logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அ. ஞானவேல்

சிறுகதை வரிசை எண் # 40


தலைப்பு : குப்பைத் தொட்டிப் பண்டாரம் அன்று காலை சுமார் ஆறுமணி இருக்கும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று இறங்கினேன். சற்று தூக்கக் கலகம் தான். இருப்பினும் மேற்கொண்டு பணியினை தொடங்கும் உத்வேகத்தில், பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு பேருந்து நிலையத்தின் ஒரு பெரிய தூணின் அருகே சென்று அமைதியாக அமர்ந்தேன். பேருந்து நிலையத்தை சுற்றும், முற்றும் பார்த்தேன். இன்று கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் அல்லாமல் சற்றே அமைதியாக இருந்தது. ஏன் அவ்வாறு கூறினேன் என்றால் அப்பேருந்து நிலையம் எப்போதும் பரப்பரப்பாகவே தான் இயங்கிக் கொண்டிருப்பதாக நான் கண்டிருக்கிறேன். அனால், இன்றோ, சற்று அமைதியாகவே காட்சியளித்தாகத் தான் எனக்கு தோன்றியது. என்றாலும் பலதரப்பட்ட ஜனக்கூட்டங்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் முகம் கழுவுவதும், சிலர் பல் துலக்குவதும். சிலர் பேருந்து நிலையத்திலேயே வழக்கம் போல் படுத்துறங்குவதும், சிலர் அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்துவதும், சிலர் இட்டிலி, தோசை, வடை, பொங்கல், பரோட்டா, குருமா என வாங்கி உண்பதுமாக இருந்தனர். அப்போது தான் எதேச்சையாக அந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவர் எனக்கு சற்று தூரம் தள்ளியிருந்த தூணின் ஒரு பெரிங அருகே படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். தூணின் அருகே என்பதால் என்னுடைய பார்வைக்கு அவருடைய இடுப்பிற்கு கீழே உள்ள பகுதிகள் மட்டும் தான் தெரிந்தது. அந்நேரம் பார்த்து பேருந்து நிலையத்தின் இரவுக்காவலர் ஒருவர் சிரிய ஒலிபெருக்கி ஒன்றினையும் கையில் சிரிய தடியினையும் கொண்டு அங்கு உறங்கிக்கொண்டிருப்பவர்ளை எல்லாம் எழுப்பிக் கொண்டே வந்தார். வந்த அவர் அங்கே படுத்திருந்தவரையும் எழுப்ப அவரும் மெதுவாக எழுந்துத் தன் திருமுகத்தை காட்டினார். இருப்பினும் அவரது இடுப்புக்குக் கீழே இருந்த கைலி ஆடை, அது ஒன்று மட்டுந்தான் அவருடையதாய், அவரின் அங்கங்களை மறைக்க விருப்பம் இல்லாததைப் போல் அங்கங்கே கிழிந்து தெங்கிக்கொண்டு உடலை விட்டு விளகி, பிச்சைக்காரனுக்கே உரிய நாகரீக அடையாளங்களைக் காட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டார். ஆனாலும் அந்த இடத்தில் அவருக்காகவே வைக்கப்பட்டது போல் இருந்தாலும். அவர் அதை சட்டைசெய்யவில்லை. அப்படி ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் யாரோ ஒருவர் குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த முக்கால் பாட்டிலுக்கும் சற்று அதிகமான நீரைக் கொண்ட நவநாகரீக குடிநீர் பாட்டில் தான் யாருக்காகவோ காத்திருப்பதாக நின்றுகொண்டிருந்தது. அந்த பாட்டில் அவ்வாறு நின்றுகொண்டிந்தது ஒன்றும் வீண்போகவில்லை என்றே நினைக்கிறேன். காரணம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே ஏதோ ஒரு மூளையில் இருத்த ஒரு மனிதர் வேகவேகமாக ஓடிவந்தார். அவரையும் நான் எதேச்சையாகத் தான் பார்த்தேன். அவரோ நல்ல தேகபலம் கொண்ட பலமான மனிதர். அவர் அரைக்கால் வெண்மை நிற பேண்டும் அதன் மேலேயே ஒரு கைலியையும் சுற்றியிருந்தார். அதோடு ஒரு நல்ல ஊதா நிறத்தில் பல வண்ணப்பூக்கள் கொண்டை அரைக்கை சட்டையினையும் அணிந்திருந்தார் ஆண்மகனுக்கே உரிய கம்பீரம் மற்றும் மா நிறம். அவருக்கு சுமார் நாற்பது, நாற்பத்து ஐந்து வயது இருக்கும். அவர் ஏதோ அந்த பகுதி தனக்கே சொந்தம் போல் அநாயாசமாக நடந்து வந்தவர், அங்கு யாரோ குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து எந்த விதமான மான உணர்ச்சியும் இல்லாமல் கடகடவென குடித்தார். அதனை கவணித்துக் கொண்டிருந்த நானோ சற்றே அதிர்ந்து போனேன். ஆனால் அவரோ கொஞ்சம் கூட எவ்விதமான கூச்சமும் இல்லாமல் குடித்துவிட்டு காலி பாட்டிலை மட்டும் அதே இடத்தில் வைத்ததோடு, அவர் வந்த திசையினை நோக்கி மீண்டும் திரும்பிச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஆள் உயர நீலநிற குப்பைத் தொட்டியில், குடித்துவிட்டு விழுங்கியது போக வாயில் மிச்ச இருந்த நீரை புளிச் என்று உமிழ்ந்தார். உமிழ்ந்த அவர் சற்று தூரம் சென்று மறைந்தார். இந்த காட்சி நிறைவுற்றது என்று எண்ணிக் கொண்டு மறு பக்கமாக என்னுடைய பார்வையினைத் திருப்பினேன். எதிரிலிருந்த கடையில் ஆவி பறக்க உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டவுடன் எனக்கும் சற்று பசிப்பதாகத் தோன்றியதால், நானும் அங்கே சென்று அந்த கடைக்காரரிடம் பணத்தைக் கொடுத்து இரண்டு பரோட்டாவும், ஒரு வடையுமாக, குருமாவோடு எண்பது ரூபாய்க்கு வாங்கி வந்து ஓர் இருக்கையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம் மீண்டும் அந்த மனிதனைக் கண்டேன். அந்தப் பக்கமாக வந்தவர், உணவுக்கடையின் அருகே இருந்த வேறொரு ஆளுயரக் ஆரஞ்சுநிற குப்பைத்தொட்டியில் உணவு உண்ட பயணிகள் மிச்சம், மீதி இருந்த உணவுப் பொருட்களை கடைக்காரர் வழங்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பேப்பர் தட்டினை அதில் வீசிவிட்டுச் சொன்றிருந்தனர். “குப்பைத் தொட்டியும் வயிறு புடைக்க உண்ட மகிழ்ச்சியில் மயக்கியிருந்தது.” வந்த நபரோ, அந்த குப்பைத் தொட்டிக்கு அருகே வந்து கம்பீரமாக இரண்டு கால்களையும் அகல விரித்து வைத்த வண்ணம் நின்றார். அதோடு குப்பைத்தொட்டியில் கிடந்த உணவுப் பொருட்களை விதவிதமாக எடுத்து யாதொரு பணமும் கொடுக்காமல், யாதொரு கூச்சமும் இல்லாமல் ரசித்தும், ருசித்தும் அதிவேகமாகவும், அற்புதமாகவும் உண்டார். அதனைக் கண்ட நோனோ மீண்டும் ஒருமுறை அதிர்ந்து போனேன். ஒருவேலை இவன் பைத்தியக்காரனாக இருப்பானோ என்று கூட எண்ணினேன். இல்லை, இல்லை இது சென்னையில் உடல் நோகாமல் பிழைக்க தெரிந்தவராக இருக்கும் என்றும் எண்ணி என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அவ்வாறு எண்ணியவாரே நானும் என்னுடைய பேப்பர் தட்டில் மிச்சம், மீதி இருந்ததை குப்பைத்தொட்டிக்கும் அவனுக்குமாக வீசிவிட்டுச் சென்றேன். சென்னை புறநகர் பேருந்து நிலையம் அதிகாரப்பூர்வமாக புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்றாலும் பரவலாக கோயம்பேடு பேருந்த என்றே அழைக்கப்படுகிறது. இது சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும். (ஐ. எஸ். ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையத்திற்கு உண்டு). அப்போதைய முதலமைச்சர் இப்பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். அப்படிப்பட்ட சிறப்பு பெற்ற பேருந்து நிலையமானது அதன் பின்புறத்தில் அதீத அற்புததத்தினை நிறைத்து வைத்திருக்கும் ஒரு அமைதியான பகுதி என்றால் அது, அதன் பின்பக்கமாக உள்ள உயரமான சுவரு தான். அந்த பிரமாண்டமான சுவற்றை அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து கடலைவிட்டு மேலெழும்பிய சூரியன் இருளின் குளிரைப் போக்கி மெல்ல அச்சுவற்றினைண அனைத்தவாரே மேல் எழுந்து ஒளிப்பாய்ச்சி தலைக்காட்டிற்று. அந்நேரம் பார்த்து நானும் ஆட்டோ ஒன்றினை எதிர்பார்த்து அப்பிரமாண்ட சுவரினைப் பார்த்த வண்ணம் பேருந்து நிலையத்தினை விட்டு வெளியேறினேன். சூரியன் காட்டிய ஒளியினை பொருட்படுத்தாத அந்த கருங்கல் சுவரோ கம்பீரமாக உயர்ந்து நின்றுகொண்டிருந்தது. யாருமே இல்லாத அந்தப் பகுதியினைப் பார்த்தவாறே நானும் ஆட்டோவினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆட்டோ வருவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டதால் மீண்டும் ஒரு முறை அந்த ஆளரவமற்ற அற்புதச் சுவர் இருக்கும் பகுயினை மேலிருந்து கீழாக இரசித்துப் பார்க்க வேண்டுமென தோன்றியதால் மீண்டும் ஒருமுறை அதனைக் கண்ணுற்றேன். என்ன ஒரு ஆச்சரியம், மூன்றாவது முறையாக அந்த மனிதரைக் அங்கே கண்டேன். அவர் அந்த பிரமாண்ட சுவரின் பக்கமாக திரும்பி நின்றவாறே வலது கையால் ஒரு துண்டுச் சீட்டினை சுவரின் மீது மிகத் தீவிரமாக அழுத்தி பிடித்துக் கொண்டு, இடது கையால் யாரோ எழுதிவிட்டு வீசிச்சென்ற கவலையில் உடல் மெலித மைக்குச்சியால் அந்த மனிதர் எதையோ எழுதிக்(கிருக்கிக்) கொண்டிருந்தார். “ஒரு வேலை அது அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பாக இருக்கலாமோ?”

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.