அபூ சுகந்தன்
சிறுகதை வரிசை எண்
# 141
கடைசி பக்கம்
பிறந்தநாள் பரிசாக தனது அப்பா கொடுத்த டைரியைப் படிக்க ஆரம்பித்தான் நாகஸ்.
(இதோ இப்படி ஆரம்பித்தது அதன் முதல் பக்கம்).
(அலைபேசியில் அழைப்பு வந்தது )
ஹலோ அப்பா.
எங்க இருக்கடா?
ஒரு சூசைடு கேஸ்க்கு போயிட்டு இருக்கேன்பா.
ரொம்ப பிசியா வேலை?
இல்லப்பா அதெல்லாம் ஒன்னும் இல்ல. எதாச்சும் முக்கியமான விஷயமாப்பா?
இல்லடா சும்மாதான் பண்ணேன்.
சரி சாப்டீங்களா? எங்க இருக்கீங்க?
சாப்டேன்டா.
நான் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பார்க்ல இங்க தெரிஞ்ச ஃபிரண்டு ஒருத்தர் கூட பார்க் பென்ச்சுல உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன்.
சரிங்கப்பா, ஓகே நான் அங்க போயிட்டு வந்து கால் பண்ணட்டுமாபா?
சரிடா உன்னோட வேலைய பாரு முடிச்சதும் பண்ணு, வேளைக்கு சாப்டு, உடம்ப பாத்துக்கோ.
ஓகேப்பா பாய்.
(இன்ஸ்பெக்டர் மாறனுடன் கான்ஸ்டபில் மணி)
யாரு சார் அப்பாவா?
ஆமா மணி. என்னமோ தெரியல ரெண்டு மாசமா எங்க அப்பாவுக்கு என்மேல பாசம் அதிகமாயிடுச்சு. நான் இந்த போலிஸ் வேலைக்கு வந்து ரெண்டு வருஷமாச்சி. அப்போ வீட்டவிட்டு வந்ததுதான். லீவுல ஒரு நாலு டைம் வீட்டுக்கு போயிருப்பேன். அங்க இங்கனு ட்ரான்ஸ்வர் மாறி இப்போ சென்னைக்கு வந்து ஒரு மாசமாச்சி. நான் ட்ரான்ஸ்வர் ஆகறதுக்கு முன்னாடி கொஞ்ச நாள்ல இருந்து அடிக்கடி கால் பண்றாரு, நல்லா இருக்கியான்னு கேக்குறாரு இங்க சென்னைக்கு டிரான்ஸ்வர் கிடச்சதுக்கு அப்புறமா எத்தனையோ டைம் கூப்டு பாத்துட்டேன் சென்னையில என்கூட வந்து இருந்திருங்கனு. வர மாட்றாரு. சொந்த மண்ணுனு வேலூர்லயே இருக்காரு. வேலூர் காட்பாடிதான் எங்க சொந்த ஊர் மணி. என்னமோ அவங்க பொறந்த இடத்த விட்டுவர அவ்ளோ கஷ்டமா இருக்கு அவங்களுக்குலாம். நிறைய டைம் கூப்பிட்டு பாத்துட்டு அதுக்கப்புறம் நானும் கூப்பிட்றத நிறுத்திட்டேன். அவருக்கு அதுதான் சந்தோஷம்னு நினைக்கிறேன். எங்க அப்பாவும் போலீஸ்ல இருந்து ரிடையர்டு ஆனவர்தான் மணி. இப்போ அறுவத்தி ஆறு வயசாச்சி. கால்வேற கொஞ்சம் ஊனம். வேலமேல அப்படி ஆச்சி அது சரியாகாம இப்போ தாங்கிதான் நடந்துட்டு இருக்காரு. கெத்தா இருப்பாரு. எப்பவுமே சஃபாரிலதான் இருப்பாரு. போய் பார்த்து ரொம்ப நாளாச்சு போய் பாக்கணும். இந்த ரெண்டு மாசமா காலையில ஆறு மணி ஆச்சுன்னா குட் மார்னிங் மெசேஜ் எல்லாம் வேற போடுறாரு. ரொம்ப மிஸ் பண்றாரு போல.
அப்பானா அப்படித்தான் சார்.
ஆமா மணி...சரி விடு மணி இத அப்புறம் பேசிக்கலாம். அந்த சூசைடு கேஸ் பத்தி விசாரிக்க சொன்னேனே சரியா விசாரிச்சீங்களா?
ஆமா சார் கன்ஃபார்ம் சூசைடுதான்.
எத்தனை மணிக்கு?
நைட்டு ஒரு பதினொன்னு பன்ணெண்டு இருக்கும்னு சொல்றாங்க சார்.
யார் ஃபஸ்ட் பாத்தா?
அவங்க அம்மாதான் சார். காலையில எழுந்திருக்கும் போது.
இன்னும் கல்யாணம் ஆகலையா?
இல்ல சார்?
பையன் தானே!
பொண்ணு சார்.
என்ன வயசு?
ஒன்பது சார்.
ஒன்பதா?
ஆமா சார்.
எதனால? எதனா தெரிஞ்சுதா?
இல்ல சார். வேற எதுவும் தெரியல.
அவ வீட்ல இருக்குறவங்க என்ன சொல்றாங்க?
சார், நேத்து எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்றாங்க. ஸ்கூலுக்கும் போய் விசாரிச்சிடேன் சார். அங்கயும் எந்த பிரச்சனையும் இல்ல நல்லாதான் இருந்ததா சொல்றாங்க சார்.
உங்களுக்கு எப்டி தெரியுது?
கன்ஃபார்ம் சூசைடுதான் சார்.
எப்படி இறந்து போய் இருக்கா?
கிச்சன்ல இருக்குற கத்தி எடுத்து கழுத்துல குத்திட்டு இருக்கா சார் கத்தக்கூட முடியாதளவு. அங்கயேதான் இறந்துபோய் கிடந்தா. ஒரு ஒன்பது வயசு பொண்ணுக்கு எப்படி இவ்வளவு பெரிய தைரியம் வத்திருக்கும்னுதான் தெரியல சார்.
என்ன கஷ்டம் வந்துற போது!
தெரியல சார்.
வீட்ல, சுத்தி இருக்குற இடத்துல பிரச்சனை அப்படின்ற மாதிரி ஏதாச்சும்.
விசாரிச்சு பார்த்துட்டேன். அவ வீட்டுக்கு பக்கத்துலதான் ஸ்கூல் இருக்கு. ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துடுவாளாம். டிராவல்லாம் கிடையாது. அந்த ஸ்கூலும் கேர்ள்ஸ் ஸ்கூல். வேறமாதிரி பிரச்சனை இருக்க வாய்பில்ல.
அவளோட அப்பா அம்மா?
அவளோட அப்பா அம்மா இரண்டு பேருமே வேலைக்கு போறவங்க. அதனால அந்த பொண்ணு சேப்டிக்காக ஒரு ஃபோன் வாங்கி கொடுத்து இருக்காங்க அந்த ஃபோன் அதிகமாக யூஸ் பண்ணி ஒருவேளை அது மூலமா கூட ஏதாச்சும் ட்ரை பண்ணி இருக்கலாம், இல்லனா மாட்டிட்டு இருக்கலாம் அப்படின்ற மாதிரிகூட அந்த ஃபோன்ல எதுவும் இல்ல சார். கால் ரெக்கார்டிங் எல்லாம் பாத்துட்டேன் கால் வந்த மாதிரியே இல்லை. ஹிஸ்ட்ரி எல்லாத்தையும் பாத்துட்டேன். ஆன்லைன்ல இருக்குற யூட்யூப் வீடியோஸ் அந்த மாதிரி பாத்துட்டு ஏதாச்சும் ட்ரை பண்ணிக்கிட்டாளா இல்லனா அது மூலமா சப்ரஸ் வெக்ஸ் ஆகி பீல் பண்ணி இறந்து போயிட்டாளானு தெரியல சார். பட் அந்த ஹிஸ்ட்ரிலயும் அந்தமாதிரி ஏதும் இல்ல சார்.
இந்த சோசியல் மீடியா 18 வயசுக்குள்ள பாக்கறத ஃபஸ்ட் பேன் பண்ணனும் மணி. சின்ன பொண்ணுங்க.
சார்!
சொல்லுங்க மணி.
ஸ்பாட்.
சரி வண்டிய இங்கயே நிறுத்துங்க. நடந்து போலாம்.
பாரன்சிக் வேலை முடிஞ்சுதா, கிளம்பிட்டாங்களா?
முடிஞ்சது சார். நீங்க வந்த உடனே கிளம்பலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
பேரன்ஸ்லாம்.
தள்ளியே நிக்க வெச்சிருக்கோம். சின்ன பொண்ணு சூசைட் அப்படின்றதனால அதுவும் கத்தியில அந்த மாதிரி நடந்ததால வேற ஏதாச்சும் மோட்டிவா இருக்கலாம்னு. நீங்க பாத்துட்டு சொன்னா ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடலாம் சார் பாடிய.
(மாறன் தற்கொலை நடந்த இடம் முழுக்க சுற்றிப் பார்த்தான்)
மணி! போஸ்ட்மார்டம் பண்ண எடுத்துப் போக சொல்லுங்க.
(வெளியே வந்து அவளின் பெற்றோரிடம்)
படிப்பு சம்பந்தமாக திட்டினீங்களா?
இல்லைங்க சார்.
நேத்து உங்களுக்குள்ள எதாச்சும் சண்டை?.
இல்லங்க சார்
இல்லனாலும் இதுக்கு முன்னாடி உங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வருமா?
இல்லைங்க சார் நான் ஒரு அம்மா மாதிரி இல்லாம அவகிட்ட ஃபிரண்டா தான் சார் இருந்தேன் எந்த விஷயமாக இருந்தாலும் என்கிட்ட வந்து ஷேர் பண்ணுவா சார். நான் அவகிட்ட உட்கார்ந்து பேசுவேன் சார். அவ கஷ்டபட்ற மாதிரி எதுவும் இல்ல சார்.
எத்தன பசங்க?
ஒரு பொண்ணு தான் சார்.
இந்த வீடு சொந்த வீடா?
இல்லை சார்,
வாடகை வீடுதான் சார். எங்களோட பூர்வீகம் புதுக்கோட்டை சார். அஞ்சு வருஷம் ஆச்சு இங்க வந்து. இவருக்கு டிரான்ஸ்வர் கிடைச்சது. இங்க மாத்திட்டு வந்துட்டோம்.
சார் என்ன பண்றாரு?
பேங்க்ல கேஷியர் சார்.
நீங்க?
நான் ஒரு NGO ல ஒர்க் பண்றேன் சார் ரிசப்ஷனிஸ்டா.
சரி நீங்க போங்க போஸ்ட்மார்டம் முடிச்சதும் சைன் போட்டு வாங்கிட்டு போங்க.
மணி போலாங்களா?
சரிங்க சார்.
(மணி வண்டியை திருப்பி புறப்படுகையில்)
மணி ஒரு நிமிஷம் வண்டி நிறுத்துங்க. இந்த ஸ்கூல்லதான அந்த பொண்ணு படிச்சானு சொன்னீங்க?
ஆமா சார். இந்த ஸ்கூல் தான் சார்.
கேட் வெளிய நின்னுட்டு இருக்காங்கல அந்த பொண்ணுங்கள கூப்பிடுங்க.
சார்.
(அவர்கள் வந்தார்கள்)
மணி அந்த பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?
மகாலட்சுமி சார்.
செத்துப்போன மகாலட்சுமி உங்க கிளாஸ்மேட்டா?
ஆமா சார். மேகா என்னோட க்ளாஸ்தான் சார்.
மேகவா?
(மகாலட்சுமிய மேகானும் கூப்பிடுவாங்க சார் என்று மணி சொன்னார்)
நேத்து வீட்டுக்கு வரும்போதோ ஸ்கூல்லையோ ஏதாச்சும் உன்கிட்ட பேசினாளா?
இல்ல சார். சும்மாவே அவ யார்கிட்டயும் சரியா பேசமாட்ட சார். ஆனா அடிக்கடி ஒரு நோட்டை வச்சுட்டு கிறிக்கிக்கிட்டே இருந்தா சார் நேத்து ஃபுல்லா. அந்த நோட்ட கிளாஸ்லயே வேற விட்டுட்டு போயிட்டா. அத எடுத்துட்டு வந்து நான் கொடுக்கலாம்னு பாத்தேன். அம்மாகூட சந்தைக்கு போய்ட்டு வந்ததால கொடுக்க முடியல சார். பேக்லயே வச்சுக்கிட்டேன். சரி காலைல ஸ்கூலுக்கு வந்ததும் கொடுத்துடலாம்னு பாத்தேன்.
எங்க இருக்கு அந்த நோட்டு?
என்கிட்ட தான் சார் இருக்கு.
எடுத்துட்டு வா.
(எடுத்துவந்து கொடுத்தாள்)
இது தான் சார்.
இந்த நோட்டை எடுத்துக்கலாமா?
சரிங்க சார்.
ஓகே நீங்க போங்க. இந்தா மணி இத ஆபீஸ்ல வச்சிடுங்க.
(அடுத்த நாள்)
சார் நேத்து அந்த சூசைட் கேஸ் ரிப்போர்ட் வந்திருக்கு சார்.
என்ன வந்திருக்கு?.
சூசைடுனு கன்ஃபாம் பண்ணிருக்காங்க சார். கத்தி இருந்த பொசிஷன் ப்லட் சிதறி இருந்த பொசிஷன் கூட கம்பார் பண்ணும்போது அந்த ஃபோர்ஸ், எந்த சைடுல இருந்து அறுத்துகிட்டா அப்படின்றது மேட்ச் ஆகுது சார். வீட்டுல எந்த விதமான தடயங்களும் வேற கிடைக்கல.
(மெசேஜ் சத்தம்)
யாரு சார் அப்பாவா?
ஆமாம் மணி. சரி ஓகே ஸ்பாட்ல இருந்து ஒரு நோட்டு வாங்கிட்டு வந்தோம்ல அத எடுங்க.
(மணி அந்த நோட்டை எடுத்துக்கொடுத்தார்)
மணி இது என்ன லாஸ்ட் பேஜ்ல மேல சிலுவ போட்டு இருக்கு.
ஆமா சார் அது இப்போ பசங்ககிட்ட இது ஒரு பழக்கமா இருக்கு. பிள்ளையார் சுழி போடுற மாதிரி சார்.
அவங்க ஹிந்து தானே?
ஆமா சார்.
மிஸ் யூ அப்பா அம்மா அப்படின்னு எழுதி வச்சிருக்கா பேஜ் ஃபுல்லா.
அவளுக்கு அவங்கள பிடிக்கும்னு நினைக்கிறேன் சார்.
பிடிக்கறத மிஸ் பண்ணி எழுத வேண்டிய அவசியம் இல்ல மணி. மிஸ் பண்ணாதான் மிஸ் பண்ணதா எழுத தோணும். ஏன் மிஸ் பண்ண போறா அவ அவங்க அப்பா அம்மா கூட இருக்கும் போது?
(இரண்டு நாள் கழித்து)
சார் அந்த சூசைடு கேஸ் க்லோஸ் பண்ண ஃபைல உங்க டேபிள்ல வச்சிருக்கேன். சைன் போடீங்கனா அப்டேட் பண்ணிடலாம் சார். அந்த சூசைட் கேஸ க்ளோஸ் பண்ணிடலாம் சார்.
இல்ல மணி ஏதோ ஒன்னு எனக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு மணி. அந்த வீட்ட ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோமா?
சரிங்க சார்.
முனையிலேயே நிறுத்திக்கோங்க. அந்த கோயில்கிட்ட பெரியவர் உக்காந்துட்டு இருக்கார்ல அவர கூட்டிட்டு வாங்க.
சார்.
(அந்த பெரியவர் வந்து)
வணக்கம் சார்.
வணக்கம். ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்த தெருவுல ஒரு சின்ன பொண்ணு செத்துப் போய்ட்டால அவங்க குடும்பம் எப்படி? உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.
அந்த ஆம்பள ஒரு பேங்க்ல வேலை செய்றாரு அஞ்சு வருஷமாச்சு அவங்க இங்க வந்து. வேலைக்கு போயிடுவாங்க. இந்த பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு படிச்சிட்டே தான் இருக்கும் வெளியே திண்ணையில் எல்லாம் கூட உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கும். ஸ்கூல் பக்கத்துலயே தான் இருக்கு கரெக்டா ஸ்கூல் நேரத்துக்கு தான் உள்ள போகும் முடிஞ்சதுனா வரும். மறுபடியும் வெளிய தான் உட்கார்ந்து படிக்கும். அரை மணி நேரத்துக்குள்ளயே அவங்க அம்மா வந்துடுவாங்க வந்ததும் அம்மா கூட பேசிகிட்டு அப்படியே இருந்துடும் சார் வெளிய கூட அந்த பொண்ணு அவ்ளோவா சுத்தாது சார். எங்கேயும் போகாது.
அந்த பொண்ணு அவங்க அப்பா அம்மா கூட எப்படி? சந்தோஷமா இருப்பாளா இல்ல தனியாவே இருப்பாளா?
இல்ல சார் ரொம்ப சந்தோஷமாதான். இந்த தெருவுல அந்த மாதிரி ஒரு அப்பா அம்மா அந்த பொண்ணு இவங்க மூணு பேரும் பாக்குறதுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும் சார்.
சரிங்க நீங்க வாங்க. திரும்பு போலாம் மணி.
என்ன சார் உங்க டவுட் தீந்துச்சா?
டவுட் தீர்ல ஆனா கேஸ் முடிஞ்சது.
(ஒரு வாரம் கழித்து)
மணி என்ன மார்கன் ஹோட்டல்ல விட்டு போயிடு நான் சாப்பிட்டு வந்துட்றேன்.
சரிங்க சார். நான் வெயிட் பண்ணவா?
இல்ல நீங்க போங்க நான் முடிச்சுட்டு ஃபோன் பண்றேன் அப்புறமா வாங்க.
சரிங்க சார்
(சிறிது நேரம் கழித்து மணியிடமிருந்து ஃபோன்)
சார்
என்ன மணி?.
இல்ல சார்.
என்ன இல்ல. சரி சொல்லுங்க.
இன்னொரு சூசைட் கேஸ்.
வந்துட்றனுதானே சொன்னேன். ஏன் சாப்பிட்டு வர கூடாதா?
இல்ல சாப்பிட்டு வாங்க சார் அதான் உன்கிட்ட சொல்லலாம்னு.
சரி என்ன விஷயம் சொல்லுங்க.
இல்ல சார் அந்த சூசைடு.
என்ன, அதே ஏரியாவா?
இல்ல சார் அது வேற ஏரியா சார்.
அப்புறம் என்ன ஒரே மாசத்துல ரெண்டு சூசைடு கேஸ் வரகூடாதா. அதே வயசா?
இல்ல சார் 72 வயசு.
நல்லா தெரியுமா சூசைடுதானா இல்ல நேச்சுரல் டெத்தா?
இல்ல சூசைட் தான் சார்.
எப்படி?
ஸ்லீப்பிங் பில்ஸ் அதிகமா சாப்பிட்டு.
சரி ஓகே அதுல என்ன உங்களுக்கு.
இல்ல சார் அங்க பக்கத்துல ஒரு லெட்டர் இருந்தது.
என்ன எழுதி இருக்கு.
ஐ மிஸ் மை ஃபேமிலி னு இருக்கு.
வேற அந்த சிலுவ.
அவ்லோதான் சார் அதெல்லாம் இல்ல.
சரி நீங்க ஸ்பாட்டுக்கு போய் விசாரிங்க. நான் நம்ம மைகேல் கூட பைக்ல வந்துட்றேன்.
சரிங்க சார்.
நீங்க சாப்டல?
சாப்டேன் சார்.
(அரைமணி நேரம் கழித்து)
(ஃபோன் ரிங்கிங்)
சொல்லுங்க மணி விசாரிச்சிட்டீங்களா?
விசாரிச்சிட்டேன் சார். இவரு ரிடயர்டு ப்ரொஃபசர். ஒய்ஃப் இருக்காங்க ஒரு பையன் ஒரு பொண்ணு. பொண்ணு மேரேஜ் பண்ணி சென்னையில தான் கொடுத்திருக்காங்க. விசாரிச்சவரைக்கும் ஹாப்பியான ஃபேமிலி மாதிரிதான் சார் தெரியுது.
உங்களுக்கு என்ன தோனுது?
ஏன் இறந்து போனாருனுதான் தெரியல சார். அந்த பொண்ணு கேஸ் மாதிரி ஃபீல் ஆகுது சார்.
சரி சாப்டுட்டேன் வந்துட்றேன்.
சரிங்க சார் .
(20 நிமிடம் கழித்து)
வாங்க, இதான் சார்.
அவங்க பையன் கிட்ட போய் பேசிட்டு வாங்க.
சார் பேசிட்டேன் சார். ஒரு ஒரு லட்ச ரூபா சம்பளத்துல ப்ரொஃபசரா காலேஜ்ல வொர்க் பண்ணி இருக்காரு. ரிடைட் ஆயிட்டாரு வீட்லதான் இருந்திருக்கிறாரு. பசங்கள நல்லா படிக்க வெச்சிருக்காரு நல்ல ஒரு டீசன்ட் பேமிலியா இருக்கு சார். எந்த விதமான பிரச்சனையும் இல்ல சுத்தி இருக்குறவங்ககிட்டயும் விசாரிச்சிட்டேன். சூசைடு பண்ணிக்குற அளவுக்கு என்ன விஷயம் இருக்கு அப்படின்றது அவங்க பையனுக்கும் தெரியல சார்.
அந்த பொண்ணோட ஃபைல் எங்க?
ஆபிஸ்லதான் சார்.
சரி மைக்கேல் நீ இங்கயே இரு. மணி கார் எடுங்க.
(ஆபிஸில்)
ஒரு வாரத்துக்கு முன்னாடி சூசைட்ல இறந்து போனது ஒரு பொண்ணு கேஸ் இது. இந்த சைடுல ஒரு பெரியவர். ரெண்டு பேருக்கும் சம்மந்தமே இல்ல. எந்தவிதமான ஒற்றுமையும் இல்ல. நம்மகிட்ட இந்த ரெண்டு கேஸையும் லிங்க் பண்ற ஒரு விஷயம் பேமிலில ஏதே ஒரு ஆள மிஸ் பண்றாங்க. ஒருவேளை அந்த பொண்ணு கடத்திட்டு வந்து வளர்க்கப்பட்டிருந்தாலோ இல்ல துன்புறுத்தி இருந்தாலும் அவங்க உண்மையான அப்பா அம்மா இல்ல அப்படின்ற மாதிரி இருந்தாலும் அந்த கேஸ்க்கு அது ஓகே. ப்ரூவ் ஆகல இருந்தாலும் ஒரு அஸம்ப்ஷனா இருந்தா கூட அந்த சைடு அது ஓகே. ஆனா இந்த சைடுல இவரு மிஸ் அப்படின்னு சொல்றதுக்கான சான்ஸ் எனக்கு தெரியலையே. இவங்க ரெண்டு பேருக்கும் எதனா சம்மந்தம் இருக்குமோ?. சரி ஓகே இதுக்கு முன்ன இதே மாதிரி ரீசன் சரியா இல்லாம வேற ஏதாச்சும் சூசைட் கேஸ் இருக்கா மணி.
எனக்கு தெரிஞ்சவரைக்கும் அப்டி எதுவும் நம்ப லிஸ்ட்ல இல்ல சார். அதுக்கு முன்னாடி இருக்கானு பைல செக் பண்ணி சொல்லட்டுமா சார்.
இல்ல வேணாம் மணி. நீங்க நம்ப சரெளண்டிங்ல இருக்குற ஸ்டெசன்ஸ்ல விசாரிங்க.
சரிங்க சார்.
மணி?
சார்.
சென்னைய சுத்தி இருக்குற டிஸ்டிரிக்ட் ஸ்டேஷன்ஸ்க்கும் இன்ஃபாம் பண்ணி கேளுங்க.
சரிங்க சார்.
(இரண்டு மணி நேரம் கழித்து)
சார்!
சொல்லுங்க மணி.
நம்ப சரெளண்டிங் ஸ்டேஷன்ல இந்த மாதிரி இல்ல சார். ஆனா காஞ்சிபுரத்துல போனமாசம் ஒன்னு திருவள்ளூர்ல போன வாரம் ஒன்னுனு ரெண்டு கேஸ் இந்த மாதிரி இருகற்தா சொல்றாங்க சார். காஞ்சிபுரத்துல ஒரு காலேஜ் ஸ்டூடென்ட் வீட்டு மேல இருந்து குதிச்சு செத்து போயிருக்கான். திருவள்ளூர்ல ஒரு மேரேஜ் ஆன பொண்ணு வீட்டுக்குள்ளேயே தூக்குல தொங்கி இருக்கா. அவங்க இறந்து போற அளவுக்கு பெரிய ரீசன் தெரியலனு சொல்றாங்க.
அந்த ரெண்டு கேஸ்லையும் மிஸ் பண்ணுறேன் அப்டினு நாம பாத்த மாதிரி எதாச்சும் இருக்கானு பாக்கசொல்லுங்க.
சரிங்க சார்
(மணி போனில் பேசிவிட்டு)
சார்
காஞ்சிபுரம் கேஸ்ல மட்டும் ஒரு போன்ல மெசேஜ்ல தே மிஸ்டு மி- னு அனுப்பி இருக்கான் சார்.
யாருக்கு அனுப்பி இருக்கான்?
அவனுக்கே அனுப்பி வச்சிருக்கான் சார். அந்த திருவள்ளூர் கேஸ்ல அந்தமாதிரி எந்த க்ளூவும் இல்ல சார். அப்புறம் நம்ம ஸ்டேஷன்ல ஏட்டு சம்பத் ஆக்ஸிடேன்ட்ல செத்துபோனாரு. நீங்க வந்த பத்து நாளைக்கு முன்னாடிதான் சார். ஆனால் அவரும் அவரோட பேமிலிய மிஸ்பண்றதா சொல்லிட்டே இருந்ததா நம்ப மைக்கேல் சொல்லிட்டு இருந்தான். ஆனா அது சூசைடு இல்ல ஆக்ஸிடெண்ட் சார்.
சரி மணி அவரோட விஷயத்தையும் சேத்து இது எல்லாத்துலயும் ஒரே கேஸ்ஸா பாத்தா காமனான விஷயம் என்னனு சொல்லுங்க?
யாருக்கும் சூசைடுக்கான ரீசன் இல்ல சார். எதனால அந்த சூசைட் நடந்தது அதுக்கு முன்னாடி எதாச்சும் ஒரு சண்டை அந்த மாதிரி எதுவுமே கிடையாது சார் எல்லாமே சாதாரணமா நடந்திருக்கு. எல்லாருமே காலையில் தான் பார்த்து இருக்காங்க எல்லாமே நைட்ல தான் நடந்திருக்கு. முக்கியமா கேஸ க்ளோஸ் பண்ண ஸ்டேஷன்ல ரீசன் இல்லாம அலஞ்சிருக்காங்க. எல்லாமே வேற வேற இடத்துல எல்லாமே ஒரு மூணு நாலு நாள் வித்தியாசத்துல நடந்திருக்கு இவங்க நாளு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாது. ஏஜ் பெரிய வித்தியாசம். இன்னும் சொல்ல போனா அவங்களுக்கு இருக்கிற அந்த ஊர் கூட தெரியாது. அந்த அளவுக்கு நம்ம ஏட்டுக்கும் பெருசா வெளியூர்ல சுத்துனதும் கிடையாது.
சரி நாம இன்னைக்கு நடந்த சூசைடு கேஸ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம். வண்டி எடுங்க சிசிடிவி எதாச்சும் மாட்டுமானு பாக்கலாம்.
(அந்த இடத்திற்கு சென்ற பிறகு)
சார் இந்த இடத்துல அந்த ஆஸ்பிடல்கிட்ட மட்டும்தான் சார் சிசிடிவி இருக்கு.
சரி போய் பாப்போம்.
சூசைடு பண்ணிகிட்ட ப்ரோஃபசர் வரது போறது தெரியுது. வேற யாரும் அவர் கூட வீட்டுக்கு போற மாதிரியோ வர மாதிரியோ இல்லையே சார்.
சரி மணி எதுக்கும் ஒரு வாரத்துக்கான வீடியோவ வாங்கிட்டு வாங்க ஆபிஸ்ல போய் பாப்போம்.
மைக்கேல்...மைக்கேல்..
சார்.
நானும் மணியும் கிளம்புறோம். இங்க பக்கத்துல வேற எங்கயாச்சும் சிசிடிவி இருக்கானு பாத்துட்டு இன்ஃபாம் பண்ணு.
சார்.
மணி வண்டி எடுங்க போலாம்.
(ஆபீஸில்)
மணி, அந்த வீடியோவ போடுங்க.
ஓகே சார்.
நேத்து சிசிடிவில அவரோட கேப்ச்சர் கிளிப்போட சேத்து. ஒரு வாரமா அவரு வந்துபோன அந்த கிளிப்ப மட்டும் சிங்கிள் ப்ரேம் ல வையுங்க.
சரிங்க சார்.
இந்த வீடீயோஸ்ல உங்களுக்கு எதனா வித்தியாசம் தெரியுதா மணி.
இல்ல சார். இது எல்லாத்துலையும் அவர் மட்டும்தான் இருக்காரு. எனக்கு பெருசா எந்த வித்யாசமும் இல்லையே சார்.
அவரமட்டும் நல்லா பாத்து சொல்லுங்க.
எனக்கு புரியலயே சார்.
அவரோட முகத்த பாருங்க. மத்த நாளவிட நேத்து அவர் ஏன் அவ்ளோ சோகமா இருக்காரு. மைக்கேல்க்கு கால் பண்ணுங்க.
சரி சார்.
சார் மைக்கேல் லைன்ல இருக்கான் சார்.
மைக்கேல்.நான் லைன்ல இருக்கேன் அந்த ப்ரோஃபசர் ஒயிப்கிட்ட நேத்து வீட்டுக்கு வந்து எதாச்சும் சொன்னாறானு கேளு.
ஓகே சார்.
சார் அவங்ககிட்ட நேத்து சாந்தரம் ஒரு வார்த்தக்கூட பேசலனு சொல்றாங்க சார்.
ம்...கேட்டேன் மைக்கேல். ஓகே மைக்கேல் நீ போய் அந்த ஏரியால வேற எங்கலாம் சிசிடிவி இருக்கோ அங்கலாம் போய் பாத்து. நேத்து மதியம் மேல எங்கலாம் போனாரோ அங்கலாம் சிசிடிவி ச்செக் பண்ணி யாராச்சும் அவர்கிட்ட பேசி இருக்காங்கலானு சொல்லு.
ஓகே சார்.
மணி நான் DSP ஆபிஸ்க்கு போய் இதோட ப்ரோசீஜர பாத்துட்டு வரேன். நீங்க மைக்கேல காண்டாக்ட் பண்ணி என்னனு கேளுங்க. காஞ்சிபுரம் திருவள்ளூர் ஸ்டேஷன்கும் கால் பண்ணி அந்த சூசைடு பண்ணிகிட்ட இடத்த தவிர வேற பக்கத்துல இருக்குற சிசிடிவி-ல அவங்க இருக்குறது தெரியுதானு ரெண்டு மூனு நாளுக்கு செக் பண்ண சொல்லுங்க.
ஓகே சார்.
(1 மணி நேரத்துக்கு பிறகு)
கால் ரிங்கிங்
சொல்லு மணி
சார் அந்த ப்ரொஃபசர் நேத்து சாந்தரம் ஒருத்தர்கிட்ட பேசி இருக்காரு சார்.
யாரு அது?
தெரியல சார் அவன் அந்த ஊர் காரன் இல்ல சார். அவன் யாருனு அங்க இருக்குற யாருக்கும் தெரியல சார். அவன் அவர்கிட்ட பேசுனதயும் யாரும் பாக்கலயாம் சார்.
மத்த கேஸ் சிசிடிவி?
பாத்துடேன் சார். அந்த சின்ன பொண்ணுகிட்டயும் இவன் பேசி இருக்கான் சார். அப்புறம்.
என்ன அப்பறம்.
ஆக்ஸிடென்ட்ல செத்து போனதா நினைச்ச நம்ப ஸ்டேஷன் ஏட்டுகிட்டயும் பேசி இருக்கான் சார். அப்டினா அது ஆக்ஸிடென்ட் இல்ல சார்.
நான் அத கெஸ் பண்ணேன் மணி. சரி காஞ்சிபுரம் திருவள்ளூர் கேஸ் சிசிடிவி என்னாச்சி.
கேட்டிருக்கேன் சார் ஆள் அனுப்பி இருக்காங்களாம். வந்ததும் அனுப்புறேனு சொல்லிருக்காங்க சார்.
சரி மணி நீ அத கலெக்ட் பண்ணு. டிஎஸ்பி மீட்டிங் உள்ள போய்டிருக்கு வந்து கால் பண்றேன்.
( 1 மணி நேரம் கழித்து)
(போன் ரிங்கிங்)
என்ன மணி மீட்டிங்னுதானே சொன்னேன். இத்தனதடவ கால் பண்ணிருக்க. சரி அந்த மத்த சிசிடிவி ஃபூட்டேஜிம் வந்தாச்சா.
ஆமா சார் வந்தாச்சி. அங்கயும் இறந்துபோனவங்களோட அந்த நாள் சாந்திரம் பேசி இருக்கான் சார்.
எல்லாமே ஒரே ஆளா?
ஆமா சார். எல்லாமே ஒரே ஆள் தான். ஆனா எதலேயும் அவனோட முகம் கிளியரா தெரியல சார். கிளியர் பண்ண சொல்லி கொடுத்திருக்கேன் சார். எல்லாம் சரி சார் இவன் கிட்ட பேசுறாங்க ஓகே. இவன்கிட்ட பேசற்தால இவங்களாம் செத்துபோய்டுவாங்களா என்ன. அவனோட விரல் கூட அவங்கமேல படல சார்.
அதுதான் மணி எனக்கும் ஒன்னும் புரியல. சரி வீடியோஸ்லாம் என் ஃபோன்க்கு அனுப்பிவிடு.
சரிங்க சார்.
(அனுப்பியதை பார்த்துவிட்டு மணிக்கு கால் செய்கிறார்)
மணி அத பாத்தியா?
எத சார்?
அந்த வீடியோவதான் மணி.
பாத்தேன் சார். அதுல என்ன?
மணி அவங்க எல்லாரும் அவன்கிட்ட பேசுறாங்கனு சொன்ன. ஆனா அதுல அவங்க அவன்கிட்ட ஒரு வார்த்தக்கூட பேசுல. அவனும் அவங்கள பாத்துட்டுதான் இருக்கான். கடைசிய கிளம்பறதுக்கு முன்னாடி ரெண்டு வார்த்தை சொல்லி அனுப்புறான். என்ன நடக்குது மணி ஒன்னுமே புரியலயே. சரி இன்னைக்கு நைட் வீட்டுக்கு போகாதீங்க மைக்கேல் கால் பண்ணி அங்க இருந்து வர சொல்லிடுங்க. வரும்போது சாப்ட எதாச்சும் வாங்கிட்டுவர சொல்லிடுங்க. மைக்கேல கூட வச்சுகோங்க. அவன புடிச்சா மட்டும்தான் நமக்கு இதுக்குலாம் பதில் கிடைக்கும். சுத்தமா ஃபேஸ் தெரியல அந்த போட்டோல கிளியர் பண்ணி வந்ததும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஸ்டேஷன்கும் அனுப்புங்க. அவங்க தேட சொல்லி நான் டிஎஸ்பி மூலமா அவங்ககிட்ட பேச சொல்றேன். .....இல்ல மணி...நீங்க எல்லா டிஸ்டிக்ட்க்கும் அனுப்புங்க ஸ்டேஷன் ஐடி யூஸ் பண்ணிக்கோங்க. நான் டிஎஸ்பி கூட சிஎம் புரோக்ராம்க்கு போறேன். எப்போ ரிட்டர்ன்னு தெரியல. லேட் ஆச்சினா உங்கள காலைல வந்து பாக்குறேன்.
சரிங்க சார்.
(மறுநாள் காலையில்)
சார்.
என்ன மணி எதாச்சும் தகவல் வந்துச்சா?
இதுவரைக்கும் எதுவும் இல்ல சார்.
சரி. டீ சொல்லுங்க மணி.
மைக்கேல் போய் இருக்கான் சார்.
என்ன சார் தலவலியா. ஒரு மாதிரி இருக்கீங்க?
நைட் ஃபுல்லா தூங்கல மணி அதான். அதுவும் இல்லாம அப்பா காலைல இருந்து கால் பண்ணவே இல்ல. குட் மார்னிங் மெசேஜும் வரல. அதான் ஒரு மாதிரி இருக்கு. இதுக்கு முன்னாடி அவர் அனுப்புனது இல்ல கரெக்டா இந்த ரெண்டு மாசம் மட்டும் அனுப்பிட்டு இருக்காரு. எனக்கும் பழகிடுச்சு திடீர்னு வரலனவே ஒரு மாதிரி இருக்கு. கால் பண்ணா ரிங் போது எடுக்கல வீட்டுக்கு ஒரு ஃபோன் பண்ணேன் பார்க்குக்கு போய் இருக்கிறதா சொன்னாங்க சரி வந்தா கால் பண்ண சொல்லி இருக்கேன்.
மறுபடியும் நீங்க கால் பண்ணி பாருங்க சார்.
பண்ணி பாத்துட்டேன். ரிங் போகுது எடுக்கல. பார்க்ல வாக்கிங் போய் இருப்பாரோனு நெனைக்குறேன். சரி பாத்ரூம் போய்டு வரேன். மைக்கேல் வந்ததும் டீ என் டேபில்ல வச்சிட்டு ரெண்டுபேரும் வீட்டுக்கு போய்ட்டு மதியம் வாங்க.
பரவால்ல சார்.
போய்ட்டு வாங்க மணி.
சரிங்க சார்.
(ஸ்டேஷன் ஃபோன் ரிங்கிங்.)
சார் நீங்க போய்ட்டு வாங்க நான் அட்டர்ன் பண்றேன்.
( பாத் ரூம் போய்டு வந்ததும்)
என்ன மணி யார் ஃபோன்ல?
வேலூர் காட்பாடி ஸ்டேஷன்ல இருந்து சார். அவன புடிச்சிட்டாங்கலாம் சார். ஆனால்.
என்ன மணி.
போலிஸ் அங்க போறதுகுள்ள குளத்து தண்ணில மூழ்கி சூசைடு பண்ணிட்டு இருக்கான் சார்.
ச்சே...கொலையாளிய கண்டுபிடிச்சும் காரணத்தையும் எப்படி அது அவனால அத பண்ண முடிஞ்சதுனும் கண்டுபுடிக்க முடியலயே. கன்ஃபார்மா அது அவன்தானா.
ஆமா சார் அவன்தான். சிசிடிவி ஃபூட்டேஜ் பாத்துட்டு அவங்க சொன்ன மாதிரி 60 வயசுக்கு மேல, ரைட் சைடு கால் கொஞ்சம் ஊனமா இருக்கு, சஃபாரினு எல்லாமே கரெக்ட்தான் சார்.
மணி என்ன ஊர் சொன்னீங்க.
காட்பாடி சார்.
அந்த கொல பண்ணவனோட போட்டோ இருக்கா.
உங்க டேபில்ல அந்த பிங்க கலர் ஃபைல்ல இருக்கு பாருங்க சார்.
(எடுத்து பார்த்ததும்)
மணி இது அப்பா மணி.
அப்பாவா ! என்ன சார் சொல்ரீங்க!
வண்டி எடுங்க மணி.
( காட்பாடியை சேர்ந்ததும் காரிலிருந்து இறங்கி கத்திக்கொண்டு ஓடினான். தொடவிடாமல் போலிஸ் அவனை பிடித்துக்கொண்டனர். தரையில் வீழ்ந்தும் மார்பில் அடித்துக்கொண்டும் அழத்தொடங்கினான். சற்று நேரம் கழித்து காட்பாடி எஸ்ஐ மாறனிடம் வந்து தேற்றி பின்... )
சாரி சார். ஜஸ்ட் நீங்க வரதுக்கு முன்னாடிதான் அது உங்க அப்பானு தெரிஞ்சது சார்.
(அப்பா அப்படி பண்ணிருக்க சான்ஸ் இல்ல என்று மணி சொன்னதும் அந்த எஸ்ஐ)
இல்ல சார். அந்த அஞ்சி பேரோட சாவுக்கு இவர்தான் காரணமா இருந்திருக்காரு. அது எப்படினும் அவரோட போன்ல ரெக்கார்டு போட்டு வச்சிருக்காரு. இத கேளுங்க.
(ஆடியோவில் அவனது அப்பா)
தனிமை... எவ்வளவு கொடுமையானதுனு தெரியுமா. அத முழுசா நான் அனுபவிச்சி இருக்கேன். நான் ஒரு கான்ஸ்டபில். என் பையன் பொறந்ததும் அவன் அம்மா அவனவிட்டு செத்து போய்ட்டா.. தனி ஒரு ஆள நான் அவன வளத்து ஆளாக்குனேன்.அவன நல்லா படிக்கவச்சி போலிஸ் ஆக்குனேன். நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனா அவன் என்ன அப்டி பாத்துகல. என்ன விட்டு போய்டான். ரிடயர்டுமென்ட்க்கு அப்பறம் என்னோட அதிகாரம் மரியாத எல்லாதையும் இழந்துட்டேன். நான் வாழ அவன நம்பி இருக்கரதா ஆச்சி. எனக்கு அன்பும் பேச ஒரு ஆளும் தேவபட்டுச்சி அத தாண்டி எதுவும் இந்த உலகத்துல வேண்டாம். இத நான் வேற யார்கிட்டயும் எதிர்பாக்க முடியாது. நான் வளத்த என் பையன்தான் நன்றிக்கடனா இத செஞ்சிருக்கனும். ஆனால் அவன் என்ன தனியா விட்டு போய்டான். இந்த தனிமை என்னை நிறைய யோசிக்க வச்சது. இனிமே நம்ப சந்தோஷத்துக்காக வாழனும்னு நெனச்சேன். சோஷியல் மீடியால யார்லாம் மிஸ் யூ னு போட்ராங்களோ அவங்கள நான் செலக்ட் பண்ணி அவங்ககிட்ட பேசி என்ன மாதிரியே கஷ்ட பட்ற அவங்களுக்கு ஆறுதலா இருக்கும்னு அவங்ககிட்ட போய் பேசலாம்னு பாத்தேன். ஆனா அவங்க மிஸ் பண்ணி கஷ்டபட வேணாம்னு அவங்களுக்கு நிரந்தர சந்தோஷத்த கொடுத்தேன். அது எனக்கு சந்தோஷத்த கொடுத்துச்சி. அதுக்காக நான் பயன்படுத்தின டூல் ஹிப்னாடிசம். நான் சின்ன வயசுல கத்துகிட்ட அத மறுபடியும் புதுபிச்சிகிட்டேன். அத சொல்லியும் கொடுக்க ஆரம்பிச்சேன். ரிடயர்டுமென்ட்க்கு அப்புறம் என் தனிமைய போக்கிக்கவும் எனக்காக வாழவும் இது ஒரு வேலையா இந்த தனிமையிலிருந்து விடுவிக்குற விஷயம் எனக்கு சந்தோஷத்த கொடுத்துச்சி. எப்படியும் போலிஸ்கிட்ட மாட்டுவேனு தெரியும். அவங்ககிட்ட மாட்டி மறுபடியும் ஜெயில்ல தனியா இருக்க விருப்பமில்ல அதான் நானும் நிரந்தர சந்தோஷத்த தேடி போறேன்.என்ன ஒரு கஷ்டம்னா இது அத்தனைக்கும் காரணமான என் பையன நான் கொல்லாம போறேனுதான். நான் அவனுக்கு குட் மார்னிங்னு போட்றதே நான் இன்னும் உயிரோட இருக்கேன்னு சொல்ரதுக்குதான்.
( ஆடியோ முடிந்தது)
அவன் அழுது கொண்டிருக்க மணி அருகில் வந்து )
சார் அழாதீங்க சார். உங்களோட பிரிவும் அவரோட தனிமையும் அவர ரொம்ப பாதிச்சிருக்கு சார். அதான் சார் எல்லாத்துக்கும் காரணம்.
எனக்கு ஒன்னுமே புரியல மணி.
என்ன சார் சொல்லுரீங்க?
அந்த ஆடியோல இருக்குறது எதுவுமே உண்மையில்ல மணி.
எப்டி சார் சொல்லுரீங்க?
அவரு தனியாலாம் இல்ல மணி. நாங்க நாலுபேரு அண்ணன் தம்பீங்க அம்மாலாம் ஒன்னும் சாகல. எல்லாம் நல்லாதான் இருக்காங்க. என்ன தவிர எல்லாரும் அவர் கூட வீட்லதான் இருக்காங்க. அப்பறம் எப்டி அவர் தனிமைய ஃபீல் பண்ணி இருப்பாரு.
( கத்தி அழுதுக்கொண்டே அவனது வீட்டினர் அங்கே வந்தார்கள்)
(எஸ்ஐ அருகில் வந்து)
சார் நான் ப்ரொஜுர பாக்கட்டுமா சார்.
ம்.. என்று கை அசைத்தான்
(ஒரு வாரம் முடிந்தது. அது அத்தனை தற்கொலையையும் ஒரே கேஸின் கீழ் கொண்டுவந்து கேஸை முடித்தார். காட்பாடி எஸ்ஐ)
ஒரு வாரம் கழித்து மணி, மாறனை சந்திக்க வந்தார்)
உடம்பு இப்போ பரவாலயா சார். இன்னும் அதயே நினச்சிட்டு இருகாதீங்க சார். நடந்தத எதையும் நம்பலால மாத்தவா முடியும். சீக்கிரமா வந்து டியூடில ஜாய்ன் பண்ணுங்க சார்..
இல்ல மணி. எதுக்குமே காரணம் தெரியாம போச்சி மணி. அப்பா ஏன் அப்படி பேசனும். நடக்காதத நடந்த மாதிரி. தனிமையா இல்லாதத இருக்குறமாதிரி யோசிச்சி சூசைடு பண்ணிக்கணும்.
சார் இப்படிதானே அந்த சூசைடு பண்ணிகிட்ட வீட்ல இருக்கறவங்களும் யோசிச்சி இருப்பாங்க.
அதான் மணி நானும் யோசிக்குறேன். ஹிப்னடைஸ் பண்ணி அப்பா அவங்கல தற்கொலைக்கு தூண்டிவிட்ட மாதிரி. ஹிப்னடைஸ் பண்ணி அப்பாவையும் யாரோ ஏன் தூண்டிவிட்டிருக்க கூடாது. ஏதோ நடந்திருக்கு மணி. மணி நான் டூ டேஸ்ல வந்து ஜாய்ன் பண்ணிக்குறேன்.
சார்.
என்ன மணி.
ஒரு முக்கியமான விஷயத்தபத்திதான் சார் பேச வந்தேன். இன்னைக்கு குடியாத்ததுல நம்பலோட கேஸ் மாதிரி ஒன்னு நடந்திருக்கு. நம்ப பாணியில அவங்க ட்ரை பண்ணும்பொது இன்னொருத்தன் அதே போல பேசிதான் அவங்க சாக தூண்டிவிட்டிருக்கான்.
மணி அப்போ ஒன்னு செய்யுங்க.
சொல்லுங்க சார்.
அப்பா இறந்துகெடந்த அந்த பார்க்க சுத்தி இருக்குற சிசிடிவி ய பாருங்க. குடியாத்தம் கேஸ்க்கும் அப்பா டெத்கும் எதாச்சும் ஒற்றுமை இருக்கானு பாத்து சொல்லுங்க. நான் ரீஜாயின் பத்தி எஸ்பி கிட்ட பேசிட்டு ஆஃபிஸ்க்கு வந்துட்றேன்.
சரிங்க சார்
(எஸ் பி ஆபிஸை விட்டு வெளியே வரும்போது மணியிடமிருந்து போன்)
சொல்லுங்க மணி.
சார் நாம கெஸ் பண்ணது உண்மைதான் அப்பாக்கிட்ட ஒருத்தன் பேசி இருக்கான் ரெண்டு பேரும் ஒரே ஆளுதான். சேம் ஷிப்னாடிசம் தான் யூஸ் பண்ணிருக்கான்.
சரிங்க மணி நீங்க ஆஃபிஸ்க்கு வாங்க நானும் வந்துட்றேன்.
( மாறன் ஆஃபிஸ்க்கு வந்து சேந்ததும் ஆஃபிஸ்க்கு வந்துகொண்டிருக்கும் மணியிடமிருந்து போன்கால்)
சார் அந்த குடியாத்தம் சஸ்பெக்ட் ஈஸ் நோ மோர்.
என்ன சொல்ரீங்க
ஆமா சார் பூச்சி மருந்து குடிச்சி.
ச்சே...ச்சே...
(மணியின் கால்-ஐ கட் செய்ததும் மாறனுக்கு அனானிமஸ் கால்)
ஹலோ
என்ன மாறன் ஒன்னுமே புரியலயா. இத நிறுத்த முடியாது மாறன். உங்க அப்பாவின் இறப்பு முதலும் கிடையாது முடிவும் கிடையாது. ஜஸ்ட் ஒன் ஆப் தி பார்ட். இவங்கலாம் இறந்து போறதுக்கு பெருசா காரணம்லாம் ஒன்னும் கிடையாது.அப்பறம் ஏன் இதுலாம்னு கேக்குறியா. நான் ஹிப்னாடிசதுல லெஜணட். ஹிப்னாடிசம் மூலமா ஒருத்தரோட மெமரிய மாத்தவும் முடியும். தேவையானத புகுத்தவும் முடியும்.இது சம்பந்தபட்ட என்னொட ஒன்பது வருஷ ப்ராஜெக்ட் எச் ரிஜக்ட் பண்ணவங்களுக்கு இத வச்சி என்ன பண்ண முடியும்னு காட்ட வேணாமா அதுக்குதான். இது முலமா ஒருத்தரோட வாழ்க்கைய இன்னொருத்தருக்கு சாகும் காலம் வரைக்கும் இன்னொருத்தரா வாழ வைக்க முடியும். மொத்ததுல ஹிப்னாடிசம் மூலமா ஒருத்தருக்கு தேவையான டிப்ரஷன் வரவெச்சி சூசைடு பண்ணிக்க தூண்ட வெக்கவும் முடியும் அந்த தூண்டல ட்ரான்ஸ்வர் பண்ணவும் முடியும். எதுமே நடகாதத நடந்த மாதிரி நினைக்க வெக்கவும் முடியும் சைக்கிக் சைன்டிஸ்ட இன்ஸ்பெக்டர் மாறனா நினச்சி பாக்க வெக்கவும் முடியும். இப்போ மயக்கத்துல இருந்து எந்திர்ச்சா என்னை கண்டுபுடிச்சிருப்ப. அப்படி இல்லாம என்னோட கால கட் பண்ணி என்னை தேட ஆரம்பிச்சா.....
( கடைசி பக்கம் இல்லாமல் இருந்தது)
இந்த ஸ்டோரில கடைசி பக்கம் இல்லையே என்று கேட்ட நாகஸிடம் அவனது அப்பா அது ஸ்டோரி இல்ல. உங்க தாத்தாவோட ப்ராஜெக்ட் எச் உடைய டெஸ்ட் ல ஒரு பார்ட். நம்ப குடும்பம் பரம்பரையா ஹிப்னாடிசம் மூலமா நோய்கள குணபடுத்துற சேவைய செஞ்சிட்டு வந்துட்டு இருந்தோம். உங்க தாத்தா அதுல ஒருபடி மேல போக ஆரம்பிச்சாரு. ஆனால் அவர் போன தூரம் இதுவரைக்கும் யாருமே போனதில்ல. ஒரு மனுஷனோட மெமரிய ரீஷேப் பண்ணமுடியும்னு நம்புனாரு. ஒருத்தரோட மெமரிய மாத்தி இன்னொருத்தரோட மெமரிய இன்போர்ஸ் பண்ணமுடியும்னும் பழைய மெமரி புது மெமரி கூட மெர்ஜ் ஆகும்போது புது மெமரி அழிஞ்சி மறுபடியும் பழைய மெமரிய ரீகெய்ன் பண்ண முடியும்னு சொன்னாரு. ஆனால் அவரு சொன்ன எந்த விஷயத்தையும் யாரும் நம்பல. இத ஆரம்பத்துல மத்தவங்களுக்கு நடுவுல சோதிச்சி பாக்கும் போது. மெமரி கரப்ட ஆகி சில பேர் இறந்துபோக கூடிய சூழ்நிலைக்கு போனாங்க. அதனால இவரோட ப்ராஜெக்ட பேன் பண்ணாங்க. ஆனாலும் அவரு அத விட்ற மாதிரி இல்ல. யாருக்கும் தெரியாம அத தொடர்ந்து ட்ரை பண்ணிட்டு இருந்தாரு. உனக்கு ரெண்டு வயசு இருக்கும் அப்போ ஆறு மாசம் கழிச்சி நம்பல பாக்க வந்தாரு. அப்போ இங்கிருந்த மூனு நாள் உன்கூடதான் அதிகமா நேரம் கடத்திட்டு இருந்தாரு. அவரு கிளம்பற்துக்கு முந்தன நைட்டு என்கிட்ட இந்த டைரிய கொடுத்து....நான் ஸ்டார்ட் பண்ணிருக்க விஷயம் ரொம்ப பெரிசு. அத என்னால முடிக்காம விட முடியாது. வேற யார வெச்சும் ட்ரை பண்ண எனக்கு விருப்பம் இல்ல. என்னொட ப்ராஜெக்ட் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதனால என் மேலயே அத சோதிச்சிக்க போறேன். அந்த டைரில கற்பனையா ஒரு சில எண்ணங்களை ஸ்டோரியா எழுதி வச்சிருக்கேன். அத ரெக்கார்டு பண்ணி எடுத்துகிட்டேன். என்ன நான் செல்ப் ஹிப்னடைஸ் பண்ணி இந்த புது சிந்தனைகள எனக்குள்ள இன்போர்ஸ் பண்ண போறேன். இது சித்தரிக்கப்பட்ட கதையா இருந்தாலும் அதல உண்மையாவே வாழ ஆரம்பிச்சிடுவேன். சொசைட்டிக்கு நடுவுல இத பண்ணா நிறைய பேருக்கு பிரச்சனையாதான் முடியும். அதான் அதை தனியா ட்ரை பண்ண போறேன். அந்த கதையோட கடைசில என்னோட விஷயங்களையும் கதையா வடிவமைச்சிருக்கேன். மூளைல இன்போர்ஸ் பண்ண பழைய மெமரி இந்த கதையோட லாஸ்டு பேஜ்கு வரும்போது என்னோட சொந்த நினைவுகள தூண்டி மறுபடியும் என்னோட மெமரிய அடைய முடியும். இது மட்டும் இல்ல இத ரிவர்ஸ்ம் பண்ண முடியும் ஒருத்தரோட மைண்டுல இருக்குற மெமரிகூட தேவையான மெமரிய சேவ் பண்ணி வெக்கவும் முடியும் அந்த ரெண்டு மெமரியும் எந்த இடத்துல கிராஸ் ஆகுதோ அப்போ அந்த மெமரியையும் ரீ கெய்ன் பண்ணமுடியும்னும் அவரோட மெமரிய நான் சேப்டியா சேவ் பண்ணி வச்சிருக்கேனு சொன்னாரு. செல்ப் ஹிப்னடைஸ் பண்ணிட்டு வெற்றியோட உங்களவந்து பாக்குறேனு சொல்லி இந்த டைரிய என் கிட்ட கொடுத்துட்டு இத அவனோட பதிமூனாவது பிறந்தநாளைக்கு என்னோட பரிசா கொடுனு சொல்லிட்டு கிளம்பினாரு. பத்து வருஷத்துக்கு மேல ஆகுது இன்னும் திரும்பி வரல. தெரிஞ்ச இடத்துலலாம் தேடி பாத்தோம் கிடைக்கல.உயிரோட இருக்காரானுகூட தெரியல. சோ அந்த கதையோட லாஸ்ட் பேஜே உங்க தாத்தா தான். அவர் வந்தாதான் அந்த லாஸ்ட் பேஜ் கிடைக்கும் என்று சொல்லிமுடிக்க நாகஸ் சிரித்தான். ஏன் சிரிக்கிற என்று அவன் அப்பா கேட்டதற்கு அப்போ இப்பத்திலிருந்து டூ லெஜன்டஸ் பை சிங்கில் மெமரி என்று கூறி சத்தத்துடன் சிரித்தான். அவன் அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அந்த டைரியோட கடைசி பக்கம் தாத்தா இல்ல அது நான்தான் என்று சொல்லி ஐ ஆம் தி லாஸ்ட் பேஜ் ஆஃப் தி புக் என்று கத்தினான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்