logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Dinesh R

சிறுகதை வரிசை எண் # 40


மைரு: காலைல அம்மா செஞ்ச வறுத்த தக்காளி சோத்த சாப்புட நேரம் இல்லாம டிபன் பாக்ஸ்ல போட்டுக்கிட்டு பள்ளிகொடத்துக்கு நேரமாச்சுனு வடிச்ச சோத்து கஞ்சு மட்டும் குடிச்சிட்டு இருந்தன். அம்மா வேற ஒரு பக்கம் திட்டிக்கிட்டே இருந்துச்சு காலைல சாப்படாம போறனு, நான் எதையும் காதுல வாங்கல. “யம்மா நான் தான் பாக்ஸ்ல போட்டு எடுத்துகிட்டல கிளாஸ்ல போய்ட்டு பிரேக்ல கொஞ்சம் சாப்புட்டுக்கற, மதியமும் சாப்புட்டுக்கற” னு ஒருவழியா எங்க அம்மாவ சமாதானம் பண்ணிட்டு நண்பர்களோட கெளம்பிட்டேன். நான் ஏழாவுது படிக்கிற. எனக்கு தக்காளி சோறுனா ரொம்ப பிடிக்கும். நேத்து நைட்டு பேஞ்ச தூக்க மழைல வெறவுலாம் வேற நெனஞ்சு போச்சு. அடுப்பும் கூட நெனஞ்சு போச்சு. காலைல அம்மா வாச கூட்டலானு வழக்கம் போல எந்திரிச்சி வந்துச்சி, “இந்த சண்டாள மழை இப்படி பழியெடுத்து புடிச்சே” னு ஒரு பக்கம் புலம்பிட்டு இருக்க, ராஜாமணி பெரிமா சந்தோஷமா வந்துச்சு. “கடவுள் புண்ணியத்துல எப்படியோ மழை பேஞ்சுருச்சு, மேட்டு காடுலா ஓட்டி, கல்ல கொட்டய வெரய்குற வேலைக்கு வறியா” னு கேக்க, “பையனுக்கு சோறு ஆக்கி தருனும், நேரமாய்ரும் நான் வரலக்கா” னு சொல்ல, ராஜாமணி பெரிமா பக்கத்து வூட்டுல ஆள கூப்ட போய்ருச்சு. எங்கம்மாவும் ஒருவழியா வாசல கூட்டி முடிச்சிருச்சு, எங்க வீட்டுல மண்ணடுப்பு தான். இப்ப அடுப்ப பத்த வெச்சு சோறு, கொளம்பு செய்யனும், வீட்டுல இருக்குற மினுக்கு காயுதம்லா பொருக்கி தீக்குச்சி உரசி பத்த வெச்சா, குச்சி எறியர வரைக்கும் தான் காயதம் உருகி எறியுது அப்புறம் தீ அனஞ்சு பொக மட்டும் தான் வருது. இதையே எங்கம்மா அஞ்சு, ஆறுவாட்டி பண்ணிக்கிட்டே இருந்துச்சு. இதுனால ஈரமான அடுப்பு கொஞ்சமான பொகைலயும் சின்ன தீயிலியும் ஈரம் போயி வெது வெதுப்பா ஆச்சு. நான் நல்லா போர்வய மூடி கயித்து கட்டுல படுத்துட்டு இருந்தன், “முகிலா…..முகிலா…..எழுந்துருபா சாமி சாமியா இருப்ப” னு கூப்டுட்டு இருக்க நானும் போர்வைய உதறிட்டு கண்ணுல வெரல வெச்சு உறிட்டிகிட்டே எழுந்து போய் அடுப்புக்கு பக்கத்துல அங்கங்க சின்ன சின்னதாக நுனிங்கி கரி படிஞ்சு இருந்த டேக்ஸ்வுல முழுசா நிரம்பி இருந்த தண்ணில அஞ்சு விரலயும் சேத்து மேலாவ வாரி வாயில் ஊத்தி கொப்பளிச்சி தண்ணீரை துப்பிய பின் மீண்டும் நீரில் விரல்களை நனைத்து கண்களையும் முகத்தையும் துடைத்து விட்டு சொல்லுமானு கேக்க ஒரு பழைய டம்ளர கைல குடுத்து விஜியா அத்தகிட்ட போயு, அம்மா இன்னிக்கு தான் ரேசன் கடையல வாங்குதா அடுப்பு பத்த வெக்க சீமெண்ண கேக்குது, அப்புறமா குடுக்குதானு சொல்லி வாங்கிட்டு வானு சொல்லி என்ன அனுப்ப நானும் டம்ளர் முழுசா வாங்கி எடுத்துட்டு வர அதற்குள்ளாக அரிசியில் இருந்த நெல்லையும், சின்ன சின்ன கல்லையும் பொறுக்கி தண்ணில போட்டு அலசிட்டு இருந்துச்சி, வந்து குடுத்ததும் அடுப்புல கொஞ்சம் ஊத்திட்டு வெறவு கட்டுல இருந்து அடியில இருக்குற நாலஞ்சு வெறவ எடுத்து கையால ஒடுச்சி அடுப்புல வெச்சி மறுபடியும் சீமெண்ணய லைட்டா ஊத்தி பத்த வெக்க ஆடிக்கிட்டே நெருப்பு எரிய, வீட்டுக்கு முன்னாடி போட்ருந்த தெண்ண பந்தல அஞ்சு ஓலைய புடுங்கி சொருவ அனல் கொஞ்சம் வேகமாக எறிந்தது. நேத்து நைட்டு வெச்ச அவரகொட்ட கொளம்புல தேங்காய் போடறதுக்கு பேத்த மட்டய பாத்திரம் கழுவதற்காக எடுத்து வைத்திருந்தாள் அம்மா. தற்போது அந்த தேங்காய் மட்டயும் எடுத்து அடுப்புல சொருவினாள் அனல் இப்ப நல்லா புடிச்சு எறிய ஆரம்பமாச்சு, அப்பப்போ அனஞ்சாலும் ஊதாமன வெச்சு ஊதி அடுப்ப எறிய வைக்கும், இதுனாலயே நேரம் வீணாகி லேட்டாய் போச்சு. எப்படியோ ஒருவழியா எங்கம்மா எனக்கு புடிச்ச தக்காளி சோறு செஞ்சி குடுக்க நானும் எடுத்துக்கிட்டு வந்து கிளாஸ்ல உட்காந்துட்டு இருக்குற. என்னதான் அரசு பள்ளியாக இருப்பின் வருடாந்திரம் ஸ்பெசல் பீஸ்னு ஒன்னு ஒவ்வொரு மாணவர்களும் கட்டணும். அதிகபட்சமாக நூறுவாக இருக்கக் கூடும், கட்டணம் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மாணவருக்கு ஏற்றார் போல் அமையும், சில சாதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அனைத்தும் இலவசம் என்பார். அப்படியொன்றும் இல்லை அனைவரும் கட்ட வேண்டிய கட்டாய நிர்பந்தம். இந்த கட்டணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்று மட்டும் யாருக்கும் தெரியவில்லை. முதல் பாடப்பிரிவு நேரம் முடிந்தது. அடுத்த பாடம் எடுப்பதற்கு ஆசிரியர் இன்னும் வரவில்லை. நான் தான் வகுப்பறையின் தலைவன். கட்டணம் வசூலித்து அவர்கள் பெயரை எழுதிக்கொண்டு வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இன்றுடன் இரண்டாவது நாள் அதனால் மாணவர்கள் என்னிடம் குடுக்க நான் வாங்கிய பணத்தை கொடுப்பதற்கு ஆசிரியர் அறைக்கு எடுத்துச் செல்கிறேன். கணக்கினை ஒப்படைத்தேன் இப்போது மீண்டும் வகுப்பறை நோக்கி வருகிறேன் இன்னும் ஆசிரியர் வரவில்லை. சத்தம் காதுகளை கிழித்தது. மாணவிகள் அமைதியாக புத்தகங்களின் பக்கத்தை புரட்டின. அஜந்தா வேணுமென்றே சத்தமாக படித்தாள், புனிதா தனது அழகான குரலால் அதட்டினாள். இவள் தான் மாணவிகளின் தலைவி. இரைச்சல் அதிகம் வர பக்கத்து வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர் உள்ளே நுழைந்து சற்று அதட்டியதால் சில நிமிடங்கள் மெளனம் காத்தது வகுப்பறை. கடைசி வரியின் மூலையில் உட்காரும் டிங்கிடி என் இடத்தில் உட்கார்ந்திருந்தான். இவன் CMS கிறிஸ்டியன் விடுதியில் தங்கி படித்து வருபவன் கொஞ்சம் முரடானவன். இவனுடைய அண்ணன் பள்ளியிலே மிகப்பெரிய கபடி வீரன். பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவரைக் கூட தன் அசாத்திய திறமையால் வென்று விடுவான். இவன் விளையாடும் விதத்தை சில நேரங்களில் பி.டி ஆசிரியருடன் இணைந்து மற்ற வகுப்பு ஆசிரியரும் வேடிக்கை பார்ப்பார்கள். அந்தளவிற்கு அவனின் கால்கள் பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கும். இவனின் தனித்துவமே எதிரணியின் களத்தில் சென்று இரு கைகளையும் வடக்கு தெற்கு திசையைப் பார்த்தவாறே தோள்களுக்கு நிகர உயர்த்தி கையின் விரல்களை வானம் பார்த்தவாறு உள்ளே வெளியே திருப்பி ஒருவிதமாக ஆட்டம் ஆடி இரு கால்களையும் மடக்கி வகுப்பினுள் தரையில் அமர்வதைப் போல் மைதானத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து எழுவான். இதற்கென்றே இவனுக்கு தனி இரசிகர் பட்டாளமே உண்டு. எனக்குத் தெரிந்து இதுவரை எவரும் இவனை வளைத்துப் பிடித்த பாடில்லை. இதில் ஒவ்வொரு முறையும் தோல்வியே தழுவினார்கள் எதிரணியில் இருப்பவர்கள். அண்ணனின் புகழால் எல்லா வாத்தியாரிடமும் டிங்கிடிக்கு சுலபமாக அறிமுகம் கிடைத்து விடும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒன்று ஆசிரியரை தன் வசப்படுத்தி விடுவான், அல்லது ஆசிரியரே கன்னத்தில் செல்லமாக கிள்ளி அனுப்பிடுவார். சில நேரங்களில் எடுபடாது. சகோதரனைப் போலவே உயரம் குறைவாக இருந்தாலும் நல்ல உடல்வாகு உள்ளவன். விடுதியில் தங்கி படித்து வருவதால் பெரும்பாலும் வீட்டு மாணவர்களுடன் நட்பு வைத்திருப்பான். பெரும்பாலும் இதையே அவர்களும் விரும்பினர். இவனின் நட்புக்குக் காரணம் விடுதியில் குடுக்கும் உப்பு சப்பில்லாத காரமில்லாத அந்த உணவு தான். மதிய உணவு இடைவேளை டிங்கிடி இல்லாமல் கழியாது. சில சமயங்களில் காலையில் சாப்பிடாமல் வந்துவிட்டால் வீட்டில் இருந்து கொண்டு வந்துள்ள டிபன் பாக்ஸினை திறந்து சாப்பிட்டு விடுவான். அப்படித்தான் இன்று இப்போது முகிலனின் தக்காளி சாப்பாட்டை முக்கால்வாசி தின்றுவிட்டான். சில பருக்கைகள் கீழே சிதறிக் கிடக்க முகிலனுக்கு சந்தேகம் எழுந்து டிபன் பாக்ஸினை எடுத்தான். கணமாக இல்லை அவனுக்கு புரிந்து விட்டது. திறந்து பார்த்தான் கடல பருப்பு, உளுந்து பருப்பு போட்டு அம்மா தனக்கு ஆசையாக செய்து தந்த தக்காளி சோறு நாலுவாய் சோறே உள்ளது. ஒன்றும் பேச முடியாமல் தன்னுள் எழும் அவன் மீதான கோபத்தை அடக்கிக் கொண்டு புன் சிரிப்பை சிரித்தான். மதிய உணவு இடைவேளை வந்தது, டிங்கிடி கொண்டு வந்த விடுதியின் உணவு அங்கு வரும் நாய்களுக்கு விருந்தானது. அதுவும் தன் பங்கிற்கு இரண்டு தடவை நாவால் நக்கி தின்றுவிட்டு, அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தது. அங்கு சிதறிக்கிடந்த விடுதி உணவை காக்கையும், குருவியும் கொத்தி எடுத்துச் சென்றன. முகிலன் தன் நண்பர்களோடு கலந்து மதிய உணவினை ஒரு வழியாக உண்டு கழித்தான். பொதுவாகவே விடுதி மாணவர்கள் ஒரு பிரிவாகவும் வீட்டில் இருந்து செல்லும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும் தான் சேர்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது தான் புரிகிறது டிங்கிடி ஏன் எங்களோடு அதிகம் சேர்ந்து சுற்றுகிறான் என்று. ஆனாலும் உணவை மட்டும் ஒரு காரணமாக சொல்லிவிட முடியாது. எதுவாக இருப்பின் எனக்கு பிடித்த தக்காளி சோறு சாப்பிட முடியவில்லை. எனது ஏக்கம் என்னை விட்டு இன்னும் நீங்கிய பாடில்லை. இன்று வியாழக்கிழமை, எங்கள் ஊரில் ஒவ்வொரு வாரமும் இதே நாளில் சந்தை கூடும். பெரும்பாலும் இந்த நாளன்று அனைவரின் வீட்டிலும் கறி குழம்பாகத்தான் இருக்கும். எங்கம்மாவும் ஆட்டுக்கறியோ அல்லது மாட்டுக்கறியோ ஏதேனும் ஒன்றை எடுத்து சமைத்திருப்பாள். அதனால் வீட்டில் உள்ள தக்காளி சோற்றை யாரும் சீண்ட வாய்ப்பில்லை. எப்படியும் மிச்சம் இருக்கும். நாம் வீட்டிற்குச் சென்று தனக்குப் பிடித்த தக்காளி சோறை சாப்பிட்டுக்கலாம் என்று மனதை சற்று சமாதானம் செய்து கொண்டேன். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினேன். ஆயா எனக்கு பிடித்த லட்டு நான்கு வாங்கி, ஒரு மினு காயுத கவரில் கட்டி என்னிடம் குடுக்க, நான் அதை வாங்கிக் கொண்டு பள்ளிப் பையினை இறக்கி வைத்து விட்டு நேராகச் சென்று வடசட்டினைத் திறந்து பார்த்தேன். ஒருவர் சாப்பிடும் அளவிற்கு தக்காளி சோறு நல்ல மனமாக இருந்தது. ஒரு கை கரண்டியளவு கையில் எடுத்து வாயில் போட்டு மென்று தின்றேன். அடுப்பு சட்டியில் என்ன கறியென்று தெரியவில்லை. சட்டியில் ஆவி பறக்க கறி சலசல தண்ணீர் சத்தத்துடன் வெந்து கொண்டிருந்தது. நான் ஊர் நண்பர்களோடு மாரியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள ஆலமரத்தின் அடியிலிருக்கும் வேரை பிடித்துத் தொங்கி விளையாடவும், போலீஸ் திருடன் விளையாட்டை விளையாடவும் சென்றேன். ஒரு ஆளைச் சுற்றி பெரிய வட்டமிட்டு அதனுள் இருந்து ஒரு இடது காலை தூக்கி அதன் வழியாக எந்த திசையினாலும் குச்சியை தூக்கி தூரமாக எறிந்து விட்டு அனைவரும் மரத்தின் மீது ஏறிவிடுவோம். அதில் ஒருவன் எறிந்த குச்சியை எடுத்து வந்து வட்டத்தினுள் போட்டுவிட்டு மரத்தின் மீதேறி யாரேனும் ஒருவனை தொட்டுவிட வேண்டும். அப்படி யாரை முதலில் தொடுகிறானோ அவனே திருடன். அவன் மரத்தின் மீது ஏறி தொடுவதற்குள்ளாகவே யாரேனும் ஒருவன் மரத்திலிருந்து தாவி கீழே குதித்து வட்டத்தினுள் இருக்கும் குச்சியை எடுத்து விட வேண்டும். இது தான் நாங்கள் தினமும் மாலையில் விளையாடும் அதிகப்படியான விளையாட்டு. இதில் எல்லோருக்கும் திருடனாக இருப்பதே பிடித்தமான ஒன்று. அப்போதுதான் போலீஸை அலையவிட முடியும் என்ற எண்ணம். சூரியன் சாய்ந்து நிலா வெளிச்சத்திலும் ஆட்டம் தொடரும். எங்கள் கூட்டத்தின் சத்தத்தை சகித்துக்கொள்ள முடியாத பெருசுகள் “நேரமாவுலயா உங்களுக்கு இன்னும் என்ன வெளையாட்டு போங்க எல்லாரும் அவுங்கவுங்க வூட்டுக்கு போங்க” னு சத்தம் வரும். பின் எங்கள் அம்மாவின் பெயர்கள் ஒவ்வொன்றாக படிப்பார்கள், அப்போது தான் நாங்கள் இடத்தை விட்டு போவோம் என்று எண்ணி. கூட்டில் இருக்கும் தேனை கல்லைக் கொண்டு எறிந்தால் அங்குமிங்குமாக ஓடி மீண்டும் அதே இடத்தில் மொய்க்குமோ அதுபோலவே நாங்களும் இப்போது பறந்து நாளை இதே இடத்தில் மொய்க்க தயாராவோம். ஒரு வழியாக விளையாட்டை முடித்து விட்டு வீட்டினுள் நுழைந்தேன். அம்மா திட்டினாள், “கை, காலு கழுவிட்டு உள்ளபோ” என்று. நானும் தக்காளி சோறு சாப்பிடுவதற்கு ஆவலாக அம்மா சொன்னபடியே செய்து ஒரு சொம்பை குடத்தினுள் விட்டு தண்ணீரை மொண்டு கொஞ்சம் குடித்து விட்டு, கிண்ணத்தை எடுத்து தக்காளி சோறை போடுவதற்குப் போனேன். வடசட்டியின் மேல் மூடியிருந்த தட்டினை எடுத்தேன் ஒரு பருக்கைக் கூட மிச்சமில்லாமல் வறண்டு தண்ணீர் மட்டும் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. “அம்மா” னு கத்தினேன். “தக்காளி சோறு எங்க” னு கத்தி கேட்டேன். சாதுவாக “வடசட்டில பாருடா” னு சொல்ல, என் ஒட்டுமொத்த ஆதங்கம் கோவமாக மாறி வெளியில் வார்த்தையாக வந்தது, “இதுல என்ன மைரா" இருக்கு. நான் பேசிய முதல் கெட்ட வார்த்தையாம். மைருனு சொன்னவுடனே எங்கம்மா என்ன வேகத்துல வந்துச்சுனு தெரில. பின் மண்டைல ஒரு போடு, கைல கறிகிண்ட வெச்சிருந்த கரண்டியால, “ஏன்டா கட்டித்தீனி, புண்டவாயா, மைருனா சொல்ற” னு அடி அடினு அடிக்க, நான் “ஐயோ யம்மா ஐயோ யப்பா” னு கத்த, பக்கத்து வூட்டுல இருந்த விஜியா அத்த வந்து வெளக்கி வுட்டுச்சு. “ஏண்டி கோனவாச்சி, மென்டல் புண்ட என்னத்துக்குள பையன போட்டு இந்த அடி அடிக்கிறவ” னு கேட்டுச்சு. என்ன தடுக்க வந்த அத்த கைல எங்கம்மா சுளிருனு கரண்டியால அடிக்க, அந்த வலியால வந்த கோவத்துல அத்த அப்டி பேசுனுச்சு. “மொளச்சு மூணு எள வரல மைரா….. மைருனா சொல்ற…. வா எல்லாத்தையும் ஒட்ட நருக்கிபுடற”னு திட்டிட்டுகிட்டு இருந்துச்சு. நான் தேம்பி தேம்பி வலிய தாங்க முடியாம தக்காளி சோறு சாப்பட முடியாத வருத்தத்துல அழுதுகிட்டு இருந்த. “பிரகாசு பைய வந்தான். எக்கா பயங்கரமா பசிக்குதுக்கா சோறு ரவுண்டு இருந்தா போடுக்கானு சொன்னா, அவனுக்கு கறி நாத்தம் புடிக்காது. குட்டிபயா கறில வேற கைய வெச்சுட்ட, நீ போட்டு திண்ணுப்புட்டு போடானு சொன்ன, தம்பிகார மவ வாய்வுட்டு சோறு கேட்டு போட்டு தர முடியலியேனு எனக்கு வெசனம் புடிச்சு போச்சு, அவனுக்கும் தக்காளி சோறுனா புடிக்கும் ஒருவாய் சேத்து தின்னுவா, ராத்திரிக்கு கறிகொளம்புனால, மவன் எல்லா சோத்தையும் தின்னுட்டு போய்ட்டான் போல” னு விஜியா அத்த கிட்ட சொல்லிட்டு இருந்திச்சு எங்கம்மா. “அடிபோடி ஈன கெட்ட கூதி இதுக்காடி போயி பையன கரண்டியால அடிப்ப” னு சிரிச்சுக்கிட்டே திட்டுனுச்சு. அது பேசுறத பாத்து அழுதுகிட்டு இருந்த எனக்கும் சிரிப்பு வர அடக்கிட்டு அழுதுகிட்டு இருந்த. “உன்ன யாரு பொம்பள கூப்புட்டு தடுக்க வர சொன்னது. அப்டியே தம்பி மவ கத்தன வுடனே கரிசன காட்றவ” னு எங்கம்மா பேசிகிட்டு இருந்துச்சு. அப்படித்தான் இதுக்கு முன்னாடி ஒரு நாள் எங்கம்மாவ ரொம்ப நேரம் கூப்புட்ட காதுலய வுழல போலனு, நல்லா சத்தமா “ஏய்........ அம்மா”னு கூப்புட்ட, அன்னிக்கும் அப்புடிதா செம அடி. “யாராட ஏய்னு கூப்டற….நான் என்ன உன் அப்ப கூத்தியாளா... ஏய்னு கூப்டற” னு செம அடி அடிச்சுச்சு.... அதுக்கப்புறம் இன்னிக்குதா இவ்ளோ அடி வாங்குன. அடுத்த நாள் பள்ளிக்கூடம் போகும் போது என் ப்ரண்டு கிட்ட நடந்ததுலான் சொல்லிட்டு இருந்த, அவன் “அட சுன்னி... இதுக்காடா உங்க அம்மா அடிக்குது” னு சொல்லி சிரிச்சுட்டு. எங்க வீட்ல எங்கம்மா எங்கப்பன எப்புடி தெரியுமா திட்டும்னு சொல்லி ஆரம்பிச்சான், “டேய்... கேன புண்ட உனக்குளா எதுக்குடா பொண்டாட்டி புள்ள, புண்டய நக்கதான்டா நீயல்லா லாய்க்கி மீசைய வேற வெச்சுக்குட்டா வெக்கமே இல்லாம ஏன் சாண்ட குடிச்சா கூட உனக்கு புத்தி வராதுடா சுன்னிபயா.. உன்னலா உங்கம்மா பெத்தால இல்ல பேண்டால... உங்கப்பனுக்குதா பெத்தாலா உங்கம்மா எவ்வளவு திட்டனாலும் சூடு சொறனையே வர மாட்டுதே... கண்டவ சுன்னிய ஊம்பி ஊம்பியே மூத்தரத்த குடிக்கற மாதிரி குடிச்சிட்டு வந்தறா தேவிடியா பைய... என் வயிறு எரியற மாதிரி நீயும் எரிஞ்சு நாசமா போவடா” னு அழுதுகிட்டே திட்டிக்கிட்டு இருந்துச்சு. “ஒரு நாளைக்கா ரெண்டு நாளைக்கா இவன் எளவுலா எடுக்க தெனமும் குடிச்சிட்டு வரதுலாம என்னையும் அடிக்க வரா போதாதைக்கி உங்கமலா ஓக்கனு கேக்குறா போய் உங்க அம்மா கூட படுறா அரிப்பெடுத்த குடிகாற பையா...” என்னடா சொல்ற இப்டிலாமா உங்கம்மா திட்டும், எங்கம்மாவும் அப்பப்போ எங்கப்பா இல்லாத போது பயங்கராமா திட்டும்னு நான் சொல்ல, என் நண்பன் “வுடறா அதுங்க ரெண்டும் மென்டல் கூதிங்க திடிர்னு சண்ட போடுவாங்க, திடீர்னு ஏன் பொண்டாட்டி மாதிரி இந்த உலகத்துல யாருமே இல்லனு எங்கப்ப சொல்லுவா, எங்கம்மா அதுக்குமேல ஆயிரம் தான் இருந்தாலும் என் புருஷன் இல்லாட்டி இவங்களா மதிப்பாங்களா” னு சொல்லிக்கிட்டு திரியும்னு பேசிக்கிட்டே நடந்து போனோம். வகுப்பில் ஆசிரியர் ஒழுக்கத்தை பற்றியான பாடம் எடுத்துட்டு இருந்தார். எடுத்து முடித்த பின் வகுப்பில் ஒருவன் தூங்கி தூங்கி விழுவதைக் கண்டார். தன் கையில் வைத்திருக்கும் சுண்ணாம்பு கட்டியைத் தூக்கி அவன் மீது எறிந்தார். அவனோ அடர்ந்த காட்டு தீயினுள் சிக்கிக்கொண்டவனைப் போல் சில வினாடி திகைத்துப் போனான். “என்ன மைரு புடுங்கிட்டனு தூங்கிட்டு இருக்க... நீலாம் படிச்சு என்ன கிழிக்க போற...” என்று திட்டி தீர்த்தார்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.