logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

ராம் பெரியசாமி

சிறுகதை வரிசை எண் # 154


என் வயது பதினெட்டு அறிவுக்கு அல்ல ---------------------------------------------------- இப்போதெல்லாம நான் நட்சத்திரங்களை எண்ணியதில்லை நெடு நேரமாக வானத்தை உற்று பார்த்தது இல்லை இத்தனை வருடங்களாக நான் இரண்டே இரண்டு முறைதான் வானவில்லை பார்த்திருக்கிறேன்... என்னை பொருத்தவரை உலகம் என்பது ஒரு கூரை அதன் வழியாகத்தான் நான் முதன்முதலில் வானத்தை உற்றுப் பார்த்திருக்கிறேன் ஒரு கைக் குழந்தையின் அழுகை போல கூரையின் வழியாக வீட்டில் சிந்தும் மழைத்துளிகளை கண்டு வியந்திருக்கிறேன் அது பாத்திரங்களில் எழுப்பும் ஒலி இரவின் காதுகளில் விழும் நீண்ட இசை அப்பாவிற்கு இட்லியும் உருளைக்கிழங்கு குருமாவும் மிகவும் பிடிக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லி தோசை சுடுகிற அம்மாவுக்கு புளிச்சக்கீரையும் கத்திரிக்காய் குழம்பும் மிகவும் பிடிக்கும் காசில்லாத சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மூடுகிற நேரங்களில் வியாபாரிகளிடம் இருபது ரூபாய் கொடுத்து எல்லாத்தையும் வாங்கி விடுவார் பக்கத்து வீட்டில் டயனோரா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டி ஒன்று புதியதாக வந்திருக்கிறது வெள்ளிக் கிழமையானால் ஒளியும் ஒலியும் பார்க்க எல்லோரும் சென்று விடுகிறார்கள் நான் அந்த வீட்டில் நுழைய வேண்டுமென்றால் ஐந்து பைசா கொடுக்க வேண்டும் என் ஐந்து வயதிற்கு அது மிகப்பெரிய தொகை நிறைய முறை அம்மாவிடம் அழுது அடம் பிடித்திருக்கிறேன்அம்மாவும் தரவில்லை பாடல் பார்க்க வேண்டாம் கேட்டாலே போதும் இங்கே உட்கார்ந்து கேட்டுக் கொள் என்பாள் ஒளியும் ஒளியும் அதில் ஒலி மட்டுமே காதில் வாரம் வாரம் விழுந்துவிடும் எப்போதாவது சாராயம் குடித்துவிட்டு வரும் அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பார் அப்போது அவர் பேசுகிற அத்தனை கெட்ட வார்த்தைகளும் எனக்கு மனப்பாடம் எனக்கு கோபம் வந்தால் அவர் என்னென்ன வார்த்தைகள் பேசினாரோ அதையே நானும் எனது சக நண்பர்களிடம் உச்சரித்துக்கொண்டிருப்பேன் எனக்கு நல்லதும் சரி கெட்டதும் சரி உடனே கற்றுக் கொள்ளக்கூடிய தீவிரத்தன்மை என்னிடம் இருந்தது அப்பாவும் என் சிறு வயது அண்ணனும் டூரிங் டாக்கீஸ் கொட்டகைக்குச்சென்று கர்ணன் திரைப்படம் பார்த்துவிட்டு வந்த பிறகு இரவு பதினொன்று இருபதுக்கு நான் பிறந்ததால்கர்ணன் படத்தில் அர்ஜுனன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் பெயரையே மனதில் வைத்து முத்துராமன் என்றே பெயர் சூட்டிவிட்டார்கள் ஆனால் அப்பாவிற்கு கர்ணன் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தான் ஆசை ஆனால் கடைசி காட்சியில் கர்ணன் இறந்துவிடவே அர்ஜுனன் தான் என்று அதனால் முத்துராமன் தான் வைக்க வேண்டும் என்று அம்மா ஒரேடியாக அடம் பிடித்து விட்டாள்.... எல்லா நினைவுகளையும் சுமந்து கொண்டு அந்த கூரை வீட்டை பார்க்க சென்று கொண்டிருக்கிறேன் இதோ நான் ஒன்றாம் வகுப்பு வரை படித்த சத்துணவு பள்ளிக்கூடத்தை நெருங்குகிறேன் அது சத்தான உணவா என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் வீட்டிலிருந்து சிலேட்டுடன் தட்டை எடுத்துக்கொண்டு தினமும் செல்வேன் வடித்த கஞ்சியில் சாதம் போட்டு சாம்பார் சாதம் செய்து கொடுப்பார்கள் அப்போதைக்கு அதுவே தேவாமிர்தம் ஒரு மனிதனின் ஆயுளை விட அதிக வருடங்களைக் கொண்ட அரச மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டார்கள் அந்த அரச மரத்தின் கீழேதான் கோலிக்குண்டு விளையாட்டுக்கள் நடைபெறும் நான் எப்போதுமே அந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றதே இல்லை நிறைய கோலிகளை இழந்து கொண்டு தான் வீட்டிற்குச்செல்வேன் நான் பிறந்த கூரை வீட்டின் தெருவிற்க்குள் நுழைந்து விட்டேன் தீராத நெஞ்சு வலியால் உயிரிழந்த அப்பா நினைவில் வந்து அமர்கிறார் இந்த வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு அவர் என் நெஞ்சின் மீது தட்டி என்னை தூங்க வைத்த ஞாபகங்கள் மூளையை திரித்துக் கொண்டிருக்கின்றன .. இன்று எங்கள் குடும்பம் போல் அங்கு ஒரு குடும்பம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது ராசாத்தி பாட்டிக்கு நானென்றால் கொள்ளை பிரியம் குழந்தைப்பேறு இல்லாத அவளுக்கு நான்தான் அவளுக்கும் பிள்ளை நான் முதலில் ராசாத்தி பாட்டியை சந்தித்துவிட வேண்டும் நிச்சயம் வயதாகி இருப்பாள் அவளது கணவர் சண்முகம் நான் சிறு வயதிலேயே அவரை தாத்தா என்று தான் அழைப்பேன் இந்த தெருவில் இருந்த எல்லோரும் வேலை விஷயமாக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து விட்டார்கள் பழைய கோவில் போல ராசாத்தி பாட்டி மட்டும் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறாள் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ராசாத்தி பாட்டியை அழைக்கிறேன்சுருக்குப் பையை போல அவள் முகம் சுருங்கி இருக்கிறது யாரு வந்திருக்கா..? பாட்டி என்ன தெரியலையா..? தெரியலையே யாருப்பா நீங்க..? நான்தான் பாட்டி பவுனாம்பாள் மகன் முத்துராமன் அடி என் தங்கம் ... எப்படி இருக்கடா அம்மா எப்படி இருக்காங்க அம்மா நல்லா இருக்காங்க பாட்டி நீங்களும் தாத்தாவும்எப்படி இருக்கீங்க தாத்தா இறந்து நாலு வருஷம் ஆச்சு கண்ணு இன்னும் நான் மட்டும்தான் உயிரைக் கையில புடிச்சு கிட்டு இருக்கேன் என்ன எப்ப அந்த ஆண்டவன் கூப்பிடுவான்னு தெரியல உக்காரு கண்ணு நான் காப்பி தண்ணி போட்டு கொண்டு வரேன் உள்ளே சென்று விட்டாள் நான் திண்ணையில் அமர்ந்து விட்டேன் அப்பாவுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்ததும் குவாட்டர்ஸ் ஈடு கொடுத்து விட்டார்கள் அங்கு திண்ணை இல்லை ஒரு வீட்டில் திண்ணை என்பது எத்தனையோ கதைகளை உள்வாங்கும் ஒரு நூலகம் நான் எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்க தூரத்தில் துணி துவைக்கும் சத்தம் கேட்கிறது அந்த திசையை நோக்கி நான்உற்று பார்க்கையில் எலுமிச்சை பழ நிறத்தில் ஒருத்தி துணியை துவைத்துக் கொண்டிருக்கிறாள் நான் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவளது உடல் ஒரு பறவையை விட அழகு தொடைத்தெரிய புடவையை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அவளது கால்களின் ரோமங்கள் மயில்தோகையைப் போல படர்ந்து இருக்கிறது என்ன ஒரு பேரழகு இந்த திடீர் குப்பத்தில் இப்படி ஒரு தேவதையா நிச்சயம் அவளுக்கு திருமணம் ஆகி இருக்கும் வயது எப்படியும் முப்பத்தி ஐந்தாவது இருக்கும் ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை அவ்வளவு அழகான கட்டுடல் வெள்ளை முடிகள் இல்லை .... சினிமா நடிகைகள் போல மார்பகங்கள் என்னால் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை அவளை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறதுதூரத்திலிருந்து பார்த்ததே இவ்வளவு அழகு என்றால்அவள் அருகில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்தாக் கண்ணு காப்பியக் குடி ... இந்த காப்பியின் சூட்டை விட என் உடல் சூடு அதிகமாகிக் கொண்டிருக்கிறது ராசாத்தி அம்மாள் ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள்நானும் ஏதேதோ பதில் சொல்லி சமாளித்துக் கொண்டு இருக்கிறேன் என் மூளை சரியாக இயங்கவில்லை என்பது எனக்கு நன்றாக தெரிந்து விட்டது நான் அடிக்கடி அவளை பார்ப்பதை ராசாத்தி பாட்டியும்கவனித்துவிட்டாள் அடியே கலா அடியே கலா இங்க கொஞ்சம் வாயேன் ராசாத்தி அழைக்க அவள் புடவையை சரி செய்து கொண்டு மெல்ல அருகில் வந்து கொண்டிருக்கிறாள் என் நெஞ்சின் படபடப்பு அதிகமாகி விட்டது அவள் நடந்துதான் வருகிறாள் என்று நான் நினைக்க முடியவில்லை ஒரு தேர் அசைந்து என் முன்னே வந்து நிற்பது போல் இருக்கிறது ... கண்கொள்ளாக்காட்சி அருகிலே வந்து விட்டாள் என்னை பார்க்கிறாள் ..... உடலிற்குள் மின்சாரம் பாய்கிறது... ஏண்டி கலா இவன் யாருன்னு உனக்கு தெரியலையா தெரியலையே அக்கா என்று குழம்பிய வாறு நிற்கிறாள் அடியே நம்ம பவுனம்பாள் மகன் முத்து தான்டி என்றதும் என் கண்களை உற்று தீவிரமாய் நோக்குகிறாள் ஒரு நிமிடம் உயிர் சொர்க்கம் சென்று மீண்டும் பூமிக்கு வருகிறது டேய் முத்து உனக்கு யாருன்னு தெரியலையா உங்கம்மா எங்கடா உன்னை வளத்தா 24 மணி நேரமும் உன்னை கையில வச்சிகிட்டு இன்னொரு ஆத்தாவா உன்னை வளர்த்ததே இவதான் உங்க அம்மா உடம்பு சரி இல்லாம ஒரு வாரம் படுத்தப்ப நீ பேண்ட மூத்திரம் பீயை எல்லாம் அள்ளி தொடச்சிப் போட்டுட்டு அவ்வளவையும் சகிச்சிக்கிட்டு உன்ன தங்கமா பார்த்து கிட்டது இவதான இவ எப்போதுமே உன்ன தங்க குஞ்சு தங்க குஞ்சு அப்படின்னு தான் கூப்பிடுவா ஒரு புளிய மரத்தில் அடித்த ஆணியை விட இப்போது என் நெஞ்சில் அறையப்பட்ட ஆணி குருதியை பிளந்து கண்களில் நீராய் கசிய தொடங்கியது எதையும் யோசிக்காமல் சட்டென கலாவின் கால்களில் இல்லை இல்லை கலா அம்மாவின் கால்களில் விழுந்து விட்டேன் கலா அம்மா என் இரு தோள் பட்டைகளையும் பிடித்து உயர்த்தி " பாருங்க பெரியவங்கள பார்த்ததும் எப்படி மரியாதை கொடுக்குறான்நம்ம வளர்ப்பு வீண் போகல அத்தை ... தாமரை பூ மாதிரி இருந்த அவள் கண்கள் சற்று கலங்கிவிட்டது அதன் பிறகு ஏதேதோ பேசுகிறார்கள் நானும் அடக்கமாய் பதில்களை கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பி விட்டேன் ... இப்போது நான் என்ன கற்றுக் கொண்டேன் என்று தெரியவில்லை என் வயது பதினெட்டு அறிவுக்கு அல்ல என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன் ராம் பெரியசாமி 9443090036

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in