லாவண்யா பெரியசாமி
சிறுகதை வரிசை எண்
# 58
கருப்பு கவுன் மற்றும் வெள்ளை நிறத்தில் சட்டை அணிந்து கருப்பும் வெள்ளையும் கலந்து காவி நிறத்தை நிரவி இருக்கும் ஒரு ஒழுக்கமான இடத்தில, அனைத்து விதமான மனிதர்கள் நிறைந்து வழிகிற பொழுது யாழ் ஒன்றாம் தளத்தை நோக்கி காலை பத்து மணி ஆனது என்று தன் கை கடிகாரத்தில் பார்க்கிறாள். இன்னும் வேகமாக ஓடுகிறாள். அவளுக்கு விவாகரத்து ஹியரிங். அமர்வதற்கு இருக்கை இருக்குமா என்று அங்கு இருக்கும் ஒரு பெஞ்ச் மற்றும் நான்கு சேர் மட்டுமே உள்ளது. அதை நிரம்பி மனிதர்கள் அமர்ந்திருக்கின்றனர். இவளின் பெயரை எப்பொழுது அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் தான், அமர்வதற்கு இருக்கையையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அன்று மாதவிடாய் நாளின் முதல் நாள். வயிறு வலிக்கிறது. சூடு பிடித்தாற் போல பிறப்புறுப்பின் வலியும் அதிகம். சரி. இத்தனை கூட்டமாக இருக்கிறது. அங்கிருந்த வக்கீல்கள் ஜட்ஜ் லீவு போல. அங்கு இருக்கையில் அமர்ந்திருந்தவர்களும், சாம்பேர்க்கு வெளியில் நின்று கொண்டிருந்தவர்களும் ஜட்ஜ் லீவு போல என்று சொல்லிக்கொண்டிருந்தனர். வக்கீலும் இன்னும் வரவில்லை. வக்கீலின் எண்ணுக்கு "ஜட்ஜ் இன்னிக்கு இன்னும் வரல. ஜட்ஜ் லீவு போல மேம்" என்று வக்கீலின் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்புகிறாள். "மேம். ஐ ஏம் ஆன் தி வே. இன்னும் 5 மினிட்ஸ்ல வந்துருவேன்" என்கிறாள் அவளின் வக்கீல். ஐயோ. ஒருவர் எழுந்தார். வக்கீலுடன் உரையாடி கொண்டிருந்த தருணத்தில், இருக்கையில் அமர மறந்துவிட்டாள். இவளின் கால்கள் மிகவும் வலிக்கிறது. அன்று காலை எந்த உணவும் உட்கொள்ளவில்லை. பசியும் மாதவிடாயும் இரண்டும் சேர்ந்து இவளை துன்புறுத்துகிறது. ஒரு பேட் மட்டுமே அணிந்திருந்தாள். இரண்டும் சேர்ந்து வைத்திருந்தால் உடையில் படாமல் இருந்திருக்கும். இப்பொழுது ரத்தம் அதிகமாக தொப்பென்று இவளின் உள்ளாடையில் விழுகிறது தெரிகிறது. அது பேட் மீது விழுந்து அது பேண்ட் மீது விழுகிறது போல உணர முடிகிறது. ஒரு வேளை துணியில் பட்டுவிட்டால் யாரேனும் பார்த்திரக்கூடாது. எப்படி ஆட்டோவில் போவது? ரத்தம் படிந்த துணியில் ஆட்டோவில் அமரும் பொழுது அவரின் வண்டியில் உள்ள சீட்அசுத்தமாக ஆகிவிடுமே. கோர்ட்-யில் வீடு பிரச்சனை, நிலம் பிரச்சனை, ஹெல்மெட் கேஸ், அலுவலக பிரச்சனை, சொத்து தகராறு மற்றும் விவாகரத்து சம்மந்தமானது இந்த சேம்பேரிலும் அருகில் உள்ள சேம்பேரில் க்ரைம் சம்மந்தமானது இருக்கிறது. அங்கு வருவர்கள் கொலை கொள்ளை சம்மந்தமான கேஸ் நடக்கிறது. இந்த சேம்பேர்-க்கும் க்ரைம் சேம்பேர்-க்கும் இடைவேளி இருந்தாலும் அந்த சேம்பேர் மிகவும் மௌனம் மட்டுமே காத்திருந்தது. இந்த சேம்பேர்-க்கு வெளியே நின்றிருந்த பெண்கள், தங்களின் முகத்தை முகமூடி போல மூடி வைத்தும், மாஸ்க்-உம் அணிந்திருந்தார்கள்.
அதில் ஒரு பெண், அவளின் கருப்பு துணியால் அவளின் தலை முடியும், முகமும் மூடியும், மூக்கில் சிறிதளவு மூச்சு விடுவதற்கு கூட இடமில்லாது மாஸ்க் அணிந்திருந்தாள். அவள் யாழை நோக்கி வருகிறாள். "ப்ளீடிங் துணியில ஆயிடுக்குமோ. அது சொல்றதுக்கு தான் இவங்க என் பக்கத்துல வராங்களா" என்று யாழ் தன் மனதில் பேசிக்கொண்டே அந்த கருப்பு துணி போட்டிருந்த பெண்ணை பார்க்கிறாள். "நீங்க எதுக்கு வந்திருக்கீங்க" என்று யாழிடம் அந்த பெண் கேட்கிறாள். "டைவோர்ஸ் காக வந்திருக்கேன்" என்றாள். "சேம். நானும் அதுக்கு தான் வந்துருக்கேன்" என்றாள் அந்த கருப்பு துணி போட்ட பெண். "எனக்கு இன்னிக்கு லாஸ்ட் ஹியரிங். அவ்வளவு தான். இந்த பச்சை சட்டை போட்ருக்காருல. அவரு தான் என்ன கொடுமை படுத்தினவன்" என்கிறாள் அந்த கருப்பு துணி போட்ட பெண். "ஓ. பாருங்க. உங்களோட டாப் கலர்-உம் பச்சை. அவரும் பச்சை. எவ்வளவு ஒற்றுமை. சேம் பின்ச் சொல்லிக்கோங்க" என்று நக்கல் அடித்தாள் யாழ். "உங்களுக்கு இந்த இடத்துலயும் ஒரு ஹுமர் சென்ஸ் ங்க. எனக்கு (mutual divorce). ஏதும் காசு வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். பொண்ணு குழந்தை. அதுனால, ரொம்ப சந்தோஷாம்ன்னு வந்து கையெழுத்து போட்டுட்டாங்க. இன்னிக்கு ஜஸ்ட் ஜட்ஜ் பார்த்தா போதும்ங்க. அப்புறம் டிக்ரீ பேப்பர் கைல கிடைச்சுரும். சாரி. உங்கள பத்தி எதுவும் நான் கேட்கல பாருங்க. உங்களுக்கு இது எத்தனவாது ஹியரிங்?" என்று கேட்கிறாள் அந்த கருப்பு துணி போட்டிருந்த பெண். "நான் கண்டென்ஸ்ட் பைல் பண்ணிருக்கேங்க. அவங்க தான் கோர்ட்க்கு வர்ரதில்ல. பாக்கலாம். இனிக்கும் அவங்க வரலைனா எனக்கு எக்ஸ் பார்ட்டி குடுத்துருவாங்க. வெயிட் பண்ணி பாப்போம். ஜட்ஜ் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலீங்க. நீங்க ஜாப்க்கு போறீங்களா?" என்று கேட்டாள் யாழ். "ஒர்க் பிரம் ஹோம் பணறேங்க. ஐடி - ல தான் ஒர்க் பண்றேன். ஒரு பொண்ணு குழந்தை. அவளுக்காக தான் ஒர்க் பிரம் ஹோம். சம்பளம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை ன்னு குழந்தையும் பாத்துட்டு வேலையும் பாக்கறதுக்கு கொஞ்சம் ஈசியா இருக்குங்க. இவருக்கு பொண்ணு குழந்தைன்னு பிடிக்கலங்க. அதுனாலயே சொல்லி சொல்லி காமிச்சு ரொம்ப பிரச்சனை பண்ணாங்க. இவரு நல்லவரு தான் ங்க. இவங்க அம்மா அப்புறம் இவங்க வீட்ல இருக்கறதுங்கலாம் ஏத்தி விட்டு ஏத்தி விட்டு தான் இங்க வந்து நிக்கறோம். ஒரு தடவை இவங்க யோசிச்சுருந்தாருன்னா ஒரு தடவை இவரு எனக்கு சப்போர்ட் பண்ணிருந்தாருன்னா நாங்க இந்த இடத்தில வந்து நிக்க மாட்டோம்ங்க. நமக்கு காசையும் தாண்டி அந்த சாயிந்திறம் வேலை எல்லாம் முடிச்சுட்டு, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, தூங்க வைச்சுட்டு, சூரியன் மறைய மறைய அந்த தனிமை வந்து அதிகமாயிடுதுங்க. வேற என்னங்க நம்மலாம் எக்ஸ்பெக்ட் பண்ண போறோம்? ஒரு ஹக், ஆறுதலா நாலு வார்த்தை, யாருகிட்டயும் நம்மள விட்டுக்கொடுக்காம பேசினா போதும்ல. இப்போவே அடுத்த கல்யாணத்துக்கு ஏற்பாடு அவர்க்கு நடந்துட்டு இருக்குதுங்க. நோ காண்டாக்ட் டைவோர்ஸ். இனிமேல் அவரு என்னையும் என் குழந்தையும் எப்பயுமே பாக்க மாட்டாரு. இதுக்கு எதுக்குங்க இந்த கல்யாணம். குழந்தைலாம். குழந்தைக்காகன்னு எந்த தப்பான முடிவு தோணுனாலும் எடுக்கலைங்க. நமக்கு ஒரு துணை வேணும்லங்க. பொண்ணு குழந்தை. என்னையும் குழந்தையும் யாரு முழுசா ஏத்துக்கிட்டு வரங்கன்னு தெரியலே. ஆனால் அந்த தனிமை டெய்லி என்ன ஒரு மாதிரி பண்ணிட்டு இருக்குங்க. என்கூட ஒர்க் பண்றவங்க கூடலாம் வெச்சு சந்தேகமா பேசினாரு. என்னைய அசிங்கமா கண்டாரோலி, தேவிடியா ன்னு பேசிட்டாருங்க. இத்தனை வருஷம் இந்த வார்த்தை பேசினதில்லைங்க. நானும் பாப்பாக்காக பாப்பாக்காக ன்னு விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து போனேங்க. எப்போ என்னய்ய நீ உயிரோட இருக்கறதுக்கு பதிலா செத்து போ ன்னு சொன்னாரோ அப்போ முடிவு பன்னிட்டேங்க. வேண்டாம். நான் எனக்காக வாழணும்ன்னு. எனக்கு நான் வேணும்ங்க. இது என்னங்க இப்படி? இவன் எத்தனை பேரு கூட போனான்னு நான் கேள்வி கேட்ருப்பேனா? நான் நம்பிக்கை வெச்ச மாதிரி ஏன் இவனால நம்பிக்கை வைக்க முடியலீங்க. ஒரு மாதிரி ஆய்டுச்சுங்க. என்ன அடிக்கடி கண்டாரோலி ன்னு சொல்லிட்டே இருந்தப்போ. 23 வயசு வரைக்கும் எனக்கு கெட்ட வார்தைன்னா என்னனு தெரியாம வளந்துட்டேங்க. இப்போ திடீர்னு இவ்வளவு அசிங்கமான கெட்ட வார்த்தைய கேட்கறப்போ மனசு ரொம்ப பாதிக்குது. இந்த மாதிரி வார்தைலாம் பாப்பாக்கு இந்த வயசுலயே தெரிய கூடாதுன்னு நான் தான் முதல்ல டைவோர்ஸ் பைல் பண்ணேங்க. ஒரு டைம் கூட நான் மாறிடறேன். எனக்கு மாறதற்கு சான்ஸ் குடுன்னு கேக்கவே இல்லங்க. இதுவே பயன் புறந்துருந்தா எங்களுக்கு ஒத்து வராம இருந்திருந்தா பயனையும் என்னையும் பிரிச்சுருப்பாங்க. நல்ல வேளைக்கு எனக்கு பொண்ணு. என் பாப்பாக்காக தான் நான் டைலி வாழ்ந்துட்டு இருக்கேன். அவ தாங்க எனக்கு எல்லாமே. பிலே ஸ்கூல் சேர்த்து விட்டேன். இனிமேல் அவ்ளோதான் க்ளியரா இருக்கேன். நாளைக்கு எனக்கு ஏதாச்சு பயன் என்னையும் பாப்பாவையும் யார் முழுசா ஏத்துக்கிட்டு வாரங்களோ அவங்க கூட லைப் ஷேர் பண்ணுவேன். அப்டி இல்லனா அவ்ளோதான். பாப்பா நல்லபடியா படிக்க வெச்சு, வேலை வாங்கிட்டானா அவ அவ லைப் அ டிசைட் பண்ணிட்டு அவ செட்டில் ஆயிட்டா எனக்குன்னு ஒரு ரிட்டைர்மென்ட் ஹோம்-ல போய்ட்டு இருந்துக்கணும். அவங்க எல்லாமே டேக் கேர் பண்ணிப்பாங்க வயசானவங்கள. இங்க காசு தாங்க எல்லாமே. காசு இருந்துட்டா போதும். சந்தோஷமா இருக்கலாம்" என்று பேசி பெருமூச்சு விடுகிறாள். ஒரு ஆண் வக்கீல் இவளை நோக்கி வருகிறார். "ஜட்ஜ் இன்னிக்கு லீவு. சோ உங்க நெக்ஸ்ட் ஹியரிங் அடுத்த மாசம் 11 - ஆம் தேதி" என்கிறார். இந்த பெண் யாழிடம் "ஜட்ஜ் லீவு ஆங்க. அடுத்த மாசம். சரி. நீங்க பாருங்க. பாய்" என்று சொல்லிவிட்டு நகர்கிறாள்.
ஒரு இருக்கை கிடைத்துவிட்டது அமர்வதற்கு. இருந்தாலும் அமர்ந்தால் ரத்தக்கறை பட்டுவிட்டால் என்ன நினைப்பாங்க. வேண்டாம். நின்னது நின்னுட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் தான். இன்னும் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ. அப்படியே நின்னுட்டே போயிருவோம். இவளின் வக்கீல் வந்துவிட்டார். "மேம். ஜட்ஜ் இன்னிக்கு லீவு-ஆம். நெக்ஸ்ட் ஹியரிங்க்கு இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான். 17 - ஆம் தேதி. பாக்கலாம்ங்க மேம். நம்ம கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் எக்ஸ் பார்ட்டி வாங்கிக்கலாம்ங்க. நீங்க எதுவும் ஒர்ரி பண்ணிக்காதிங்க" . "ஓகே மேம். தேங்க யூ" என்று சொல்லி கண்கள் இரண்டும் மயக்கம் வரும் தருணத்தில், அப்படியே கஷ்டப்பட்டு படிக்கட்டுகளில் நடந்து வெளியே சென்றவுடன், ஒரு ஆட்டோ அண்ணா இவளுக்காகவே காத்திருந்தது போல இவளை பார்த்தபடி இருந்தார். "வாங்க ம்மா. எங்க போகணும்? போரூர்-ங்க அண்ணா. எவ்வளவு ?" "நீங்க பாத்து போட்டுக்கோங்க ம்மா. ஏறுங்க" என்றார். "எவ்வளவு ங்க அண்ணா?" "ஒரு 150 குடுங்க" என்றார். "ஓகே... என்று ஆட்டோவில் ஏறி அமர்ந்த பிறகும், ஏதோ ஒரு நெருடல். ரத்தக்கறை பட்டிருக்க கூடுமா? என்றெல்லாம். பட்டுட்டா அவர்கிட்ட என்னன்னு சொல்லி சீட்-அ கிளீன் பண்றது. சரி. பாப்போம். இன்னும் கொஞ்ச நேரம். வீட்டுக்கு போய்ட்டா பாத்துக்கலாம். எது மீதும் கவனம் செலுத்த முடியவில்லை. கோர்ட்-இல் தனிமையை மறப்பதற்கு ஒரு புத்தகம் கொண்டு போகலாம் என்று பையில் வைத்திருந்த புத்தகத்தை வாசிக்கவும் மனமில்லை. சில தருணங்களில் மனம் புத்தகங்கள் வாசிக்க மறுக்கிறது. சில தருணங்களில் மனம் பாடல்கள் கேட்க மறுக்கிறது. அந்த தருணத்தில் மனதுக்கு பிடித்த ஆறுதலான குரலை மட்டுமே தேடுகிறது. இவளின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. "எல்லாம் ஓகே - ஆ" என்று. "இல்ல. ஜட்ஜ் லீவு. நான் அவ்வளவு தான் வீடு பக்கத்தில போய்ட்டேன். சாயிந்திரம் பேசறேன்" என்று துண்டித்து விட்டாள். "அண்ணா... இந்த சிகப்பு பில்டிங் தான். ஆஹ். இங்கயே நிப்பாட்டுங்க. ஜிபே பண்ணிரட்டுமாங்க அண்ணா". "இல்லம்மா. கேஷ் ஆ குடுத்துருங்களேன்" . "சரிங்க அண்ணா... ஒரு நிமிஷம்... இந்தாங்க அண்ணா".
மனதில் ப்ளீடிங் சீட்ல பட்ருக்க கூடாது என்று பார்த்தாள். அதே போல படவில்லை. வேகமாக அவளின் வீடு மூன்றாம் தளத்தில் இருக்கிறது. இன்னும் வேகமாக ஓடுகிறாள். இரண்டு படிகளை தாண்டி தாண்டி ஏறுகிறாள். வீடு வந்தது. இல்லை. இவள் வீட்டை அடைந்தாள். கதவை திறந்து, வீட்டிற்குள் சென்றவுடன் நேராக கழிவறை அறையை நோக்கி செல்கிறது இவளின் கால்கள். பேண்ட் - ஐ கழட்டி ஹால் ரூமில் வீசுகிறாள். ஒரு சொட்டு ரத்தம் படவில்லை.
பெண்கள் எங்கு சென்றாலும், மாதாவிடை காலம் என்றால், எவ்வளவு நவீனம் வளர்ந்தாலும் பரீட்சை எழுதும் பொழுதும், இன்டெர்வியூ பொழுதும், முக்கியமான நாட்களில் மாதாவிடை என்றால் அந்த அச்சம் அவர்களுள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்