Yasmine begam
சிறுகதை வரிசை எண்
# 152
புறா வீடு.
எ. யாஸ்மின் பேகம்
டெல்லியின் வாஜிராபாத்தில் உள்ள அழகான பத்துமாடி கட்டிடம். நெடுக்க வளர்ந்த மரங்களில் பூத்துக் குலுங்கியது மலர்கள். அதில் சிலவற்றை உதிர்ந்தும் காய்ந்தும் கிடந்தன. லிஃப்டில் எட்டாவது மாடிக்கு சென்றேன். முதன் முதலில் மாநிலம் விட்டு மாநிலம். சில மாதங்களாக வீட்டிலேயே வேலை சம்பளமும் குறைவு. தற்போது தன்னார்வ தொண்டு சார்ந்த நிறுவனம். நல்ல சம்பளம் பத்து நாள் பயிற்ச்சி தங்கும் இடம் இலவசம். இப்படி அமைந்ததற்க்கு தனக்கு அதிஷ்டம் என்றே எண்ணினான் தினேஷ். இந்த வேலையை எப்படியாவது பிடித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.
“சார்..... இது தாங்க நீங்க தங்கும் பிளாட்” என்றான் செக்யூரிட்டி சம்பத்.
வாஜிராபத்துக்கு வரவே மாலையாகிபோனது. இந்த ஃபிளாட் வந்தடைய இரவாகி விட்டது. வரும் வழியில் பிரட் வாங்கிக் கொண்டு வந்ததால் இரவு பசியாறி தூங்கி போனான் தினேஷ்.
விடியற்காலை வேலை பனி காற்று வீசியது.
வீட்டில் உள்ளே ஏதோ உடையும் சத்தம் கேட்கவே ஆழ்ந்த தூக்கத்திலிருந்த தினேஷ் விசுக்கென்று விழித்து பார்த்தான்.
என்னவா இருக்கும்....ஒருவேளை பூனையா இருக்குமோ....என்று எண்ணிக்கொண்டே ஹாலில் வந்து பார்த்த தினேஷ்க்கு அதிர்ச்சி. ஹாலில் போடப்பட்டிருந்த நைட் பல்ப் உடைந்து சிதறியிருந்தது. பிரட் துண்டுகள் கீழே விழுந்து பாதி தின்றும் துண்டுகளாக இருந்தது.
என்ன இது என்று எண்ணுவதற்க்குள் வீட்டினுள் பட பட சிறகை அடித்தப்படியே பறந்தது ஒரு ஜோடி புறா. தன் வீட்டில் யாரோ குடித்தனம் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தோடு வீட்டை சுற்றி சுற்றி வலம் வந்தன.
புறாவைக் கண்டவுடன் முகம் சுளித்தான், எரிச்சலைடைந்தான். உடனே செக்யூரிட்டிக்கு போன் செய்தான்.
“இதுவாசார்..... இரண்டு மாசமா வீடு பூட்டியிருந்தது. இங்கே நிறையா புறாக்கள் இருக்கு சார்..... அதுவா வரும் போகும்.... ஒண்ணும் இல்லே சார் பாவம் சார்” என்றார் சம்பத்.
“செக்யூரிட்டி எனக்கு இந்த புறா, பூனை, கிளி இதெல்லாம் கண்டா அறவே ஆகாது. இதெல்லாம் வீட்டுக்குள் வாராமே பார்த்துக்கோ. முதல்லே இதை சுத்தம் பண்ணுங்க” என்றான் தினேஷ் கடுப்பாக.
எங்குப் பார்த்தாலும் புறாக்கள் கூட்டங் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தன. அந்த அபார்ட்மெண்டு நடை செல்லும் பாதையில் புறாக்கள் தத்தி தத்தி நடந்தன. கழுத்தைச் சொடுக்கி ஏனது அளக்கிறது மணிகண்களை உருட்டி உருட்டி பார்த்து இரையை தேடி இடதும் வலதுமாய் நடந்து அதன் அலகுகளில் அழகிய பனித்துளிகள் வானத்தை நோக்கி பறக்க முயன்ற போது பனித்துளிகள் தெறித்து சிதறியது.
சிறுவயதில் தினேஷ் மனதில் விதைத்த விதை வேரூன்றி விஷ விருட்சமாக மாறிபோயிருந்தது. இதுவே புறாவின் மேல் வெறுப்பை உண்டாக்கியது.
தினேஷ் பத்து வயதிருக்கும் ஒரு நாள் அவன் அப்பாவின் அன்பு பரிசாக ஒரு ஜோடி புறா வாங்கி வந்தார். புறாக்கள் பற்றி கதை சொல்லியே அதன் மேல் ஆர்வம் ஏற்ப்பட்டது. ஆனாலும் வீட்டுக்கு வந்த அவனின் அத்தை “தினேஷ்....புறா வாங்கியிருக்கியா புறா வளர்க்க கூடாது வளர்த்தா வீட்டுக்கு ஆகாதுப்பா. புறா அணத்தினா வீடே அணத்திட்டு போயிடும். வீட்டில் இருக்கறவங்க நோயினால் அணத்தி கொண்டு இறந்து போவாங்கனு சொல்லுவாங்க. அதுமட்டுமில்லை புறா வீட்டுக்கு அகாதுப்பா” என்றாள் அத்தை அம்புஜம்.
"ஏன்க்கா...சின்ன பையன் மனசுல மூட நம்பிக்கையை வளர்தறீங்க”
"இது மூட நம்பிக்கை இல்லை இதெல்லாம் பெரியவா சொன்னது" என்று தன் தம்பி வாயை அடைத்தாள் அம்புஜம்.
நாட்கள் செல்ல செல்ல புறாக்கள் இனப்பெருக்கம் செய்யவே மொட்டை மாடியில் புறாக்கள் அலங்கரித்து சுதந்திரமாய் பறந்து திரிந்தன. எங்கு பறந்தாலும் திரும்ப தினேஷிடம் வந்து சேர்ந்து விடும். தினேஷ்க்கு இது ஒரு பொழுது போக்காவே அமைந்தது.
ஒரு நாள் இரவில் புறாக்கள் ஒலி எழுப்பும் சத்தம் கேட்கவே தூங்கிக் கொண்டிருந்த தினேஷ் தன் தந்தையிடம் "அப்பா....புறா ஏன் இப்படி அணத்துது இப்படி அணத்தினால் வீட்டுக்கு அக்காதுணு அத்தை சொன்னாங்களே உண்மையாப்பா".
"அதெல்லாம் இல்லை தினேஷ் புறா அழகான பறவைகள். ஆண் புறா மட்டுமே ஒலி எழுப்பும் அதன் ஜோடியை அழைப்பதற்க்கு. இந்த ஒலி ஓலமிட்டு அழுவதை போல் இருக்கும். அதனால் தான் புறாக்கள் வீட்டில் வளர்த்தாள் தரித்திரம்னு சொன்னாங்க அத்தை. ஆனா புறவை போல ஒரு பிடிவாதமான பறவையை காணமுடியாது, சமானியத்தில் விரட்டவும் முடியாது."
இதெல்லாம் நம்பாதவனாய் ஒரு நாள் ஏதோச்சையாக தினேஷின் தந்தை நோய்வாய்ப் பட்டு இறந்து போகவே அங்கு வந்த அத்தை "அப்பவே சொன்னே கேட்டியா.... புறாவை வேண்டாம்னு இப்போ உன் அப்பாவின் உயிரையே பறிச்சுடுச்சு" என்று ஒப்பாரி வைத்து அழுதாள் அத்தை அம்புஜம்.
இந்த வார்த்தை பிஞ்சு மனதில் பதிந்து வடுவாய் மாறிபோனது. தந்தையின் பிரிவு, தனிமை அம்மாவின் தூக்கம் எல்லாம் ஒன்று சேர்ந்து காலப்போக்கில் அதுவே வெறுப்பாய் ஆனது தினேஷ்க்கு.
இன்று... புறாக்களை பார்த்த தினேஷ்க்கு ஒருபுறம் வெறுப்பாக இருந்தாலும் மறுபுறம் தன் அம்மாவின் நியாபகங்கள் வந்தது.
அம்மா.... உனக்கு எத்தனை முறை சொல்றது வீட்டுல பூனை, கிளி, புறா ஒண்ணுண்ணா வந்துட்டே இருக்கு. இதையெல்லாம் தூக்கி வெளியே போடு" என்றான் இரக்கமில்லாமல் தினேஷ்.
"இல்லைடா நானாட இதுகளை கூட்டிட்டு வந்தேன் அதுவா வந்துச்சு பாவம்டா. கிளி குஞ்சாய் மரத்துல இருந்து விழுந்து கிடந்துச்சு எடுத்து வந்தேன். பூனை ஐந்து நாள் பிறந்த குட்டியாய் மழையில் நினைந்து பசியில் கத்திக்கிட்டு இருந்துச்சு கொஞ்சம் பால் வெச்சேன் அத்தோடு போகல நான் என்ன செய்ய."
"ஆமா கிளியும் பூனையும் வளர கூத்து இந்த வீட்டுல தான் பார்க்கிறேன். ஒரு நாள் இல்லாட ஒருநாள் உன் பூனை கிளியை நாஷ்டாவா சாப்பிட போகுது பாரு"
"அட போடா பைத்தியக்கார என் மீனு அதுகிட்டே விளையாடுறதை பார்க்களையா"
"போதும் உன் பிராணி புராணம் அடுத்த முறை நான் வீட்டுக்கு வரும் போது இதுக்கெல்லாம் இருக்கக் கூடாது சொல்லிட்டேன் பார்த்துக்கக்கோ"
கணவனை இழந்த தினேஷின் தாய் மரகததிற்க்கு பூனையும் கிளியும் தான் தன் தனிமைக்கு இனிமையாக இருந்தது. அந்த உணர்வை கூட புரிந்துக் கொள்ளாதவனாய் இருந்தான் தினேஷ்.
அம்மாவின் புலம்பல்களை தாங்கமுடியாதவனாய் வீட்டை மாற்றி ஒரு ஃபிளாடில் குடிப்பெயர்ந்தான் இரண்டாவது மாடி என்பதால் அடிக்கடி அம்மாவினால் இறங்கி ஏற முடியாது என்றும் ரோட்டில் பார்க்கும் பிராணிகள் பறவைகளை எடுத்துவர மாட்டார் என்று எண்ணினான் தினேஷ்.
சில நாட்களாக தனிமையில் இருந்த மரகத்திற்க்கு எதிர் வீட்டு ஜன்னல்களில் நின்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த புறாவை பார்க்க நேர்ந்தது. புறாக்களின் சத்தமும் ஒருவகை ஒலி எழுப்பி தன் ஜோடி புறவைன் அருகில் சென்று உரசியதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஜன்னலில் ஏசி வழியாக விழும் நீரை பருக முயச்சித்தது. அதை பார்த்த மரகதம் ஒரு சின்ன அகன்ற குவலையில் ஜன்னல் திட்டில் தண்ணீரை வைத்தாள். புறா அந்த தண்ணீரை கண்டதும் தலையை ஆட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தண்ணீரை உறுஞ்சி குடித்ததை பார்த்து புன்னகையித்தால். அடுக்களை மேலே இருந்த புகை செல்லும் பொந்துகளில் நின்றுக் கொண்டு சத்தம் எழுப்பியது. அடிக்கடி உள்ளே வந்தும் போயும் இருந்தது. மரகதாதிற்க்கு அதை விரட்ட மனமில்லை.
தன் மகன் தினேஷ் வருகையை கண்டவுடன் ஜன்னலில் திரைசீலையை தொங்க விட்டு விடுவாள். அறிவு கூர்ந்த புறாக்களுக்கு இது புரியவே. திரைசீலையை தொங்க விட்டால் உள்ளே வராமல் ஜன்னல் அருகிலேயே நின்றுக் கொண்டிருக்கும். தினேஷ் இல்லாத போது திரைசீலையை எடுத்து விட்டால் உள்ளே வந்து தீனியை தின்று விட்டு அங்குமிங்கும் பறந்துக் கொண்டிருக்கும்.
வீட்டில் புறா நடமாட்டம் தெரியவே கடுமையாக நடந்துக் கொண்டான் தினேஷ்.
சிறிது காலங்களில் மரகதம் இறந்து போகவே இதற்க்கும் இந்த புறா தான் காரணம் என்று எண்ணி வெறுத்து போனான். மாநிலம் விட்டு மாநிலம் வேலைக்கு சேர்ந்தான்.
புறக்களை பார்த்ததும் அம்மாவின் நியாபகம் வந்தன. இருந்தபோதிலும் ஏதாவது நல்லது நடந்தால் மட்டுமே அவன் குணம் மாறாலாம்.
தினமும் புறாக்களின் நடமாட்டம் பெரும் தொல்லையாக இருந்தது.
செக்யூரிட்டி சம்பாத்க்கு கால் செய்தான்.
"சார்..... கூப்பிடிங்களா....."
"ஆமா..... இந்த புறா கிச்சன் பரண் மேல் போய் உட்கார்ந்திருக்கு அதை தூக்கி வெளியே போடுங்க. "
சார்......அது முட்டை பொறிச்சிருக்கு அடைக் காத்துட்டு இருக்கு. அதை எப்படி சார் வெளியே போட என்று இழுத்தான் சம்பத்.
"நான் சொன்னதை மட்டும் செய்யுங்க இல்லைனா உங்க வீட்டுல போய் புறாவை வளர்த்துக்குங்க"
உடனே கிச்சன் பரணில் இருந்த புறாவின் முட்டையை மெல்ல அதன் கூட்டோடு எடுத்து வெளியே உள்ள ஏசி பெட்டியில் மேல் வைத்துவிட்டு சென்றார் செக்யூரிட்டி சம்பத்.
அன்று இரவு முழுதும் ஜோடி புறாக்கள் ஒலி எழுப்பி அங்குமிங்கும் தன் குஞ்சுகளை தேடிக் கொண்டு பறந்தது.
மறுநாள்.
தினேஷ் தன் பயிற்ச்சிக்காக கிளம்பினான். நடை பாதையில் ஏசி பெட்டியிலிருந்து முட்டைகள் உருண்டு விழுந்து நொறுங்கின. ஒரு முட்டையிலிருந்த கரு அரைகுறையாக உள்ளே உருவான புறா குஞ்சு இரத்தமாக சிதறிக் கிடந்தது. பார்ப்பவர்கள் மனது பதைபதைத்தது. அதை பார்த்த செக்யூரிட்டி ஓடி வந்து.
" பாவம்....இன்னும் இரண்டு நாள் பொறுத்திருந்தா புறா குஞ்சு பொரித்திருக்கும். நானும் அவசரப் பட்டு பத்திரமா இருக்கும்னு தானே ஏசி பெட்டியில் வைத்தேன். இப்படி ஆயிடுச்சே....ஏன் இப்படி இரக்கமில்லாமல் இருக்கிறாரோ" என்று மனதுக்குள் பொருமிக் கொண்டான். இதை கண்டும் கணமாலும் போனான் தினேஷ்.
தினேஷ் மனதில் ஒரு வருத்தம் தோன்றியது. தன்னால் தானோ இதன் முட்டைகள் உடைந்து போனது என்று. அதனால் தான் இந்த புறா போகாமல் சத்தமிடுகிறது. எப்போது விடும் ஒலி இல்லை. இப்போது இந்த புறா அணத்தும் சத்தத்தில் வித்தியாசம் தெரிந்தது. பின்பு தன் வேலையின் கடைசி நாட்கள் கனமழை பெய்ந்துக் கொண்டிருந்தது. இன்று கடைசி நாள் பயிற்ச்சி தொண்டு நிறுவனத்தை பற்றி விவரங்கள், சர்வே, ஃப்ராஜக்ட் ஓர்க் முடித்து தரவேண்டும். அதை கச்சிதமாய் முடித்து விடிய விடிய அதன் விவரங்களை தன் மடிக்கணினியில் ஏற்றி செய்து முடித்தான்.
விடிய விடிய பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர் நிரம்பி ஓடிக் கொண்டிருந்தது. மரங்களில் மழை நீர் துளிகள் விழுந்துக் கொண்டிருந்தது. புறாக்கள் கூட்டங்கூட்டமாக தன் அலகை கொண்டு தண்ணீரை பருக்கிக் கொண்டு குதூக்குலம்மாய் மழை நீரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. இதை கவனித்து தன்னை அறியாமல் ரசித்து கொண்டவாறே கிளம்பி தன் புது இரண்டு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தான் தினேஷ். புது வண்டி புது நிறுவனம் என்பதாலே கூட இருக்கலாம்.
முதன்முதலில் புறாவை பார்த்து புன்முறுவலிட்டான். தன் வாகனத்தை கிளப்பி சிறிது தூரம் சென்றான் சட்டென்று அந்த புறா அவனின் தோல் பட்டையின் மேல் உட்கார்ந்தது. புறா உட்காரவும் இவன் அதிர்ச்சியில் பைக்கை சடன் பிரேக் போடவும் அருகில் இருந்த ஒரு மரக்கிளை முறிந்து விழுகவும் சரியாக இருந்தது.
செக்யூரிட்டி ஓடி வந்து "சார்.... உங்களுக்கு ஒண்ணும் அகலயே..... நல்ல வேளை சார் ஒரு அடி முன்னே போயிருந்தீங்கனா மரக்கிளை உங்க தலையில் விழுந்திருக்கும்.
ஏதோ யோசனையில் இருந்தவன் தன் சட்டையில் புறாவின் சேற்று கால்களின் அச்சு படித்திருந்ததை பார்த்தும் கோபம் கொள்ளாமல் "என்ன இது கிளம்பும் போது இப்படியொரு நிகழ்வு. அதுவும் புறா தன்னை காப்பாற்றியது நினைத்து அவன் மனதில் ஒரு உறுத்தல் ஏற்ப்பட்டது. குழம்பி நின்றான்.
அலுவலகம்.
வாங்க மிஸ்டர் தினேஷ் உங்க ஃப்ராஜக்ட் ஓர்க் ஃபெர்பெக்டா இருக்கு. நீங்க புது இடத்துக்கு போக போறீங்க. என்று சொல்லிவிட்டு அழைத்து செல்லப் பட்டார் தினேஷ்.
வெகு நேரம் பயணத்திற்க்கு பின்பு பிரமாண்டமான இயற்க்கை சூழலில் அமைந்தது அந்த நிறுவனம். உள்ளே நுழைந்தான் தினேஷ். அவன் மனம் மகிழ்ந்தது.
வெட்ட வெளியில் பூங்காக்கள் நடுவே அமைந்த பறவைகள் காப்பாகம்தான் அது.
மிஸ்டர் தினேஷ் இனி இங்கே தான் உங்களுக்கு வேலை. இங்கேயிருக்கும் அனைத்து புறாக்களும் ஏதோ ஒரு ஆபத்துகளில் மீண்டு காப்பாற்ற பட்டவை சில பறவைகள் மாஞ்சா நூல்களால் பறவையின் இறகு தூண்டிக்கப்படும் போது தசைகள், தசை நரம்புகள் மற்றும் தோல் பாதிக்கப்பட்டவை. இவைகளையெல்லாம் பராமரித்து பாதுகாப்பது உங்கள் வேலை.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தான். குழப்பத்தில் இருந்த தினேஷ் மனதில் ஏதோ தோன்றியவனாய் அன்று இரவு கனமழை என்றுகூட பாராமல் அபார்ட்மெண்டுக்கு விரைந்தான் ஜன்னல் கதவை எல்லாம் திறந்து விட்டான். இரவு முழுதும் இடியுடன் விடாது பெய்ந்து ஓய்ந்தது மழை. அசதியில் தூங்கி போனான். காலையில் புறாக்களுக்காக ஒரு பிரட் பாக்கெட் கையில் வைத்துக் காத்துக் கொண்டிருந்தான். அன்று வெறுமையாக இருந்தது அவனுக்கு.
அன்று நாளிதழில் மற்றும் டிவியில் டெல்லி வாஜிதாபத்தில் பெய்த அடை மழைக் காரணமாக மின்னல்கள் தாக்கி அங்குள்ள நூற்றுக் கணக்கான புறாக்கள் இறந்து போயின என்று பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்