logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

காவிய சேகரன்

சிறுகதை வரிசை எண் # 156


#பட்டாம்பூச்சி# சிறுகதை அடுப்படியில் நின்றபடி தோட்டத்தில் உள்ள மரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இங்கிருந்து பார்த்தால் மா ,வாழை ,சப்போட்டா ,என்று எல்லா மரமும் தெரியும் அதன் பூ முதல் காய்விடுவது வரை பார்த்து பார்த்து வைப்பேன் இங்கிருந்தபடியே கடைசியாய் இருக்கும் கொய்யா மரம் மட்டும் முழுமையாக தெரியாது அதனால் அதிலிருக்கும் பழங்களும் சரியாக தெரிவதில்லை பாதிபழுத்த நிலையில் பறித்தால் அது நமக்கானது முழுவதும் பழுத்தால் அது அணிலுக்கானது என்பது எழுதப்படாத சட்டம், இன்று அந்த மரங்கள் எதுவும் என் கண்முன்னே தெரியதபடி எண்ணம் முழுவதும் என்னைப்பற்றி மட்டுமே சுழன்று க்கொண்டிருந்தது என்று தோன்றியது எனக்கு தனிமனிதன் சுதந்திர அமைப்பைப் பற்றி பேசும் இந்த சமூகம் என்னைப்போன்ற பெண்ணின் சுதந்திரம் பற்றி முழுமையாக பேசியுள்ளதா..? பேசாத வரை இந்த சமூகம் அதிஷ்டவசமானது என்று நம்பிக்கொண்டிருக்கட்டும் என்றே தோன்றியது அன்று எனக்கு ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான சுதந்திரத்தை தானே வடிவமைக்கிறான் அதில் அவனின் குறிக்கோள் மேன்மையடைகிறது என்றால் என்னைப்போன்ற எந்த ஒரு பெண்ணாவது தனக்கான சுதந்திரத்தை தானே வடிமைத்திருக்கிறாளா அவளின் குறிக்கோள் மேன்மையடைந்துள்ளதா என்றே தேன்றியது அன்று எனக்கு மனித வாழ்வியல் கூறுபாடுகளான சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பெண்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டதா என்றே தோன்றியது அன்று எனக்கு குறைந்த பட்சம் நடைமுறை சட்டமானது கூட ஆணுக்கொரு சட்டமும் பெண்ணுக்கொரு சட்டமுமாக தானே உள்ளது அவ்வபோது அந்த சட்டையை பாதுக்காப்பாக அணிந்துக்கொண்டாலும் பெரும்பாலான நேரங்களில் நிர்வாணமாகத் தானே நிற்கிறோம் என்று தோன்றியது அன்று எனக்கு சமத்துவம் என்ற சொல்லிற்கு இணையான வேறு சொல் உள்ளதா ‌‌...? ஏன் இல்லை சகோதரத்துவம் என்பது தொப்புள் கொடியோடு மட்டுமே பெண்களை முடியிட்டு வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்று அன்று தோன்றியது எனக்கு நற்குண பண்புகளின் வரிசையில் பெண்ணிற்கு வைக்கப்பட கற்பு ஏன் ஆணுக்கு வைக்கப்படவில்லை அது ஆணுக்கும் பொதுவானது என்று எழுதியும் பேசிக்கொண்டிருக்கும் ஒருசில ஆண்களுக்கு கூட அது முற்போக்கு நாகரீக அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது இன்று மட்டும் அல்லது கொஞ்ச காலங்காலமாக அப்படித்தான் தோன்றுகிறது என்றபோதிலும் இன்று அதிகபடியாகவே தோன்றுகிறதே, என்று எண்ணியபடி என்கையிலிருக்கும் மருத்துவ அறிக்கையை வெற்றுப் பார்வையோடு பார்த்தபடி நின்றிருந்தேன் எண்ணங்கள் வேகமாக பயணிப்பதும் இடையில் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொள்ளும் ஆமையின் தலையைப் போல் , மீண்டும் பயணிக்கும் பல எண்ண சிதறல் வலைக்குள் சிக்கிக்கொண்ட திமிங்கலமாய் திமிரும் என்று தோன்றியது அன்று இத்தனையான தோன்றல்கள் யாவும் புதிய பிரச்சினை அல்ல எனக்கு, இருபது சொச்ச வயதில் வேறு வழியற்று மனதார ஏற்றுக்கொண்ட பிரச்சினை தான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய பிரச்சினை இது, இந்திய கலாச்சரத்தில் பெண்களின் பொது பிரச்சினை இது , இது போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் சாதி ,மத நிறமெல்லாம் கிடையாது பெண்கள் என்றாலே ஒரே சாதிதான் கால்வழியே பிறந்த சாதி திருமணமான ஒரிரு வருடங்கள் வரை கணவரின் குடும்பத்தார் மறைத்து வைக்கப்பட்ட ரகசியம் அம்பலமானது போது வெடித்த பிரச்சினை , ஒரு பெண் குழந்தையின் தாய் என்ற சாமர்த்திய சாமாதானத்தை சொல்லிச்சொல்லி மனதார ஏற்க்கொள்ளவைக்கப்பட்ட சமூகம்இது, என் குடும்பமும் என் கணவரின் குடும்பமும் ஏற்க்கொண்ட சமாதான ஒப்பந்தம் இந்த சமூக உடன்படிக்கை திருமணமான அன்றிலிருந்தே என் கணவருக்கான உணவு பரிமாறல் மறுக்கப்பட்டது எனக்கு, எனக்கும் சேர்த்தே உட்காரவைத்து பரிமாறப்பட்டது ஆரம்பத்தில் இது அன்பின் வெளிப்பாடு என்றே எண்ணி மகிழ்ந்திருந்தேன் பிறகு உரிமைமறுப்பு என்று எண்ணி கலவரமுற்றிருந்தேன் கடைசியில் தான் தெரிந்தது அது ஏமாற்று வித்தையின் சாமர்த்திய தொடர் என்று என் கணவனுக்காக சைவ உணவில் வராத சிக்கல் அசைவ உணவில் வந்துப் போனது ஆசையாய் இரண்டு ஆட்டுக்கறி துண்டை கூடுதலாக என் கணவர் தட்டில் வைத்தபோது ஆத்திரமாய் கத்திய என் மாமியார் முகத்தில் தெரிந்த கோபத்தை முதல் முறையாக பார்த்து பார்த்துத்தான் போனேன் "ஏன் வீட்டில் மத்தவங்க சாப்பிடுவதில்லை யா அள்ளி அள்ளி அவன் தட்டுல வைக்கிற எப்புள்ளைக்கு எனக்கு வைக்க தெரியாதா , வேணும்னா நீ கொட்டிக்க "என்றபடி என்தட்டில் கிண்ணத்தில் இருந்த அத்தனை துண்டு ஆட்டுக்கறியையும் அள்ளி கொட்டிவிட்டு சென்ற மாமியாரின் செயலை வேடிக்கைப்பார்த்து விட்டு அமைதியாக சாப்பிட்ட என் கணவர் மாமனார் கொழுந்தன் அடங்கிய மொத்த குடும்பத்தையும் பார்த்து கலங்கிப் போய் நின்றிருந்தேன் அப்போது தெரியாது மொத்த குடும்பமும் எதையோ ஒன்றை மறைக்கிறார்கள் என்று அதே மாமியார் தன் மூத்த மகனுக்கு மட்டும் "அவன் கறிமீனுன்னா அப்புடி சாப்பிடுவான் "என்று ஆசையாய் அள்ளிவைக்கையில் எரிச்சலாக இருக்கும் அதை பலமுறை படுக்கையில் ரகசியம் போல் முதல்முறையும் ஆதங்கமாக பலமுறையும் சொல்லியும் பெரியதாக இதை கேட்ககூட விரும்பாத என் கணவன் மீது எரிச்சலாகவே வந்தது அதற்கான விடை என் மகள் பிறந்த ஒரு வருடம் கழித்தே கிடைத்தது என் அறையில் அவ்வபோது பிரிந்து போடப்பட்ட மாத்திரையின் கவர்கள் இது ஏன் இங்கே வந்தது இது என்ன மாத்திரை என்ற குழப்பம் அதே மாத்திரையின் கவர் அடிக்கடி அடுப்பறை குப்பைத்தொட்டியில் பார்த்திருக்கிறேன் வயதான மாமனார் மாமியார் சாப்பிடும் மாத்திரை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில் நானும் அவரும் மட்டுமே பயன்படுத்தும் இந்த அறையில் அந்த உறை ஏன் வந்தது என்று சந்தேகம் நீண்ட நாட்களாக கணவரிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லை எங்கப்பா போட்டிருப்பார் எப்படியோ இங்கே வந்திருக்கும் விடேன் என்ற பதில் மட்டுமே இருக்கும் ஒருநாள் இரவில் திடீரென நெஞ்சுவலிப்பதாக என் கணவர் துடிக்க என்னைப்போலவே ஒட்டுமொத்த குடும்பமும் துடித்தபடி அவரை காரில் ஏற்றினார்கள் மருத்தவமனைக்கு அழைத்துச்செல்ல நானும் அவரோடு காரில் உடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது நான் எத்தனையோ முறை நானும் வருகிறேன் நானும் வருகிறேன் என்று மன்றாடியும் காரில் ஏற விடவில்லை அந்த மொத்த குடும்பமும் இரண்டு மணிநேரம் என்னாச்சோ ஏதாச்சோ என்ற போராட்டத்தின் பிறகு காரிலிருந்து இறங்கி நல்லபடியாக நடந்து வந்தார் என் கணவர் மீண்டும் என் உயிர் வந்தது போன்ற நிலை அடுத்த நாள் மருத்துவ பரிசோதனை என்று சென்ற என் கணவருடன் உடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது "நீ குழந்தையை பாத்துக்கமா அதுக்காக தானே அம்மா நீ வரவேண்டானு சொல்லுறாங்க " என்ற நொண்டிச்சாக்கை மட்டுமே கணவரின் அக்கறையாக இருந்தது அதன்பிறகே தோன்றியது ஏதோ ஒரு விசயத்தை ஒட்டுமொத்த குடும்பமும் மறைக்கிறது என்று தேடினால் இங்கே கிடைக்காதது எது பலதேடல்கள் தானே பல புதிய விசயங்களை தருகிறது அறிவியல் தேடல் நவீன வசதிகளும் ஆன்மீக தேடலில் பக்தியின் முக்திகளும் பயணத்தேடலில் புதிய தேசங்களும் கற்பனைத்தேடலில் கதைகளும் என்று ஒவ்வொரு தேடலுக்கும் நிச்சயமான பலன் இருக்கையில் இது மிக சாதாரண தேடல் தானே கிடைத்தது என் தேடலுக்கான விடை தலையில் விழுந்த இடியென என் கணவருக்கு செயற்கை வால்வு பொருத்தப்பட்ட இதய‌அறுவை சிகிச்சை நடந்ததற்கான ஆதாரங்கள் ஒரு நேயாளியை மணந்துக்கொண்டேன் என்பதல்ல எனது வலி ஒரு பொய்யனோடு வாழ்கிறேன் ஒரு ஏமாற்று கும்பலோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் என்பதே என்வலி அதிலும் அந்த மருத்துவ அறிக்கையோடு தெரிந்து மருத்துவரை சந்தித்தேன் இவர் கல்யாணம் பண்ணியிருக்கவே கூடாதேம்மா இந்த மாத்திரையை சாப்பிட்டா உயிரணு திடமானதாக இருக்காதே கரு உண்டானாலும் கலைஞ்சிடும் இல்லைனா பிள்ளைகள் ஊனத்தோடு பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்றபோது ஏற்கனவே மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டு மரணத்தின் வாசல் வரை சென்று வந்த நினைவே மறுபடியும் மரணவாயிலை காட்டியது அதோடு கடவுளில் அருள் நல்லபடியா ஒரு பெண்குழந்தை பிறந்திருக்கு என்றார் கணவர் மற்றும் அந்த குடும்பத்தோடு சண்டையிட்டு பிள்ளையோடு தாய்வீடு சென்றால் ஆரம்பத்தில் ஆத்திரம் கொண்டு என்கணவர் குடும்பத்தோடு சண்டையிட்டு கத்திய தாய் தகப்பனே ஒரு புள்ளைய பெத்துட்டியே இனிமே என்ன செய்ய முடியும் வாழவெட்டியா வீட்டில் வச்சுக்க முடியுமா இதுதான் தலையெழுத்துனு ஆகிடுச்சி அதைப்பற்றி யோசிக்காம போய் குடும்பம் நடத்து" என்றே அனுப்பிவைத்தனர் இது இருபது வருடம் ஓடிடுச்சு ஒருபக்க நீதியோடு வேறுவழியில்லாமல் மனதை சமாதான செய்து மனதார என்ற பொய் வார்த்தையோடு ஏற்க்கொண்டேன் உடல் ஊனம் என்றால்கூட மனம் ஏற்றுக்கொள்ளும் மன ஊனத்தை எப்படி ஏற்கும் மனம் ஆனாலும் ஏற்றுக்கொண்டது உணர்வை வெளிக்காட்டும் உரிமையில்லாத இடத்தில் ஏற்றுக்கொண்டாகவேண்டிய நிர்பந்தம் மனத்திற்கு ஏற்றுக்கொண்டாகிவிட்டது இப்போ என்கையில் இருப்பது எனக்கான மருத்துவ அறிக்கை இருபது வருடத்தில் பலமாற்றம் வாழ்வில் மாமியார் இறந்தாயிற்று உடல்நிலை சரியில்லாத மாமனாரோடு தனிக் குடுத்தனம் அவ்வபோது செக்கப் மாத்திரை மருந்தோடு நலமாகவே பயணிக்கும் கணவரோடும் கல்லூரி படிக்கும் மகளோடுமான வாழ்க்கை இப்போது மனதில் உள்ள ஏக்கங்களும் அதனால் உண்டான தாக்கங்களும் என் உடலில் இப்போது தன் உடல் இயலாமையை மறைக்க கணவரால் மறுக்கப்பட்டது பல உரிமைகள் உரசி உரசி ரணமாகிப்போன மனம் அதன் எதிர்வினையை புற்றுநோய் கட்டியாக காட்டிவிட்டது சினைப்பையும் கருப்பையும் இணையும் இடத்தில் உருவான புற்றுநோய் முதல் கட்டத்தை தாண்டி இரண்டாம் கட்டத்தில் நிற்கிறது என்கிறது மருத்துவ அறிக்கை அறுவைசிகிச்சை செய்தே ஆகவேண்டும் ஆனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறது எனக்கான வாழ்க்கையை நான் வாழவே இல்லை அதற்குள்ளாக சாவதா விசயம் தெரிந்த நாளில் அழுகையும் ஆத்திரமும் முட்டியபோது உடைந்து சிதைந்து திடமானது மனம் இதோ எட்டிய தூரத்தில் நிற்கிறது சாவு என்றபோது தான் வாழ்வில் மறந்துபோன பல விசயங்களை வழுக்கட்டாயமாக மறக்க முயன்ற பல நிகழ்வுகளை பல மனிதர்களை ஞாபகப்படுத்துகிறது இப்படி ஓயாமல் ஞாபகப்படுத்திய மனிதன் தான் தாஸ் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து பிரிக்கப்பட்ட நண்பன் என் உடன்படித்த மாணவன் அவனை சகோதர பெயரால் அழைக்காமல் உரிமையோடு அவன் இயற்பெயரில் அழைத்தால் உண்டான சந்தேகம் என் கல்லூரி கால வாழ்க்கை பாதியோடு நின்றுபோனது நான் நண்பன் நண்பன் என்று எத்தனை முறை சொன்னாலும் மற்றவர்கள் பார்வைக்கு அவன் என் காதலன் என்றே பார்க்கப்பட்டு உடைக்கப்பட்ட உறவு அது இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அவனை பார்த்தேன் அதே நட்போடு அதே உரிமையோடும் தொடர்கிறது எங்கள் உறவு இந்த மெனோபாஸ் காலகட்டத்தில் அவனின் நட்பு அதிகமாக தேவைப்பட்டது என்னை என்னிடமிருந்து மீட்க இந்த முறை யாராலும் தடுக்கவோ வலுக்கட்டாயமான வார்த்தையில் சிதைக்கவே இல்லை ஒருவேலை இந்த வயது தந்த சுதந்திரமாக இருக்கலாம் என்றே தோன்றியது இன்று அவனுக்குத்தான் போன் செய்தேன் இந்த முறை அவனிடமிருந்து எதிர்ப்பார்த்து ஆறுதலை இல்லை அதற்கு மேலான ஒன்றை தாஸ் உனக்கு ஒருவாரம் லீவு கிடைக்குமா என்றேன் கிடைக்கும் என்றான் என்னை எங்காவது ஒருவாரம் கூட்டிப்போயேன் அதுவும் தூர தேசமாக நம்மை யாருக்கு தெரியாது இடமாக உங்கூட ஒன்னா சுத்தனு உன்மடியில் படுத்துகனும் ஒரே ஒரு வாரம் எனக்கான என்வாழ்க்கையை உன் கூட வாழனும் " என்றேன் "ஒருநிமிடம் இரு" என்றான் எதிர்முனையில் அமைதி சாரளத்திற்கு வெளியே எட்டிப்பார்த்தேன் அந்த கொய்யமரத்தில் மறைந்திருந்த ஒரு பழம் பழத்திருப்பதை இந்த முறை கவனித்தேன் தாஸ்சிடமிருந்து பதில் வந்தது "ஒருவாரம் லீவ் சொல்லிட்டேன் வசந்தி அது போதுமா " என்றான் மருத்துவ அறிக்கையோடு நான் தாஸ்கூட வெளியூர் போவதாக எழுதிவைத்திருந்த கடிதத்தையும் சேர்த்து வைத்தேன் அதில் மகளுக்கும் கணவருக்கும் புரியும் படி சிலவிசயங்களோடு உயிரோடு இருந்தால் நேரில் விளக்கம் சொல்கிறேன் இப்படிக்கு வசந்தி என்று இருந்தது....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • பூமாதேவி Avatar
    பூமாதேவி - 3 years ago
    பல நேரங்களில் பொய்யே சொல்லாத உண்மையாளன் தவறு செய்யாத நல்லவள் யாரோ சொன்ன பொய்யால் யாரோ செய்த தவறால் பாதிக்கப்படுவர்.அப்படி பாதிக்கப்பட்ட இந்த கதாநாயகியைப் போல எண்ணற்ற மனிதர்கள்.பாவம் இவர்கள் கடைசி நேரத்தில் உணர்வது‌‌...எனக்கு ஏன் நல்ல புத்தி கற்பிக்கப்பட்டது என்று. வாழ்த்துகள் சகோதரி ❤️