ஹரி
சிறுகதை வரிசை எண்
# 53
திருநாள்.
.... ஹரி
இரவெல்லாம் நல்ல மழை ஆகையால் சற்று தாமதமாகவே கரிச்சான் ஒலி எழுப்பியது. சூரியனும் சற்று மங்கலான ஒளியோடு எழுந்து வந்தான். ரஜினியின் தாய் கஞ்சி காச ஈரஅடுப்போடு மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தாள், குடிசையை விட்டு ரஜினி எழுந்து வெளியே வந்தான், அம்மோவ்.. வயிறு பசிக்கி என்றான். இங்க அடுப்பே எரியல உனக்கு வயித்துல ஒல கொதிக்குதா.. என்று கடிந்து கொண்டு வந்தால், அவன் கோபமாக குடிசைக்குள்ளே சென்றான் அங்கு படுத்து இருந்த அவன் தங்கையையும், இரண்டு தம்பிகளையும் ஓங்கி மிதித்தான், அவர்கள் அழ தொடங்கினர் பின்பு தன் உண்டிகோலை கையில் எடுத்து கொண்டு வெளியே வந்தான், அதுங்கள எதுக்கு டா அடிச்ச பாவி என்று அவள் தாய் கத்திக்கொண்டு இருந்தாள், அதை காதில் வாங்காமால் வேகமாக சென்றான்.
வயல் வரப்புகளில் ஏதாவது எலி மாட்டிஇருக்கிறதா என்று பார்த்தான் ஒன்றும் இல்லை, அதற்குள் வயலுக்கு சொந்த காரன் பார்த்து விட்டான், நீ வரப்ப நோண்டி,நோண்டி வை உன்னோட கால உடைக்க போறான், என்று அவர் ஒரு பக்கம் கத்தி கொண்டு இருந்தார், அவன் அதையும் கண்டுக்காமல் அப்படியே கொஞ்ச நேரம் சுற்றி விட்டு மறுபடியும் குடிசைக்கு சென்றான். அம்மோவ் கஞ்சி ஆச்சா என்றான், அவள் பேசாமல் இருந்தாள், இவன் மெல்ல அவள் அருகே சென்று குண்டானை எட்டி பார்த்தான் கொதித்து கொண்டு இருந்தது, பின்பு வேகமாக ஓடினான், அவர்கள் குடிசைக்கு சற்று தூரம் தள்ளி தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு கிழவி ஊருக்கு வெளியே குடிசை போட்டு இருந்தாள். குடிசைக்கு வெளியே நின்று கொண்டு ஆயோவ், ஆயோவ்.. என்றான், உன்ன எமன் தூக்கிட்டு போவ எதுக்கு டா தீபாவளி அதுவுமா இங்க வந்து கத்திக்கிட்டுஇருக்க என்று புளம்பி கொண்டே கிழவி குடிசை விட்டு வெளியே வந்தால். கஞ்சிக்கு கடிச்சிக்க ரெண்டு ஊறுகா பெத்த கொடு ஆயோ என்றான். கிழவிஅதுலாம் இல்ல போ.. என்றால். அவன் நகராமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். பின்பு கிழவி சரி ஒரு குடம் தண்ணி கொண்டு வா தாரேன் என்றால், அவன் குடத்தை வாங்கி கொண்டு ஓடினான், தூரத்தில் வெடி சத்தம் கேட்டது இன்னக்கி தீபாவளி தா போல என்று எண்ணி கொண்டான், தண்ணீர் மோந்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு கை நீட்டினான் அவள் கவனமாக ஜாடியில் இருந்து இரண்டு பெத்தை மட்டும் எடுத்து அவன் கையில் வைத்தால், அவன் அதே மூச்சோடு குடிசைக்கு ஓடி வந்தான், அதற்குள் அவர்கள் அனைவரும் எழுந்துவிட்டு இருந்தனர். இரண்டு ஊறுகாயை, நான்காக பங்கிட்டான் எண்ணி கொடுத்து விட்டு தான் ஒன்று எடுத்து கொண்டு கஞ்சியை குடித்து முடித்தான்.
பின்பு மொட்டை பாறையில் படுத்து கொண்டு மேகத்தை காட்டி அவன் தம்பி தங்கைகளுக்கு கதை சொல்லி கொண்டு இருந்தான், இது சிங்கம், இது நாயி, இது எலி என்று அவன் சொல்ல சொல்ல அவன் தங்கை வியந்து பார்த்தால்.
உச்சி வெயில் வந்தது ஒரு பெரிய குண்டானை எடுத்து கொண்டு அவன் தாய் அவனையும், அவன் தங்கையையும் அழைத்து கொண்டு ஊருக்குள் சென்றால்.
ஊருக்குள் சென்றதும் ஒவ்வொரு வீடாக அம்மா, சாமி என்று கூப்பிட்டால், அவர்கள் ஒரு கொழுக்கட்டை, ஒரு வடை போன்றவற்றை அவள் வைத்திருந்த பாத்திரத்தில் இட்டனர். சிலர் பொழுது வெடிந்தா போது நல்ல நாள் அதுவுமா வந்துடவேண்டியது என்று வசையும் பாடினர்.
அவனும் அவன் தங்கையும் ஆசையாக புத்தாடை போட்டு வெடி வெடிக்கும் பிள்ளைகளை பார்த்தபடியே வந்தனர். யாரோ கொடுத்த அழுக்கு உடையைஇவர்கள் அணிந்இருந்தனர், சட்டென அவன் கண்கள் கலங்கி குளம் போல் நின்றன இது எல்லாம் எனக்கு கிடைக்காது, என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டான் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஒழுகி விடும் என்பது போல ததும்பி நின்றது.
அவன் மனதில் ஒரு முகம் வந்தது வேகமாக ஓட தொடங்கினான், அவனை தொடர்ந்து அவன் தங்கையும் ஓடினாள், அவன் தாய் எங்கடா போற..என்று கத்தினாள், அவன் நீ போ நான் வர என்று சொல்லிவிட்டு மேலும் ஓடினான், அவன் சென்று ஒரு வீட்டின் முன் நின்றான், அந்த வீடு வாத்தியார் வீடு, அவர் அந்த ஊர் தொடக்க பள்ளியின் வாத்தியார், அவர் தான் இவர்கள் ஒரு வேலை கஞ்சிக்காக சிபாரிசு செய்து ரேஷன் அட்டை வாங்கி தந்தார், பின்பு பள்ளிகூடதிற்கு அழைத்தார் ரஜினியும் சென்றான் யாரும் இவனோடு பேசவில்லை ஆகையால் அதை நிறுத்திவிட்டான்.
வாத்தியாரின் மகன் வெளியே வந்து எட்டி பார்த்து விட்டு அப்பா "சம் ஒன் கம்மிங் " என்றான் அவர் வெளியே வந்தார் அவனையும், அவன் தங்கையையும் பார்த்து விட்டு என்ன டா? என்றார். அவன் ஏதும் பேசாமல் நின்றான் பின்பு அவர் உள்ள வா என்றார், இல்ல இங்கயே இருக்கேன் என்றான். சாப்பிடுரியா என்றார் அவன் ம்.. என்றான்.
பின்பு அவர்களை திண்ணையில் உட்காரவைத்து அவர் மனைவி இலை போட்டார்கள் சுட சோறு வைத்து கறியும், மீனும் வைத்தனர் அதை அவன் ஆச்சிரியமாக பார்த்துக்கொண்டு இருந்தான், அவன் தங்கச்சி காதில் வயிறு நெரம்ப சாப்டுக்கோ அப்புறம் கிடைக்காது என்றான். அவளும் தலை அசைத்தால், கைநிறைய வாரி வாய் நிறைய உண்டான். சாப்பிட்டு முடித்ததும் அவர் இருவர் கையிலும் ஸ்வீட் கொடுத்தார் என்ன என்று தெரியாமல் திருப்பி, திருப்பி பார்த்து கொண்டு இருந்தான், அவள் அதற்குள் வாய்க்குள்போட்டு விட்டு அண்ணா இனிக்குது என்றால். அவர் பால்கோவா டா சாப்பிடு என்றார். அவன் வாயில் போட்டு கொண்டான்.
பின்னால் கைகழுவி விட்டு வாசனை வருகிறதா என்று மோந்து பார்த்தான் வாசனை வந்தது , சாட்சிக்கு தங்கச்சி இருந்தாலும் அவன் தம்பிகளிடத்தில் வாசனை காட்டினால் அவனுக்கு ஒரு கெத்து.
பின்பு வாத்தியார் இருவரையும் அழைத்தார், வீட்டிற்குள் அவர் மகன் "ஐ ஹேட் யூ" அப்பா என்றான், அவர் நான் உனக்கு அடுத்த மாசம் நீ கேட்ட பிலே ஸ்டேஷன் வாங்கி தரேன் இப்போ இந்த டிரஸ்ச கொடு என்று சொல்லி கொண்டு இருந்தார் சரி இந்தா என்றான். அதை வாங்கி கொண்டு கொஞ்சம் பட்டாசும் ஒரு பையில் போட்டு கொண்டு வெளியே வந்தார். இருவரையும் பார்த்து பள்ளிகூடத்துக்கு சரியா வருவியா என்றார். அவன் அமைதியாக இருந்தான் வரேன்னு சொன்ன இத உனக்கு தரேன் என்றார், வரேன் வாத்தியாரே என்றான் அப்போ இந்தா என்று குடுத்தார் அவன் வாங்கி அவசரம் அவசமாக பிரித்து பார்த்தான், இருவரும் எல்லா பற்க்களும் தெரிய சிரித்தனர். பின்பு ஐம்பது ரூபாய் எடுத்து அவன் கையில் கொடுத்து சோப்பு, சீப்பு எல்லாம் வாங்கிக்கோ குளிச்சிட்டு சுத்தமா வா,அவன் சரி என்று தலை அசைத்தான், சரி போ என்றார். இருவரும் புன்னகைத்த படியே அந்த புது துணி வாசனையை நுகர்ந்து கொண்டே சென்றனர்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்