Sakthirani
கவிதை வரிசை எண்
# 296
#தாய்மை
மகிழ்வின் உச்சத்தில்...
வாழ்க்கை சென்ற போதிலும்...
ஏதோ குறைகள் காலைச்சுற்றி
கிடக்க...சுற்றிய படர்களை
கையிலேந்தி பார்த்த போதே
பெண்மையில்...தாய்மை
அடக்கம் என்றோர் உணர்வில்
கை பிசைந்து வாழ்க்கை சலிப்பை
உண்டாக்கிய போதும்...
நம்பிக்கையின் உச்சத்தில்...
பல தெய்வங்கள் வணங்கி...
கருவிற்கோர் உயிராய்...
ஓர் உயிரைத்தாங்கி...தாய்மை
என்றோர் அந்தஸ்தில்
அடைந்த ஆனந்தம்...இருவிழியுள்
ஓர் துளியாய் கண்ணீரை நனைக்க...
முற்பிறவியின் பயனாய்...
முதல் குழந்தை பெற்றெடுத்தே...
சுற்றம் சூழ நல்வார்த்தை பேசி...
இனிதாய் வாழ்ந்த போதும்...
குழந்தையில்லை என்றோர்...
குரல் எங்கோ கேட்கும் போதே...
என் வயிற்றை தொட்டுப்பார்க்கிறேன்...என்
தாய்மையின்...தாய்மை உணர்வை
கையில் குழந்தையோடு...
தெ.சக்தி ராணி
சிவகாசி
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்