logo

படைப்பு இலக்கிய விருது - 2020


படைப்பு இலக்கிய விருது - 2020
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2020 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம்.

தயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்.

இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்கும்.

வாருங்கள் அதை பற்றி இப்போது பார்ப்போம்.

விருதுகளின் பட்டியல்:

~~~~~~~~~~~~~~~~~
1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).

2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)

3 .சிறந்த நாவல்/குறு நாவல்

4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல் தொடர்.

5. சிறந்த மொழிப்பெயர்ப்பு (மற்ற மொழிகளிலிருந்து தமிழில் வந்தவை மட்டும்)

இந்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு மிகப்பெரிய கவிஞர்/எழுத்தாளர் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும். அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

இம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். காரணம் இந்த தேர்வுநிலை அவ்வளவு தரமானதாகவும் பாரபட்சமின்றியும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைக்கிறோம் மேலும் அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தலைமையில் ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.



விதிமுறைகள்:

~~~~~~~~~~~
1. நாம் அறிவித்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் மற்றும் சிறந்த நூலாசிரியர் என தேர்வு செய்து) வழங்கப்படும்.

3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும், விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

4. 2020 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2020 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.

5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.

6. எழுத்தாளர் எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை, கதை, நாவல், கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. நூல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கூடாது அதாவது ஜெராக்ஸ் செய்தொ அல்லது மின்நூலாகவோ அல்லது PDF / WORD டாக்குமென்ட்டாகவோ அனுப்புதல் கூடாது. மேலும் நூல்களை கண்டிப்பாக அச்சு வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட உங்கள் நூல்களை கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்டில் அனுப்ப வேண்டும்.

8. கொரியர் அனுப்பிட்டு நூலின் தகவலையும், கொரியர் தகவலையும் (கொரியர் அனுப்ப பட்ட நாள், கொரியர் பெயர், கொரியர்/டாக்கெட் நம்பர்), எழுத்தாளரின் மின்னஞ்சல்,  நூல்குறிப்பு, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு இணையதளத்தில் உள்ள (https://padaippu.com/contact-us) என்ற லிங்கை சொடுக்கி வரும் பக்கத்தின் வழியே தகவல் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருப்பின் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் விருதுக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலிலும் தலா  மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.

9. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பதால் இது தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.

10. அவர் அவர் சொந்த படைப்பான புத்தகத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் பரிந்துரைகள் கிடையாது.

11. புத்தகத்தில் உள்ள கதை, கவிதை, நாவல்கள், கட்டுரை யாவும் தமிழில் இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருப்பின் அதுவும் பிற மொழிகளிலிருந்து தமிழ் படுத்தியதாக இருத்தல் வேண்டும். புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.

12. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.

13. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் யாராவது முன்வந்து அனுப்பலாம்.

14. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேர்மையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.

15. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.

16. இன்றிலிருந்து தொடங்கி வரும் OCT  31 ஆம் தேதி வரை உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.

17. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் வந்து சேர்ந்ததும் இங்கே உடனுக்குடன் வந்து சேர்ந்த நூல்களின் பட்டியல் தயார்செய்து உடனுக்குடன் வெளியிடப்படும்.

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:

-------------------------------------

படைப்பு பிரைவேட் லிமிட்டட்,

#12/6, மூன்றாம் தளம், 
வெல்வோர்த் ப்ராபர்ட்டடீஸ், 
7 வது தெரு , டாக்டர் சுப்பாராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.

Ph: +91 7338897788 / 7338847788


Address in English format:

--------------------------
Padaippu Private Limited,
No. 12/6, 3rd floor, 
wellworth properties, 
7th street, Dr. Subarayan Nagar, 
Kodambakkam, Chennai. 600024
Ph: +91 7338897788 / 7338847788

Email: admin@padaippu.com

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31-OCT -2021

நூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை கண்டிப்பாக அனுப்பவேண்டும்.

முடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள் தோழர் தோழமைகளே...

பயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..

வாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவோம்.

வாழ்த்துக்கள்,

வளர்வோம் வளர்ப்போம்.

படைப்பு குழுமம்.

#படைப்பின்இலக்கியவிருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.