logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ராஜா

சிறுகதை வரிசை எண் # 324


#காமுகர்கள்_ஜாக்கிரதை (சிறுகதை) பெயர் கந்தன் 53 வயசு இருக்கும் கடந்த வருடத்தில் ஐப்பசி மாசம் தான் தன்னோட இரண்டு பொண்ணுங்களுக்கும் ஒரே மேடையில கல்யாணம் பண்ணி வச்சாரு....... மருமகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்வதால் மகள்கள் இரண்டுபேரும் அவரவர் கணவருடன் குடும்பத்துடன் வெளிநாட்டிலேயே தனித்தனியாக செட்டில் ஆகிவிட்டனர்...... வருசம் ஒன்னு ஆனாதால பொண்ணுங்களைப் பார்க்க போகலாம் மனைவி சுந்தரி லேசாகப் பேச்சுக் கொடுத்தாள்...... "என்னடி காலையில இருந்து பொலம்பிட்டே இருக்க என்ன வேணும் இப்ப உனக்கு....??? "" என தடாலடியாக கேட்டார் கந்தன் ‌..... " இல்லீங்க அதா சொன்னேன்ல வருஷம் ஒன்னு ஆச்சு நம்ம பொண்ணுங்க ரெண்டு பேரும் இப்ப மாசாமா இருக்காங்க" நாம போன இருவருக்குமே உதவியா இருக்கும்ல அதாங்க.... என இழுத்தாள் சுந்தரி.... இல்லடி‌.. நீ வேணும்னா போயிட்டு வாடி " எனக்கு இப்ப ஃப்ளைட் ட்ராவல் எல்லாம் ஒத்துக்க மாட்டங்குது " என உடல் நிலையை காரணம் காட்டி சமாளித்து ஒருவழியாக மனைவியை தன் மகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் கந்தன்....... சில மாதங்கள் ‌ஆயின...... மனைவி நிரந்தரமாக மகள்கள் வீட்டிலியேயே தங்கிவிட " தனக்குள் எழுந்த மோகத்தையும் காமத்தையும் நீலப்படம் பார்த்து தீர்த்துக் கொள்கிறார் " கந்தன்.... இந்த வயதில் எழும் காமத்தை மனைவியைத் தவிர வேறு யாரிடமும் வெளிக்காட்ட முடியாது ‌. மீறி வெளிப்படுத்தினால் அது தனக்கும் தனது கௌரவத்திற்கும் அசிங்கம் என நினைத்து தற்காலிகமாகத் தனக்குத் தானே கட்டுப்பாடு விதிக்கிறார் கந்தன்..... " ஆசை யாரை விட்டது....? " என்பது போல நீலப்படம் பார்த்தும் ஆசை(மோகபம்)தீரவில்லை கந்தனுக்கு.... அதற்கு வழிவகுக்கும் வகையில் , பக்கத்து வீட்டில் உள்ள ஆறு வயது ரேஷ்மா எனும் சிறுமியின் மீது கந்தனின் கண்பார்வை படத்தொடங்கியது..... அன்று முதல் அச்சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவது பொம்மை வாங்கித் தருவது என குழந்தைகள் விரும்பும் அத்தனையும் வாங்கிக் கொடுத்து அவ்வப்போது தொடுதல்.... முத்தமிடுதல்.... மற்றும் சில என தன் சிற்றின்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார் கந்தன்.... வயதானவர் என்பதாலும் ரேஷ்மாவின் பெற்றோர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையாலும் அவரும் சமூகத்தில் நல்ல பெயர் பெற்றிருந்த காரணத்தாலும் யாரும் அவரை சந்தேகப்படவில்லை........ ஒரு வாரம் ஆனதும்.... ரேஷ்மாவிற்கு உடல்நிலை சரியில்லை அதீத காய்ச்சலால் அவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர் அவர்களது பெற்றோர்கள்..... அன்று எதார்த்தமாக ரேஷ்மாவின் அம்மா , "" செல்லம் நீ போயி பக்கத்து வீட்டு கந்தன் அங்கிள் கூட விளையாடுமா"" அப்பா உனக்கு மெடிசின் வாங்க போயிருக்காரு , அம்மா காய்கறி வாங்கிட்டு வரேன் சொல்ல...... இதுவரை இதைப்பற்றி எதுவும் பேசாத ரேஷ்மா அன்றுதான் முதல் முறையாக கூறினாள்..... அதற்கு ரேஷ்மாவோ போமா "அந்த அங்கிள் அவருக்கு எதாவது செய்தாதான் எனக்கு சாக்லேட் ..‌ பொம்மை... இப்படி ஏதும் வாங்கித் தருவார் "" என ஒரு அதிர்ச்சிமான தகவலைத் தந்தாள்.. பதறிப்போனவள் மேற்கொண்ட என்ன நடந்தது என்று தன் மகளிடம் மெதுவாக கேட்கக்கேட்க அவளுக்கு உயிரே போய்விட்டது போல் இருந்தது...... ஆம்... சொல்லவும் அருவருக்கத்தக்க பல செயல்களை தன் வயதைக் கடந்தும் அறிவைக்கடந்தும் அவர் செய்திருப்பதை அறிந்து மேலும் உடைந்து போனாள்..... ஆத்திரத்தில் போனை எடுத்து கந்தனின் மனைவிக்கு கால் செய்தாள் சுலோச்சனா.. மறுமுனையில் போனை எடுத்து சுந்தரி " ம் ... சொல்லுமா நலமா ...???? என் விசாரித்தாள் " .... "" எல்லாம் நாசாமா போச்சி " எங்க நல்லா இருக்குறது என என்றாள் சுலோ.... எப்பவும் இப்படி பேசமாட்ஞாளே என்ன ஆச்சு இன்னிக்கு என்று மனதில் நினைத்துக்கொண்டே... " ஏம்மா.. ஏதும் பிரச்சனையா ...??? என் வினவினாள் சுந்தரி " ... " பக்கத்து வீடுன்னு தானம்மா உங்ககிட்ட எல்லாம் பேசிப்பழகினோம் ஆனா உங்க வீட்டுக்காரு இப்படி செய்வாருன்னு கொஞ்சம் கூட நெனக்கல " " சத்தியமா சொல்லுற நீங்கலா நல்லாவே இருக்கமாட்டீங்க " என‌ கோவத்தில் மேலும் பொறிந்து தள்ளினாள் சுலோச்சனா.... " என்னம்மா சொல்லுற என்னாச்சி ஒன்னுமே புரியல "என என்ன நடந்திருக்கும் என புரியாமலேயே சுந்தரியும் அடுத்தடுத்து வினவினாள்..... இதையெல்லாம் சொல்லவே வாய் கூசுது ஆனா இத உங்க கிட்ட சொன்னாதா அவரோட லட்சணம் உங்களுக்கும் தெரியும் என்று...... உங்க வீட்டுக்காரர் .... என் ஆரம்பித்து நிகழ்ந்த கொடுமையை சொல்லி முடித்து " பேத்தி வயசு இருக்கும் என் பொன்னுகிட்டயே இப்படி நடந்துகிட்ட அவருக்கு உங்க மகள்கிட்டயோ இல்ல உங்க பேத்திகிட்டயோ நடந்துக்க மாட்டாருன்னு என்ன நிச்சயம் என சொல்ல.... சுந்தரிக்கு நடந்த நிகழ்வுகள் கண்முன்னே தோன்றி மறைய தன் கணவனை நினை தானே ஒருநிமிடம் வெட்கித் தலைகுனிந்தாள் ..... " சும்மா விடமாட்டேன் மா அவர் இதுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரைக்கும் " என சுந்தரியின் பதிலைக்கேட்காமால் காலை கட் செய்தாள் சுலோச்சனா..... ச்ச .... இதுக்கு அப்பறம் அவர பாக்கபோறதோ அவரப்பத்தி நினைக்கிறேன் இல்ல அவர் கூட பேசுறதோ நமக்குதா அசிங்கம் என நினைத்தவள் அந்த கனமே தன் கணவரை மனதிலிருந்து தூக்கி எறிந்தாள் சுந்தரி...... இதைப்பற்றி கணவரிடம் எந்த கேள்வியும் கேட்காமல் தன் மகள்களிடத்தில் அப்பா இறந்துவிட்டதாகவும் எல்லா காரியமும் முடித்துவிட்டதாகவும் சொல்ல ..... " என்னம்மா சொல்லுற அப்பாவுக்கு என்ன ஆச்சு வாம்மா அப்பா வ பாக்க போகலாம் " என்று இருவரும் கதறி அழ .... மகள்களின் கர்ப்பத்தை காரணம் காட்டி எல்லாம் முடிந்து விட்டதாகவும் இப்போ செல்வது அவ்வளவு நல்லது அல்ல என்று தன் மகள்களுக்கு மட்டுமாவது தன் அப்பா உத்தமனாக இருக்கட்டும் என மறைத்து விட்டாள் சுந்தரி...... அன்று மதியமே " காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு குற்றப்பிரிவில் இரகசிய கம்ப்லைண்ட் கொடுத்தாள் " ரேஷ்மாவின் அம்மா சுலோச்சனா.... வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறை கந்தனை " போக்சோ " சட்டத்தில் கைதுசெய்து சிறையிலிட்டது . நீதிமன்றத்தில் கந்தனுக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது..... ரேஷ்மாவிற்கு பழைய(கந்தன்) நினைவுகள் ஏதும் வராமலிருக்க ஓரிரு நாட்களில் சுலோச்சனா மற்றும் அவளது குடும்பம் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் குடிபெயர்ந்தனர்.... அன்று முதல் தன் மகளை எப்போதும் கண்காணித்தபடியே சுதாரிப்பாக இருந்தாள் . சில மாதங்கள் கடந்தது.... சுந்தரியின் மகள்கள் இருவருக்கும் மகள்களே பிறந்திருந்தது என்ன ஆனாலும் கணவர் ஆச்சே..... மனசு கேட்காமலும் தன் மகள்களின் தொடர் நச்சரிப்பாலும் தனது கணவரது சமாதியையாவது பார்த்து விட்டு வரலாம் என்று சுந்தரி குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு வந்தாள்...... மகள்கள் இருவரையும் மருமகன்களுடன் ஒரு தனியார் ஹோட்டலில் தங்கவைத்து விட்டு தான் மட்டும் சென்று முதலில் சூழ்நிலையை அறிய முற்ப்பட்டால் சுந்தரி..... தன் கணவர் இருந்த வீட்டிற்குச் சென்று விசாரித்த போதுதான் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது அவளுக்கு..... சுலோச்சனா தன் கணவர் மீது புகார் தெரிவித்ததும் அதற்காக சிறைத்தண்டனை வழங்கப்பட்டதும் அது மட்டுமில்லாமல் ..... " தான் செய்த இந்த இழிவான காரணத்தால் தான் தன்னை யாரும் பார்க்க வரவில்லை எனவும் உணர்ந்தவர் " சிறைக்குள்ளே தான் வளர்ந்த விதத்தையும் , வாழ்ந்த வாழ்க்கையையும் நினைத்து பார்த்த கந்தன் " தற்போது சில மாதங்களாக தான் நடந்து கொண்ட முறையை நினைத்து நினைத்து குற்ற உணர்ச்சியில் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார் "...... என்பதுவும் சுந்தரிக்கு தெரிய வருகிறது தான் அன்று கோவத்தில் சொன்னது உண்மையாகவே நிழ்ந்துவிட்டதே என நினைத்து என்னங்க என்று கதறி அழுகிறாள் சுந்தரி..... கந்தன் இறந்த பிறகு யாரும் அவரது பூத உடலை வாங்க வராததால் அரசே அனாதை பிணமாக கருத்தில் கொண்டு எரித்து விட்டதாகவும் யாரேனும் அவர்களைத் தேடி வந்தால் இதனை கோடுக்கும் படி அரசின் சார்பில் சொன்னதாகவும் சொல்லி...... சுந்தரியின் கணவர் வசித்து வந்த வீட்டிற்கும் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெரியவர் ஒருநிமிடம் இருக்கும்மா என்று உள்ளே சென்றவர்..... கந்தனை எரித்த சாம்பல் நிரம்பிய ஒரு மண் கலசத்தை கொண்டு வந்து சுந்தரியின் கைகளில் தினித்தார் அந்தப் பெரியவர்..... அழுதுகொண்டே அதை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றவள் தன் மகள்களிடம் பாதி உண்மையும் பாதி பொய்யுமாய் சொல்லி அந்த சாம்பலை மூவரும் அருகிலுள்ள ஆற்றில் கரைத்து விட்டு மீண்டும் வெளிநாட்டிற்கே புறப்பட்டனர்..... கடைசிவரை அந்த அசிங்கத்தை தன் மகள்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே சதா சிந்தித்துக் கொண்டே இருந்ததால் அடுத்த சில வாரங்களில் சுந்தரியும் இறந்துவிடுகிறாள்...... கடைசி வரை சுந்தரியின் மகள்களுக்கு தன் அப்பாவின் மறுமுகம் தெரியவே இல்லை ஒரு பக்கம் மட்டுமே தெரிந்ததால் கந்தன் இன்றும் நல்லவன்..... ஆனால் இந்த சமூகத்தைப் பொறுத்தவரையில் தன் கடைசி காலத்தில் தன் பேத்திக்கு நிகரான வயதுடைய ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த காமக்கொடூடன் என்று முத்திரை குத்தப்பட்டு இறந்து போனவர்..... இதுதான் உலகம்..... இதில் நாம் யார் .....???? நம் பண்புகள் நல்லதா கெட்டதா என தீர்க்க வேண்டியது நாம் தான்... காமம் ஒன்றும் பெரிய தவறல்ல அதற்கு வயதும் ஒன்றும் தடையல்ல.... ஆனால் அது நமக்கே உரிய துணையிடம் மட்டுமே இருப்பது நல்லது..... இங்கே தவறு காம உணர்ச்சியால் சிறுமியை தன் ஆசைக்கு பயன்படுத்திக்கொண்ட கந்தனின் பக்கம் மட்டுமோ அல்லது தன் பிள்ளையின் மீது எந்தவொரு கவனிப்பும் இல்லாமல் இருந்த ரேஷ்மாவின் பொற்றோர்கள் பக்கம் மட்டுமல்ல..... பெண் என்பவள் பெண் தான் அது ஆறாக இருந்தாலும் சரி அறுபதாக இருந்தாலும் சரி பாதுகாப்பு அவசியம் அதேபோல ஆண் என்பவனை பொருத்தவரை சுய ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம்...... இங்கே.. இது போல் இன்னும் பல சம்பவங்கள் அரங்கேறியபடியே தான் இருக்கிறது ஒரு வகையில் இதனை தடுக்க இன்றும் திணறுகிற இந்த சமூகமும் இதுபோன்ற தவறுகளுக்கெல்லாம் ஒரு காரணம் தான்..... ஆண்களே ..... இனியேனும் சிந்தியுங்கள் உங்களின் ஒரு நிமிட முடிவு வாழ்க்கையை இல்லாமல் கூட ஆக்கிவிடும்... பெண்களே இனியேனும் விலகியிருங்கள் எதற்கும் எல்லைக்கோடு தீர்மானித்து செயல்படுங்கள்.... எழுத்து ✍🏻ராஜா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.