logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அனிச்சப்பூ

சிறுகதை வரிசை எண் # 96


பனை நிழல் ஊர் சனம் முழுவதும் கிருஷ்ணர் கோவிலில் குழுமியிருந்தது.தென்னை ஓலை வேய்ந்த கூரைக் கொட்டகையில் இரண்டு புறமும் கருங்கற்களை அணை போட்டுக் கட்டியிருக்க உயர்ந்த மண்தரை பசுஞ்சாணியில் மெழுகப்பட்டிருந்தது.நடுவில் ஆளுயரத்தில் பாம்புப்புற்று வளர்ந்திருக்க,அதனருகே , காற்று,மழை, வெயிலில் காய்ந்த கிருஷ்ணர் படம் வைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு சுற்றுச் சுவரோ,கதவோ இல்லாததால் காற்று தடையின்றி எல்லாபக்கமும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. உடுக்கை அடிக்க அடிக்க மருள் வந்து விட்டது சாமியாடி தாத்தாவிற்கு. ஊதல் பனியில் சறுக்கி ஓடும் காற்றில் செடிகள் ஏதோ பேசிக் கொண்டு உடுக்கை ஒலிக்கேற்ப அசைகின்றன. பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு ஈஈஈஈஈஈ.., ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ என்று ஏதோ சொல்கிறார் சாமியாடித் தாத்தா. சாமி புரியலீங்களே... ஏழைப் பட்ட மனுசங்க நாங்க இன்னொரு தரம் திருப்பிச் சொல்லுங்க சாமி என்கிறார் வாக்கு கேட்க வந்தவர்... டேய் போடா வெள்ளாமை வெளைச்சல்ல மொத பங்கு கதிரை இங்கே கொண்டு வந்து கட்டிட்டுப் போ...மொதலுக்கு மோசமில்லாம நெல்லு களம் வந்து சேரும்.போடா ...சனக்கூட்டம் வாயைப் பிளக்கிறது.இதான் கேட்க வந்தாருன்னு எப்படித் தெரியும் னு கன்னத்தில் படபட என்று போட்டுக் கொள்கிறது. கேட்டவர் கீழ விழுந்து கும்பிட,புத்து மண்ணை அள்ளி விபூதியாகக் கொடுத்து அப்படியே திருப்பிப் பாக்காம போ... நான் சொன்னதச் செய் உறுமலோடு கூறி விட்டு அடுத்த ஆளைப் பார்க்கிறார். அழைப்பு மணியை அடித்தது போல அடுத்த ஆளுக்கு போ போ இந்த தையில உன் மருமகளுக்கு குழந்தை உண்டாகிடும்...போ போ..என்க அவள் சாமீ நான் அதைத்தான் கேட்க வந்தேன்... எனக்கு இது போதும் சாமி விழுந்து கும்பிடுகிறாள்..ஆணி வைத்த செருப்புக் காலால் தரையை ஓங்கி ஓங்கித் தட்டுகிறார்.சனம் காலில் ரத்தம் வந்து விடுமோ எனப் பதற அப்படி ஒன்றும் ஆகவில்லை என்பதில் நிம்மதி கொள்கிறது. அடுத்த ஆளைப் பார்த்து ஏன்டா இன்னும் இங்கே இருக்க..போடா போ.. உன் வீட்டில் சோளத்தட்டுப் போரில் நெருப்பு புடிச்சிருக்கு சீக்கிரம் போ...... அச்சச்சோ ஆண்டவா... சாமி என்று வுழுந்து கும்பிட்டுப் பதறி கூட வந்தவர்களைக் கூட்டிக் கொண்டு ஓடுகிறார்‌. இன்னைக்கு சாமி மலை ஏறங்காட்டியும் நல்லவாக்கு கேட்டு விடவேண்டுமென கூட்டம் அலைமோதுகிறது. புற்றிலிருந்து பாம்பு எட்டிப் பார்த்து அவர் காலைக் கொத்துகிறது.இரத்தம் வடிய புற்றுமண்ணை அப்படியே அள்ளி மேலே தேய்த்து விட்டு பாம்போடு பேசுகிறார்.பாம்பு சமாதானமாகி உள்ளே போய் விட்டது.சனம் வாய் பிளந்த பார்க்கிறது.இது வாடிக்கை என்பதால் யாரும் ஓடவில்லை. வண்டி கட்டி வேண்டுதலோடு வந்த குடும்பம் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறது.1008 அதிர்வேட்டு வானம் விடுவதாக வேண்டிக் கொண்ட குடும்பம் வேண்டுதல் பலித்து அதிர்வேட்டு விடுகிறது.சொர் சொர் என்று வானம் மேலே...மேலே அடுத்தடுத்து சென்று வானம் புகைமூட்டமாகிறது. இன்னொரு குடும்பம் குழந்தைக்கு மொட்டையடித்துக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமை எப்போதும் போல கிருஷ்ணர் கோவில் சாமியாடித் தாத்தாவின் அருள் வாக்கைக் கேட்க கூட்டம் ஆளுக்கொரு கோரிக்கையில் நீண்ட வரிசையில் கவலையோடு நிற்கிறது. அந்த இடம் முழுவதும் பூச்செடிகளும்,பழமரங்களும் நிறைந்திருக்க வற்றாத கிணற்றிலிருந்து வரும் தண்ணீரில் அனைவரும் கைகால் கழுவிக்கொண்டு பிறகே சாமியாடித் தாத்தா அருகே செல்கிறார்கள். உடல் முழுவதும் நீறு பூசிக்கொண்டு வேட்டியை கீப்பாய்ச்சிக் கட்டியிருக்கிறார். இடுப்பிலிருந்து இரண்டு கால்களுக்கு நடுவில் வேட்டியின் ஒரு முனை கொண்டு சென்று பின்பகுதியில் இறுக்கி செருகியிருப்பதால் எப்படி குதித்தாலும் அவிழவில்லை. பக்கத்து தோட்டக்காட்டுக்காரன் சண்டையில் ஒருவர் வேல் ஒன்று வாங்கி வந்து அங்கிருந்த மண்ணில் இறுக்கி சொருகி உச்சியில் எலுமிச்சை ஒன்று குத்தி விட்டு ஈடு போடுகிறார். இன்னொருவர் வீட்டில் திருடு போனதற்கு ஈடு போடுகிறார். ஒன்று ஈடு போடப்பட்டவன் திருந்தி நகை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.. அல்லது அவன் இரத்தம் கக்கி சாகவேண்டும் என்று வேண்டுதலுடன் கைகூப்பி நிற்கிறார்.இன்னொருவர் வாங்கிய பணத்தை திருப்பித் தராதவனுக்காகப் போடுகிறார். இப்படி பல வேளைகளில் பல வேண்டுதல்களில் வேல்கள் நிறைய குத்தப்பட்டிருக்கின்றன. அதன் முனையில் குத்தப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிலது புதிதாகவும் ,சிலது வாடியும், சிலது காய்ந்தும் இருக்கின்றன. அந்த இடம் முழுவதும் வேல்கம்புகள் நிரம்பி வழிய அதில் மல்லிகைப் பூச்கொடிகள், பூக்களும் மொட்டுக்களுமாக படர்ந்து கிடக்கின்றன. தாத்தாவின் உடல் முறுக்கிப் பிழிகிறது...உஸ்ஸ்ஸ்...உஸ்ஸ் என்று கைகளை முறுக்கி உடல் முழுவதும் நெளிய... ஒரு பக்தர் எரியும் கற்பூரத்தை அவர் வாயில் போட அப்படியே விழுங்குகிறார்... டேய் கனி குட்றாஆஆ என்று தாத்தா கத்த.. அவர் வாயில் முழு எலுமிச்சம் பழம் ஒன்று போட நறநறவெனக் கடித்து விழுங்குகிறார். அப்படியே சாணி மெழுகிய தரையில் கிருஷ்ணர் படத்தருகே பொத்தென விழுகிறார்.சில நிமிடங்கள் அமைதியில் கூட்டம் சத்தமில்லாமல் கன்னத்தில் போட்டுக் கொள்ள... இப்போது தாத்தாவிற்கு சாமி மலையேறி விட்டது. வாக்கு வாங்கியவர்கள் மகிழ்ச்சியோடு செல்ல, வாக்கு கேட்க முடியாதவர்கள் அடுத்த சனிக்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று கொஞ்சம் கவலையுடன் கலைகிறார்கள். தாத்தா பக்கத்தில் இருந்த குடிசையில் வாசல் படலைத் தள்ளி விட்டு உள்ளே நுழைகிறார்.அன்று சேர்ந்த காசுகள் கொண்ட உண்டியலை எடுத்துக் கொண்டு...பேரன் கையில் தர அவன் பணம் காசுகளை எடுத்துக் கொள்கிறான்‌. அவன் வீட்டில் இருந்து கொண்டு வைத்து விட்டுப் போன பழைய சோறு இருந்த சொம்பு நன்றாகக் கழுவாமல் சொம்பு விளிம்பில் சாம்பல் ஒட்டியிருந்தது. அதிலிருந்த நீசத்தண்ணியை எடுத்துக் கொஞ்சம் குடித்து விட்டு படுத்துக் கொள்கிறார். உள்ளே புழுக்கமாக இருக்கவே.. பனையோலைக்குடிசையின் தாழ்வார நிழலில் வெளியே வந்து படுக்கிறார்.நிழலின் கருமை நிஜத்தை விட்டு விலகியே இருக்க படுத்திருந்தபடியே கொஞ்சம் தலைதூக்கி அண்ணாந்து பார்க்கிறார். சற்றுத் தள்ளி,சாமியாடி அவர் சம்பாதித்த பணத்தில் அவர் கட்டிக் கொடுத்த வீட்டில் அவரது ஒரே மகள் பலகாரம் சுடும் வாசனை வருகிறது. அனிச்சப்பூ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.