logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Samundeeswari Pannerselvam

சிறுகதை வரிசை எண் # 91


நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு….. இது பூர்வீக வீடு டா, 150 வருஷமா நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த வீடு இந்த வீட்டை விற்க வேண்டாம், நான் போனதுக்கு அப்புறம் நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என ராணி தன் மகன் பாலாவிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மா, என்னுடைய பொண்டாட்டியும், உங்க மகள் உமாவும் தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இருந்ததும் அடங்க மாட்டேங்குது, வந்ததும் அடங்க மாட்டேங்குது என்றான் பாலா. வீட்டின் முன்பக்கம் உங்க அப்பா கடையாக கட்டி வாடகைக்கு விட்டதால் அந்த வருமானத்தை வைத்து நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன். இந்த வீட்டை விற்று விட்டால் நான் சாப்பாட்டிற்கு என்ன செய்வேன். நான் எப்போதுமே வீட்டை விக்க மாட்டேன் மா, கவலைப்படாதீர்கள். உங்களுக்காக என் மனைவியை விட்டு பிரிந்தாலும் பரவாயில்லை என்றான் பாலா. அப்படி எல்லாம் சொல்ல வேண்டாம், என்னை விட உனக்கு அவள் தான் முக்கியம். எனக்குப் பிறகு உன்னை பார்த்து கொள்வது அவள் தானடா நீங்க பெத்து போட்டு இருக்கீங்களே, ஒரு பொண்ணு, அவளால தான் வீட்ல பிரச்சனை வந்துட்டு இருக்குது. போன வாரம் நம்ம சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போயிட்டு வந்தோம் தானே நாங்க, அப்ப உங்க பொண்ணும் வந்து இருந்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி நல்லா தானே பேசிட்டு இருக்காங்க அப்படின்னு நான் அமைதியா இருந்தேன். சிறிது நேரத்துக்கு பிறகு உங்க பொண்ணு அம்மாவுடைய நகைகள் எல்லாம் பொண்ணுக்கு தான் வந்து சேரும் அப்படின்னு சொல்ல உடனே என் பொண்டாட்டிக்கு கோவம் வந்துவிட்டது. உங்களுக்கு உங்க அப்பா செய்ய வேண்டியதாக அனைத்தையும் செஞ்சு முடிச்சிட்டாங்க. உங்க அண்ணனுக்கு என்ன செஞ்சிருக்காங்க உங்க வீட்ல ஒன்னும் செய்யல, படிச்சது என்னமோ ப்ளஸ் டூ. படிப்பு வரவில்லை என்று ஒரு மெக்கானிக் கடையில் சம்பளத்துக்கு சேர்த்து விட்டுட்டீங்க. 500 ரூபாய் சம்பளத்துக்கு போனவரு 17,000 சம்பளத்துல வேல பாக்குறாரு. என்னைய பொண்ணு பாக்க வந்தப்ப உங்க அம்மா அப்பா என்ன சொன்னாங்க தெரியுமா எனக் கேட்டாள் மனைவி. உடனே உங்க பொண்ணு உமா எனக்கு என்ன தெரியும் எனக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியாது என நைசாக ஒன்றும் தெரியாது போல நடந்து கொண்டாள். உடனே என் மனைவி இப்போதைக்கு வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறான். திருமணம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களிலே ஒரு மெக்கானிக் கடை ஒன்று வைத்துக் கொடுத்து விடுகிறோம் என்று சொன்னார்கள். இரண்டு மாதம் ஆனது மூன்று மாதம் ஆனது. இன்னைக்கு 7 வருடமே ஓடிவிட்டது. உங்க அப்பாவும் போய் சேர்ந்து விட்டார். இன்று வரை கடை வைப்பதைப் பற்றி எதுவும் பேசியது கிடையாது. எனக்கு அரசாங்க பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததால் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்க அம்மா, அப்பா எங்க வீட்டுக்காரருக்கு என்ன செஞ்சாங்க, இருக்கிறது எல்லாத்தையும் நீங்க சுரண்டி வாங்கிக் கொண்டே இருந்தால், உங்க அண்ணனுக்கு என்னை எதற்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் அப்படின்னு பேசிக்கொண்டே இரண்டு பேருக்கு சண்டை வந்துவிட்டது. நான் என்னுடைய மனைவியை சமாதானம் பண்ணி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டேன் என்றான் பாலா. நீ சொல்வதெல்லாம் புரியுதுடா, நான் பெத்த பொண்ணுக்கு காசு பணம் தான் முக்கியம், சொத்து மட்டும் தான் முக்கியம். நானும் தேவையில்லை நீயும் தேவை இல்லை. உங்க அப்பாவை ஏமாற்றி ஏமாற்றி எனக்கு கஷ்டமாக இருக்கிறது என சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் உங்க அப்பாவிடம் அஞ்சாயிரம் பத்தாயிரம் என பணத்தை வாங்காமல் போக மாட்டாள். அவளுக்கு வாச்ச கணவன் அதைவிட மோசம். வீட்டுக்கு வரும்போது எல்லாம் ஏதாவது வாங்கி வைத்திருந்தால் நல்லா இருக்கு என சொல்லி வீட்டுக்கு எடுத்துட்டு போயிட வேண்டியது. இதெல்லாம் நான் எதார்த்தம் என்று நினைத்தேன் இப்போதுதான் தெரிகிறது சரியான சொத்து பைத்தியம் என்று சொன்னாள் தாய். என் பொண்டாட்டி கேக்குற மாதிரி அவங்க ரெண்டு பேருக்கும் அரசாங்க வேலை வாங்கி கொடுத்தீங்க, எனக்கு என்ன செஞ்சிங்க. நானும் எதுவும் கேட்கவில்லை. இன்ஜினியரிங் படிக்கிறேன் என்று சொன்னதற்கு நீ எடுத்த மார்க்குக்கு அதிகமாக பணம் கொடுத்து எல்லாம் படிக்க வைக்க முடியாது. படிப்பதென்றால் டிப்ளமா படித்துக் கொள் என சொன்னீர்கள். நான் டிப்ளமோ படிக்க மாட்டேன் இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று சொன்னதற்கு பணம் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டீர்கள். ஒருவேளை சாப்பாடு போடுவதற்கு நீங்களும் அப்பாவும் சேர்ந்து என்னை எவ்வளவு பேச்சு பேசினீர்கள். அதன் பிறகு தானே இதற்கு மேல் வீட்டில் இருந்தால் மரியாதை இருக்காது என்று என்னுடைய நண்பனின் அப்பா கடையில் வேலைக்கு சேர்ந்தேன். நான் இதுவரை உங்களிடம் எதுவும் கேட்கவில்லை. காரணம் நீங்கள் இரண்டு பேருமே உங்களுடைய பொண்ணுக்கு தான் ஆதரவு கொடுத்துப் பேசினீர்கள் என பாலா தன்னுடைய மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் அம்மாவிடம் கொட்டி தீர்த்தான். நாங்கள் செய்தது தப்பு தாண்டா, எங்களை மன்னித்துக் கொள் என தாய் சொல்ல மன்னிப்பு எல்லாம் எதற்கு மா, நீங்கள் நல்லா இருந்தாலே போதும் எனக்கு. என்னால் முடிந்தவரை உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சொத்தை எனக்கு கொடுப்பீர்கள் என்பதற்காக நான் பார்க்கவில்லை. நீங்கள் எனக்கு எதுவும் தரவில்லை என்றாலும் உங்களை நான் பார்த்துக் கொள்வேன் என்றான் பாலா. சரிமா நான் கிளம்புறேன், குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரவேண்டும் என கிளம்பினான் பாலா. மகளும், மருமகளும் ஒருவேளை சாப்பாடு கொடுப்பதற்கு யோசிக்கின்றார்கள். பாவம் தான் பாலா, இருக்கிற நகையை பாலாவிடம் கொடுத்து விட வேண்டியது தான். அவனுக்கென்று எதுவும் செய்யவில்லையே என மனதில் நினைத்தவாறு பீரோவில் இருந்த 25 பவுன் நகையை எடுத்து தனியாக வைத்தாள் ராணி. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு படுத்தாள். அப்போது திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்படுவது போல இருந்தது. தன்னுடைய மகனுக்கு கைபேசியில் அழைக்க அவசரமாக ஓடி வந்தான். என்னம்மா செய்கிறது, முகம் எல்லாம் வியர்த்துக் கொட்டுகின்றதே, என சொல்லிக் கொண்டே முகத்தை துடைத்து விட்டு தண்ணீரை எடுத்து குடிப்பதற்கு கொடுத்தான் தாயால் தண்ணீரை வாங்கி குடிக்க முடியவில்லை. மகன் பாலா தண்ணீரை வாயில் ஊற்ற முழுங்குவதற்கு சிரமப்பட்டார்கள். வெளியே சென்று ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் மகன் பாலா. ராணியை பரிசோதித்த மருத்துவர் லேசான ஹார்ட் அட்டாக் என்று சொல்லிவிட்டு மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார்கள். ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் பணம் கொஞ்சம் செலவாகும் என்று மருத்துவர் சொல்ல, நீங்கள் ஆக வேண்டிய மருத்துவ சிகிச்சையை தொடருங்கள். நான் உங்களுக்கு ஒரு மணி நேரத்தில் பணத்தை கட்டி விடுகிறேன் என்று சொன்னான் பாலா. தன்னுடைய அக்காவிற்கு கைபேசியில் அழைத்து அம்மாவை கூட நிலை சரி இல்லை என்று சொன்னான். ஒரே வார்த்தையில் அப்படியா என கேட்டுவிட்டு எதுவும் பேசாமல் வைத்து விட்டாள். பாலா நேராக தன்னுடைய வீட்டிற்கு வந்து மனைவியிடம் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். பணம் ஒரு இருபதாயிரம் இருந்தால் கொடு. நான் உனக்கு பிறகு எனக் கேட்டான். மனைவியோ என்னால் ஒரு பைசா உங்க அம்மாவுக்கு செலவு செய்ய முடியாது. கூட்டு குடும்பமாக இருந்தபோது உங்க அம்மாவும் உங்க அக்காவும் சேர்ந்து என்னை என்ன பாடுப்படுத்தினார்கள். இன்னும் அதில் இருந்து நான் மீளவே இல்லை. அவர்களுக்கு வயசாகிவிட்டது, அவர்கள் இருந்து என்ன செய்யப் போகிறார்கள். அதெல்லாம் ஆப்ரேஷன் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். அரசாங்க ஆஸ்பத்திரியில் வைத்து வேண்டுமானால் பாருங்கள் என சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறினான். தன்னுடைய அக்காவிற்கு கைபேசியில் அழைத்து பணம் 20000 ரூபாய் அம்மாவுடைய மருத்துவ செலவுக்கு கொடு. நான் உனக்கு பிறகு கொடுக்கிறேன் என்றான் பாலா. அவ்வளவு பணம் எல்லாம் இல்லடா, ஐந்தாயிரம் வேண்டுமானால் தருகிறேன். இந்தப் பணமே என்னுடைய தோழியிடம் இருந்துதான் வாங்கி தருகிறேன். இந்த பணத்தை என்னுடைய கணவருக்கு தெரியாமல் தான் வாங்கி தருகிறேன் என்றாள் அக்கா. அம்மாவை பார்க்க சாயங்காலம் வருவேன் அப்பொழுது உன்னிடம் பணத்தை கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு கைபேசியை வைத்து விட்டாள் உமா. பணத்துக்கு அங்கே இங்கே ஏற்பாடு செய்து தன்னுடைய கடை முதலாளியிடம் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக், அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டும் என்பதால் பணம் தேவைப்படுகிறது. என்னுடைய சம்பளத்தை எனக்கு கொடுக்க வேண்டாம் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னான் பாலா. சொன்ன அடுத்த நிமிடமே நீ வீட்டுக்குப் போ, நான் என் மனைவியிடம் சொல்கிறேன் அவர்கள் பணம் கொடுப்பார்கள் நீ வாங்கிக் கொண்டு அம்மாவுடைய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய். மேலும் தேவைப்பட்டால் தயக்கமில்லாமல் கேள். என் பையன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ரத்தம் கொடுத்து, ஒரு கிட்னியும் கொடுத்து என் பையனை நீ காப்பாற்றினாய். நீ காப்பாற்றியதால் இன்று என் பையன் உயர்ந்த பதவியில் நல்ல சம்பளத்தோடு வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் என் பையன் என்னிடம் கைபேசியில் அழைத்து பேசும்போது பாலாவுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான். இதை விட்டால் உனக்கு வேறு என்ன கைமாறு செய்யப் போகிறேன், என்று முதலாளி சொல்ல உடனே காலில் விழுந்து நன்றியை வெளிப்படுத்தினான் பாலா. நான் உங்களிடம் பலனை எதிர்பார்த்து உதவி செய்யவில்லை. என்னுடைய நண்பனாக அவனுக்கு உதவி செய்தேன். என்னுடைய நண்பனுக்கு கிட்னி கொடுத்ததற்காக பணம் கொடுப்பது போல் இருக்கிறது. எனக்கு உங்களுடைய பணம் வேண்டாம். நீங்கள் சொன்னதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். பணத்தை வேறு எங்கேயாவது நான் முயற்சி செய்து வாங்கிக் கொள்கிறேன் என்றான் பாலா. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை டா, புரிஞ்சிக்கோ. என்னுடைய கடையில் எத்தனை வருடமாக வேலை செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையை எடுத்து உன் பெயருக்கு எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அது உன்னுடைய உழைப்பிற்கு உண்டான பணம். நான் பொய் சொல்லவில்லை. உண்மையை தான் சொல்கிறேன். நீ வீட்டிற்கு சென்று என்னுடைய மனைவியிடம் போய் கேட்டு பார். உன் பெயரை போட்டு ஒரு பெட்டியில் உனக்கான பணத்தை அதில் சேமித்து வைத்திருக்கிறேன். நான் இறக்கும் தருவாயில் இந்த பெட்டியை உன்னிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது உன்னுடைய அம்மாவுக்காக உன்னுடைய பணத்தை கொடுக்கிறேன் எவ்வளவு இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அதில் இருக்கும் பணத்தை நீ வைத்துக்கொள் என்று முதலாளி சொல்ல, சரிங்க முதலாளி நீங்கள் சொல்வதற்கு நான் மறுபேச்சு பேச மாட்டேன் சந்தோசமாக நான் வாங்கிக் கொள்கிறேன் என்றான் பாலா. இரண்டு பேருமே சேர்ந்து வீட்டிற்கு போவோம் என்றார் முதலாளி. அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று விட்டு வரலாம் என்று இருவரும் வீட்டுக்கு சென்றார்கள். பிறகு வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து பாலாவிடம் கொடுத்து இதை வைத்து முதலில் உன்னுடைய அம்மாவிற்கு சிகிச்சையை செய் என சொன்னார் முதலாளி. அதற்கு முன் உனக்காக சேமித்து வைத்த பணத்தை பார்த்துவிட்டு செல் என்று கூறி மேலே மாடிக்கு பாலாவை அழைத்து சென்றார் முதலாளி. அங்கே பெரிய ஒரு தகர பெட்டிக்குள் ஒரு சின்ன பெட்டியை வைத்து சிறிது சிறிதாக பணம் சேமித்து வைத்துள்ளதை காண்பித்தார் முதலாளி. இதைப் பார்த்த பாலா கண்களில் கண்ணீர் வந்தது. நீங்கள் எல்லாம் எனக்கு தெய்வம் சார், இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். கட்டின மனைவியோ அம்மாவை பார்க்க வர முடியாது என்று சொல்லிவிட்டாள். கூடப்பிறந்த அக்காவோ 5000 தருகிறேன் அதை வைத்து பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டார்கள். என்ன செய்வது என தடுமாறிய பொழுதுதான் உங்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என யோசனை வந்தது. என் உயிருள்ளவரை உங்களுக்கு என்றுமே பக்க பலமாக இருப்பேன், நீங்கள் விரட்டினாலும் சம்பளம் கொடுக்கவே இல்லை என்றாலும் நான் உங்க கடையை விட்டு போக மாட்டேன் என்றான் பாலா. எனக்கு பிறகு அந்த கடைக்கு முதலாளி நீ தான் பாலா என சொல்லிவிட்டு பாலாவின் அம்மாவை பார்க்க இருவரும் மருத்துவமனைக்கு சென்றார்கள். முற்றும்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.