேன் வள்ளி சம்மதம் சொன்னதும் என்னிடம் சொல்லு என்று புறப்பட்டுச்சென்றார்... ஒருவாரமாக வள்ளியைப் பார்க்க முடிவதில்லை வீட்டுப்பக்கமும் வருவதில்லை... இதற்குமேலும் பொறுமைகாக்க தேவையில்லை என்று நினைத்த ரவீந்திரன் அவர்களின் வீட்டுக்கே சென்றார் கணபதியும் வெள்ளைம்மாளும் வாங்க தம்பி...என்று அழைத்து உட்காரச்சொன்னார்கள்... வள்ளி...சாருக்கு குடிக்க தண்ணி கொண்டாம்மா... தம்பி சாப்புடுறியளா... சாப்பாடு செய்யவா எனக்கேட்டார் வெள்ளையம்மா... இருக்கட்டும் சாப்புடுவோம்.... அப்புறம் வள்ளி ஏதும் உங்ககிட்ட சொல்லிச்சா என்றுகேட்டார்... இருவரும் மௌன மானார்கள் கையில் தண்ணீர் சொம்புடன் வந்துநின்றாள் வள்ளி கணபதியும் வெள்ளையம்மாளும் வள்ளியைப்பார்த்தனர் சிறிது நேரம் மௌனம் நிலவியது விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் ரவீந்திரனை வந்து கட்டிக்கொண்டனர் யாரும் பேசாமல் இருந்ததால் ரவீந்திரன் எழுந்தார்.. கோவிச்சுக்காதீங்க அய்யா...அம்மா.. வள்ளி... நான் பரிதாபப்பட்டு உன்னை கட்டிக்கிறேன்னு சொல்லவில்லை.. மனப்பூர்வமாகத்தான் சொன்னேன் நான் கேட்டது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுடு வள்ளி நான் வர்ரேன் என கிளம்பினார் ரவீந்திரன்... நில்லுங்க.... என்று வாய்திறந்தாள் வள்ளி... கையிலிருந்த தண்ணீரை ரவீந்திரனின் கையில் கொடுத்துவிட்டு அவர் காலில் விழுந்து அழுதாள் ... தோள்களை தொட்டு தூக்கினார் ரவீந்திரன் கண்ணில் வழிந்த எல்லையில்லா ஆணந்தக்கண்ணீரை துடைத்துக்கொண்டனர் கணபதியும் வெள்ளையம்மாளும்.... வள்ளியின் கன்னத்தில் வழிந்த நீரை ரவீந்தின் துடைத்தார் கண்ணீரை மட்டுமல்ல அவளுக்கு ஏற்பட்ட அவப்பெயரையும் சேர்த்தே.. அன்பு செல்வனிடம் சொன்னார்... ஆகவேண்டியதை அவர் கவனித்துக்கொண்டார்... அனைவரின் சம்மதத்தோடும்... மீண்டும் வசந்த வாழ்வை துவங்கினர் ரவீந்திரன் வள்ளி தம்பதியினர் வாழ்க வளமுடன்... 💐💐💐💐💐💐 ******முற்றும்***** ஆக்கம். ஏகலைவன் மு.அ.காதர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.