logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Kanmani

சிறுகதை வரிசை எண் # 61


கல்விக்கனி...... முன்பொரு காலத்தில் ஒரு சிற்றூரில் சீனிவாச பண்ணையார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு அளவு கடந்த நிலங்களும் சொத்துக்களும் வசதியும் வாய்ப்பும் கைவசம் இருந்தது. பண்ணையாருக்கு எப்பொழுதும் அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசுவதே ஒரு மகிழ்ச்சியை தரும் செயல். தனக்கு கீழ் பல நூறு வேலை ஆட்களை எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருப்பவர், ஆனால் அவர்களில் ஒருவர் கூட முன்னேறி வர அனுமதிக்க மாட்டார் பண்ணையார். பண்ணையாருக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். அங்கு சுற்றியுள்ள கிராமப்புறங்களில் மிகவும் சிறந்த உயர்ந்த பள்ளியில் அக்குழந்தைகள் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். பண்ணையாரும் தோட்டத்தில் பல நூறு குழந்தை தொழிலாளர்களை மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு வைத்திருந்தார் பண்ணையார். சீனிவாச பண்ணையாரின் தொழிலாளர்களின் ஒருவர்தான் ஆறுமுகம். இவரது மனைவி மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ரவி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இவர் வாழ்வதற்கு காரணமாக இருந்தான். ஆறுமுகம் ரவியை தனது வாழ்நாளில் இலக்காகவும் லட்சியமாகவும் குடும்பமாகவும் தன் மனைவியின் மனைவியின் சாயலாகவும் கடவுளின் அருளாகவும் பார்த்தார். தான் இவ்வாறு கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்படுவதை எண்ணி எண்ணி அவர் வேதனை அடையாத நாட்களே இல்லை. தான் கண்ட துயரங்களை தன் மகன் ரவியும் காண வேண்டாம் என்று எண்ணி அவர் எப்பாடுபட்டாவது ரவியை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அவனை மிகவும் உயர்ந்த மனிதனாக ஆக்க வேண்டும் என்பதனை வாழ்நாள் நிச்சயமாக கொண்டிருந்தார் ஆறுமுகம். ஒரு புறம் இப்படி இருக்க ஆறுமுகம் தன் மகனை படிக்க வைப்பது சீனிவாச பண்ணையாருக்கு துளியும் பிடிக்கவில்லை. எப்பொழுதும் அவர் ஆறுமுகத்திடம் ரவியை வேலைக்கு அனுப்ப வேலைக்கு அனுப்பு என்று வற்புறுத்திக் கொண்டு இருப்பார். செல்வந்தர்களின் வாயை மூடுவதற்கு எந்த ஒரு நொடியும் கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒரே விஷயமாகும் ஆகையால் அவர் கூறுவது எதுவாயினும் அதனை பொறுத்துக் கொண்டு மிகவும் அமைதியாக ஆறுமுகம் சென்றார். மிகவும் குறைந்த சம்பளம் கிடைப்பது நாள் ரவியின் கல்விக்கும் குடும்பத்தின் செலவுகளுக்கும் பணம் குறைவாகவே இருந்தது. தன் தந்தையின் கஷ்டத்தை கண்கூடாக பார்த்த ரவி மிகவும் மனமடைந்த பண்ணையாரின் வீட்டிற்கு பள்ளி முடிந்தவுடன் வந்து வேலை செய்து கொடுப்பான் இதன் மூலம் இருவரும் ஈட்டும் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தனர். பண்ணையாரின் செல்வ செழிப்புடன் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் ஒருபுறமும் ஒரு வேளை சாப்பாட்டிற்கு அவர் வீட்டிலேயே வேலை செய்ய வரும் ரவி ஒருபுறமாக பார்ப்பவர்கள் கண்கள் எல்லாம் கண்ணீர் வெல்லம் பெருக இக்காட்சி அமைந்துள்ளது. ஒரு நாள் திடீரென்று சீனிவாச பண்ண யாரு தூரத்து சொந்தமான வெங்கடேச பண்ணையார் அவர் அது வீட்டிற்கு வந்துள்ளார், அப்பொழுது வெங்கடேச பண்ணையார் சீனிவாச பண்ணையார் என் மகனை அழைத்து ஒரு கடிதத்தை கொடுத்து வாசிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சீனிவாசனின் மகனுக்கோ ஒன்றும் புரியவில்லை அவனுக்கு படிப்பில் நாட்டம் இல்லை என்பதே அப்பொழுது தான் சீனிவாச பண்ணையாருக்கு புரிய வந்தது. என்ன எழுதி இருக்கிறது என்பது புரியாமல் இருவரும் முழித்துக் கொண்டிருக்க அங்கே ரவி தக்க சமயத்தில் தண்ணீருடன் வந்தான். சீனிவாச பண்ணையார் எப்படியாவது ரவியை வம்பு இழுக்க வேண்டும் என்று குடத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு இங்கு வந்து இந்த கடிதத்தை வாசித்துக் காட்டு நீயும் தானே படிக்கிறாய் என்று ஒரு மிலடுக்காக கேட்டார். இதற்கும் தயங்காத ரவி தண்ணீர் குடித்த கீழே இறக்கிவிட்டு வந்து கடிதத்தை வாங்கி மடமையென்று படித்து அதில் உள்ள செய்தியை தெளிவாக கூறிவிட்டான் பண்ணையாருக்கு மிகவும் அவமானம். மீது பாயாமல் மாறாக ரவியின் மீது பாய்ந்தது எப்படியாவது அவனைத் திட்ட வேண்டும் அவனது படிப்பை தடுக்க வேண்டும் என்று எண்ணி அவர் வேகமாக ஒரு கல்லை எடுத்து யாருக்கும் தெரியாமல் ரவி கொண்டு வந்த பானையின் மீது அடித்து விட்டார் பிறகு பழியை ரவியின் மீது சுமத்தியும் பானை உடைந்ததை பார்த்து கோபம் கொண்டு திட்டுவது போல ரவியின் படிப்பை எடுத்துக் கொண்டு வந்து வேண்டும் என்ற திட்டினார். உனது குளம் என்ன உனது ஜாதி என்ன நீ எவ்வாறு நீ எல்லாம் படிப்பதற்கு தகுதியற்றவன் ஆனால் நீ பள்ளிக்கு செல்கிறாய் படித்து வருகிறேன் என்று எதனையோ சொல்லிக் கொண்டு திரிகிறாய் இனிமேல் நீ பள்ளிக்கு செல்லக்கூடாது வேலையை ஒழுங்காக செய்யாமல் பானையை உடைத்ததற்கு இந்த மாத சம்பளம் உனக்கு கிடையாது என்று கோபமாக கூறி எப்படியாவது அவனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு அதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்க வேண்டும் என்று உச்சம் பெற்றிருந்தால் சீனிவாசா பண்ணையார். பண்ணையாரின் ஜாதி வெறியும் அவரது கண்களில் அப்படியே பிரதிபலித்தன. ரவியின் மனதில் இந்த சம்பவம் மிகவும் ஆழமாக பதிவாகிவிட்டது தாழ்ந்த குளத்திலோ தாழ்ந்த ஜாதியிலோ பிறந்தால் அவர்கள் படிக்கக் கூடாது என்று ஏதேனும் சட்டம் உள்ளதா என்று தனக்குள்ளேயே அவன் கேள்வி கேட்டுக் கொண்டான் குலம் ஜாதி மதம் ஆகியவற்றை மனிதர்கள் தானே உருவாக்கினார்கள் கடவுள் இல்லையே என்று வெந்து தணிந்து கொண்டிருந்தான் ரவி. எப்படியாவது முன்னேற விட வேண்டும் என்று பரிதவிப்பும் ஆர்வமும் அவனது கண்களில் ஓடிக் கொண்டிருந்தன. இரண்டு நாட்களுக்குப் பின்பு பண்ணையாரின் ஒரே மகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்து விட்டால். கீழே கிடந்திருக்கும் மிகவும் கூர்மையான கற்கள் குத்தி அவளது கால்களில் ரத்தம் ஒழிந்து ஓடிக்கொண்டிருந்தது. உடனடியாக ஓடி வந்து அவளை தூக்கி காலில் தனது கைக்குட்டையை வைத்து கட்டு போட்டு விட்டான். உங்களின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த சீனிவாசன் வந்த வேகத்தில் ரவியை இழுத்து கீழே தள்ளிவிட்டு மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். உன் கைகளால் நீ எதனை தொட வேண்டுமா அதனை மட்டுமே தொட வேண்டும் உனது தீட்டு எங்களுக்கும் ஒட்டிக்கொள்ளும் எனது மகளின் மீது கைகளை வைப்பதற்கு உனக்கு எந்த தைரியம் இருக்கும் உனது தீட்டு எங்கள் குலத்தின் மீது பட்டால் அது எங்கள் குல தெய்வத்திற்கும் எங்கள் வம்சத்திற்கும் மிகவும் இழுக்காதாகும் எங்கள் குலதெய்வம் எங்களை மன்னிக்கவே மாட்டார் என்று அவதூறாக பல சொற்களை அவன் மீது அள்ளி வீசினார் சீனிவாச ஒரு மனிதன் காயப்பட்ட அழுது கொண்டிருக்கும் பொழுது கூட சக மனிதனின் கண்களுக்கு ஜாதியும் மதமும் தீட்டும் தெய்வமும் இவை மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றன அர்த்தம் சதை உயிர் உணர்வு இதயம் இரக்கம் இது எதுவுமே இல்லாத மனிதர்களிடம் இதனை எதிர்பார்ப்பது என்னுடைய தப்புதான் என்று திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டான் ரவி.இனி ரவி பள்ளிக்கும் செல்லக்கூடாது என் வீட்டிற்கு வேலைக்கும் வரக்கூடாது என்று கூறினார் பண்ணையார். ‌ ஒரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ரவி எவ்வாறு அந்த வீட்டிற்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தான். ஒரு மாலைப் பொழுதில் பண்ணையாரும் புதுப்பட்டு வேட்டி ஒன்று துவைத்து கொடிகளில் மிகவும் பொலிவுடன் காய வைக்கப்பட்டு இருந்தது அனைவரின் கண்களையும் பறிக்கும் வண்ணம் மிகவும் மென்மையான நேர்த்தியான ஆடை. காண்பவர்கள் எல்லாம் அதனைப் பார்த்து மிகவும் பிரமித்துப் போனார். மறுநாள் காலையில் வேட்டியை தேடி சென்ற பண்ணையார் வேட்டியை காணாமல் அங்கும் இங்குமாக ஓடி கத்தி கூச்சலிட்டு அனைவரையும் நிற்க செய்கின்றார். அப்பொழுது அங்கு ரவி மட்டும் இல்லை அவன் பள்ளிக்கு சென்று இருந்தான். அனைத்து வேலையாட்களும் கூறினார்கள் நான் எடுக்கவில்லை என்று ஆனால் அங்கு இருந்த ஒரே ஒரு ஆள் ரவி மட்டும் காணாமல் போயிருந்தான். எனவே பண்ணையாரும் கோபம் முற்றிலும் பிரவீன் மிக திரும்பியது அவன் தான் திருடி விட்டான் என்று அவன் மீது வீணாக பழியை சுமத்தி ஆறுமுகத்தை திட்டி தீர்த்தார் பண்ணையார். ரவி வந்தவுடன் ஆம் நான் தான் எடுத்தேன் அந்த பட்டு வேட்டி ஒரு சேரில் கிடந்தது அதனை எடுத்து சலவை செய்து நான் காய வைத்திருந்தேன் இப்பொழுது அதனை நன்றாக மடித்தும் கொண்டு வந்து விட்டேன் என்று பண்ணையார் கையில் அடக்கமாக கொண்டு போய் கொடுத்தான். ஆனால் அங்கு என்ன நடந்தது என்றால் பண்ணையார் அந்த வேட்டியை ஏற்க மறுத்து தூக்கி எறிந்து வழக்கமாக திட்டுவது போல ஆரம்பித்து விட்டார். தேர் என்பது மண்ணாலோ கல்லாலோ அழுக்கு நீரால உருவானது அல்ல உன் உடலில் ஓடும் ரத்தமே சேறுதான் அதனை முதலில் உன்னால் சுத்தம் செய்ய முடியாது என்னும் பொழுது உயர்ந்த ஜாதியினரின் ஆடைகளை நீ தொடவே கூடாது சேரல் இருந்த ஆடையை கூட நான் அணிவேன் தவிர உன்னை போன்ற கீழ் ஜாதியில் உள்ள ஒருவன் தொட்ட பிறகு அந்த ஆடையை அணிவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்று அவனை மீண்டும் மீண்டும் நோகடித்தார். அழுது கொண்டே ரவி வீடு நோக்கி ஓடி விட்டான். ஆறுமுகம் வீட்டிற்கு வந்து ரவி நீயும் இங்கிருந்து கஷ்டப்பட வேண்டாம் உனக்கு இது எல்லாம் சரிப்பட்டு வராது நான் உன்னை எப்பாடுபட்டாவது படிக்க வைக்கிறேன் நீ பட்டணத்துக்கு சென்று விடு என்று அவனை படிப்பதற்கு விடுதியில் தங்க வைத்து விட்டு வருகிறார் ஆறுமுகம். காலங்கள் பல உருண்டு ஓடின. அனைத்தும் மாறின கட்சிகள் ஆட்சி சட்டங்கள் சீர்திருத்தம் என அனைத்தும் மாறி வெவ்வேறு பொலிவுடன் மாற்றங்களுடனும் ஒரு புதிய நாடு உருவானது. முன்பு போன்று இப்பொழுது கீழ் ஜாதி மேல் ஜாதி என்று எவரும் இல்லை பண்ணையார்கள் பல நிலங்களை தன் வசம் வைத்திருக்கும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் என அனைவரின் நிலங்களும் கைப்பற்றப்பட்டு அரச அதனை ஏழை மக்களுக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கும் பிரித்து வழங்கியது. இது சீனிவாச பண்ண யாரும் அடிபட்டார் அவருடைய சொத்துக்களும் அபகரிக்கப்பட்டன அவருடைய சொத்துக்களும் அரசால் கொண்டு செல்லப்பட்டது. தற்பொழுது சீனிவாச பண்ணையார் வெறும் சீனிவாசன் தான் அதாவது சாதாரண மனிதன் மட்டுமே அவருக்கென்று தனித்துவமான எந்த ஒரு அடையாளமும் இல்லை அவரிடம் இருந்த பணமும் பறிபோயின இப்பொழுது தான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சீனிவாசன் ஆவார். இப்பொழுது சீனிவாசன், தாசில்தார் அலுவலகத்திற்கு முன்பு நின்று கொண்டு தாசில்தாரை காண வேண்டும் அவரிடம் ஒரு நிலவிவகாரமாக பேச வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தால் காவலர்களிடம். நான் பண்ணையார் என்னை உள்ளே விடுங்கள் இல்லை என்றால் உங்களை என்ன செய்வேன் என்று தெரியாது என்று பழக்க தோஷத்தில் கற்றுக் கொண்டிருந்தார் சீனிவாசன் அப்பொழுது அங்கு இளம் வயதில் ஒருவர் காரில் வந்து இறங்கி உள்ளே அழுவுக உலகத்தில் சென்று கொண்டு இருந்தார். சீனிவாசனுக்கு ஒரு சந்தேகம் தான் எங்கேயோ பார்த்த ஒரு பரிச்சயமான முகமாக இருக்கிறது யாராக இருக்கும் என்று .அவர் கேட்கிறார் யார் இவர் ?என்று .இவர் தான் புதிய நமது புதிய தாசில்தார் என்று கூறினார் கூட்டத்தில் ஒருவர். பிறகு சீனிவாசனை உள்ளே அழைத்து வரச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு தாசில்தார் சீனிவாசனை கண்டு ஐயா எப்படி உள்ளீர்கள் என்று அதே பணிவுடன் கேட்டார் இப்பொழுது சீனிவாசனுக்கு நன்கு விளங்கி விட்டது அது வேறு யாரும் இல்லை ரவி என்று. ரவி கூறினார் ஐயா கல்வியே உயர்ந்த செல்வம் கல்வியை காட்டிலும் வேறொரு செல்வம் இவ்வுலகில் உயர்ந்தது எதுவுமே கிடையாது. உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று எதுவும் கிடையாது பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை தான் கற்ற கல்வியால் தான் ஒருவர் உயர்வதும் தாழ்வதும் இருக்கின்றது. கல்வி கற்ற எண்ணெய் அனுமதித்த அவர்கள் கல்வி கல்லாத உங்களை ஏன் வெளியில் நிற்க வேண்டும் ஜாதியிலோ மதத்திலோ செல்வாக்கிலோ நீங்கள் பெரியவராக இருக்கலாம் ஆனால் கல்வியே ஒருவனை மிகவும் பெரியவனாக உயர்த்திக் காட்டுகிறது இந்த சமுதாயத்திலும் உலகிலும் என்ற அவருக்கு அறிவுரையை சரியாக வழங்கினான். அதுமட்டுமின்றி அவருக்கு என்ன வேலை இருந்ததோ அதனை சுலபமாக முடித்தும் கொடுத்தான் ரவி. அன்று இந்த ரவியை படிக்க விடாமல் நாம் தடுத்தோம் ஆனால் இவனும் நமது வேலைக்காக இவ்வளவு பாடுபடுகிறான் நம்மை மிகவும் மரியாதையுடன் நடத்துகின்றான். இதுவே கல்வி தந்த பரிசாக இருக்கும் நான் வந்து ஒரு முட்டாள் என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டார் சீனிவாசன். சீனிவாசனின் மகள் அரசு பொதுத்தேர்விற்காக வெளியே நின்று கொண்டிருக்கின்றார் அன்று காலையில் வழக்கமாக வரும் பேருந்து வரவில்லை ஏதோ பேருந்து கோளாறு ஏற்பட்டு நடுவழியிலேயே நின்றுவிட்டதாம் இப்பொழுது அவள் தேர்வு எழுதவில்லை என்றால் அவளது வாழ்க்கையே முடிந்து விடும் என்ற எண்ணத்தில் அவள் மிகவும் சோர்வுடன் உட்கார்ந்திருந்தால் ஒரு கல்லின் மீது. பேருந்து வரும் என்று நம்பிக்கை அவளுக்கு சற்றும் இல்லை அழத் தொடங்கினால் அழ தொடங்கினால் மிகவும் களைப்பாக ஆகிவிட்டால் அந்த வழியே வந்த தாசில்தார் ரவி அவளைப் பார்த்து மனம் கலங்கி தனது காரை விட்டு இறங்கி என்னவென்று கேட்டு பிறகு சீனிவாசனின் மகள் என்று தெரிந்ததும் மகிழ்ச்சி பட்டார். கொஞ்சமும் யோசிக்காமல் அவளை தனது காரிலேயே கொண்டு போய் பள்ளியில் இறக்கி விட்டார். மாணவி மிகவும் தெளிவாக பரிட்சை எழுதி முடித்துவிட்டு சந்தோஷமாக பள்ளியை விட்டு வெளியே வந்து தனது தந்தை சீனிவாசனிடம் கூறினால் நடந்தவற்றையெல்லாம் விரிவாக. அதனைக் கேட்டு சீனிவாசன் நினைத்துக் கொண்டார், அன்று ஆறுமுகத்தின் மகனை நான் படிக்க விடாமல் தடுக்க செய்த சதி எல்லாம் இன்று என் பிள்ளைகளை கேட்கிறது. ஆனால் ரவியும் என்னத்தாலும் உள்ளத்தாலும் மிகவும் உயர்ந்தவன் ஆவான் அவனுக்கு நான் செய்த துரோகங்களை மனதில் கொஞ்சம் கூட வைத்துக் கொள்ளாமல் என் பிள்ளையை கொண்டு வந்து இறக்கி விட்டு தேர்வு எழுத காரணமாக அமைந்ததே அவன் தான் என்று சீனிவாசன் தன் மீது தானே மிகவும் வெறுப்பை கொட்டி தீர்த்துக் கொண்டார். இப்பொழுது சீனிவாசனுக்கு அனைத்தும் தெளிவாக புரிகிறது என்ன செய்ய வேண்டும் எது தவறு எது சரி என்று அனைத்தையும் உணரும் நிலையில் அவர் இருக்கின்றார். பண்ணையார் எப்படியாவது ரவியை பார்த்து விட வேண்டும் என்று செல்லும் வழியில் ஒரு விபத்து நேர்ந்து விட்டது. சீனிவாசனுக்கு மிகவும் பலத்த அடி. ஒரு பேருந்து மோதி சீனிவாசன் மயக்க நிலைக்கு சென்று விட்டார் ரத்தமோ மிகவும் அதிக அளவில் வெளியேறி விட்டது. மருத்துவ மனையின் முதன்மை மருத்துவ ரவியின் தோழர் ஆவார். அவர் ரத்தம் தேவை என்று ரவிக்கு செய்தி அனுப்பியவுடன் விரைந்து ரவி கொஞ்சம் கூட யோசிக்காமல் வந்து ரத்தம் கொடுத்தான் ரத்தத்தை கொடுத்த பிறகு தான் தெரிகிறது அது சீனிவாச பண்ணையார் என்று. சீனிவாச பண்ணையார் கண்கள் விழித்தவுடன் ரவியே திரள் இருந்தான் அவர் மயக்க நிலையில் இருந்த பொழுது அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததும் அவருக்கு மருந்து மாத்திரைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்ததும் ரவி தான். பண்ணையாரும் மகன் அவரை விட்டு விலகி எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன தன் பிள்ளையே பார்க்காத காலத்தில் யாரோ ஒருவன் நாம் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து தனக்கு சரி என்று என் எல்லாவற்றையும் செய்கிறானே என்று பூரிப்படைந்தார் பண்ணையார். நீதான் எனக்கு ரத்தம் கொடுத்தாயே ரவி என்று கேட்டார். ஆம் நான் தான் ரத்தம் கொடுத்தேன் ஐயா பயப்படாதீர்கள் என் உடலில் ரத்தம் தான் ஓடுகிறது உங்களுடலில் போடும் அதே ரத்தத்தின் பிரிவுதான் எனது உடலிலும் ஓடுகிறது நீங்கள் சேர என்றோ சகதி என்றோ சாக்கடை என்றோ நினைத்து விடாதீர்கள் அப்படியெல்லாம் மோசம் இல்லை. நாங்களும் மனிதர்கள் தான் என்று உழைக்கும் வண்ணம் மௌன சிரிப்புடன் அழகாக சொல்லி முடித்தான் ரவி. பண்ணையார் தனது தவறை உணர்ந்து ரவியிடம் தான் செய்தால் எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு மனிதனுக்கு கல்வியே சிறந்த செல்வமாகும் ஒருவன் உயர்வதும் தாழ்வதும் உயர்ந்த ஜாதியா தாழ்ந்த ஜாதியா என்று தெரிந்து கொள்வதும் கல்வி அறிவே முடிவு செய்கிறது ஒருவர் எவ்வளவு உயர்ந்தாலும் கல்வி இல்லை என்றால் அவர்கள் தாழ்ந்தவரே ஆவர். மனிதர்களை ஒருவரிடம் இருந்து ஒருவரை பிரித்து வித்தியாசமாகவும் அழகாகவும் காட்டுவது கல்வியே காசோ பணமோ செல்வாக்கும் இல்லை. இதனை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கல்விக் கனியே நெல்லிக்கனியாம். -பா. கண்மணி, உறுதிமொழி கடிதம் மேலே கொடுக்கப்பட்டுள்ள கதை கண்மணி என்னும் என்னால் முழுமையாக கற்பனை செய்யப்பட்டு எழுதப்பட்டதாகும் இது வேறு ஒருவருடைய படைப்பு அல்லது கதையோ என்று எவ்வித சந்தேகமும் வேண்டாம் மேலும் நான் இந்த படைப்பை இந்த போட்டிக்கு மட்டுமே அனுப்பி உள்ளேன் வேறு எந்த போட்டிகளுக்கு இல்லை இணையதளங்களிலோ பதிவேற்றம் செய்யவில்லை. இது என்னுடைய உறுதிமொழி ஆகும்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.