கிருஷ் அபி
சிறுகதை வரிசை எண்
# 150
மனதில் உறுதி
**********************
திருமணம் முடித்து
பத்து வருடங்கள் நிறை அடைந்து விட்டது. அவளும் கணவனே கண்கண்ட தெய்வமாக போற்றித்தான் பண்பாடு கலாச்சாரம் காத்து வாழ்கிறாள்
மதுரா வீட்டிற்கு ஐந்தாவது பெண்பிள்ளை செல்லப் பிள்ளை அவள் தந்தையார் அவளை அடக்கத்திலும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்திருந்தார். தன்னம்பிக்கை என்னும் வரத்தினை அவளுக்கு நிறைய வரமாக வழங்கி இருந்தார்.
அவளின் திறமையால் ஊரில் மகளிர் அமைப்பின் தலைவியாக இருந்தாள். அவளுக்கு மிகுந்த மரியாதையும் இருந்தது. மற்றும் அனேகமான அமைப்புகளில் நிர்வாகியாகவும் பணியாற்றினாள்.
மதுராவின் கணவன் அவனும் மகேஸ் அவளுக்கககு ஏற்றாற் போல எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாதவனாகத் இருந்தான். திருமணம் ஆனதில் இருந்து இருவரும் ஒற்றுமையில் ஒன்றி இன்பமாக வாழ்ந்து வந்தனர். எந்தக் குறைகளும் இன்றி மகேஷ்சும் மதுராவை நன்றாகவே வைத்திருந்தான்.
கடலுக்கு போய் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வரும் அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியாகவே அன்றாடம் போய்க் கொண்டிருந்தது. ஏதோ கட்டு மரத்தில் வரும் வருவாயை வைத்து அதன்படி வீடு வாசல் நிலபுலனோடு நிம்மதியாக கடந்தது வாழ்க்கை.
மதுராவும் கணவனுக்குத் துணையாக அவனுக்கு நிகராக ஒத்தாசை செய்து உடன் இருப்பாள்.
ஒருநாள் வெகு நேரம் ஆகியும் மகேஷ் வீடு வரவில்லை. மதுராவும் அவனை எதிர் பார்த்து வாசலில் காத்துக் கிடந்தாள். மகேஷ் தள்ளாடியபடி வாசலில் வந்து நின்றான். ஏ... மதுரா.....
என அவன் நா குளறியது. மதுரா திகைத்து நின்றாள். என்னங்க... என்னாச்சு...
என்ற வாறு அவனருகில் சென்றாள் . குப்பென மதுவின் நாற்றம் அவனில் இருந்து வீசியது அவளுக்கு குமட்டியது. வாந்தி வருவது போலாயிற்று....
கணவன் குடித்திருக்கிறான் என்று ஏதும் பேசாது அணைத்த படி படுக்கையறைக்கு அழைத்துச் சென்று உறங்க வைத்தாள்.
மறுநாள் காலை கணவன் எழுந்ததும் என்ன நடந்தது இப்படி குடித்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டாள்.
சாரி டா..... நண்பனுக்குப் பிறந்த நாள் பார்ட்டி அதுதான் "கொஞ்சமாக் குடினு" கட்டாயப் படுத்திட்டான்.
நானும் வேண்டாம் என்று கூறினேன் எவ்வளவு மறுத்துப் பார்த்தும் கேட்காம குடுத்துட்டான். இனி இப்படி நடக்காது மா என தாழ்மையாகக் கூறினான் மகேஷ்.
ம் ...சரி.. சரி...
வாங்க சாப்பிடலாம் என அழைத்தாள். அன்பின் இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.
இப்படியாக நாட்கள் ஓடின.
மகேஷ்சின் நடவடிக்கையில் மாற்றம் தென்படத் தொடங்கியது. மதுராவும் சமாளித்து பொறுத்துப் போனாள்.
தினமும் குடித்து விட்டே வீட்டிற்கு வரத் தொடங்கி விட்டான். அது மட்டும் அல்லாது புகைப் பிடிக்கும் பழக்கமும் உருவாகியது.
"ஏன் இப்படி யெல்லாம் நடக்கிறீங்க பா" என்று கேட்டாள் மதுரா.
தான் கடலில் குளிரில் கஷ்டப் படுவதாகவும் உடம்பு வலி அலுப்பிற்காகவும் குடிப்பதாக அவன் கூறினான். இப்படி ஏதாவது சாக்குப் போக்கு சொல்லுவான்.
இப்படியாக மாதங்கள் கடந்திட மகேஷ் பணம் கூட வீட்டிற்கு சரியாகக் கொடுக்க வில்லை. நான்கு பிள்ளைகள் படிப்புச் செலவுக்கே கஷ்டமாக இருந்தது.
கடலுக்குச் சென்று கணவன் வீடு திரும்பியதும் பணம் தருமாறு பிள்ளைகளுக்குப் படிப்பு சாப்பாடு போன்றவற்றிற்கு பணம் தேவையெனவும் கேட்டுப் பார்த்தாள் . அவன் காதில் வாங்கவில்லை அவனும் பணம் கொடுக்காது மாறாக தேவையற்ற வார்த்தைகளைப் பிரயோகித்துச் சண்டை போட்டான். மதுராவை அடித்து துன்புறுத்தினான். தினமும் குடித்து விட்டு வந்து அடி உதை இப்படியாக எண்ணற்ற சுமையோடு மனம் ஒடிந்து சாகவும் துணிந்தாள் . நாம் இறந்தாலும் கணவன் பொருட் படுத்தாது வேறு திருமணம் முடித்து தன் பிள்ளைகள் துன்பத்தை அனுபவித்து விடுவார்களோ எனப் பயந்தாள். இருந்தும் அவளின் குழந்தைகள் கண் முன் தெரிந்திட பிள்ளைகளுக்காக என்ன எதிர்ப்பு வந்தாலும் வாழத்தான் வேண்டும் என்ற உறுதி எடுத்தாள்.
அவள் மகளிர் அமைப்பில் இருந்தும் தன் கணவன் குடிகாரனான காரணத்தாலும் அவளுக்கு அந்தத் தகுதி இல்லை எனவும் மன உறுத்தலில் தானே விலகி விட்டாள்.
ஒருநாள் வழமை போல மகேஷ் குடித்து விட்டு வந்தான். மதுராவைத் தாறு மாறாகத் திட்டி அடித்தான். அவளுக்கு உடலும் வலித்தது மனதும் வலித்தது. யாரிடமும் முறையிட முடியாது தனக்குத் தானே கதறி அழுதாள் மனதினைத் தேற்றினாள்.
மறுநாளும் இதே நிலை தடுமாறி வந்தவன் மதுராவின் கழுத்தை நெறித்தான். என்ன செய்வதென அறியாது அவளும் மூச்சுத் திணறினாள். மனசுக்குள் வேண்டாத இறைவனை எல்லாம் வேண்டி " அம்மா " என கதறியபடி அவன் பிடியிலிருந்து விடுபட்டாள். அவனைத் தள்ளி விட்டு தட்டுத் தடுமாறி பக்கது வீட்டிற்கு ஓடினாள்..
கழுத்து நெறிபட்டதால் மதுராவுக்கு பேச்சு வரவில்லை. மயக்கமுற்றாள். உயிருக்குப் போராடிய நிலையில் பின் அவளின் உறவுகள் வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். கொஞ்ச நாட்களுக்குப் பின் உடல் நலமாகி வந்தாள்.மற்றப் பெண்களைப் போல் அல்லாமல் கணவனைத் தேடிப் போகவில்லை. பொறுமையும் ஓரளவுதான் பணிந்து வாழ்ந்ததும் பயந்து வாழ்ந்ததும் போதுமடா என மனதில் வைராக்கியத்தோடு கிளம்பினாள் .வீட்டிற்கு வராது வேறு இடத்தில் வீடு பார்த்து பிள்ளைகளையும் வைத்து தனக்காக வேலை ஒன்றைத் தேடிப்
பிள்ளைகளுக்காக வாழ்வது தான் முடிவாகக் கொண்டாள்.
உருப்படாத கணவனை உதறித் தள்ளினாள்.
தன்னாலும் வாழ முடியும்
தனித்திருந்து என்று சபதமாகக் கொண்டாள். பெண் என்றாள் கிள்ளுக் கீரையாய் எண்ணும் ஆண்களுக்கு பாடம் புகட்டிட ஆணுக்கு பெண்ணும் அடிமை இல்லை. பொறுப்பது ஓரளவு தான் பொங்கி யெழுந்தால் என்னவாகும் என்பதற்கு உதாரணப் பெண்ணானாள்.
இன்றும் முயற்சியோடு வாழ்கிறாள் முன்னேற்றம் காண மங்காத மனதோடு
ஆதவனாய் மின்னிட ஆளுமையோடு போராடி வாழ்க்கைப் போராட்டத்தில் உள்ளத்தின் உறுதியோடு எதிர் நீச்சல் போடுகிறாள்.
நாளை எதிர்காலத்தை வளமாய் மாற்றி நம்பிக்கையோடு வெல்லுவாள்.
முற்றும்
கவிஞர் கிருஷ் அபி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்