J.ajanthini
சிறுகதை வரிசை எண்
# 151
தலைப்பு: நம்பிக்கை விதை
ஜமுனா, தூர்கா ஆகிய இருவரும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அனைத்து செயல்களிலும் ஒன்றாக ஈடுபட்டு அந்தச் செயலில் வெற்றியைக் காண்பவர்கள்.
இவர்கள் பள்ளி படிப்பை முடித்து பட்டப்படிப்பு சேரும்போது ஜமுனாவிற்கு ஒரு புது அன்டை மாநிலத்து தோழி கிடைத்தால். அவளது உடை, பேச்சு, பழக்கவழக்கம் அனைத்தும் சற்று மறுதலகா இருந்தது அது ஜமுனாவின் கவனத்தை ஈர்த்து அவளிடம் நட்பு கொள்கிறாள் ஜமுனா.
ஜமுனா தினமும் அவள் புது தோழியுடன் திரைபடம் பார்ப்பது, பல ஆடை, ஆபரணங்கள் வாங்குவது மேலும் அவளைப்போன்று ஜமுனாவும் முடியை வெட்டிக்கொள்வது, நவீன ஆடைகள் அணிந்து வித்தியாசமாக தோற்றமளித்தால் ஜமுனா.
ஒரு நாள் அவளது புது தோழியின் பிறந்தநாள் வீட்டிற்கு சென்ற போது அங்கு புது தோழியின் தோழிகள் பல போதை மாத்திரைகள், மது ஆகியவற்றிற்கு அடிமையாகி ஜமுனாவையும் மது அருந்த சொல்லி வற்புறுத்துகிறார்கள். முதலில் பயந்த ஜமுனா அவர்களை பார்த்து நாமும் இதனை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று உபயோகிக்கிறாள்.அது ஒருநாள் பழக்கம் தொடர் பழக்கமாக மாறி அபயாகட்டத்திற்கு வந்தது.
ஜமுனாவின் நிலைமையை அறிந்த துர்கா அவளிடம் கண்ணிருடன் கதருகிறாள் நமது தோழி தீய வழியில் சென்று விட்டால் என்று துர்காவிற்கு தாங்க முடியாத துக்கம். துர்காவை பார்த்ததும் ஜமுனாவிற்கு பயம் வந்து, அவமானத்தில் தலைகுனிகிறாள். நமது சிறுவயது நட்பு முறிந்து விடுமே என்று. மறுபக்கம் அவள் நம்பிக்கையுடன் இருக்கிறாள்.என்னை இந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பால் என்று. அதேபோல் துர்காவிற்கும் ஒரு நம்பிக்கை ஜமுனா இதில் இருந்து விடுபடுவால் என்று. பின்பு துர்கா பல அறிவுறைகளை கூறி மருத்துவரிடம் செல்வோம் வா என கூறுகிறாள். தூர்காவின் வார்த்தையை கேட்டு மனம் மாறுகிறாள். துர்கா ஜமுனாவிற்கும் அவளது ேதாழிகளுக்கும் மருத்துவரை அனுகி பல மனகட்டுப்பாட்டு வைத்தியத்தை பின்பற்றி ஜமுனாவையும் அவளது தோழியையும் போதை பழக்கத்தில் இருந்து விடுவித்தால்.
கருத்து:
உண்மையான உறவு என்றும் நிலைக்கும். நிகழ்காலத்தில் சமுகத்தில் இதுபோன்று தீமையான சோர்க்கைகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் பரபட்சம் இன்றி அனைத்து மாணவர்களிடமும் பரவி பலரது வாழ்க்கையை சீரழிக்கிறது. அனைவரின் வாழ்விலும் துர்கா போன்ற நல்ல உறவு இருக்கும் அந்த உறவை கைவிடாமல் நல்லோர் வழியில் நடந்து தீயோரையும் நல்லோர் ஆக்குவோம்.
ஜீ.அஜந்தினி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்