விஜி கல்யாணி
சிறுகதை வரிசை எண்
# 162
ஜனநாயகம் பேசுகிறது
======================
நிறைந்த அரங்கு..
இரு பிரிவினர் சாதியக் கொடுமைகளை பேசிக்கொண்டிருக்க விவாதங்கள் சண்டையில் முடியப்போகுது என அறிகுறி..
நிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொருவருடையக் கருத்துக்களைக் கேட்டதும் அதிர்ந்து போனா ர்..
காட்டுமிராண்டி போலக் கத்தினார் ஒருவர்.. ஏன்டா தாழ்த்தப்பட்டவன் வீட்டுல பொம்பளைகளே இல்லையா உயர் சாதி பொண்ணு கேக்குதா ..
அதனாலதான் சார் அவன் தலய எடுக்கனும்னு,, ஆவேசமா முறுக்குமீசையொட ஒருத்தரு சத்தம்போட...
இந்த கொடுமையான காட்சியக் கண்ட தம்பதிக கையெடுத்து கும்பிட்டாக ஐயா எங்கள உட்டுருங்க சாமி...
முனியாண்டி , மாரியம்மாள் கூலிவேலை செய்து நான்கு குழந்தைகளை வளர்த்தனர்..
மூனாமத்தவன் இளங்கோ நன்கு படித்து மெடிக்கல் ரெப்பாக பணி புரிந்தான்..
மாலதி நர்ஸ். இருவரும் தோழர்பின்காதலாகி,
ஒளிவு மறைவுடன் குடும்பம் நடத்தி வருவது
தெரிஞ்சதும் முனியாண்டியும் ,,மாரியம்மாளும் எவ்வளவோ தடுத்தனர்..
மாலதிக்கு தெரியாமலே நிச்சயம் முடித்தனர்.
அவளோட அப்பா. அம்மா உறவுக..
மாலதியின், அப்பா
சிவனாண்டி ,வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்..
திருமணத்திற்கு மகளை அழைத்து போக வந்தவர் மகள் ,இளங்கோவுடன் ,இரு,ப்பதைக் கண்டு படமெடுத்தாரு.
இரவோடு இரவாக பந்துக்களுடன் சதி நடந்தது...
சிவனாண்டி ,மகள் போக்கிலே போய்
காரியம் சாதித்தார்..
விடிந்ததும் இளங்கோவுடன் மாலதி சிவனாண்டி மூவரும் மாலதியின் குலதெய்வக் கோயில்ல மாலை மாற்றுவதாய் முடிவு..
பெற்றோரிடம் இளங்கோ கூறியதும் ஆடிப்போனார்கள்..
குலதெய்வம் முன்பு மாலையோடு விழுந்து வணங்கிய இருவரில் இளங்கோவின் கழுத்து அறுத்து வீசினார்கள் மாலதியின் அண்ணன்மார்கள்..
எதிர்பார்க்காத மாலதி ,மயங்கியதும் இழுத்து வீட்டுக்குள் அடைத்தனர்..
எத்தனை கொடுமை
கீழ்சாதியில் பிறந்தது இளங்கோவின் குற்றமா?..
அழுது புரண்டவள் துப்பட்டாவால் தொங்கினாள்..
ஆனாலும் கிராமத்து இளவட்டங்க கதவ ஒடைச்சு அவள காப்பாத்திட்டாங்க.
திமிருப் பிடித்த கழுத ஒழியட்டும்.. இவளுக்காக மான மரியாதையை இழக்க முடியாது..
வெட்டியவன் பத்து வருசத்தில வந்துருவான் ..
தாய்மாமன் முதல் அப்பா வரை சாதி சாக்கடை உடம்புல ஓடுற திமிருல உறுமிக்கிட்டு இருந்தாக.
இனிமே ,
கீழ்சாதி பயலுக இப்படியொரு காரியம் செஞ்சாலும் ,
கொன்னு குவிப்போம் என சபதமிட்டான் காட்டுமிராண்டி பய ஒருவன்..
பாதிக்கப்பட்ட பொண்ணு மாலதி இப்பவரைக்கும் தெருவையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்..
மனநலனுக்கு மருந்தானவன் மண்ணுக்குள்ள போனது கூட நினைவில்லாம.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வாயடைத்துப் போனார்..
உலகமே காணும் நிகழ்ச்சி.ஜனநாயக நாட்டில் இன்னும் சாதிய கொடுமை ஒழியவில்லை..
படிப்புடன் இளைய தலைமுறை முன்னெடுத்தால் ஒருவேளை குறையுமோ..
ஆதங்கத்துடன் நிகழ்ச்சியை முடித்தார்..
(முற்றும்)
நன்றி!
விஜி கல்யாணி ..
கோவை..
.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்